குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை! நம் மன்னர்களின் வீரதீரத்தை வருங்கால சந்ததியினருக்குச் சொல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறது செஞ்சிக் கோட்டை(Senjikottai Kotilingam Kurumban) ………….. சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளின் ஜன்னல் வழியே பார்த்து கண்கள் பிரமிப்பில் தன் இமைகளை மூடிக்கொள்ள மறந்துவிட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு தாலுகாவின் தலைநகரமான செஞ்சி, சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது.செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் நடந்து செல்லும்போதே, செஞ்சிக் கோட்டையின் (Senjikottai Kotilingam Kurumban) கம்பீரத் தோற்றம் நம்மை வேகமாக நடைபோட வைக்கிறது. செஞ்சிக் கோட்டை (Senjikottai Kotilingam Kurumban) இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரைதான் பொதுமக்களை அனுமதிக்கிறார்கள்.நுழைவு வாயிலுக்கு மிக அருகிலேயே இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அலுவலகம் இருக்கிறது. அதைக் கடந்து சென்றால் சிதிலமடைந்த நிலையில் உள்ள ஓர் அம்மன் கோயிலும், ...