Posts

Showing posts from 2018

குறும்பர்களே ம(ல்ல)ள்ளர்கள்!!!

குறும்பர்களே ம(ல்ல)ள்ளர்கள்!!!    மல்லன் - பெயர் வீரனைகுறிக்கும் ஆநிரை மேய்பவர்கள் பொதுவாக உடல் வழுவாகவும் முரட்டுதனமிக்க குனம் உள்ளவர்களாக இருந்தனர். ஆநிரை களவு போவதை தடுக்கும் விதமாக இவர்கள் இருக்கவேண்டும் என்பதற்க்காக. பல்லவர்கள் வழிதோன்றல் என்று பல நூல்கள் குறிக்கபடும்குறும்பர்கள் இன்றளவு மல்லன் பட்டம் உடையவர்களாக திகழ்கின்றனர் மாமல்லன் ராஜசிம்மன் நரசிம்மவர்மன் மல்லன் பட்டம் பெற்றவர். குறும்பர்கள் வாழும் ஊர்களில் ஒருவராவது மல்லன் என்ற பெயருடன் விளங்கும் குறும்பர் இருப்பார்கள். சங்க நூல்களில் குறும்பர்களே மல்லர்கள் மருதம் - மருதம் பாடிய இளங்கடுங்கோ அறியாமையின் அன்னை அஞ்சி குழையன் கோதையன் குறும் பைத் தொடியன் விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின் 5 கேட்போர் உளர்கொல் இல்லைகொல் போற்று என யாணது பசலை என்றனன் அதன் எதிர் நாண் இலை எலுவ என்று வந்திசினே செறுநரும் விழையும் செம்மலோன் என நறு நுதல் அரிவை போற்றேன் 10 சிறுமை பெருமையின் காணாது துணிந்தே            இப்பாடலில் மருதநிலத்து ம(ல்)ள்ளர்களான  குறும்பர்களை  கு

தொல்குடிகளுக்கு தொல்குடி #குறும்பர் குடி!!

Image
தொல்குடிகளுக்கு தொல்குடி #குறும்பர் குடி!! கல்தோன்றி மண்தோன்றா காலத்தேத்  தோன்றிய மூத்தக்குடி என்று கூறிக்கொள்ளும் அனைவருக்கும் முன்தோன்றிய குடி குறும்பர் குடி.      உருவவழிபாடு தான் ஆதி வழிபாடு என்று என்னி இருந்தோம்.ஆனால் #ஆதிமனிதன் முதலில் வணங்கியது நீர்,நிலம்,காற்றைத்தான்.பின்பு   மனிதர்கள் இனைந்து  வாழும் போது தான் மனிதனை வணங்கினான் பிறகு அதுவே முன்னோர் வழிபாடு,குல தெய்வ வழி பாடாயிற்று,கூடிவாழ்ந்த மக்கள் இயற்க்கை இடர்பாடுகள்,மனிதபகைமை யை கையாள,தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் ஏந்தினர்,அப்படி ஆயுதம் ஏந்தியோர் மரணித்தால் அவர்களுக்கு நடுக்கல் வழிபாடு செய்தனர் இவை அனைத்தும் #தொல்காப்பிர் காலத்திற்க்கு முன் தோன்றியது என்று டாக்டர் சி.பாலசுப்ரணியம் கூறுகிறார். செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் காலம் கிமு 771 என்று கூறுகிறது.                       இயற்க்கை வழிபாடு,நடுக்கல் வழிபாடு,முன்னோர் வழிபாடு இவை அனைத்தும் குறும்பர் வாழ்வில் இன்று ஒன்றியது இதை யாரும் மறுக்க முடியாது.  குறும்பர்களே இந்த பாரதத்தின் #மூத்தகுடி என்பது தெளிவாகிறது. நாம் பிறந்த இந்த சமுதாயத்தை போற்றுவோம் தொல

குறும்பர்களின் தெய்வமாகிய கண்ணகி கேரளத்தில் குறும்பா பகவதி எனப்படுகிறாள்.

Image
குறும்பர்களின் தெய்வமாகிய கண்ணகி கேரளத்தில் குறும்பா பகவதி எனப்படுகிறாள். கண்ணகி வழிபாடு கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள், தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும் அவனது அரசி கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், சேர நாட்டு மன்னன் செங்குட்டுன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியை பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. கொற்றவை நாவலில் மதுரையை எரித்த பின்னர் கண்ணகி வைகை வழியாக சென்று சுருளி ஆறு வழியாக மலை ஏறி இந்தியாவிலுள்ள இன்றைய மங்கலதேவி கோய

குறும்பர் இன பழங்குடி மக்கள் வணங்கும் பெருங்கற்கால வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு...

Image
குறும்பர் இன பழங்குடி மக்கள் வணங்கும் பெருங்கற்கால வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு... தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பெருங்கற்கால வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தருமபுரியைச் சேர்ந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சி.சந்திரசேகர், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த செந்தில், நாகராஜ், கிருபானந்தன் உள்ளிட்டோர் அண்மையில் பாலக்கோடு அடுத்த பி.கொல்லஹள்ளி அருகேயுள்ள கொத்தகோட்ட மலையில் உள்ள பாறை, குகைகளில் மேற்கொண்ட களஆய்வில் இந்த வெள்ளை நிறத்திலான பாறை ஓவியங்களை கண்டெடுத்தனர். இந்த ஓவியங்கள் குறும்பர் இன பழங்குடி இனத்தவரின் வாழ்வியலை அடையாளப்படுத்துகின்றன. இதன் காலம் கி.பி.1000-ஆம் ஆண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து, பேராசிரியர் சி.சந்திரசேகர் கூறியது: பாலக்கோடு வட்டம், பி.கொல்லஹள்ளி அருகே கொத்தகோட்டா என்றழைக்கப்படும் மலையின் மூன்று இடங்களில் இந்த வெள்ளை நிற ஓவியங்களைக் கண்டறிந்துள்ளோம். ஒரு குகை வாழிடத்தில், குகையின் மேற்புறப் பாறைகளில் ஏராளமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஒரு பாறையின் கீழ் இரண்டு மனிதர்கள் நின்றவாறு ஓவியம் காணப்படுகிறது. இந்த குகையின் கீழ

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!

Image
குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை! நம்  மன்னர்களின் வீரதீரத்தை வருங்கால சந்ததியினருக்குச் சொல்வதற்காக காத்துக்  கொண்டிருக்கிறது செஞ்சிக் கோட்டை(Senjikottai Kotilingam Kurumban) ………….. சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும்  பேருந்துகளின் ஜன்னல் வழியே பார்த்து கண்கள் பிரமிப்பில் தன் இமைகளை மூடிக்கொள்ள மறந்துவிட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு தாலுகாவின் தலைநகரமான செஞ்சி, சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது.செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் நடந்து செல்லும்போதே, செஞ்சிக் கோட்டையின் (Senjikottai Kotilingam Kurumban)  கம்பீரத் தோற்றம் நம்மை வேகமாக நடைபோட வைக்கிறது. செஞ்சிக் கோட்டை (Senjikottai Kotilingam Kurumban)  இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரைதான் பொதுமக்களை அனுமதிக்கிறார்கள்.நுழைவு வாயிலுக்கு மிக அருகிலேயே இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அலுவலகம் இருக்கிறது. அதைக் கடந்து சென்றால் சிதிலமடைந்த நிலையில் உள்ள ஓர் அம்மன் கோயிலும், சிவன் கோயிலும் நம்மை வரவேற்கி

குறிஞ்சி, முல்லை, நிலத்து பழந்தமிழர்களான குறும்பர்கள் , இருளர், சோலகர், குறவர்கள், தனது அடையாளத்தையும் அதிகாரத்தையும் எவ்வாறு இழந்தார்கள்???

Image
குறிஞ்சி, முல்லை, நிலத்து பழந்தமிழர்களான குறும்பர்கள்(Kurumbar) , இருளர், சோலகர், குறவர்கள், தனது அடையாளத்தையும் அதிகாரத்தையும் எவ்வாறு இழந்தார்கள்???

மக்கள் சமூக நீதி பேரவை குறும்பர் பழங்குடி மக்களுக்கான போராட்ட குரல்

Image
50 லட்சம் குறும்பரினத்தில்(Kurumbar) ஒருவர் கூட எம்,எல்,ஏ இல்லை ஒருவர் கூட எம்,பி இல்லை வெக்ககேடு, வெக்ககேடு 50 லட்சம் குறும்பரினத்தில் (Kurumbar) ஒருவர் கூட எம்,எல்,ஏ இல்லை ஒருவர் கூட எம்,பி இல்லை மானக்கேடு, மானக்கேடு வென்றெடுப்போம், வென்றெடுப்போம் ஆட்சி அதிகாரத்தை வென்றெடுப்போம் அரசியல் அதிகார புறக்கணிப்பை அனுமதியோம், அனுமதியோம் 50 லட்சம் குறும்பரினத்தை (Kurumbar) , புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளை தூக்கி எறிவோம், தூக்கி எறிவோம் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எச்சரிக்கை, எச்சரிக்கை குறும்பரினத்தை (Kurumbar) புறக்கணிக்தால் தோற்க்கடிப்போம்,தோற்க்கடிப்போம் அய்யா தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் கட்டிகாத்த சமூகநீதியை எவன் தடுக்க நினைத்தாலும் முறியடிப்போம், முறியடிப்போம் காசு கொடுத்து ஓட்டு கேட்டால் காறி துப்பு முகத்திலே குறும்பனுக்கு (Kurumbar) சீட்டு கேட்டு அவன் சட்டைய பிடி ரோட்டிலே பழந்தமிழர் மானம் காத்த வாணான்குறும்பன் வாழ்கவே வென்றெடுப்போம், வென்றெடுப்போம் சமூகநீதியை வென்றெடுப்போம் லட்சியத்தை வென்றெடுக்க எங்கள் லட்ச கைகள் போராடும் கோரிக்கைகள் வெல்லும

மரணத்தை விதைத்து, மானத்தை மீட்டபுழல் கோட்டை மாமன்னன் வாணான் குறும்பன்.....

Image
மரணத்தை விதைத்து, மானத்தை மீட்ட புழல் கோட்டை மாமன்னன் வாணான் குறும்பன் (Vaanaan Kurumban) .....

அழகர் கூட்டம் என்ற தொகுப்பில் எழுநூறு சித்தர்கள் என்றும் குறும்பர் கூட்டத்தில் ஆயிரம் சித்தர்கள்

Image
அழகர் கூட்டம் என்ற தொகுப்பில் எழுநூறு சித்தர்கள் என்றும் குறும்பர்(Perumizhalai Kurumba Nayanar) கூட்டத்தில் ஆயிரம் சித்தர்கள் வாழ்ந்ததாகவும் மறவர் தொகுப்பில் முன்னூறு சித்தர்கள் என்றும் நாயனார் கூட்டத்தில் நூற்றுப்பத்து சித்தர்கள் இருந்ததாகவும் கூறுகிறார் புகழ்த் துணை மானி செங்கட்சோழர் உயர்வுஆய பொறை இடங்கழியர் கம்பர் புகழ்க் கழற்சிங்கர் தூயநேசர் மெய்ப்பொருளார் புகழ்ச் சோழன் மலையன் ஒண்மை திகழ் சிறப்புலி குறும்பர் (Kurumbar) கணநாதர் திவ்விய திருமூலர் விறல் மிண்டனார் அகம் அதில் நேடி நின்ற அருள் ஆர் குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே. 2 புகழ்த்துணையார், மங்கையர்க்கரசியார், செங்கட்சோழனார், மேலான பொறுமையுடைய இடங்கழியார், கலிக்கம்பர், புகழுடைய காடவர்கோன் கழறிசிங்கனார், தூய அன்புடைய நேசர், மெய்ப்பொருளார், புகழ்ச் சோழனார், சேரமான் பெருமானார், சிறப்புலியார், பெருமிழலைக் குறும்பர் (Perumilalai Kurumbar) , கணநாதர், அழகிய திருமூலர், விறல்மிண்டனார் முதலியோர் உள்ளத்தில் தேடி நின்ற அருள் நிறைந்த குகேசன் அடியவர்க்கு அடிமை நாமே. 236. நாளதுவாய் குறும்பைச்சித்தர் புலன் நாட்டிடுவேன் குறும்

குறும்பர் இன பழங்குடி மக்களின் குல தொழில் அழிவின் விளிம்பில் கலங்கல் கம்பளி...

Image
குறும்பர்(Kurumbar) இன பழங்குடி மக்களின் குல தொழில் அழிவின் விளிம்பில்  கலங்கல் கம்பளி... கோவை மாவட்டம், சூலூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய கிராமம் கலங்கல். இந்த கிராமமும், இதைச் சுற்றியுள்ள அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, நடுப்பாளையம், கண்ணம்பாளையம், பீடம்பள்ளி, குரும்பபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் குரும்பை ஆடுகளில் (Kurumba) இருந்து ரோமங்களை எடுத்துத் தயாரிக்கப்படும் கம்பளிகள் கோவை மட்டுமன்றி, தமிழகம் முழுவதிலும் வெகு பிரபலம். இதேபோல, கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் முன்பணம் செலுத்தி கம்பளிக்கு ஆர்டர் கொடுத்து இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து வாங்கிச் செல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்தத் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். இதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித் தனியாக தேவைக்கு ஏற்ப ஆடுகளை வாங்கி அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல மாதங்கள் வரை மேய்ப்பார்கள். பின்னர், ஆண்டுக்கு ஒரு முறை ஆடுகளைக் கழுவ

குறும்பர் கூனே (கக்க)வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் குறும்பர் இன பழங்குடி மக்களின் சேவை ஆட்டத்தின் மத்தியில் ஓய்வு பெறுவதற்காக எடுத்துக் கொள்ளும் பொழுது இறைவனை நோக்கி கூறும் மந்திரங்கள்

குறும்பர் (Kurumbar)  கூனே (கக்க) என்று கூறப்படும் சேவை ஆட்டத்தின் மத்தியில் ஓய்வு பெறுவதற்காக எடுத்துக் கொள்ளும் பொழுது இறைவனை நோக்கி கூறும் மந்திரங்கள் இவைகளை கக்க என்று கூறுவார்கள் ஆல்மைரே வீரா ஓம் கமலமான் ருத்திரன் காணுதர் கரிதோ விமலநார் புலவன் வேல்வியிர் பிறந்த புங்கர வளர்ந்த புருஸ்டி அழகன் துங்கணன் காலா செவித்த முன் சோதி முக்கண்ணன் மகளை மூக்கருத்தவனே விக்கினேஸ்வரனை விடையாய் உதைத்து மிக்க வேலவரை வென்னும் துரைத்து தேவேந்திரனை சிரகரம் வெட்டி கோபமாய் எழுந்து திருஷ்டாருத்திரன் தலையை அனலாய் நெருக்கி கார் வண்ணரோட கருங்கடல் மரியாய் போற்றி பார்வதிக் கொம்பை பக்தியாய் பிடித்து அங்கணமுறித்து, ஆசானமாக்கி பங்கணன்கொம்மை சிம்மாசனமாக்கி என்றும் செய்யும் இடி இடித்தது போல் தடு நடு பேரிசா தானது சுழற்றி அப்புற்த்துக்கால் ஆட்டியே மெரித்து சிறு புறந்தொடையை சிறுநகப் பெறுவாய் முக்கண்ணான் நெற்றியில் வெற்றியாய் வந்த வீரபத்திரா நான் உன் அடைக்கலம் அல்லவா?? 2) ஆல்ன மரே வீரா தகிடு தகிடு தத்தா எனுதா அவல் கோன் கோன் தாதகி பேட்டா பானி சூபன் காயா தோன் பாயா குருபீரி

ஆதிதமிழர் தொல்குடி இனமான குறும்பர் பெயர் காரணம்.

ஆதிதமிழர் தொல்குடி இனமான குறும்பர் (Kurumbar)  பெயர் காரணம். கூர்மையான அம்பு வைத்திருப்பவன். கூர்+அம்பு+அவன் மேற்கண்ட சொற்கள் புணர்ந்ததும், திரிந்தும் குறி+அம்பன் = குறும்பன் (Kurumban) எனப் பெயர் மாற்றம் கண்டது. குறிஞ்சி, முல்லை, இனத்து மக்களான குறும்பர்களுக்கு (Kurumbar) கூர்மையான அம்பே பாதுகாப்பு கருவி . அம்பே தன் தொழிலுக்கான கருவி. அம்பே தன் வாழ்வியல் துணை. காட்டிலே வேட்டையாடிய அம்பு. களத்தில் பகையாளியை வென்றிட வேலாகியது. தன் அறிவுச்செழுமையை ஏட்டில்க்காட்ட அம்பே எழுதுகோலாகிறது. மாந்தையிலே ஆடுகளை பராமரிக்க கம்பாகி, நாடாளுவதற்கு செங்கோலாகியது என்பது அம்பின் பரிணாமம். அந்த கூரிய அம்பினை தன்னகத்தே கொண்ட நம் முன்னோர் களுக்கான காரணப்பெயரே குறும்பன் (Kurumban) என்பது நம் இனப்பெயரின் வரலாறு. ஆதாரம் : ஹெய்மண்டார்ப் (1952), காப் & ஹாக்கிங்ஸ் (1989); சுவலபில் (1998) ஹாக்கிங்ஸ் (1989):2333, செல்லப்பெருமாள் 2005:68 தமிழக பழங்குடிகள்- பக்தவச்சலபாரதி பக்கம் 82,83.

பர்கூர் - நெல்லூர் கொலையுண்டு தெய்வமான குறும்பர் இன பழங்குடி மக்களின் நடுகற்கள்

Image
பர்கூர் - நெல்லூர் கொலையுண்டு தெய்வமான குறும்பர்  இன பழங்குடி மக்களின் நடுகற்கள் நடுகல் மரபில், நாட்டார் தெய்வ மரபுகளின் தாக்கத்தை வெளிப்படுத்தும் முதல் ஆய்வு இது. தகடூர்ப் பகுதியில் நான் அறிந்த இவ்வகையான நடுகல் வடிவமெடுத்த நாட்டார் தெய்வங்கள் குறித்து தனியாக எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஈரோடு மாவட்டம், பர்கூர் - நெல்லூர்ப் பகுதியில் இருக்கும் இத்தெய்வங்கள் முந்திக்கொண்டனர். நடுகல் மரபே நாட்டார் மரபுதானே, அது என்ன தனிதாக்கம் என்று கேள்விகள் எழலாம். இது குறித்து, கட்டுரையின் பகுதியாக சில செய்திகளை விளக்கியுள்ளேன். ‘‘ நடுகல் மரபும் நடுகல்மரபில் நாட்டர் தெய்வ மரபும்’’ என்று அடுத்து எழுத இருக்கும் கட்டுரை, இவ்விரண்டின் வேறுபட்ட பரிமாணங்களை விளக்குவதாக அமையும்.  அண்மையில், முகநூலில் கவனம் பெற்று பலவிதமான கருத்துகளை எழுதச் செய்த ஈரோடு மாவட்டம், பர்கூர் பகுதியில் நெல்லூரில் உள்ள நடுகல் இது. இதனைப் பதிவேற்றியவர், பழங்குடிமகன் என்ற மீனாட்சிசுந்தரம் குறும்பன் (Kurumban) .  (நெல்லூர் முதல் நடுகல்) இந்நடுகல்லில், கல்வெட்டுப் பொறிப்பு இல்லை என்பதால், இக்கல் எழுப்பப்பட்டதற்கான