Posts

Showing posts from April, 2020

கல்வராயன்மலையும் குறும்பக் கவுண்டர் ஜாகீர் இன மக்களும்

Image
கல்வராயன்மலையும் குறும்பக் கவுண்டர் ஜாகீர் இன மக்களும்  கல்வராயன் மலையில் சுமார் 106 கிராமங்கள் இருக் கின்றன . இவ்வூர்களில் மூன்று ஜாகீர்களே உரிமை பெற்றிருந்தன . அவை  அரியக்கவுண்டர் ஜாகீர்  குறும்பக் கவுண்டர் ஜாகீர்  சடையக் கவுண்டர் ஜாகீர் என்பன .  ஜசீர்களைக் ' காரானர் ' என்றும் கூறுவர் இவாகளும் மலையாளிக் கவுண்டர்களே . இம்மலையில் வாழ்ந்த ஒரு வரே ஜாகர் ஆக்கப்பட்டார் . பொதுவாக இவர்கள் தங்களைக் கொங்கு வேளாளர்கள் எனவும் , காஞ்சிபுரத்தி லிருந்து வந்தவர்கள் என்றும் கூறிக கொள்கிறார்கள் . எல்லாக் கிளைகளும் வேளாளர்கள் என்றே கூறுகின்றனர் .  * இப்போது உள்ள ஜாகீர்களின் முன்னோர்கள் விஜய நகர அரசர்கள் காலத்தில் , ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் . தெனால் விசய நகர அரசர்களால் உரிமை வழங்கப்பட்டது . காராளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் மலையில் உரிமை பெற்றதும் , தங்கள் சமுதாயத்தாரோடு இம்மலை யில் வாழ்ந்து கொண்டிருந்த வேடர்களைக் கொன்றும் , அவர்களை அடக்கியும் , அவர்கனோடு கலந்தும் தங்கள் அதிகாரத்தை இம்மலையில் அமைத்துக் கொண்டதாக வரலாறுகள் கூறுசின்றன . விசய நகர அரசின் அழிவுக்குப் பிறகு கர்நாடக நவாபு களின் ந

கொங்கு மலைவாசிகள் என்ற நூலில் இருந்து குறும்பர் இன பழங்குடி மக்களின் பார்வை...

Image
கொங்கு மலைவாசிகள் என்ற நூலில் இருந்து குறும்பர் இன பழங்குடி மக்களின் பார்வை... நன்றி.திரு.மானிட இயல் அறிஞர்  டாக்டர் பிலோ இருதயநாத் குறும்பர்கள்  நீலகிரி , மலபார் மைசூர் , வயல்நாடு முதலிய இடங்களில் வாழும் ஆதிவாசிகளாகிய இந்தக் குறும்பர்களைப் பற்றிப் பல்லாண்டுகளாகப் பல தகவல்கள் எழுதும்போது , நீலகிரியில் ஒவ்வொரு பாடியில் தங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது . அப்படி அவர்களிடம் தங்கும்போது பல பாடிகளில் பலர் பல விதமாகத் தங்கள் நடனப் பாடல்களைப் பாடிக்கொண்டு நடனமாடினர் . அப்பாடல்களை எல்லாம் எழுதி , ஒன்றாகச் சேர்த்துச் சிந்தனை செய்து பல புலவர்களிடம் காட்டிச் சேர்த்து ஆராயும்போது அதில் , “ கச்சியும் , மயிலையும் பல்லவர் ” என்ற சொற்கள் பலரிடம் பல இடங்களில் கொச்சையாகப் பாடப்படுவதைக் கண்டேன் . கடைசியில் பாடல்களைப் பிரித்துப் பார்க்கும்போது கலிங்கத்துப் பரணியில் இது கிடைத்தது .  " பாடீரே ! பாடீரே ! பாடீரே ! பாடீரே ! வண்டை வளம்பதி பாடீரே மல்லையும் , கச்சியும் பாடீரே பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோற்றலைப் பாடீரே காட்டிய வேழவணி வாரிக் கலிங்கப் பரணி , நங்கா . வலனைச் சூட்டிய தோன்றலைப் பாடீரே தொண்டை

குறும்பர் இன மக்களின் கம்பளி நெசவுத் தொழில்

Image
  குறும்பர் இன மக்களின் கம்பளி நெசவுத் தொழில்  ஆடு மேய்ப்பதையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் குறும்பர் பழங்குடியின மக்கள் ஆட்டுமுடியிலிருந்து தங்களை இரவு நேரங்களில் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் , மழைக்காலங்களில் காத்துகொள்ளவும் தேவையான கம்பளியை நெய்து கொள்கின்றனர் . ஆட்டின் முடியை வெட்டி , அதனை நூலாகத் திரித்து எப்படிக் கம்பளியாக நெசவு செய்கின்றனர் என்பது குறும்பர் பழங்குடி மக்களுக்கே உரிய தனித்தன்மையாகும் .  ஆட்டுக்குப் பூஜை செய்தல் ( உன்ன கசு ஹப்பா )  தங்கள் செல்வமான ஆடுகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை ஆடி அல்லது ஆனி மாதங்களில் பூசை செய்து கம்பளி நெய்யத் தேவையான ஆட்டில் உரோமத்தினைச் சேகரிப்பர் . ஆடுகளுடன் இவர்கள் வாழ்கின்ற காரணத்தால் ஆடுகளுக்கு முடி எப்பொழுது முதிர்ச்சியடையும் என்று அறிந்து வைத்திருக்கின்றனர் . வெட்டாமல் விடப்படும் முடியானது யாருக்கும் பயன்படாமல் போய்விடும் . எனவே ஆடுகளுக்குப் பூசை செய்து வழிபட்டு உரோமத்தைச் சேகரிக்கின்றனர் . ஆடுகளுக்குச் செய்யப்படும் பூசை இறைவனுக்குச் செய்யப்படும் பூசைக்கு ஒப்பானது ஆகும் . குறும்பர் பழங்குடியினரில் இளவயதுக்கா

குறும்பர் என்னும் இடைச்சாதியர் வரலாறு

Image
குறும்பர் என்னும் இடைச்சாதியர் வரலாறு ( டி . 3114 )  1 . விசய நகர அரசர்கள் காலத்தில் குறும்பர் என்ற இடையர்கள் பல இடங்களில் ஆட்சி செலுத்தி வந்தனர் .  2 . அவர்கள் நெடுமரம் , அணைக்கட்டு , சாப்பாக்கம் , நெரும்பூர் அரிய ஊர்களிலும் வேறு சில இடங்களிலும் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு புகழுடன் வாழ்ந்தார்கள் .  3 . அப்போது முதலியார் . வேளாளர் ஆகிய வகுப்பைச் சார்ந்தவர் களைத் தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்று குறும்பர்கள் கட்டாயப்படுத்தினார்கள் . அவர்கள் கீழ்ப்படிய மறுத்தனர் . அதனால் குறும்பர்கள் அவர்களுக்குத் தொல்லை தந்தனர் . அப்படி யும் அவர்கள் குறும்பர்களை வணங்க மறுக்கவே , தெருவிலும் மூச்சந்திகளிலும் வெற்றிலைத் தோட்டங்களிலும் மற்ற இடங் களிலும் திட்டிவாசல் போன்று சிறிய , உயரம் குறைவாக உள்ள வழிகளை அமைத்து அதற்கு முன்பாகக் குறும்பர்கள் உட்கார்ந்து கொண்டனர் . வழியில் போகிறவர்கள் அனைவரும் அந்தக் குறுகிய வாசலைத் தலைகுனிந்து கடந்து செல்வதன் வழி குறும்பர்களுக்குக் தலைகுனிந்து வணக்கம் செலுத்தினர் . ஆனால் இந்த ஏற்பாட்டை யும் முதலியார் , வேளாளர் வகுப்பினர் ஏற்கவில்லை .  4 . அமயன் என்ப

பல்லாவரதை ஆட்சி செய்த குறும்பர் அரசன் பல்லன்,காலிங்கன், இளவரசி பத்மாவதி பற்றிய ஓலைச்சுவடி தரும் செய்தி...பல்லாவரத்துக் கைபீதில்(டி . 2805 )

Image
பல்லாவரதை ஆட்சி செய்த குறும்பர் அரசன் பல்லன்,காலிங்கன், இளவரசி பத்மாவதி பற்றிய ஓலைச்சுவடி தரும் செய்தி... பல்லாவரத்துக் கைபீதில்(டி . 2805 )  சென்னை சைதாப்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த ( செங்கை மாவட்டம் ) ,  பல்லாவரம் என்ற ஊரின் வரலாறு பேசப்படுகிறது .   குறும்பர் ஒருவன் அந்நாளில் இப்பகுதியை ஆண்டதாகச் சுவடி தெரிவிக்கிறது ; பல்லன் என்பது  குறும்பர் அரசனின் பெயர் என்றும் சுவடி பேசுகிறது .  இந்தச் சுவடி மேலும் ஒரு பழைய தமிழ் அம்சத்தைத் தருகிறது . அஃதாவது , விடுகதை போல , சாடை பேசும் முறையில் , ஒருவர் கருத்தை மற்றவருக்கு மறைவாகப் புலப்படுத்துவதில் தமிழ்மக்கள் வல்லவர்கள் !  இந்தத் தமிழ்ப்பண்பாடு இப்போது மறைந்துவிட்டது எனலாம் .  கருத்துச் செறிவும் , மொழி வளமும் இந்தச் சாடைமொழியில் இருக்கும்  ஒரு பூவாணிச்சி மூலமாக ஒரு காதல் செய்தியைத் தலைவன் தலைவிக்குச் சொல்லியனுப்புகின்றான் ; அதற்கு தலைவி , தனது பதிலை மறைமுகமான கூற்று மூலம் அனுப்புகிறாள் !  இந்நூலுள்ளே படித்தால் உங்களுக்கு நன்கு விளங்கும் . மிகச் சிறந்த நாடகப்பாணியில் இச்சுவடி செல்கிறது .  இந்தச் சுவடியின்படி ,  பல்லாவரப் பகுதியை ஆண்ட காலிங்கன் என

பட்டிப்புல மண்மேட்டுக் குறும்பர்க் கோட்டை விவரம் ( டி . 2864 )

Image
பட்டிப்புல மண்மேட்டுக் குறும்பர்க் கோட்டை விவரம் ( டி . 2864 )  1 . முன்பு குறும்பர்கள் மிகவும் புகழுடன் தங்கள் சாதித் தொழிலாகிய ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு அவ்விடத்தில் வாழ்ந்து வந்தாலும் . அவர்களுடைய ஆடுமாடுகளுக்கு அவ்வூர் பட்டி யாக இருந்ததாலும் அவ்வூரில் ஆடுமாடுகள் அதிகமாகப் பெருகியதால் பட்டிப்புலம் என்று அவ்வூருக்குப் பெயர் வந்தது .  2 . அவர்களுடைய ஆடுமாடுகளுக்குக் கொடிய விலங்குகளால் தொல்லைகள் ஏற்பட்டன . இப்போது சாணார்குப்பம் அல்லது சாளாங்குப்பம் என்கிற ஊரில் இடையன் படல் என்றழைக்கப் படுகிற இடத்தில் பெரிய கற்பாறையைக் குறும்பர்கள் அமைத்து அதன் உச்சியில் பல மாடங்களை ஏற்படுத்தி மேலே ஏறிச் செல்வ தற்குப் படிகளையும் அமைத்து , அவற்றின் வழி சென்று அங்குள்ள மாடங்களில் தீபங்களை வைத்து அவற்றின் வெளிச்சத்தினால் கொடிய விலங்குகளிடமிருந்து தங்கள் மந்தைகளைக் காப்பாற்றிக் கொண்டார்கள் .  3 . குறும்பரால் அமைக்கப்பட்டதால் அந்தக் கற்பாறை இடையன் படல் எனப்படுகிறது .  4 . குறும்பர்கள் மத்தையை வைத்திருந்த இடம் மந்தைவெளி என்று அழைக்கப்படுகிறது .  5 . அங்கே ஒரு பாலகிருட்டிணரின் படிமம் மிகப் பழமைய

சன்னியாசி குறும்பர் சரித்திரம் ( டி . 2862 )

Image
  சன்னியாசி குறும்பர் சரித்திரம் ( டி . 2862 )  குறும்பர் சரித்திரம் எனும் நூலைப் படித்த ஒரு துறவி கூறிய விவரங்கள் பின்வருமாறு :  1 . ஆதொண்டை மன்னன் காலத்தில் குறும்பர்கள் சமண மதத்திற் குட்பட்டிருந்தார்கள் . அவர்கள் சமண மதமும் ஆட்சியுரிமையும் பழங்காலத் தொட்டுத் தங்களுக்கு உரிமையுடையது என்று எண்ணி மற்றவர்களுடன் பகைமையை வளர்த்துக்கொண்டு வந்தார்கள்   2அவர்கள் மிகப் பலம் வாய்ந்த கோட்டையைப் புழலிலே கட்டிக் கொண்டு ஆண்டு வந்தார்கள் . 3 அவர்களின் ஆளுகைக்குள் , சென்னைப் பட்டணம் , மாவலிப் புரம் , வடப்பட்டணம் கோட்டை வரை சற்றேறக்குறைய ஆற்காட்டுப் பகுதி முழுவதும் அடங்கியிருந்தது . ஆனால் அவர்களுடைய ஆட்சிக்கு ஆதரவு இல்லாமலிருந்தது .  4 . அவர்கள் தங்கள் மதத்திலிருந்து சூத்திரர்களையும் புறக்கணித்துக் கொடுமை செய்தனர் . இதை அறிந்து பல அரசர்கள் அவர்கள் மீது படையெடுத்து வந்தனர் . ஆனால் குறும்பர்கள் தங்கள் வலிமையினால் படையெடுத்து வந்தவர்களை முறியடித்து , வெற்றி பெற்று மிகவும் புகழுடன் வாழ்ந்து வந்தார்கள் :  5 . குறும்பர்களிடம் அனைவரும் அச்சத்துடன் அடங்கி வாழ்ந்து வந்தபோது பார்ப்பனர்கள் குறும்பர்

குறும்பர்கள் பற்றி வேடச்சந்தையூர் (வேடசந்தூர்) ஓலைச்சுவடி தரும் செய்தி

குறும்பர்கள் பற்றி வேடச்சந்தையூர் (வேடசந்தூர்)  ஓலைச்சுவடி தரும் செய்தி வேடச்சந்தையூர் கிராமம் நாகன்பட்டி நாட்டாண்மை எழுதிக்கொடுத்த வரலாறு ( டி . 3405 ) 1 ,  வேடசந்தயூர் கிராமம் , நாகன்பட்டி நாட்டாண்மை சடச்சகவுண்டன் யெழுதிக் கொடுத்த வரலாற் யென்னவென்றால் , ' ' யெங்கள் ஜாதி குறும்பர் ; நாங்கள் செய்குற தொழில் யென்ன வென் றால் , ஆண் பிள்ளை குடித்தினம் செய்குறது ; பெண் பிள்ளைகள் பாளயத்துக்குறும்பாட்டில் மயிரு அறுத்து , அஞ்சுமுளக் கம்பளி நெய்து , தேவையான பேருக்கு கம்பளி 1க்கு கிறயம் கலிபணம் 1 - 2 - 2 ) யிந்த விலைகளுக்கு விற்கு றது ; யெங்கள் குறும்பசாதி நடப்பு யென்னவென்றால் , யெங்களுக்கு குலதெய்வம் லக்ஷிமிதேவி ; டி தெய்வம் குலதெய்வமாக கும்பிட்டுக்கொண்டு வருகுறோம் ; அந்த தெய்வத்துக்கு குற்றம் குறை வந்தால் , பிரார்த் தனை உள்ள பேர் தேங்காயெடுத்துக் கொண்டு , ஆண்பிள்ளை யாவது பெண் பிள்ளையாவது தலைமேலே வைத்தால் றெண்டாயிப் போறது உண்டு . யெங்கள் சாதி வரலாற் யெனக்கு தெரியவராது .  யெங்கள் சாதியாற் தாடிக்கொம்பு கிராமத்தில் பாப்பணம்பட்டியி லிருக்குறார் கள் .  தற்குறி சடைச்சகவுண்டன் 

கொங்கு நாட்டில் குறுப்பு நாடு (குறும்பர் நாடு)

கொங்கு நாட்டில் குறுப்பு நாடு  (குறும்பர் நாடு) ஆய்வுப் பொருளாகிய பெருங்கதை தோன்றிய நாடு குறுப்பு நாடாகும் .  எனவே அது குறித்துக் கூற வேண்டியது இன்றியமையாததாகின்றது .  கொங்கு மண்டல சதக ஆசிரியர் " கார்மேகக் கவிஞர் " கொங்கு மண்டலத்தை " இருபத்து நான்கு " நாடுகளாக , பூந்துறை நாடு முதலாக குறுப்பு நாடு ஈறாகக் குறிப்பிட்டுள்ளார் .  கொங்குநாட்டில் சமண சமயம் செழிப்பாக இருந்த நாளில் எழுபத்து இரண்டு சமண ஆலயங்கள் இருந்ததாகச் சமண அர்ச்சகர்கள் கூறுகின்றனர் . அவற்றுள் தலைமைச் சான்றாக அமைந்துள்ளது விசயமங்கலமே ஆகும் .  விசயமங்கலத்தைச் சுற்றி அரசன் எனாமலை , அரச்சலூர் மலை , வெள்ளோடு , சீனாபுரம் , திங்களூர் , பூத்துறை ஆகிய சமணத் தலங்கள் அமைத்திருந்தன . இத்தலங்கள் அனைத்தும் " குறுப்பு நாட்டில் " இடம் பெற்றிருக்கின்றன . இவையேயன்றி " அவிநாசி ' க்கு அடுத்த பழங்கரைக் கிராமத்தில் ஒரு ' சமணத்தலமும் ' , ' காங்கயத்தில் மற்றொன்றும் இருந்ததாகக் கோவைகிழார் கூறியுள்ளார் " அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளிக் கல்வெட்டுகளிலும் , இலக்கியத்

கொங்கு நாட்டில் குறும்பர் செய்த நற்பணிகள்

கொங்கு நாட்டில் குறும்பர் செய்த நற்பணிகள்   குறும்பர் கல்வெட்டு: குறும்பர்கள் இன்று ஈரோடு மாட்டம் அந்தியூருக்கு வடக்கே உள்ள பருகூர் மலைத் தொடரில் " குறும்பர்கள் " என்ற மலைவாழ் மக்களாக வாழ்கின்றனர் . இம்மக்களின் சிலர் குறும்பா மொழி பேசுகின்றனர் . சிலர் கொச்சையான தமிழும் பேசுகின்றனர் . இன்று இவர்களில் " பால் குறும்பர் " " முளகுறும்பர் ” என்ற பிரிவு காணப்படுகின்றது .  குறும்பர்கள் கொங்கு நாட்டில் பழங்குடி மக்களின் ஒரு இனத்தார் கொங்கு 24 நாடுகளில் குறும்பர்கள் வசித்த நாடே குறும்பர் நாடு , குறும்புநாடு , குறுப்புநாடு என்று மாறியுள்ளது எனலாம் .  கொங்கு நாட்டுக்கு வடக்கே ஹௗபீடுவை தலைநகரமாகக் கொண்ட ஒய்சாளர் வம்சம் ( போசாள் ) தோன்றியது . கொங்கு நாட்டில் தென் எல்லையில் மதுரை பாண்டியர் புகுந்து ஆட்சி செய்த போதே கொங்கு நாட்டின் வடக்கு பகுதியில் ஒய்சாளர் புகுந்து தொல்லை விளைவித்தனர் . ஏறத்தாழ கி . பி . 1189 முதல் கி . பி . 1342 வரை கொங்கு நாடு முழுவதும் ஒய்சாளரின் முழுகட்டுப்பாட்டில் இருந்துள்ளது . ஒய்சாள மன்னன் மூன்றாம் வீரவல்லாளன் கல்வெட்டு பெரும்பாலும் கிடைக்கின்றது . ஈர

குறும்பர் அரசன் கிஷ்ட்ணராயர்காட்டிய மருதங் குறும்பர் கோட்டை

Image
குறும்பர் அரசன் கிஷ்ட்ணராயர் காட்டிய மருதங் குறும்பர் கோட்டை    ' மருதங் குறும்பர் கோட்டை வரலாறு ' ( டி . 3828 ) எனும் சுவடி ,  மருதம் என்ற ஊர்க்கோட்டை பற்றிப் பேசுகிறது . மருதம் என்ற ஊர் செங்கை மாவட்டத்தில் , உத்திரமேரூர் வட்டத்தில் அமைந்துள்ளது . இவ்வூர்க் குறும்பர்களின் மண் கோட்டையைத் திம்மராசா என்பவன் போரிட்டுப் பிடுங்கிக் கொண்டான் என்கிறது சுவடி ,    மருதங் குறும்பர் கோட்டை வரலாறு   ( டி . 3828 )  ACCOUNT OF A CURUMBAR FORT AT MARUTAM NEAR CANCHI IN THE UTRA MELUR DISTRICT  1 . முன்னாளிலே , இந்தக் கோட்டை குறும்பராலே கட்டப்பட்டது . இந்த கோட்டை மண்ணினாலே கட்டப்பட்டிருக்குது . சுமாற் நாற்பது காணி விஸ்த்தீறண மிருக்குது . கோட்டை செவர் அகலம் ரெண்டு கோலிருக்கும் , இது வெகுனாளாய் குறும்பராலே யாளப்பட்டது . அப்பிற மவாள் ராயர் கிஷ்ட்ணராயர் பிறபுத்துவம் வரைக்கும் ஆண்டு , ராயர் கிஷ்ணராயர் னாளிலே அவருக்குள் செங்கில்பட்டு கோட்டை ராசாவானவன் , யிவாள் மேல் யுத்தத்துக்கு வந்து , திருப்புலிவனத்தில் எதிர்க் கோட்டைப் போட்டுக்கொண்டு , வெகுனாள் சண்டை குடுத்து , கடைசியில் குறும்பர்

#அத்தியாயம் ஆரம்பம் 3#தொல்குடி..#குறும்பு..#குறும்பர்..

Image
#அத்தியாயம் ஆரம்பம் 3 #தொல்குடி.. #குறும்பு.. #குறும்பர்.. பாதீடு            ஆநிரைகளைச் சமபங்காகப் பிரித்து, வீரர்கள் வைத்துக்கொண்ட செய்தியை அகநானூற்றுப்பாடல்கள் விளக்குகின்றன. சங்க இலக்கியங்களில் 'பால்' 'பாதீடு' ஆகிய சொற்கள் குறிப்பிடப்படுகின்றன . 'இவை தொல்குடி வாழ்க்கை (traial life) யில் நிலைபெற்றிருந்த சமப்பங்கீட்டு முறையைச் சுட்டுவன.  பால் என்பது 'பால்வரைத்  தெய்வமாக' உருவாயிற்று. இதுபற்றி கைலாசபதி, கிரேக்க பால்வரைத் தெய்வம் மொயிரை (Moyira) வரலாற்றுடன் ஒப்பிட்டு  ஆய்ந்து கண்டுள்ள முடிவுகள் சங்க இலக்கியத்தில் குடி வாழ்க்கையின் எச்சங்கள் நிலைபெற்றிருந்தது என்பதை வலியுறுத்தும் அவற்றில் குடிவாழ்க்கையோடு தொடர்புடையதாக சில பாடல்கள் கிடைத்துள்ளன. "புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, இரவுக் குறும்பு அலற நூறி, நிறை பகுத்து, இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் கொலை வில் ஆடவர் போல, பலவுடன் பெருந்தலை  எருவையொடு பருந்து வந்து இறுக்கும், அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்"     (அகம். 97:3-8) "வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை, புனை

பெண்முகவடிவில்ஒண்டிகைமாஸ்தி கல் #சஹகமானா #மைசூர்

Image
#பெண்முகவடிவில்ஒண்டிகைமாஸ்தி கல் #சஹகமானா #மைசூர் பழங்கால கர்நாடகத்தில் பெருமளவு சதிமுறைமை நடைபெற்றதற்காண சான்றுகள் கர்நாடக முழுமையும் ஏராளமாக விரவிக் கிடைக்கின்றன. இவற்றுள் மூன்று நிலை அடுக்கு சதிகற்கள் இருப்பினும் பெரும்பான்மையாவை ஒண்டி கை மாஸ்தி கல் என்ற வகை சதிற்களே!  இவை ஏறக்குறைய நூற்றுக்கணக்கான அளவில் கர்நாடக கிராமங்களில் காணக்கிடைக்கின்றன.( தாளவாடி மலைக்கிராமங்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஒண்டிகை மாஸ்திகற்கள் எம் குழுவினரால் கண்டறியப்பட்டு முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது) அமைப்பு-; அலங்கார தூணின் மையப்பகுதியின் பக்கவாட்டில் பெண்ணின்வலது கை மடக்கி உயர்த்தியபடி அபயஹஸ்தம்  காட்டியிருக்கும் படியும் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலின் மத்தியில் எலுமிச்சை கனியை பற்றியிருக்கும்மாறும் தூணின் மேற்புறம் கும்பகலசம் போன்றும் சிலவற்றில் முக்கோண வடிவத்திலும் சித்தரிக்கப் பட்டிருக்கும்...  கீழ் புறத்தில் ஆண், பெண் சிற்பங்கள் வணங்கியபடியும் சிலவற்றில் தோளோடு அணைத்தாவாறு காட்டியிருப்பர் மேற் புறத்தில் சூரியன் சந்திரன் பொறிக்கப்பட்டிருக்கும் இந்த வகை கற்களை சதிமுறைமையை குறிக்கும் சதிகல்

அதியமான்களே குறும்பர் பல்லவர்கள் என்பதற்கு மேலும் ஒரு சான்று!!

அதியமான்களே குறும்பர் பல்லவர்கள் என்பதற்கு மேலும் ஒரு சான்று!! ****************************************** கி.பி 1292;திருப்பூர்மாவட்டம் காங்கேயம் வட்டம்;பட்டாலி என்ற ஊரில் உள்ள "பால் வெண்ணீஸ்வரர் கோயில்" லில் கொங்குச்சோழர்கல்வெட்டு ஒன்று "சிறீலசிறீ விக்கிரமசோழதேவார்க்கு யாண்டுபத்தொன்பதாவது பட்டாலியின் காவலன் குறும்பிள்ளரில் ; நாயநானார் பால்வெண்ணீஸ்வரமுடையார்க்கு இத் திருமண்டகம் அதியமான் மனைக்கிழத்தியும் (மனைவி) மகன் வீராந்தப் பல்லவாரையனும்" என்று இக்கல்வெட்டு கூறுகிறது. **** பட்டையாக இருக்கும் வாள் பட்டா என்றும் பட்டம் என்றும் அழைக்கப்பட்டாது. பட்டம் என்றால் வாள்; பட்டாக் கத்தி எனப்பட்டது. பட்டாவைத்திருப்போர் "பட்டஆளர்"பட்டாளர் -பட்டாளம் எனப்பட்டது இதுவே ஆங்கிலத்தில் battalion;battale;battalia; better;betten;beating என்ற சொற்களாக போயிருக்கிறது.பட்டாளி என்பது பாடிவீடு என்ற பொருளீல் ஆளப்பட்டதாகத் தெரிகிறது. * https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D மகன் என்ற சொல்லுக்கு பெற்ற மகன்; தத்தெ

குறும்பர் இனத்தவர்களின் “ஜகுழி” என்கிற மயானம் மற்றும் அதன் வழிபாட்டு மரபுமுறைகளைப் பற்றி

Image
குறும்பர் இனத்தவர்களின் “ஜகுழி” என்கிற மயானம்  மற்றும் அதன் வழிபாட்டு மரபுமுறைகளைப் பற்றி =================================================== தருமபுரி மாவட்டம், பாலஜங்கமணஹள்ளி கிராமத்தில் வசிக்கும் குறும்பர் இனத்தில் “ஆனை” அதாவது “யானை” குலத்தைச் சேர்ந்தவர்கள் வம்சாவழியாக இறந்தவர்களை ஒரே இடத்தில் தொடர்ந்து புதைக்கும் இடத்தை “ஜகுழி” என்று அழைக்கிறார்கள். இதில் ஆண்கள் மட்டுமல்லாது இந்த குலவம்சத்திற்கு வாக்கப்பட்டு வரும் பெண்களும் அடங்குவர். திருமாணமாகாத பெண்பிள்ளைகளுக்கும் இந்த ஜகுழியில் இடமுண்டு.  ஆனால், இந்த வம்சாவழியில் பிறந்திருந்தாலும் திருமணத்திற்குப்பின் கணவனால் கைவிடப்பட்டோரையோ, விதவைகளையோ இங்கு புதைக்கும் வழக்கம் இல்லை. அவர்கள் எந்த குலவம்சத்தில் வாக்கப்பட்டுச் சென்றார்களோ அங்கு மட்டுமே அனுமதி. இல்லையேல் அந்த ஊரின் பொது மயானத்தில் மட்டுமே புதைக்கப் படுகிறார்கள்.  காலப்போக்கில் ஏதோவொரு நிர்ப்பந்தத்தினால் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்துவிட்டவர்களுக்கும் அவருக்கு வாக்கப்பட்ட பெண்பிள்ளைகளுக்கும் இந்த ஜகுழியில் இடம் ஒதுக்கவேண்டிய காலசூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த மாற்றமும்