Posts

Showing posts from November, 2017

தமிழ்மொழி -இலக்கிய வரலாறு புல்லினத்தர் ஆயர்களின் பிரிவில் குறும்பர்

Image
தமிழ்மொழி -இலக்கிய வரலாறு புல்லினத்தர் ஆயர்களின் பிரிவில் குறும்பர். 1 நூற்றாண்டில் இருந்து குறும்பர்கள் ஆண்டுவருவதாக கூறப்படுகிறது ஆனால், கன்னடம் 8நூற்றாண்டில் தான் தோன்றியது,அதியமான் காலங்களில் கூட அவர் ஆட்சியில் தமிழ் கலந்த கன்னடம்  (பழகன்னடம்) பேசியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சேரநாடு என்பது தற்போதைய கேரளா அங்கு மளையாளம்  பேசுகின்றனர் ஆனால் நம் பாடபுத்தகத்தில் படிப்பது சேரன் தமிழ் மன்னர் என்று ஆனால் தமிழ் மன்னியல் நெடுங்காலம் கனத்த புகழோடு ஆட்சி செய்து இனக்குழு ஆட்சி மற்றும் போரரசுகளுடன் பெரும்போர் புரிந்து இன்றளவும் இவர்கள் பேசும் மொழியில் 95% ஆதி தமிழ் வார்த்தைகள் அன்றும் இன்றும்  அதே பெயருடன் நிலைகொன்டு வாழும் இந்த தமிழ் சமுதாயத்தை மறைக்கும் திட்டமிட்ட காரியம் என்னவோ நான்அறியேன் வீரியம் உள்ள வித்து என்றும் விண்போகாது

இன்றளவும் வில்லில் விலங்குகளை வேட்டைஆடும் முள்ளுகுறும்பர் இனம்

Image
இன்றளவும் வில்லில் விலங்குகளை வேட்டைஆடும் முள்ளுகுறும்பர் இனம் ================================ குறும்பர்களின் வாழ்க்கையும்,நாட்டையும் சிதைத்தபாதகன் கரிகாலன்(இன்னோறு பிறவியேனும் இருந்தால் இவனை கருவருக்கவேண்டும்) போரினால் ஏற்ப்பட்ட உயிர் இழப்புகளும் குறும்பர்களை சிதைத்தது சிதைந்த ஒருபகுதி மக்கள் கல்வராயன் மலை அட்டப்பாடி போன்ற பகுதிகளில் வாழும் முள்ளுகுறும்பர்கள் வில் எப்போதும் இவர்கள் உடனே இருக்கும்இவர்கள் தொழில் வேட்டையாடுதல் வாழும் உயிர்களை, குறிப்பாக காட்டு விலங்குகளை, உணவு, மகிழ்ச்சி, வியாபாரம் போன்றவற்றிற்காக பிடிப்பது மற்றும் கொலை செய்வது ஆகும். இச்செயலை மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் செய்கின்றனவியாபாரப் பொருட்களுக்காக வேட்டையாடப்படும் உயிரினங்களின் பொருட்கள் நாடு கடத்தப்படுவது குற்றம் என அரசு சட்டங்கள் தெரிவிக்கின்றன, பன்னெடுங்காலமாக தமிழ் அரசர்கள் வேட்டையாடியதைப் பற்றி இலக்கியங்கள் கூறுகின்றன. அழிவில் இருக்கின்ற விலங்குகளை வேட்டையாடுதல் தொடர்பான சட்டங்கள் பல நாடுகளில் இயற்றப்பட்டுள்ளன. இந்து சமய புராணங்கள் அரசர்கள் வேட்டையாடுதலை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர் எனக் கூறுகின

பெரியபுராணம் கூறும் குறும்பர் குறுநில மன்னர்

Image
பெரியபுராணம் கூறும் குறும்பர் குறுநில மன்னர் ×××××××××××××××××××××××××××××××××× பாடல் எண் :3798 சென்ற திசையிற் சிவனடியார் சிறப்பி னோடு மெதிர்கொள்ளக் குன்றுங் கானு முடைக்குறும்ப ரிடங்க டோறுங் குறைவறுப்பத் துன்று முரம்புங் கான்யாறுந் துறுகற் சுரமும் பலகடந்து வென்றி விடையா ரிடம்பலவு மேவிப் பணிந்து செல்கின்றார்.

பல்குன்றம்:(குறும்பர்கள் ஆண்ட 24கோட்டங்களில் ஒன்று)

Image
பல்குன்றம்:(குறும்பர்கள் ஆண்ட 24கோட்டங்களில் ஒன்று) பலநகரில் மன்றாடி(ஆடு மேய்ப்போர்)வாதாவியின் மகன் மருதன் ஆயர்குலதலைவன்(புல்லினத்து ஆயர் குறும்பர் என்று கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளது) திருவண்ணாமலை உடையார்(அண்ணாமலையார் கோவிலுக்கு) நந்தாவிளக்கொரிக்க ஒன்றுக்கு,இன்றையனார் திருவிளக்கு மன்றாடி மலையன் பூமன் ஆகியோரும் அருனகிரிநாதர்க்கு விட்ட 32 பால் பசுவும் 1பொலி எருதும் விடப்பட்டதாக கூறப்படுகிறது மருதன்: ஆயர்குலதலைவன், மெக்கன்சியின் குறிப்பில்(மருதன் ஆன்ட கோட்டை )மருதன்கோட்டை குறும்பர்கள் என்ற தலைப்பும் உள்ளது, குறும்பர் குல பிரிவில் பிரிக்கப்படுவார்கள் குறும்பர்களின் குலங்களில் ஒன்றான ஆனை கூட்டம் (குலம்) இன்றுவரை மருதன்(மருதையான்) என்று விளங்கும் இவர்களின் குல தெய்வம் என்பது வியப்புக்கு உறியதாக இருக்கிறது இதனால் முன்னோர்களை வணங்குபவர்கள் என்று தெளிவாக தெரிகிறது

அருவாளர் -குறும்பர் தமிழ் வெளிர் ளிர் வரலாறு

Image
அருவாளர் -குறும்பர் தமிழ் வேளிர் வரலாறு : ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: *அருவாளர்: அரண்+ஆளர்(ஆட்சி செய்பவர்) அரணை ஆட்சி செய்பவர் அருவாளர் பொருள் தருகிறது, அருவா+ளர் அருவா(வாங்கு அருவா) வை வைத்து இருப்பவர்கள் அருவாளர் என்ற பொருள் தரும் *குறும்பர்: குறும்பு (அரண்)+பர் அரணை ஆட்சி செய்பவர்,வாழ்பவர்கள்  குறும்பர் ஆடுகள் மேய்க்கும் போது வாங்குஅருவாள் வைத்து இருப்பது வழக்கம் கிட்டத்தட்ட இந்த இரு பெயரின் பொருளும் ஒன்றாக அமைகிறது * குறும்பர்(அருவாளர்) யும் ஆதொண்டன் போரில் வீழ்த்தினான் என்பதை வரலாற்றில் நாம் காண்கிறோம். * வேள்,அரட்டர்,குறும்பர்கள்  முதிற்ச்சியே  வேளிர்  என்பதை நிகன்டுகளில் நம்மால் காண முடிகிறது * ஒரிசா  பாலு  அவர்கள் தந்தி டீவி நிகழ்ச்சியில் ஆய் என்ற அரசே முதன் முதலில் தோன்றியது என்று குறிப்பிடுகிறார் *குறும்பரை பயிற்றுவித்து குடியமர்த்தியவர்கள் என்பதும் என் முன்பதிவுகளில் உள்ளது அதை போல் அருவாளரையும் அகத்தியர் குடியமர்த்தியதாக வரலாறு கூறுகிறது அருவாளர் குறும்பர் என்று பல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் * குறும்பர் (அருவாளர் ) தொ

குறும்பர் சிற்பம்!!!!!

Image
குறும்பர் சிற்பம்!!!!! குறிஞ்சியும் முல்லையும் சார்ந்த நில்ங்களில் பழந்தமிழர் சமுதாயம் கால்நடைச் சமுதாயமாக இருந்துள்ளது. ஆநிரை கவர்தல் பற்றியும், ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தொல்லியல் சார்ந்த நடுகற்களும் ஆநிரைப்பூசல்களின் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன. கால்நடைகளைக் காக்கும் காவல் வீரர்கள் காட்டு விலங்குகளான புலிகள், பன்றிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு சண்டையிடும் சூழலும் அதன் விளைவாகக் காவல் வீரர்கள் இறந்துபடுதலும் அவர்களுக்கு நினைவுக்கல் எழுப்புதலும் “புலிகுத்திக்கல்”  போன்ற தொல்லியல் சின்னங்களால் அறியப்படுகின்றன. கோயில்களில் விளக்கெரிக்கும் நிவந்தத்துக்காக ஆடுகளைக் கோயிலுக்குக் கொடையாக அளித்தனர். கோயில் நிர்வாகம், ஆடுகளை குறும்பர்களிடம் ஒப்படைத்து நிசதமும் (நாள்தோறும்) இத்தனை ஆழாக்கு நெய் கோயிலுக்கு வழங்கவேண்டும் என்று நிவந்தத்தைச் செயல்படுத்தியது. இந்த குறும்பர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கூடவில்லை. “தி இந்து”  தமிழ் நாளிதழ்  சென்ற 28-06-2017 அன்று “தி இந்து”  தமிழ் நாளிதழில் “காடாறு மாசம்...வீடாறு மாசம்”  என்னும் தலைப்ப

குறும்பன்கோட்டையில்2000 ஆண்டு பழமையான தானிய சேமிப்புக் கிடங்கு கண்டுப்பிடிப்பு !

Image
குறும்பன்கோட்டையில் 2000 ஆண்டு பழமையான தானிய சேமிப்புக் கிடங்கு கண்டுப்பிடிப்பு ! விழுப்புரம் மாவட்டம், குறும்பன்கோட்டையில், 2,000 ஆண்டுகள் பழமையான தானிய சேமிப்பு கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் உள்ளது, குறும்பன்கோட்டை. குறும்பர் என்ற பழங்குடி இன மக்கள் அதிகம் வாழும் இந்த ஊரில், ஏனாத்துார் சிறி சரசுவதி விசுவ மகாவித்யாலயா கல்லுாரியின், சமசுகிருதம் மற்றும் இந்திய கலாசாரத்துறை பேராசிரியரும், புவிதொல்லியல் ஆய்வாளருமான, எஸ்.ராமகிருட்டிண பிசிபதி, அகழாய்வு பணியை மேற்கொண்டார். மே, 26ல் துவங்கி, சூன் 20 வரை நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட, மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.                                   இதுகுறித்து, எஸ்.ராமகிருட்டிண  பிசிபதி கூறியதாவது: எஸ்.சண்முகவேல் என்ற ஆய்வு மாணவரும், நானும், குறும்பன்கோட்டை பகுதியில் ஒரு மாதம் அகழாய்வு மேற்கொண்டோம். அங்கு, பல்லவர்களுக்கு முற்பட்ட காலத்தில் வசித்த குறும்பர்களின் தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. குறுநில மன்னரின் ஆட்சிக்கு உட்

தேன்கனிகோட்டைக்கு அருகில், குறும்பர் இன பழங்குடி மக்கள் வழிபாடு செய்யும், 47 நடுகற்கள் அடங்கிய தொகுப்பு

தேன்கனிகோட்டைக்கு அருகில், குறும்பர் இன பழங்குடி மக்கள் வழிபாடு செய்யும், 47 நடுகற்கள் அடங்கிய தொகுப்பு , ‘பிக்கனள்ளி’ என்ற கிராமத்தில், குறும்பர் இனமக்கள் வழிபாடு செய்யும், 47 நடுகற்கள், ஒரே இடத்தில், போதிய பாதுகாப்பின்றி இருப்பதை கண்டறிந்துள்ளனர் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் நடுகற்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான், அதிகமாக கிடைக்கின்றன. இந்த மாவட்டத்தில், தளிக்கு அருகில் உள்ள, நாகொண்டபாளையத்தில், 46 குறும்பர் இன நடுகற்கள், ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதே போல், ஓசூருக்கு அருகே உலுவீரணள்ளியில், சுமார் 25 குறும்பர் இன நடுகற்களும், கெலமங்கலத்தில் சுமார் 23 குறும்பர் இன நடுகற்களும், ஓசூருக்கு அருகே கொத்தூரில் சுமார் 25 குறும்பர் இன நடுகற்களும், பாரூர், துவரப்பள்ளி, அச்சேந்தரம் போன்ற ஊர்களிலும், நிறையவே குறும்பர் இனமக்கள் வழிபாடு செய்யும் நடுகற்கள் இருப்பதை அறிய முடிகிறது. ஒரே இடத்தில் 47 நடுகற்கல்கள் தேன்கனி கோட்டையிலிருந்து, சாலிவரம் போகும் சாலையில் பயணித்தால், 5 வது கிமீட்டரில் பிக்கனள்ளி வருகிறது. இங்குதான், மிக அதிகமாக, குறும்பர் இனமக்கள் வழிபாடு செய்யும், 47 நடுகற்கள்

வீரபத்ரசாமி ஆட்டம்

வீரபத்ரசாமி ஆட்டம் முனைவர் சி.சுந்தரேசன் துறைத்தலைவர் நாட்டுப்புறவியல் துறை இறைவழிபாட்டுக்கு உதவுமாறு பலவிதமான நாட்டுப்புற ஆட்டக் கலைகள் நடத்தப் பெறுகின்றன. அவை பெரும்பாலும் ஊர்த் தெய்வங்களுக்கு விழா நடத்தும் போது நடைபெறுகின்றன. குறிப்பிட்ட தெய்வங்களுக்குக் குறிப்பிட்ட ஆட்டக் கலைகள் என்று வகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அனைத்துச் சமயச் சார்பு ஆட்டக் கலைகளும் இறை வணக்கத்துக்காகவே நடைபெறுகின்றன. முழு முதற்கடவுளாகிய சிவனின் பிள்ளைகளுள் ஒருவராகத் தோற்றமளித்தவர் வீரபத்ரசாமி ஆவார். இவருக்குப் பல இடங்களில் பல பெயர்கள் உண்டு. இவர் பல இன மக்களுக்குக் குலதெய்வமாகவும், சிலருக்குக் காவல் தெய்வமாகவும் விளக்குகிறார். சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் என்று ‘திருவிளையாடல் புராணம்’ கூறுகிறது. ‘தக்னகயாகப்பரணியில் தக்கனை அழிக்க வீரனாகக் காட்சி தந்தார் என வருகிறது. ‘கந்த புராணத்தில்’ வீரபத்ர படலம்’ என்றே இடம்பெற்றுள்ளது. குறும்பர்கள் – ஓர் அறிமுகம் ‘குறும்பர்’ இன மக்களுக்குக் குலத்தெய்வம் அகோர பத்திரர் ஆவார். தர்மத்தின் வழி நிற்கும் இந்திய மக்களுள் இவர்களும் ஒருவர். இவர்கள் வட ஆற்காடு, திரு