Posts

Showing posts from September, 2018

குறும்பர்களின் தெய்வமாகிய கண்ணகி கேரளத்தில் குறும்பா பகவதி எனப்படுகிறாள்.

Image
குறும்பர்களின் தெய்வமாகிய கண்ணகி கேரளத்தில் குறும்பா பகவதி எனப்படுகிறாள். கண்ணகி வழிபாடு கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள், தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும் அவனது அரசி கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், சேர நாட்டு மன்னன் செங்குட்டுன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியை பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. கொற்றவை நாவலில் மதுரையை எரித்த பின்னர் கண்ணகி வைகை வழியாக சென்று சுருளி ஆறு வழியாக மலை ஏறி இந்தியாவிலுள்ள இன்றைய மங்கலதேவி கோய

குறும்பர் இன பழங்குடி மக்கள் வணங்கும் பெருங்கற்கால வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு...

Image
குறும்பர் இன பழங்குடி மக்கள் வணங்கும் பெருங்கற்கால வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு... தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பெருங்கற்கால வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தருமபுரியைச் சேர்ந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சி.சந்திரசேகர், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த செந்தில், நாகராஜ், கிருபானந்தன் உள்ளிட்டோர் அண்மையில் பாலக்கோடு அடுத்த பி.கொல்லஹள்ளி அருகேயுள்ள கொத்தகோட்ட மலையில் உள்ள பாறை, குகைகளில் மேற்கொண்ட களஆய்வில் இந்த வெள்ளை நிறத்திலான பாறை ஓவியங்களை கண்டெடுத்தனர். இந்த ஓவியங்கள் குறும்பர் இன பழங்குடி இனத்தவரின் வாழ்வியலை அடையாளப்படுத்துகின்றன. இதன் காலம் கி.பி.1000-ஆம் ஆண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து, பேராசிரியர் சி.சந்திரசேகர் கூறியது: பாலக்கோடு வட்டம், பி.கொல்லஹள்ளி அருகே கொத்தகோட்டா என்றழைக்கப்படும் மலையின் மூன்று இடங்களில் இந்த வெள்ளை நிற ஓவியங்களைக் கண்டறிந்துள்ளோம். ஒரு குகை வாழிடத்தில், குகையின் மேற்புறப் பாறைகளில் ஏராளமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஒரு பாறையின் கீழ் இரண்டு மனிதர்கள் நின்றவாறு ஓவியம் காணப்படுகிறது. இந்த குகையின் கீழ

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!

Image
குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை! நம்  மன்னர்களின் வீரதீரத்தை வருங்கால சந்ததியினருக்குச் சொல்வதற்காக காத்துக்  கொண்டிருக்கிறது செஞ்சிக் கோட்டை(Senjikottai Kotilingam Kurumban) ………….. சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும்  பேருந்துகளின் ஜன்னல் வழியே பார்த்து கண்கள் பிரமிப்பில் தன் இமைகளை மூடிக்கொள்ள மறந்துவிட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு தாலுகாவின் தலைநகரமான செஞ்சி, சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது.செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் நடந்து செல்லும்போதே, செஞ்சிக் கோட்டையின் (Senjikottai Kotilingam Kurumban)  கம்பீரத் தோற்றம் நம்மை வேகமாக நடைபோட வைக்கிறது. செஞ்சிக் கோட்டை (Senjikottai Kotilingam Kurumban)  இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரைதான் பொதுமக்களை அனுமதிக்கிறார்கள்.நுழைவு வாயிலுக்கு மிக அருகிலேயே இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அலுவலகம் இருக்கிறது. அதைக் கடந்து சென்றால் சிதிலமடைந்த நிலையில் உள்ள ஓர் அம்மன் கோயிலும், சிவன் கோயிலும் நம்மை வரவேற்கி