Posts

Showing posts from February, 2018

பழங்கால தமிழும் குறுபா மொழியும்:-

Image
பழங்கால தமிழும் குறுபா மொழியும்:- ஒரு மொழி சிதைவதால் மாற்றத்தால் மற்ற மொழிகள் உருவாகும், இது உலக நியதி உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுமே அப்படி தோன்றும், அது போல குறுபா  மொழியும் (Kuruba)  பழங்கால தமிழ் வார்த்தைகள் சிதைய வழக்கொழிய வேறு மொழியாக மாற்றமடைந்து இருக்க வேண்டும், இல்லை தமிழ் போல் அதே வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம், ஏன்னா இப்படியோ அப்படியோன்னு மொழி விசயத்துலே ஒற்றை ஊகம் பலன் தராது, எனவே மற்றொரு ஊகத்தையும் கூறினேன், ஆனால் என்னை பொறுத்த வரை பழங்கால கொடுந்தமிழ் பல்லவர்கள் (Pallavarkal Kurubar) பேசி வந்த பிராக்கிருத மொழியுடன் கலந்து உருவானதே குறுபா (Kuruba) மொழின்னு கணிக்கிரேன், சரி தமிழில் ஒரு தன்மை இருக்கிறது, பழயன கழிந்து புது வார்த்தைகள் தோன்றி கொண்டே, இருக்கும். அவ்வாறு பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த வார்த்தைகள் குறுபா மொழியிலேயும் (Kuruba)  50% பழங்கால தமிழ் வார்த்தைகளுக்கு மேல வருதுன்னு சொல்லலாம் கூட சதவீதமே தரலாம், குறைந்த பட்சம் 50% பழங்கால தமிழ் வார்த்தைகள் னு சொல்ரேன்,  குறுபா(Kuruba) மொழியில மட்டும் இல்லே, தோடா,இருளா,படுகா,குடகு இந்த மொழிகளுலே பழங்கால தமிழ் வார

குறும்பர் (பூமி) நாடு தொண்டை மண்டலம்

Image
குறும்பர் (பூமி) நாடு தொண்டை மண்டலம் குறும்பர் (Kurumba)  நாடு தொண்டை மண்டலம் ########################### தொண்டைமான் எனப்படுவோர் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த அரச குலத்தவரைக் குறிக்கும். கருணாகரத் தொண்டைமான் குலோத்துங்க சோழனின் படைத்தலைவன். கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன். இவன் பல்லவத் தொண்டைமான் குலத்தைச் சேர்ந்தவன். இவன் குல மரபினர் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர். தோற்றம் தொண்டைமண்டலத்தை 24 கோட்டங்களாகப் பிரித்து குறும்பர் என்ற மரபினரே ஆண்டு வந்தார்கள் இவர்களே பல்லவர் (Pallavarkal Kurumba) எனப்பட்டனர். பிற்காலத்தில் வலிமை குன்றி இராமநாதபுரத்துக்கு கட்டுப்பட்டு புதுகோட்டையை ஆண்டு வந்தனர் கி.பி. 1671-1710 முதல் இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி அதுசமயம் புதுகோட்டை மன்னராக இருந்த பல்லவராயன் என்பவரை நீக்கிவிட்டு, அதற்க்குப் பதில் தனது ஆசை நாயகியான கள்ளர் இனது நங்கை காத் ஆய் என்பவளின் சகோதரர் ரகுநாதன் என்பவனை புதுகோட்டை ம

குறும்பர் உருவாகிய விஜயநகரப் பேரரசு

Image
குறும்பர் உருவாகிய விஜயநகரப் பேரரசு விஜயநகரப் பேரரசு (Vijayanagara Perarasu) விஜயநகரப் பேரரசு(Vijayanagara Perarasu - Kurumbar) இந்தியாவின் தக்காணப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இது 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் ஆகியோரால் துங்கபத்திரை ஆற்றங்கரையில் நிறுவப்பட்டது. இவர்களின் தலைநகரம் ஹம்பி ஆகும். இப் பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 1565 ஆம் ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது. சங்கம மரபு சாளுவ மரபு துளுவ மரபு அரவிடு மரபு சங்கம மரபு முதலாம் ஹரிஹரர் (கி.பி. 1336-1356) விஜயநகரப் பேரரசை   (Vijayanagara Perarasu - Kurumbar)  நிறுவியவர் ஆவார். ஹக்கா, வீர ஹரிஹரர் போன்ற பெயர்களாலும் அறியப்படும் இவர் குறும்பர் (kurumbar) இனக்குழுவைச் சேர்த்த வலிமை மிக்க வீரர்கள், சங்கம மரபைத் தொடங்கியவருமான பாவன சங்கமரின் மூத்த மகனாவார். சங்கம மரபு, விஜயநகரப் பேரரசை (Vijayanagara Perarasu - Kurumbar)  ஆண்ட நான்கு மரபுகளுள் முதலாவதாகும். ஆட்சிக்கு வந்த உடனேயே தற்காலக் கர்நா

குறும்பர் போர் முறை

Image
குறும்பர் போர் முறை ::::::::::::::::::::::::::: பெருமை கொள்வோம் குறும்பர்(Kurumban) என்பதில் யாளி இந்த பெயரையும் விலங்கையும் நாம் கேள்விப்படுவது கோவில்களில் தான். அங்கு தான் இதன் சிற்பம் வைக்கப்பட்டு இருக்கும். மகரயாளி இந்த யாளிக்கும் தமிழர்க்கும் என்ன சம்பந்தம் என ஆராய்வோம் அதற்கு முன் யாளி பற்றி தெரிந்து கொள்வோம். யாளி என்ற விலங்கை பற்றி ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளை வைத்து கூறுகிறேன் இதற்கென தனி நூல்கள் ஒன்று கூட கிடைக்கவில்லை அதான் மிக பெரிய கொடுமை. கஜ யாளி யாளி…. ஒரு அறிய வகை சங்ககால விலங்கு அந்த விலங்கு அழிந்துபோன உயிரினம். அது டைனோசர் கால விலங்கு. இது நம் லெமுரியா மற்றும் தமிழ் நாட்டில் இருந்த விலங்குதான், அதிகம் பலம் கொண்ட விலங்கு. இது சிம்மயாளி, மகர யாளி , கஜயாளி, ஞமலியாளி,  பெரு யாளி(சிறிய வகை ) பெருச்சாளி அல்ல அது போன்ற எலிவகையான யாளி என கூறுகிறார்கள் ஒரு யானையின் தந்தம் யாளியில் மிகவும் பலம் வாய்ந்தது கஜயாளியும்,சிம்மயாளியும் தான் இதை கண்டால் அனைத்துவிலங்குகளும் நடுங்கும் டைனோசர் உட்பட. இவைதான் டைனோசர் கால காட்டின் ராஜாக்கள் ஒரு யாளி பத்து காட்டுயானைகளுக்கு சம

போர் முறையை அறிமுகப்படுத்தியது குறும்பர்கள்:

போர் முறையை அறிமுகப்படுத்தியது குறும்பர்கள்: நிலத்தினை ஐந்து வகைகளாக பண்டைய தமிழ் சமூகம் பகுத்துள்ளது. இவற்றில் குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடம் எனவும்; மருதம் என்பது வயலும் வயல்கள் சார்ந்த இடத்தினையும்; முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடங்களும் குறிக்கும். குறும்பு என்றால் காடு என்று பொருள் காடும் காடு சார்ந்த பகுதில்  வாழ்பவர்களை குறும்பர்(Kurumbar) என்று அழைக்கும் பழக்கம் உருவானது . ஆடு, மாடு மேய்த்தலில், விலங்குகளோ விலங்கு குணம் கொண்ட கள்வர்களோ வந்து தங்களது கால்நடைச் செல்வங்களை அபகரிக்க வந்தால், அவர்கள் உயிருடன் திரும்பாத அளவிற்கு தங்களது உயிரையும் பொருட்படுத்தாது போர் புரிவார்கள் குறும்பர்கள் (Kurumbar)  கோவலர்கள்(கோ காவலர்கள்) செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்! கோத்தொழில் என்றால் 'அரச வினை' என்கிறார் நாட்டார். அதாவது அரசனின் ஏவல்களைச் செய்பவன். செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை

பழனி ஆயக்குடியில் குறும்பர் ஆய்வேளிர்மன்னர்களின் சங்ககாலக் கோட்டை

பழனி ஆயக்குடியில் குறும்பர் ஆய்வேளிர்மன்னர்களின் சங்ககாலக் கோட்டை திண்டுக்கல், பழனி ஆயக்குடியில் குறும்பர் ஆய்வேளிர்மன்னர்களின் சங்ககாலக் கோட்டையாகும் ஆயக்குடி ஊரின் தென்மேற்கு பகுதி வயல்வெளியில் ஒரு மண் மேடுஉள்ளது. இந்த மண் மேட்டில்  கி.பி.3ஆம் நூற்றாண்டில் அதாவது சங்ககாலத்தின் இறுதி பகுதியில் அழிந்துப்போன கோட்டை இது என அறியப்படுகிறது. மண்ணாலும், பாறாங்கற்களாலும், செங்கற்களாலும் இந்த கோட்டை கட்டமைக்கப்பட் டுள்ளது. வட்ட வடிவில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கோட்டை அமைந்துள்ளது. கோட்டையைச் சுற்றியுள்ள அகழிகளில் மண்மேவிக் கிடக்கிறது. கோட்டைக்குள் சங்க கால மக்கள்குடியிருந்ததற்கான தடயங்கள் ஏராளமாக கிடைத் துள்ளன. உடைந்த மண் பானைகள், கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், நகக்குறி ஓடுகள், சங்கிலி ஓடுகள் கிடைத்துள்ளன. சில செங்கற்களில் கூட குறி யீடுகள் கிடைத்துள்ளன. சுட்ட செங்கற்கள் மிக உறுதியாக உள்ளன. சிறுவர், சிறுமியர் விளையாடும் காடான் விளை யாட்டுக்கு (தற்போது விளை யாடும் பாண்டி ஆட்டம்) வட்ட வடிவிலான ஓடுகள் நிறைய கிடைத்துள் ளன. களிமண்ணால் செய்யப்பட்ட மண் மூடிகள், உடைந்த அகல் விள

அரசியல்அதிகாரம் என்றால் புரிகிறது. சமூகஅதிகாரம் என்றால் என்ன? அதற்கு மக்கள் சமூக நீதி பேரவை என்ன செயல்திட்டத்தை வைத்துள்ளது?

அரசியல்அதிகாரம் என்றால் புரிகிறது. சமூகஅதிகாரம் என்றால் என்ன? அதற்கு மக்கள் சமூக நீதி பேரவை என்ன செயல்திட்டத்தை வைத்துள்ளது?            குழுமம் சொல்லின் திரிபே சமூகம் ஆகும். பல இனக்குழுக்கள் அல்லது சாதிகள் ஒன்றிணைந்ததே குழுமம் ஆகும். பல இனக்குழுக்கள் அவர்களுக்கான கூட்டுப்பங்களிப்பினை செலுத்துவதும், அதிலிருந்து பெற்றுக்கொள்வதுமே குழுமத்தினுடைய தார்மீக நெறி. இதனுடைய நிர்வாக பரிணாமம்தான் நாடும், அரசும், அரசாங்கமும்.  ஒரு இனக்குழுவின் மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் அதிகார பிரதிநித்துவம் வழங்கப்படவேண்டும். அதை பெறுவதே அந்த இனக்குழுவின் அரசியல் அதிகாரம்.  சமூகஅதிகாரம் என்பது அரசியல் அதிகாரத்தோடு மறைமுக தொடர்பு கொண்டது. ஒரு இனக்குழு தன்னுடைய மக்கள் எண்ணிக்கையின் வலிமையினையும், தன்னுடைய தனித்த வரலாறு, பண்பாட்டு பெருமிதங்களை பொதுச்சமூகத்திற்கும், தேசத்திற்கும் உணர்த்துவதும், அதன் வாயிலாக அந்த இனக்குழுவின்மீதான பொதுசமூகத்தின் மதிப்பீடும், அதன் விளைவாய் உருவாகும் கௌரவமும், பாதுகாப்புமே ஒரு இனக்குழுவின் சமூகஅதிகாரமாகும்.   குறும்பரின மக்களின் சமூகஅதிகாரத்தை பொதுச்சமூகத்

அண்டர் என்னும் குறும்பர்(குறுவழுதி ஒரு புலவர் )

Image
அண்டர் என்னும் குறும்பர் (குறுவழுதி ஒரு புலவர்) அண்டர் என்போர் சங்க கால நாட்டுமக்களில் குறும்பர் குடியை சேர்ந்த மக்கள் ஆவர். குதிரைமீது சென்று ஆனிரைகளை மேய்த்தவர்கள். அண்டர் குடிமக்கள் சிறந்த குதிரை வீரர்கள். சேர மன்னன் இளஞ்சேரல் இரும்பொறை இவர்களைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தான். அண்டர் ( குறும்பர் ) எருதுகளைக் கயிற்றில் பிணைத்து ஓட்டிச் செல்வர். நள்ளி நாட்டுக் காடுகளில் அண்டர் ( குறும்பர் ) குடிமக்கள் வாழ்ந்தனர். குதிரை மீது ஏறி ஆனிரை மேய்ப்பது இவர்கள் தொழில். இவர்கள் வழங்கும் நெய் மிகச் சிறந்தது. மாஅல் யமுனைத் துறையில் அண்டர் மகளிர் ஆடைக்காக மரத்தை மிதித்துக் கிளைகளை வளைத்துத் தந்தான். குறுவழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.பெரும் பெயர் வழுதியின் இளவல்  ஆகலாம். இவரது பெயர் குறுவழுதியார் என்றும் என்றும், அண்டர் ( குறும்பர் ) மகன் குறுவழுதியார்  என்றும், அண்டர் மகன் குறுவழுதி  என்றும், பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பெயர்களில் 'ஆர்' விகுதி இல்லாத பெயர்கள் இவரை பாண்டிய அரசர் எனக் கொள்ளத் தூண்டுகின்றன. அண்டர் என்பதற்கு ஆட்சி செய்தவர்கள் என்றும் ஆய

குறும்பர் இன மக்களின் ஒப்பற்ற சரித்திர நாயகன் நஞ்சப்ப கவுண்டர்!!!

Image
ஒப்பற்ற சரித்திர நாயகன் நஞ்சப்ப கவுண்டர்!!! ############################ இன்று குறும்பர் சமூக தந்தை அமரர் திரு.நஞ்சப்பகவுண்டர் (04-02)அவர்களின் 122வது பிறந்த நாள்..இன்று அவர் பிறந்த நாளில் ந.நஞ்சப்ப கவுண்டர் அறக்கட்டளை சார்பில் நம் சமூக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.. இவ்விழாவில் பங்கு கொண்டபோது தான், அமரர். நஞ்சப்பகவுண்டர் குறும்பர் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகளைப் பற்றி தெரிந்து கொண்டு மனம் நெகிழ்ந்தது..ஆகையால் அவர் பிறந்த தினத்தில் இன்று அவரைப்பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்... கோவையில் 1897 ஆம் ஆண்டில் பிறந்து 1962 ல் தனது 65 வயதில் இன்னுயிர் நீத்த தர்ம பூசணம், சமூக தந்தை நஞ்சப்பகவுண்டரை நம்மில் பலருக்கும் பார்த்திருக்க வாய்ப்பில்லை...அவரால் பயனடைந்த பலரும் பல விசயங்களை தெரிவித்தனர்...இளமையிலேயே பொது நோக்குடன்,பரந்த மனப்பான்மையுடன் குறும்பர் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட ஆரம்பித்திருக்கிறார்.. 1938 லேயே,80 ஆண்டுகளுக்கு முன்பே கோவை குறும்பர் சங்கத்தை துவக்கி சமூதாய பணிக்கு வித்திட்டிருக்கிறார்.. குறும்பர் சமூக அன்பர்களிடம் வீடுதொறும் பிடி அரிசி வாங

குறும்பர் வரலாறு நாயக்கர்களின் வரலாறாக மாறி நிற்க்கும் நிலை இன்று

குறும்பர் வரலாறு  நாயக்கர்களின் வரலாறாக மாறி  நிற்க்கும் நிலை இன்று நாயக்கர்களின் வரலாறு விந்தை மிக்க ஒன்று. வேறு ஒருநாட்டில் இத்தகைய ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் அதைப்பற்றி பெரும்தொகையான நூல்கள் எழுதிக்குவிக்கப்பட்டிருக்கும். நாயக்கர்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுபவர்கள் கம்பளத்தார்கள் என்றும் தொட்டியர் என்றும் சொல்லப்படுகிறார்கள். கொல்லவார்,தொக்லவார், கம்மவார், பலிஜா என பல்வேறு உட்பிரிவுகள் கொண்ட ஆந்திரப்பகுதி மக்கள் இவர்கள். அதிகமும் பாறைகள் நிறைந்த ராயலசீமா பகுதியில் ஆடுமாடு மேய்த்தும் பொட்டல்வேளாண்மை செய்தும் வாழ்ந்தவர்கள். பதிமூன்றாம் நூற்றாண்டில் நடந்த மாலிக் காபூரின் படையெடுப்பு தென்னகப்பேரரசுகளை எல்லாம் அழித்து தென்னிந்தியாவையே சீர்குலைத்து இடிபாடுகளும் சுடுகாடுகளும் மட்டும் எஞ்சச்செய்து மீண்டது. மாலிக் காபூர் விட்டுச்சென்ற தளபதிகள் சிற்றரசர்களாக மாறி கொள்ளையையே ஆட்சியாகச் செய்துவந்தனர். அவர்களை ஒருங்கிணைத்து துருக்கி சுல்தான்கள் டெல்லியில் இருந்துகொண்டு தென்னகத்தை வரிகொண்டனர். இந்நிலையில் சிருங்கேரி அரசபீடத்தைச் சேர்ந்த மாதவர் என்ற துறவி [வித்யாரண்யர் என்று இவருக்கு பட்

மக்கள் சமூகநீதி பேரவை

ஏன் குறும்பரின மக்கள் அனைவரும் மக்கள் சமூகநீதி பேரவையில் சேரவேண்டும்? தமிழகத்தில் 30லட்சத்திற்குமேல் உள்ள குறும்பரினம் பாதுகாப்பற்று, அடையாளம் இழந்து, முன்னேற்றமின்றி இருப்பதை மாற்றிட, குறும்பரினம் சமூக, அரசியல், அதிகாரம் பெறுவது மட்டுமே தீர்வு என முழங்கி அதற்கான செயல் திட்டம் வகுத்து செயல்படுவதால்  குறும்பரினம் போன்ற பழந்தமிழின குழுக்களை வந்தேரிகள் அதனால் குறும்பர்களுக்கு இட ஒதுக்கீடு, அரசியல் பிரதிநித்துவம் வழங்கக்கூடாது எனக்கூறும் சமூக பாசிஸ்ட் சீமான் போன்றவர்களின் தவறான குறுங்குழு வாதத்தை முறியடித்து, குறும்பர்கள் குறிஞ்சி, முல்லை நிலத்து பழந்தமிழர்களே, குறும்பர்கள் என்றும், குறும்பர்மொழி ஆதித்தமிழின் வட்டாரமொழி என்றும் , தமிழகத்தின் பண்பாட்டினை, வரலாற்றினை காக்க தன்னையை அர்ப்பணித்த இனம் வீரஞ்செறிந்தகுறும்பரினம் என வரலாற்று ஆதாரத்துடன் பேரவை நிரூபிப்பதால் பேரவை தனிநபர் துதிபாடுவதை நிறுத்தி கூட்டுதலைமையினை போற்றுவதால்  ஊழல் ஒழித்து. விவசாயம் காத்து, சமூகநீதிவென்று தமிழகம் காப்போம் என உயர்ந்த அரசியல் நெறியை உரக்கச்சொல்வதால்  பழந்தமிழினமான குறும்பரினத்தின் வரலாற்று நாயகர்