Posts

Showing posts from May, 2018

குறும்பர் இன பழங்குடி மக்களின் குல தொழில் அழிவின் விளிம்பில் கலங்கல் கம்பளி...

Image
குறும்பர்(Kurumbar) இன பழங்குடி மக்களின் குல தொழில் அழிவின் விளிம்பில்  கலங்கல் கம்பளி... கோவை மாவட்டம், சூலூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய கிராமம் கலங்கல். இந்த கிராமமும், இதைச் சுற்றியுள்ள அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, நடுப்பாளையம், கண்ணம்பாளையம், பீடம்பள்ளி, குரும்பபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் குரும்பை ஆடுகளில் (Kurumba) இருந்து ரோமங்களை எடுத்துத் தயாரிக்கப்படும் கம்பளிகள் கோவை மட்டுமன்றி, தமிழகம் முழுவதிலும் வெகு பிரபலம். இதேபோல, கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் முன்பணம் செலுத்தி கம்பளிக்கு ஆர்டர் கொடுத்து இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து வாங்கிச் செல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்தத் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். இதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித் தனியாக தேவைக்கு ஏற்ப ஆடுகளை வாங்கி அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல மாதங்கள் வரை மேய்ப்பார்கள். பின்னர், ஆண்டுக்கு ஒரு முறை ஆடுகளைக் கழுவ

குறும்பர் கூனே (கக்க)வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் குறும்பர் இன பழங்குடி மக்களின் சேவை ஆட்டத்தின் மத்தியில் ஓய்வு பெறுவதற்காக எடுத்துக் கொள்ளும் பொழுது இறைவனை நோக்கி கூறும் மந்திரங்கள்

குறும்பர் (Kurumbar)  கூனே (கக்க) என்று கூறப்படும் சேவை ஆட்டத்தின் மத்தியில் ஓய்வு பெறுவதற்காக எடுத்துக் கொள்ளும் பொழுது இறைவனை நோக்கி கூறும் மந்திரங்கள் இவைகளை கக்க என்று கூறுவார்கள் ஆல்மைரே வீரா ஓம் கமலமான் ருத்திரன் காணுதர் கரிதோ விமலநார் புலவன் வேல்வியிர் பிறந்த புங்கர வளர்ந்த புருஸ்டி அழகன் துங்கணன் காலா செவித்த முன் சோதி முக்கண்ணன் மகளை மூக்கருத்தவனே விக்கினேஸ்வரனை விடையாய் உதைத்து மிக்க வேலவரை வென்னும் துரைத்து தேவேந்திரனை சிரகரம் வெட்டி கோபமாய் எழுந்து திருஷ்டாருத்திரன் தலையை அனலாய் நெருக்கி கார் வண்ணரோட கருங்கடல் மரியாய் போற்றி பார்வதிக் கொம்பை பக்தியாய் பிடித்து அங்கணமுறித்து, ஆசானமாக்கி பங்கணன்கொம்மை சிம்மாசனமாக்கி என்றும் செய்யும் இடி இடித்தது போல் தடு நடு பேரிசா தானது சுழற்றி அப்புற்த்துக்கால் ஆட்டியே மெரித்து சிறு புறந்தொடையை சிறுநகப் பெறுவாய் முக்கண்ணான் நெற்றியில் வெற்றியாய் வந்த வீரபத்திரா நான் உன் அடைக்கலம் அல்லவா?? 2) ஆல்ன மரே வீரா தகிடு தகிடு தத்தா எனுதா அவல் கோன் கோன் தாதகி பேட்டா பானி சூபன் காயா தோன் பாயா குருபீரி

ஆதிதமிழர் தொல்குடி இனமான குறும்பர் பெயர் காரணம்.

ஆதிதமிழர் தொல்குடி இனமான குறும்பர் (Kurumbar)  பெயர் காரணம். கூர்மையான அம்பு வைத்திருப்பவன். கூர்+அம்பு+அவன் மேற்கண்ட சொற்கள் புணர்ந்ததும், திரிந்தும் குறி+அம்பன் = குறும்பன் (Kurumban) எனப் பெயர் மாற்றம் கண்டது. குறிஞ்சி, முல்லை, இனத்து மக்களான குறும்பர்களுக்கு (Kurumbar) கூர்மையான அம்பே பாதுகாப்பு கருவி . அம்பே தன் தொழிலுக்கான கருவி. அம்பே தன் வாழ்வியல் துணை. காட்டிலே வேட்டையாடிய அம்பு. களத்தில் பகையாளியை வென்றிட வேலாகியது. தன் அறிவுச்செழுமையை ஏட்டில்க்காட்ட அம்பே எழுதுகோலாகிறது. மாந்தையிலே ஆடுகளை பராமரிக்க கம்பாகி, நாடாளுவதற்கு செங்கோலாகியது என்பது அம்பின் பரிணாமம். அந்த கூரிய அம்பினை தன்னகத்தே கொண்ட நம் முன்னோர் களுக்கான காரணப்பெயரே குறும்பன் (Kurumban) என்பது நம் இனப்பெயரின் வரலாறு. ஆதாரம் : ஹெய்மண்டார்ப் (1952), காப் & ஹாக்கிங்ஸ் (1989); சுவலபில் (1998) ஹாக்கிங்ஸ் (1989):2333, செல்லப்பெருமாள் 2005:68 தமிழக பழங்குடிகள்- பக்தவச்சலபாரதி பக்கம் 82,83.

பர்கூர் - நெல்லூர் கொலையுண்டு தெய்வமான குறும்பர் இன பழங்குடி மக்களின் நடுகற்கள்

Image
பர்கூர் - நெல்லூர் கொலையுண்டு தெய்வமான குறும்பர்  இன பழங்குடி மக்களின் நடுகற்கள் நடுகல் மரபில், நாட்டார் தெய்வ மரபுகளின் தாக்கத்தை வெளிப்படுத்தும் முதல் ஆய்வு இது. தகடூர்ப் பகுதியில் நான் அறிந்த இவ்வகையான நடுகல் வடிவமெடுத்த நாட்டார் தெய்வங்கள் குறித்து தனியாக எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஈரோடு மாவட்டம், பர்கூர் - நெல்லூர்ப் பகுதியில் இருக்கும் இத்தெய்வங்கள் முந்திக்கொண்டனர். நடுகல் மரபே நாட்டார் மரபுதானே, அது என்ன தனிதாக்கம் என்று கேள்விகள் எழலாம். இது குறித்து, கட்டுரையின் பகுதியாக சில செய்திகளை விளக்கியுள்ளேன். ‘‘ நடுகல் மரபும் நடுகல்மரபில் நாட்டர் தெய்வ மரபும்’’ என்று அடுத்து எழுத இருக்கும் கட்டுரை, இவ்விரண்டின் வேறுபட்ட பரிமாணங்களை விளக்குவதாக அமையும்.  அண்மையில், முகநூலில் கவனம் பெற்று பலவிதமான கருத்துகளை எழுதச் செய்த ஈரோடு மாவட்டம், பர்கூர் பகுதியில் நெல்லூரில் உள்ள நடுகல் இது. இதனைப் பதிவேற்றியவர், பழங்குடிமகன் என்ற மீனாட்சிசுந்தரம் குறும்பன் (Kurumban) .  (நெல்லூர் முதல் நடுகல்) இந்நடுகல்லில், கல்வெட்டுப் பொறிப்பு இல்லை என்பதால், இக்கல் எழுப்பப்பட்டதற்கான

கொல்லாமல் கொல்லுவார் குறும்பர்

Image
கொல்லாமல் கொல்லுவார்: குறும்பரைக் (Kurumbar)  கண்டால் படகர்க்குப் பேரச்சம் உண்டாகும். படகருடைய நாடோடிக் கதைகளில் குறும்பர்கள் (Kurumban)  அடிக்கடி வருவர். குறும்பர் (Kurumans)  விரும்பினால், படகப் பெண்டிரின் இதயத்தை வலி தெரியாமல் அப்புறப் படுத்திக் கொன்றுவிடுவர். இதற்கு மந்திரம் அவர்க்குத் துணையாம். இவ்வாறு படகர் எண்ணி நடுங்குவர். மந்திரத்தின் உதவியால் இரவில் ஒருவரும் அறியாமல் வீட்டுக்குள் புகுந்து வேண்டி யனவற்றை எடுத்துச் செல்வராம். பேய் பிசாசையும், கண்ணேற்றையும் கழிக்கக் குறும்பரை (Kurumba)  நாடுதல் படகர் வழக்கம். குறும்பரும் (Kuruman)  மந்திரங்கள் கூறிப் பேயையும், கண்ணேற்றையும் நீக்கிவிடுவார்களாம். குறும்பர் (Kurumban)  பேயை ஒட்ட முடியாது என்று சொல்லிவிட்டாலோ, தோதவரும் படகரும், குறும்பர் (Kurumbar) பேயாட்டி விளையாடுகிருர்போலும் என்று எண்ணிவிட்டாலோ, அவ்வளவுதான். படகமக்கள் வாழும் ஊரே குறும்பருக் கெதிராகத் திரண்டுவிடும். குறும்பரைப்Kurumba Gounder  பழிவாங்க எல்லோரும் துடிப்பர். குறும்பருடைய வீடு தீக்கிரையாகும். இவ்வாறு படகர்தம் சீற்றத்துக்கு இரையான குறும்பர்கள் கணக்கி லடங்கார்

தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு:

Image
தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: போலீசால் படுகொலை செய்யப்பட்ட தோழர் வர்கீஸ் கேரளத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வர்கீசை ‘மோதல்’ என்ற பெயரில் கொலை செய்த உயர் போலீசு அதிகாரி ஒருவருக்கு அண்மையில் நீதிமன்றம் ஆயுள்தண்டனை அளித்திருக்கிறது. அரிதினும் அரிதாக, இப்படுகொலை நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கொலைகார போலீசு அதிகாரிக்கு நீதிமன்றம் தண்டனை அளித்திருப்பது, இந்தியாவிலேயே முதன்முறையாகும். அன்று இளைஞராக இருந்த தோழர் வர்கீஸ், நக்சல்பாரி பேரெழுச்சியைத் தொடர்ந்து சி.பி.எம். கட்சியிலிருந்து விலகி நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். கேரளத்தின் வயநாடு பகுதியில் தேயிலைத் தோட்ட முதலாளிகளின் – நிலப்பிரபுக்களின் கொடூரச் சுரண்டலையும் கொத்தடிமைத்தனத்தையும் விளக்கி மக்களை எழுச்சியுறச் செய்தார். ஆண்டுதோறும் வயநாட்டின் வள்ளியூர் கோயில் திருவிழாவில் பழங்குடியின(Palangudi makkal) மக்களைப் பிடித்து ஆடு-மாடுகளைப் போல விற்கும் நிலப்பிரபுக்களின் கொடூரத்தை எதிர்த்து நின்று போராடினார். இதைத் தொடர்ந்து, நக்சல்பாரிகளை ஒழிக்க கொலைகார போலீசு வெ

பழங்குடி மக்களுக்காக போராடிய தோழர் வர்கீஸ்

Image
பழங்குடி மக்களுக்காக போராடிய தோழர் வர்கீஸ் 1970 அம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி போலீஸ் அதிரடிப்படையால் இழுத்துச்செல்லப்பட்டு, கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கண்களை பிடுங்கி எடுத்து, சுட்டுக்கொல்லப்பட்டார் தோழர் வர்கீஸ். இவர் செய்த குற்றமென்ன? சிபிஎம் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து கேரளத்தின் வயநாடு பகுதியில் தேயிலைத்தோட்ட முதலாளிகளின், நிலப்பிரபுக்களின் கொடுரச் சுரண்டல்களையும், கொத்தடைமைத்தனங்களையும் அந்தப்பகுதி மக்களிடம் விளக்கி, அவர்களை எழுச்சியுறச் செய்தார். பழங்குடி மக்களைப் பிடித்து, வள்ளியூர் கோவில் திருவிழாவில் ஆடுமாடுகளைப் போல விற்கும் நிலப்பிரபுக்களின் அடாவடியை எதிர்த்துப் போராடினார். இவைகளைத்தான் குற்றம் என்று கூறி இழுத்துச் சென்றது அதிரடிப்படை போலீஸ். இதுபோன்று மக்களுக்காக உழைப்பவர்களை கொன்று குவிப்பதை மக்கள் எதிர்க்கக்கூடாது, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மக்கள் விழிப்புணர்வை அடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், நக்சலைட்டுகள் என்றால் குண்டுவைக்கும் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று மக்களிடம் பதியவைத்திருக்கிறது போலீஸ். தோழர்

பழங்குடிகளின் போர் வாள்- பிர்சா முண்டா நினைவு நாள்: ஜூன் 9

Image
பழங்குடிகளின் போர் வாள்- பிர்சா முண்டா நினைவு நாள்: ஜூன் 9 ஆங்கிலேயர்களிடமும் உள்நாட்டு நிலவுடமை தாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி(Palangudi Makkal Kurumans) மக்களை மீட்பதற்குப் போராடிய வீரன் பிர்சா முண்டா. சிறு வயதிலேயே பழங்குடிகளுக்குத் தலைமை வகித்துப் போராடிய அவர், மண்ணின் தந்தை (தர்த்தி அபா) என்று போற்றப்படுகிறார். அவரது பார்வை விஸ்தாரமானது. அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஜமீன்தார்கள், கடன் கொடுப்பவர்களிடம் இருந்து பழங்குடிகள் (Palangudi Makkal Kurumban)  விடுதலை பெற்று, 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற கருத்தை முன்வைத்துப் போராடிய முதல் பழங்குடித் தலைவன் பிர்சாதான். பழங்குடிகளுக்கு விடுதலை அத்துடன் ஆங்கிலேயர்கள் நம் மண்ணுக்கு வந்ததற்குக் காரணம், மக்களைச் சித்திரவதை செய்து சுரண்டி, வளத்தை ஏற்றுமதி செய்வதுதான் என்பதை அவர் உணர்ந்திருந்தார். பிரிட்டிஷ் மகாராணியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பழங்குடிகள் (Palangudi Makkal Kurumbar)  தங்களுடைய அரசைத் தாங்களே ஆள வேண்டும் என்றார். இந்த மண்ணில் வாழ்ந்தது 25 ஆண்டுகள்தான் என்றாலும், பழங்குடிகளின் உண

யார் இந்த இரவாளப் பழங்குடி மக்கள்?

Image
யார் இந்த இரவாளப் பழங்குடி மக்கள்? ?? உண்மை ஒரு போதும் மறையாது நாட்டின் பழமையான கலாச்சாரம் பண்பாடு மற்றும் வாழ்வியல் நெறிகள் விட்டு விலகி இல்லாமல் இன்று வரை அவற்றை அப்படியே தங்கள் முன்னோர்கள் வழிபாட்டினை வழிபாட்டு வருகின்றனர் ஆண்ட அரசனை புகழும் இவுலகம் நாட்டின் பூர்வகுடிகளை நசுக்குவது தான் இன்றைய வரலாற்று ஆய்வு .... இவர்கள் என்றும் இந்நட்டின் அரசர்கள் தான்... வாழ்க இநாட்டின் பழம் பெரும் பழங்குடி (Palangudi Makkal Kurumban)  இனம்.....

குறும்பர் இன மக்களின் வாழ்வியல் சார்ந்த இலக்கிய சான்று

Image
குறும்பர் இன மக்களின் வாழ்வியல் சார்ந்த இலக்கிய சான்று                   காதல் வாழ்க்கை – தலையில்              விழுந்த பூந்­தொடை இலக்கியக் காட்சிகள்: ஆயர்­பா­டியில் ஒரு பெரிய மாட்டுப் பட்டி. அங்கே ஏறு தழுவல் நிகழ்ச்சி (காளை­ய­டக்கும் விளை­யாட்டு) நடை­பெ­ற­வி­ருந்­தது. அதனைக் காண அக் கிராமம் முழு­வ­துமே திரண்டு எழுந்­தது. ஏறு தழுவும் ஆர்­வத்­துடன் கட்­டிளம் காளையர் பலர் பல­வி­த­மான மலர் மாலை­களை அணிந்­த­வாறு ஒன்று திரண்­டனர். அவர்­களின் வீரத்தைக் கண்டு களிக்க வந்த ஆயர்  குலத்து அழ­கிய நங்­கையர் (ஆய்ச்­சியர்) பரண்­களின் மீது அமர்ந்­தி­ருந்­தனர். விளை­யாட்டு வேளையும் நெருங்­கிற்று. அரங்­கத்­துக்கு அடங்காக் காளைகள் ஏவப்­பட்­டன. அவை கொழுத்துப் பருத்துக் காணப்­பட்­டன. வெள்ளை, சிவப்பு, கறுப்பு எனப் பல­வகை  நிறங்­களைக் கொண்ட அவ் வெரு­து­களின் கொம்­புகள் கொந்­தா­லியைப் போலக் கூரி­ய­தாகச் சீவப்­பட்­டி­ருந்­தன. ஊழித் தீ போல அவை சுழன்று ஓடித்­திரிந்­தன. அஞ்­சாத வீரர் அச்­சந்­தரும் மாடுகள் மீது பாய்ந்து அடக்க முயன்­றனர். ஒன்று ஒரு­வனைக் கொம்பால் குத்தி விழுத்­தி­யது. ஒன்று

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை நாம் யார்? நம் குறும்பர் சமுதாயம் (Palangudi Makkal Kurumban)  எத்தனை வரலாற்று சிறப்பு மிக்கது? நம் முன்னோர்கள் எத்தகைய சிறப்புமிக்கவர்கள்? இவ்வாறு பல கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியாமல், நமது சமுதாயத்தின் முகவரியை தொலைத்து, நம் மதிப்பும், மரியாதையும், கௌரவமும் மறைக்கப்பட்டு, நமக்கே நம்மை தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால், நம் சந்ததியினரும் நம் குலபெருமையும், நம் நீண்டகால வரலாற்று சிறப்புமிக்க நம் குறும்பர் (Palangudi Makkal Kurumbar)  சமுதாயத்தை அடையாளம் காண முடியாமல், ஒதுக்கப்பட்டு, சிதைந்துபோகும்  காலம் தூரம் இல்லை.  "குரு" என்றால் அறிவு வழிகாட்டி அல்லது அறிவு வெளிச்சம் என்றும், "பா" என்றால் உலகம் என்றும், ஆக குருபா என்றால் உலகத்திற்கு அறிவு வெளிச்சத்தை கொடுப்பவர்கள், ராஜ தந்திரங்களை கையாள்பவர்கள், மந்திரி பதவிகளை வகிப்பவர்கள் என்று பொருள்படும். நம் சமுதாயம் ஆடு, மாடு (பண்டங்கள்) மேய்க்கும் பணியை மட்டுமே செய்து வந்திருக்கிறோம், வேறு எந்த தொழிலுக்கும் உகந்தவர்கள் அல்ல என்று தவறாக புனையப்பட்டி

வீரவழிபாடும் இசையும்: நடுகல் பண்பாட்டுக்குப் புதிய வெளிச்சம் தரும் குறும்பர் இன பழங்குடி மக்களின் புலிக்குத்திப்பட்டான் நடுகல்

Image
வீரவழிபாடும் இசையும்: நடுகல் பண்பாட்டுக்குப் புதிய வெளிச்சம் தரும் குறும்பர் இன பழங்குடி மக்களின் புலிக்குத்திப்பட்டான் நடுகல் ஆலுக்குறும்பா (=தமிழில்: பால் குறும்பா (Kurumban) ) என்ற முகநூல் பக்கத்தில், கடந்த 2018 மார்ச் 24-ம் தேதி பதிவேற்றியிருந்த புலிக்குத்திப்பட்டான் நடுகல் பற்றிய குறிப்புகள், வீர வழிபாட்டுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவதாக உள்ளது. இது மூதாதையரை வழிபடும் பண்பாட்டில் இசை பெற்றிருந்த முக்கியத்துவத்தையும், அவ்வழிபாட்டின் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் முதல் சான்றாகவும் விளங்குகிறது. இது குறும்பர் (Kurumbar) சமூகத்தினருக்கு மட்டும் உரிய பண்பாடா அல்லது பிற சமூகங்களும் இவ்வகை வழிபாட்டு மரபுகளைக் கொண்டிருந்தனவா என்ற முடிவுக்கு வர மேலும் சான்றுகள் தேவை. அதேசமயத்தில், இக்குறிப்பிட்ட சான்று குறும்பர் (Kurumbar) சமூகத்தினருக்கு உரியது. இன்றைய நிலையிலும் அவர்களது வழிபாட்டில் இருப்பது. (புலிக்குத்திப்பட்டான் நடுகல் முழுத்தோற்றம் (புகைப்படம் நன்றி: ஆலுக்குறும்பா (Aalukkurumba) முகநூல் பக்கம்) உடனடி கவனத்தை ஈர்த்த இந்நடுகல் குறித்து கடந்த சிலநாட்களாக சில செய்திகள