Posts

Showing posts from June, 2022

குறுமன்ஸ் பழங்குடி மக்களின் #வாழ்வியல் சடங்கு...#அம்புலி செட்டி ( சட்டி ) வைத்தல் :

Image
#குறுமன்ஸ் பழங்குடி மக்களின் #வாழ்வியல் சடங்கு... #அம்புலி செட்டி ( சட்டி ) வைத்தல் :  அம்புலி செட்டி என்பது புதிய பானை வாங்கி அதற்கு ஆட்டின் ரோமத்தில் செய்த கம்பளியாலான கறுப்பு வெள்ளை நூலில் இரும்பு துண்டு , மஞ்சள் கொம்பு , மா இலை சுற்றிப் பண்டாரம் ( மஞ்சள் ) வைத்துப் பொட்டுவைக்க வேண்டும் . அம்புலி செட்டி தயாரானவுடன் நடுவீட்டில் மணலைக் கொட்டி , பானையை அதில் வைத்து அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும் . பின்பு மாங்கொத்தை அதன் மீது வைத்து , திருமணப் புடவை , திருமண வேஷ்டி ஆகியவற்றை வைக்க வேண்டும் . மேலும் புது மொந்தை , புது தீபகலசம் , பண்டாரகலசம் மற்றும் சாந்துப்பொட்டு , சீப்பு வைத்து அலங்காரம் செய்து வைக்க வேண்டும் . ஒரு போனம் செய்து ஓணான் இலை மீது வைக்க வேண்டும் . 11 போனம் இனிப்புகள் , பணியாரம் , 11 வாழைப்பழம் வைக்க வேண்டும் . 11 ஜதை வெற்றிலைப்பாக்கு வைக்க வேண்டும்,       இக்கோலங்கள் அம்புலிசெட்டி வைக்கும் இடத்தில் சுவற்றில் " கெம்மண்ணு ” ( செம்மண்ணு )கொண்டு வரையப்படுவது . இதற்கு  பண்ணபராது என்று பெயர் . இது பழங்காலம் தொட்டே குருமன்ஸ்பழங்குடியினரிடம் தொடர்ந்து வருகிறது . இதில் ஆண் பண்ண , ப

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமம் குரும்பனூரில் வசிக்கும் குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் தாய் கிராமமும் ஒசோடப்பன் சுவாமி காட்டு கோவிலும்...

Image
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமம் குரும்பனூரில் வசிக்கும் குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் தாய் கிராமமும் ஒசோடப்பன் சுவாமி காட்டு கோவிலும்... இன்று குரும்பனூரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குருமன்ஸ் பழங்குடி மக்கள் தாய் கிராமமும் பெரியதண்டா இருந்து 7 கி.மீ., தூரமுள்ள வனப்பகுதியில் ஒசோடப்பன் கோயில் அமைந்துள்ளது இடம் ஆகும் குருமன்ஸ் இன பழங்குடி மக்கள் பல ஆண்டு காலம் அங்கு வாழ்ந்து வந்தது உள்ளனர் இதற்க்கு ஆதாரமாக இங்கு வாழ்ந்து வந்ததற்கான வீடு மற்றும் விவசாயம் செய்த காடுகள் இன்றளவும் காணப்படுகின்றன இங்கு பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கல் காணப்படுகின்றது அதனை குருமன்ஸ் இன மக்கள் குறும்பன் குரும்பாச்சி என்று அழைத்து வருகின்றனர் அதுமட்டுமின்றி காவல் வீரன் நடுகல்லும் அதில் வீரன் ஒருவன் ஈட்டியை ஏந்திய நிலையிலும் அருகில் நாய் நிற்பது போன்ற நடுக்கல்லும் அமையப்பெற்றுள்ளது அதனை சுற்றி உள்ள பகுதியில் சிதிலமடைந்த நிலையில் கோயில்களும் காணப்படுகின்றன அதுமட்டுமின்றி இங்கு பல நடுகற்கள் சிதிலமடைந்து காணப்படுக