Posts

Showing posts from October, 2022

#அருவாளர் நாடு ( #குறும்பர் நாடு )

Image
#அருவாளர் நாடு ( #குறும்பர் நாடு )   சங்க காலத்திற்கு முன் தமிழ் கூறும் நல்லுலகத்தில் 12 நாடுகள் செந்தமிழ் நிலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . இதை தொல்காப்பியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது .  • செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் ... "  • தம் குறிப்பினவே ... "  ( -திசைச்சொல் - கிளவி (தொல்காப்பியம் , சொல்லதிகாரம் 400 ) .  தொல்காப்பியத்தில் செந்தமிழ்நிலம் என்று பாண்டிய நாட்டையோ சோழ நாட்டையோ தொண்டை நாட்டையோ தனித்தனியாகக் குறித்துக்காட்டவில்லை . தொல்காப்பியத்தில் தமிழ்நாடானது பலபகுதிகளை உள்ளடக்கியதாகக் கூறப்பட்டுள்ளது . அவைகள் அனைத்தும் தமிழ்நிலமாக இருந்துள்ளது .  அது பரந்து விரிந்த நிலையில் இருந்துள்ளது .   தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் செந்தமிழ்நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டாகும் நாடு. அந்நாட்டகத்து பொருள்விளங்குமாறு இவர் திசைச்சொற்களை வட்டார வழக்குச் சொற்கள் எனப்படும் என்கிறார் . வழங்கும்சொல் திசைச்சொல் மக்களுக்கு மட்டுமே எனப்படும் என்கிறார் .  இதன்படி #குறும்பா , #குறும்பர் , #குறும்பன் , #குறுமன் என்பவைகள் வட்டார வழக்கு சொற்களாகும் .  யாப்பருங்கலக்கா