Posts

Showing posts from 2019

#போர்என்றுபுகன்றாலேபூரிப்படைபவர்கள்குறும்பர்கள்2

#போர்என்றுபுகன்றாலேபூரிப்படைபவர்கள்குறும்பர்கள்2 ! குறும்பர் இன வரலாற்றை தொகுத்து எழுதும் அளவு நேரம் இல்லாததால் சுருக்கமாகவே இப்போதெல்லாம் பதிவிடவேண்டியநிலை. குறும்பபூமி குறும்பர்கள் மிகுதியாக வாழ்ந்த புண்ணியபூமி  போரில் மிகவும் விருப்பம் உள்ளவர்கள் இந்த குறும்பர்கள் பயம் என்ற வார்த்தையை அறியாதவர்கள் இதற்க்கு நிகழ்கால ஆதாரம் நடுக்கல் வழிபாடு கோவில் வழிபாட்டில்போர்ஆயுதம் வழிபாடு. அரசர்களும் அஞ்சினர்குறும்பர்களை கண்டு.  இத்தகைய வீரமுடைய குறும்பர்கள் தாங்கள் வரலாறு அறியாமல் வாழ்வது கொடுமையிலும் கொடுமை...... இந்த வீரம் புத்தகத்தில் இல்லை நம் இரத்ததில் உள்ளது என்று எப்போது உணருமோ இந்த இனம்...

#ஆழிவெம்படைகொன்டகுறும்பர்கள் ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::*

#ஆழிவெம்படைகொன்டகுறும்பர்கள் ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::* குறும்பர்களியற்றிய கோட்டையும் மகழும், அழி வெம்படைத் தொகைபுலி கரடிகளனேகம் சூழ வங்கவர் கரந்துறை திரவீலே துணிந்து...............நாற்பெரும்படை குறும்பர்மேற் சென்றிட நவின்றன் போற்று மன்னவை பெரிதுறச் சென்றுமேற் பொருந்தார் ஆற்றன் மிக்கபல் கோட்டைகளனைத்தும் சூழ்ந்து ஏற்ற போரினிலிருபடைகளும்  பொருதெதிர்த்து. போர் என்று புகன்றாலே பூரிப்படைபவர்கள் குறும்பர்படை வீரர்கள். குறும்பகளின்,கடல் போன்ற படைகள் மற்றும் கோட்டை அமைந்த  வனப்பகுதி புலிகள் கரடிகள் அனேகம் அதை சூழ்ந்தனர் சூழ்ந்தனர் துணிந்து. நாற்படைகளையும் குறும்பர்களுடன் போரிட செய்தான் மன்னன். நாற்படையையும் ஏவும் அளவிற்க்கு வழிமையாகவும், திறமையாகவும் இருந்திருக்கின்றனர் குறும்பர்கள். நெடுநாள் யுத்தம் நடந்ததாகவும் குறும்பர் மறைந்திருந்து தாக்கும் யுத்தியை கையான்டதும் புலனாகிறது . மன்னவன் சிவனை பிராசித்தான் குறும்பரை வெல்ல.

குறும்பர் இன மக்களின் வாழ்வியல் சார்ந்த இலக்கிய சான்று

குறும்பர் இன மக்களின் வாழ்வியல் சார்ந்த இலக்கிய சான்று                 காதல் வாழ்க்கை – தலையில்              விழுந்த பூந்­தொடை இலக்கியக் காட்சிகள்: ஆயர்­பா­டியில் ஒரு பெரிய மாட்டுப் பட்டி. அங்கே ஏறு தழுவல் நிகழ்ச்சி (காளை­ய­டக்கும் விளை­யாட்டு) நடை­பெ­ற­வி­ருந்­தது. அதனைக் காண அக் கிராமம் முழு­வ­துமே திரண்டு எழுந்­தது. ஏறு தழுவும் ஆர்­வத்­துடன் கட்­டிளம் காளையர் பலர் பல­வி­த­மான மலர் மாலை­களை அணிந்­த­வாறு ஒன்று திரண்­டனர். அவர்­களின் வீரத்தைக் கண்டு களிக்க வந்த ஆயர்  குலத்து அழ­கிய நங்­கையர் (ஆய்ச்­சியர்) பரண்­களின் மீது அமர்ந்­தி­ருந்­தனர். விளை­யாட்டு வேளையும் நெருங்­கிற்று. அரங்­கத்­துக்கு அடங்காக் காளைகள் ஏவப்­பட்­டன. அவை கொழுத்துப் பருத்துக் காணப்­பட்­டன. வெள்ளை, சிவப்பு, கறுப்பு எனப் பல­வகை  நிறங்­களைக் கொண்ட அவ் வெரு­து­களின் கொம்­புகள் கொந்­தா­லியைப் போலக் கூரி­ய­தாகச் சீவப்­பட்­டி­ருந்­தன. ஊழித் தீ போல அவை சுழன்று ஓடித்­திரிந்­தன. அஞ்­சாத வீரர் அச்­சந்­தரும் மாடுகள் மீது பாய்ந்து அடக்க முயன்­றனர். ஒன்று ஒரு­வனைக் கொம்பால் குத்தி விழுத்­தி­யது. ஒன்று ஒரு­வனின் குடலைக்

#அத்தியாயம் ஆரம்பம் 2 #தொல்குடி.. #குறும்பு.. #குறும்பர்..

#அத்தியாயம் ஆரம்பம் 2 #தொல்குடி.. #குறும்பு.. #குறும்பர்.. #அண்டர் என்ற குடியினர் அகநானூற்றில் "அண்டர் மகளிர் தண் தழை உடிஇயர் (அகம்.59:5)" எனக் குறிக்கப் பெறுகின்றனர். மேலும் அகநானூற்றில் அண்டர் மகன் குறுவழுதியார் என்ற புலவர் இருபாடல்களைப் ( 150,228) பாடியுள்ளார். இங்கு அண்டர் மகன் என்பது அந்தற்குடிக்குத் தலைவன் என்று பொருள் .அண்டர் பழங்குடி நிலையிலேயே வாழ்ந்தனர். அவர்கள் கால்நடை வளர்ப்பில் சிறப்புற்றிருந்தனர் அவர்களுள் கழுவுள் என்பான் அண்டர்களுக்கு தலைவன் என்றும் அந்தத் தலைவனான கழுவுள் ஆண்ட பகுதி தமிழகத்தின் வடபகுதி என்று கூறுவார் துரை அரங்கசாமி. பெருஞ்சேரல் இரும்பொறை அண்டர் தலைவன்  கழுவுள் வென்ற செய்தியை """............வாழ்நா் கழுவுள் தலைமடங்க, பதி பாழாக வேறு புலம் படர்ந்து, விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென, அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர்"""(பதிற்.71:17-20)   என்ற பாடலால் அறியலாம். கழுவுள் என்பான் எருதுகளும் பசுக்களும் கன்றுகளும் நிரம்ப உடையவன்.அவனுடைய வீரர்கள் இடைவிடாமல் படையெடுத்துச் சென

#அத்தியாயம் ஆரம்பம் 1 #தொல்குடி #குறும்பு #குறும்பர்

#அத்தியாயம் ஆரம்பம் 1 #தொல்குடி #குறும்பு #குறும்பர் தொன்றுதொட்டு நீண்ட காலமாக ஒரே நிலப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருபவர்கள் பழங்குடிகள் எனப்படுகின்றனர். இவர்கள் தங்களுக்கென தனி மொழியும் குடும்ப, மற்றும் சமூக பழக்கவழக்கங்களும் கொண்டுள்ளனர், மேலும் அப்பகுதியில் உள்ள செடி, கொடி மரம், விலங்குகளை சார்ந்து தன்னிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள். இன்று ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஜப்பான், பசிபிக் தீவுகள், இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் பழங்குடி மக்கள் உள்ளனர். உலகிலேயே பழங்குடி மக்களின் எண்ணிக்கையில் ஆபிரிக்கா கண்டம் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 8% மேல் பழங்குடிகள் உள்ளனர். பழங்குடி பற்றி ஆய்வு நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. பொதுவாக இந்திய வரலாற்றிலும் குறிப்பாக தமிழ்நாடு வரலாற்றிலும் பழங்குடி பண்பாடு பெரும் செல்வாக்குப் பெற்று வந்துள்ளது. 1955 ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் ஆயிரம் பேருக்கு 54 பேர் பழங்குடிகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்று நாகரீக குடிகள் என்று கூறப்படுபவர்கள் கூட பழங

மறைக்கப்பட்ட தியாகம்....??? எம் தமிழ்நாட்டில்...??? தியாகி T.L.வீரபத்திரன் அவர்களுக்கு வீர வணக்கம்...!! வீர வணக்கம்...!!!

மறைக்கப்பட்ட தியாகம்....??? எம் தமிழ்நாட்டில்...??? தியாகி T.L.வீரபத்திரன் அவர்களுக்கு வீர வணக்கம்...!! வீர வணக்கம்...!!! 1915  ஆண்டு லிங்கண்ணன் அவரின் மகனாய் பிறந்தார்... பள்ளி பருவம் முதல் சுதந்திரப் போரட்ட ஆர்வமுடையவர். இளமைப்பருவத்திலே வட தமிழகத்தின்  போராட்ட தலைவர்களுள் ஒருவரை வளர்ந்தவர். இவர் சுதந்திரப் போராட்ட காலத்தில் 1940 ஆண்டு முதல் வடதமிழகத்தில் நடை பயணம் மூலம் "மக்களை ஒன்றுத்திரட்டி சுந்திரப்போராட்ட எழுச்சி" உரையாற்றினர். பின் 1941 ஆண்டு தமிழகத்தில் "தனிநபர்" சத்தியாகிரக போராட்டம் நடத்தி ஆங்கிலேயர்களை நடுங்கவைத்தவர்.இவர் போராட்ட குணத்தை கண்ட  ஆங்கிலேயர்கள் இவரை இரண்டுமாதம் வேலூர் சிறையில் அடைத்தனர். 1942 ஆண்டு தியாகி கு.காமராசர்(முன்னால் முதலமைச்சர்) ,  தியாகி கக்கன்(முன்னால் மந்திரி) ஆகியோருடன் கருநாடக மாநிலத்தில் உள்ள அல்லிபுரத்தில் 9 மாதம் சிறைவாசம் கண்டவர். இவர் 1955 ஆண்டு மறைந்தார்...