Posts

Showing posts from June, 2021

குறும்பர் பழங்குடியினரின் தொழில்கள்...

Image
குறும்பர் பழங்குடியினரின் தொழில்கள்...  கால்நடை வளர்ப்புச் சமுதாயமான இவர்களுக்கு ஆதித்தொழில் , குலத் தொழில் எல்லாம் கால்நடைகளை வளர்ப்பதே . அதிலும் குறும்ப ஆடு என்ற ஆட்டை வளர்ப்பதைத் தவிர வேறு தொழில் செய்வதில்லை . ஆட்டிலிருந்தே இவர்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடுவதால் குறும்பர் பழங்குடியினர் தங்கள் உயிரை விட அதிகமாகத் தங்கள் ஆட்டுமந்தைகளைப் பாதுகாக்கின்றனர் .  1)ஆட்டுமந்தை  தங்களது ஆடுகளுக்குத் தேவையான உணவுகிடைக்கும் இடத்தையே தங்களது தங்குமிடங்களாக மாற்றிக்கொண்டவர்கள் குறும்பர் பழங்குடியின மக்கள் . ஆட்டு மந்தைகளுக்காகப் புல்வெளிகளைத்தேடி அது கிடைக்குமிடத்தில் மந்தைகளோடு வாழ்ந்து அப்புல்வெளிகள் தீர்ந்தவுடன் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் குறும்பர் பழங்குடியின மக்கள் . ஆட்டின் முடியிலிருந்து , தங்களுக்குத் தேவையான கம்பளியை நெய்துகொள்கின்றனர் . ஆட்டில் கிடைக்கின்ற பாலைக் காய்ச்சித் தயிர் , நெய் போன்றவற்றைத் தயாரித்து அருகிலுள்ள ஊர்களில் விற்றுத் தங்களுக்குத் தேவையான ஆடைகள் , உணவுப்பொருட்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளுகின்றனர் . ஆட்