Posts

Showing posts from 2017

குறும்பர் ஆய்வு நூல்கள்

குறும்பரின் விடுகதைகள் நூலாசிரியர்: முனைவர் வே. சிதம்பரநாதப் பிள்ளை வெளியீட்டு எண்: 294, 2005, ISBN:81-7090-355-6 டெம்மி1/8, பக்கம் 128, உரூ. 65.00, முதற்பதிப்பு சாதாக்கட்டு பொதுப்பார்வையில் குறும்பர் விடுகதைகள், குறும்பர் விடுகதைகளின் பாகுபாடுகள், குறும்பர் விடுகதைகளின் அமைப்பாய்வு, குறும்பர் விடுகதைகளின் யாப்பு நிலையும் அணி நிலையும், குறும்பரின் சமுதாயப் பழக்க வழக்கங்கள் ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் விரிவான ஆய்வினை நிறைவு செய்து அளித்துள்ளார். பின்னிணைப்பில், நீலகிரி மாவட்டத்தில் குறும்பர்கள் வாழுமிடங்கள், ஆய்வு முன்னோடிகள் – குறிப்புகள், குறும்பர் விடுகதைகள், விடுகதைகள் குறித்த அறிஞர்களின் பாகுபாடுகள், இயற்கையாகவே அமைந்த விடுகதைகள், உடல் உறுப்புகள் குறித்த விடுகதைகள், வீட்டுப் பொருட்கள் குறித்த விடுகதைகள், உணவுப்பொருட்கள் குறித்த விடுகதைகள் மற்றும் தகவலாளிகள் குறித்த குறிப்புகள் போன்றவை எழுதிச் சேர்க்கபெற்றுள்ளன. இவை மிகவும் பயனுடையன. குறும்பர்களின் உறவுமுறை நூலாசிரியர்: முனைவர். தா. இராபர்ட் சத்திய சோசப் வெளியீட்டு எண்: 221, 2001, ISBN:81-7090-281-9 டெம்மி1/8, பக்கம் 160, உ

சங்ககால மன்னன் பிண்டன்

Image
சங்ககால மன்னன்  பிண்டன் ::::::::::::::::::::::::::: சங்க காலத்தில் சேர,சோழ,பாண்டியர்கள் மட்டுமே அரசர்கள் அவர்கள் புகழ்மட்டுமே தமிழக மக்கள் மனதில் தினித்து விட்டனர், இவர்களை எதிர்த்து போர் செய்த சிற்றரசு களின் வீரத்தை மறைத்து கூறுவது ஏன் என்று தொரியவில்லை. அப்படி மூவேந்தர்கள் ஆட்சி காலத்தில் வீரம் செறிந்து வாழ்ந்த மன்னர்களை பார்ப்போம் அழிசி,சேந்தன், அகுதை, அஞ்சி,அதிகன், அறுகை, அதியமான் நெடுமானஞ்சி, அட்டணத்தி, ஆய்,ஆய்எயினன், ஆரியப்பொருநன்,எயினன், எவ்வி,ஐயை,ஓரி,கட்டிகணையன்,கழுவுள், குறும்பியன், ஞிமிலி, தழும்பன், ததியன், தித்தன், வெளியன்,நள்ளி,நல்லடி,நன்னன்,நன்னன் ஆய்,நன்னன் உதியன்,நெடுமிடல்,பழையன், பாணன்,பிண்டன், போகன்,மத்தி,மருதி,மலையன், மிஞிலி,மோகூர்,வல்லங்கிழான்,நல்லடி, விச்சியர்,பெரு மகன்,விரான், வெளியன்,புல்லி, மருதன்,வேங்கைமுகன். * இவர்கள் அனைவரும் சங்ககால தமிழ் என்று குறிக்கப்படும் நூல்கள் தாய்மொழி இலக்கிய வரலாறு, தமிழகத்தில் கோசர்கள்,அகநானுறு மனிமிடைபவளம் மூலமும் உறையும்,நற்றினை, அன்போடு புணர்ந்த ஐந்தினை, நாற்பெரும் புலவர்கள், சங்கால அரசர் வரிசை. சரி நாம் நம் வரலாற்றை சற்று

தொட்டமாள் சிக்கமாள் நடுக்கல் வழிபாடு இதே வழிபாடு கோவிலாக திருச்சி மாவட்டம் எதுமலை கிராமத்தில் உள்ளது.

தொட்டமாள் சிக்கமாள் நடுக்கல் வழிபாடு இதே வழிபாடு கோவிலாக திருச்சி  மாவட்டம்  எதுமலை கிராமத்தில் உள்ளது. ==================== தேன்கனிகோட்டைக்கு அருகில், குறும்பர் இனமக்கள் வழிபாடு செய்யும், 47 நடுகற்கள் அடங்கிய தொகுப்பினை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டறிந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின், அறம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த அறம் கிருஷ்ணன் தலைமையில், மஞ்சுநாத், பிரியன், சீனிவாசன், சிவா ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்ட களஆய்வில், ‘பிக்கனள்ளி’ என்ற கிராமத்தில், குறும்பர் இனமக்கள் வழிபாடு செய்யும், 47 நடுகற்கள், ஒரே இடத்தில், போதிய பாதுகாப்பின்றி இருப்பதை கண்டறிந்துள்ளனர் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் நடுகற்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான், அதிகமாக கிடைக்கின்றன. இந்த மாவட்டத்தில், தளிக்கு அருகில் உள்ள, நாகொண்டபாளையத்தில், 46 குறும்பர் இன நடுகற்கள், ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதே போல், ஓசூருக்கு அருகே உலுவீரணள்ளியில், சுமார் 25 குறும்பர் இன நடுகற்களும், கெலமங்கலத்தில் சுமார் 23 குறும்பர் இன நடுகற்களும், ஓசூருக்கு அருகே கொத்தூரில் சுமார் 25 குறும்பர் இன நடுகற்களும், ப

முல்லை நிலத்தில் அரசு தோற்றம்

முல்லை நிலத்தில் அரசு தோற்றம் ============== உலகின் இயற்கை அமைப்பை ஒட்டி நிலங்களைப் பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பாகுபாடு செய்தனர். மழை தவழும் மலைச் சாரலிலே பல்வேறு பூக்கள் மலர்ந்த போதும், அவற்றுள் தேன் நிறைந்த பூவான குறிஞ்சிப்பூவே சிறப்புப் பெற்றிருந்தது. அதனால் மலையும், மலைசார்ந்த இடமும் "குறிஞ்சி' எனச் சுட்டப்பட்டது.   முல்லைக்குரிய பெரும்பொழுதையும், சிறுபொழுதையும் வரையறுக்கும் தொல்காப்பியர், "காரும், மலையும் முல்லை' எனச் சுட்டுகிறார். ""கார் காலமாவது, மழைபொழியும் காலம். அது ஆவணித் திங்களும், புரட்டாசித் திங்களும். மாலையாவது இராப்பொழுதின் முற்கூறு'' என்பது இளம்பூரணம். முல்லைக்குரிய உரிப்பொருளான "இருத்தலை' பற்றி, நச்சினார்க்கினியர்,   ""இனித் தலைவி பிரிவுணத்திய வழிப்பிரியார் என்றிருத்தல், பிறிந்துழிக்குறித்த பருவம் அன்றென்று தானே கூறுதல். பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவன ஆகியவை இருத்தல்'' என்று விளக்குவார்.   பொதுவாக, கருப்பொருள்களாகக் கருதப்படுபவை இவை என்ற

மெட்ராஸ் கிறிஷ்டியன் கல்லூரியில் ஆராயப்பட்ட குறும்பர் கால கல்வட்டம்

மெட்ராஸ் கிறிஷ்டியன் கல்லூரியில் ஆராயப்பட்ட குறும்பர் கால கல்வட்டம் ================================== சிங்லூட் மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட இரும்புக் கற்களாலான கல்வெட்டுகள் உள்ளன. இந்த நினைவுச்சின்னங்கள் இறுதி சடங்குகள் மற்றும் இரண்டு வகையானவை. ஒன்று 'கல் வட்டம்', சுமார் 6 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு வட்டம் ஆகும், அதில் ஒவ்வொன்றும் ஒரு மீட்டருக்கு குறைவாக விட்டம் கொண்டது. வேறு சில கரடுமுரடான கற்களை ஆதரிக்கின்ற அரை-உடையணிந்த கற்களாலான பெரிய அடுக்குகளை உடையது. ஒரு கல் வட்டம் மையத்தில் பெரும்பாலும் ஒரு பொம்மை அமைக்கப்பட்டிருக்கிறது. கல்வெட்டுகள் மற்றும் கல் வட்டங்கள் மெகாலிதிக் நினைவுச்சின்னங்கள் அல்லது மெகாலித்ஸ் (பெரிய கற்கள்) என்று அழைக்கப்படுகின்றன. இந்த மெகாலித்ஸ்கள் எங்கள் முந்தைய கட்டமைப்புகள் மற்றும் சுமார் 2,500 ஆண்டுகள் நீடித்திருக்கின்றன; இவை மதிப்புமிக்க நினைவுச்சின்னங்களாக பாதுகாக்கப்பட வேண்டும். கிடைமட்ட அடுக்குகள் மற்றும் செங்குத்து தூண்கள் ஆகியவற்றால் பரவியிருக்கும் அடிப்படை முறை தென்னிந்திய கோயிலின் கட்டமைப்பில் கிட்டத்தட்ட மாறாமல் உள்ளது. தோண்டியெடுக்கப்பட்ட

மொழிபற்றிய ஆய்வு இன்று அவசியமாகிறது..

Image
மொழிபற்றிய ஆய்வு இன்று அவசியமாகிறது.. ================================== இந்திய மக்களில் கால் பகுதியினரின் தாய்மொழியாகவும் உலகில் 3.7 சத வீதத்தினரின் தாய்மொழியாகவும் உள்ள இந்தத் திராவிட மொழிகள் அவற்றின் பிரதான மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றுடன் தெலுங்கானாவையும் புதுச்சேரியையும் உட்படுத்தி ஆறு பிரதேசங்களில் ஆட்சிமொழியாக உள்ளன. திராவிட மொழிகள் இந்தியாவின் பெரும்பான்மையோர் பேசும் ஆரியமொழிக் குடும்ப மொழிகளிலிருந்து வேறுபட்டுதமக்கென்றே மொழியியலில் ஒரு தனிப் பண்பு கொண்டவை. அவசியமற்ற பிற மொழிக் கலப்புக்கு இடமளிக்காத எம் தாய் மொழியாம் கன்னித்தமிழே மொழி வல்லுனர்கள் கவனத்தை ஈர்க்கும் மொழியாக உள்ளது. வேதத்தையும்வேறும் பல இலக்கி யங்களையும் வளமாகக்கொண்ட இறந்த மொழியாம், பழமை கொண்ட மொழியாம் வட மொழிக்கு இணையாக வளம்கொண்ட இலக்கி யங்களைத் தன்னகத்தே கொண்டு அம்மொழி யின் தரத்திற்கு செம்மொழியாக உயர்ந்த ஒரே ஒரு வழக்கில் உள்ளமொழி தமிழேயாகும். தமிழின் பெருமை கூறுவதற்காக நான் இக்கட்டுரையை எழுதவில்லை. தமிழின் இந்தச் சிறப்புக்களையும் மாறாத தன்மையையும் தொல் மொழியுடன் உள்ள ஒற்றுமையையும