குறும்பர்களின் தெய்வமாகிய கண்ணகி கேரளத்தில் குறும்பா பகவதி எனப்படுகிறாள்.

குறும்பர்களின் தெய்வமாகிய
கண்ணகி கேரளத்தில்
குறும்பா பகவதி எனப்படுகிறாள்.

கண்ணகி வழிபாடு

கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங்
காப்பியங்களில் ஒன்றான
சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள்.
கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள
இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க்
குற்றச்சாட்டின் மீது கொலைத்
தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின்
குற்றமற்ற தன்மையைப் பாண்டிய அரசன்
நெடுஞ்செழியனிடம்
வாதித்து நிரூபித்தாள், தன்
பிழை கண்டு வேதனையடைந்த
பாண்டியனும்
அவனது அரசி கோப்பெருந்தேவியும்
அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர்.
கோபம் அடங்காத கண்ணகி,
மதுரை நகரையும் தன் கற்பின்
வலிமையால் எரித்ததாகச்
சிலப்பதிகாரம் கூறுகிறது.
சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில்,
சேர நாட்டு மன்னன் செங்குட்டுன்
கண்ணகிக்கு விழா எடுத்தான்.
இவ்விழாவில் இலங்கை மன்னன்
கஜபாகுவும் கலந்து கொண்டதாக
வரலாறு கூறுகிறது. இவன் மூலம்
இலங்கையில் கண்ணகியை பத்தினித்
தெய்வமாக வணங்கும் வழக்கம்
ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.
கொற்றவை நாவலில்
மதுரையை எரித்த பின்னர்
கண்ணகி வைகை வழியாக
சென்று சுருளி ஆறு வழியாக
மலை ஏறி இந்தியாவிலுள்ள இன்றைய
மங்கலதேவி கோயில்
இருக்குமிடத்தில் நின்றாள் என்றும்,

குறும்பர்கள் அவளைக் கண்டார்கள்
என்றும், அவள் அங்கேயே பெளத்த
துறவியாக இருந்து சமாதியடைந்தாள்
என்றும் கூறப்படுகிறது.
அந்த மலை மேல் கண்ணகிக்குக் கோயில்
இருப்பதும், அது வைகையின் வழியாக
ஏறிச் செல்லக் கூடிய இடம் என்பதும்,
அக்காலகட்டத்தில் நீர் வற்றிய ஆற்றின்
கரையே வழியாக பயன்பட்டது என்றும்
கூறப்படுகிறது.

குறும்பர்களின் தெய்வமாகிய
கண்ணகி கேரளத்தில்
குறும்பா பகவதி எனப்படுகிறாள். அவள்
கோயில்களில்
குறும்பர்களுக்கு ஒரு நாள் முக்கிய
மரியாதை அளிக்கப்படுகிறது.
கண்ணகி எரித்த மதுரை என்ன ஆயிற்று?
கொற்றவை அளிக்கும் சித்திரம்
அது ஒரு மாபெரும் மக்கள் எழுச்சி,
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம்
கூற்றாக” வந்த ஒரு புரட்சி. அறத்தின்
வடிவமாக, அறைகூவி எழுந்த முதற்
குரலாக கண்ணகி ஒலித்திருக்கலாம்.
அதன்பின் மக்கள் அந்த
நிலத்தை விட்டு கூட்டம் கூட்டமாக
வெளியேறி வைகையின்
மறுகரையில் குடியேறினார்கள்
என்றும், அங்கே புதிய
மதுரை உருவாகி வந்தது அதுதான்
இன்றைய மதுரை.
பழைய
மதுரை ஆற்றுக்கு மறுகரையில்
குறுங்காட்டுக்குள் இடிபாடுகளாகக்
கிடப்பதன் சித்திரம் கொற்றவையில்
வரும். அங்கே கண்ணகியை உக்கிரமான
கொற்றவை தெய்வமாக
நிறுவி வழிபடுவதை பயணியாகிய
சீத்தலை சாத்தனார் பார்க்கிறான்.
அந்த இடமே பலவகையான சமூகப்
புறனடையாளர்கள் வாழும் பகுதியாக
இருக்கிறது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்
கண்ணகி வழிபாடு மிகவும்
முக்கியமான வழிபாடாக உள்ளது.
கண்ணகியை சிங்கள மக்கள்
“பத்தினி தெய்யோ” என
வழிபடுகின்றனர். மண்ணுலகில்
இருந்து கண்ணகியம்மன் விண்ணுலகம்
சென்றதாக குளிர்த்திப் பாடல்
கூறுகின்றது.
ஆக வைகாசித் திங்களை (பூரணை)
இறுதி நாளாகக் கொண்டு கோயில்
திறப்பர் சில இடங்களில் திங்கள் நாள் என்ற
அடிப்படையில் இறுதி நாளாகக்
கொண்டாடுவர். இச்
சடங்கு வைகாசி மாதத்தில்
நடைபெறுவதால் இதனை வைகாசிச்
சடங்கு என்பர்.
இங்கு கதவு திறப்பது பற்றி ஒரு
கிழமைக்கு முன்பே அறிவித்து
சடங்கு பற்றி கலந்தாலோசிக்கப்படும்.
வைகாசி மாதப்
பூரணையிலேயே அம்மன்
குளிர்த்தி இடம் பெறும்.
கதவு திறப்பதற்கு முன்பு கட்டாடியார்
என்று அழைக்கப்படும் பூசகர்
புனிதமான தீர்த்தம் தெளித்து ஊர்
காவல் பண்ணும் சடங்கினைச் செய்வார்.
இதன் பின்பே பூசைப்
பொருட்களை தட்டத்தில்
வைத்து கோயில் திறப்பையும் அதில்
வைத்து பயபக்தியுடன்
வெளிப்பூசை செய்வார்.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!