Posts

Showing posts from April, 2018

குறும்பர் இன மக்கள் தேன் எடுக்கும் முறைமால்பு

Image
குறும்பர் இன மக்கள் தேன் எடுக்கும் முறை மால்பு வெள்ளரிக்கோம்பைப் பாறைஓவியங்களைக் காணச் சென்றிருந்தபோது அம்மலையில் மிக நீண்ட மூங்கில்கள் இரண்டு சாற்றி வைக்கப்பட்டிருந்தன. அவை தேனெடுப்பதற்காக குறும்பர்   (Palangudi Makkal Kurumba Gounder)  பழங்குடி மக்களால் வைக்கப்பட்டிருப்பததாகக் கூறினார்கள். நமக்கு வியப்பாக இருந்தது, ஏனெனில் சங்கஇலக்கியங்களில் கூறப்படும் மால்பு எனப்படும் இத்தகைய மூங்கில்கள் இன்றும் வழக்கில் உள்ளனவே!. ஏணிகளில் கண்ணேணி, நூலேணி, படியேணி எனப்பலவகை உண்டு. கண்ணேணி என்பது மூங்கில் கணுக்களிடையே கால்வைத்து ஏறுவது. நூலேணி என்பது நூலிலேயே ஏணிபோல் கட்டப்பட்டது. படியேணி என்பது இரு மூங்கில்களை இணையாக வைத்துக் கணுக்களுக்கு மேல் உள்பக்கம் துளையிட்டு வைப்பது. மால்பு என்பது கண்ணேணி. ஒரு நீண்ட மூங்கிலில், அதன் கணுக்களில் கால்வைத்து ஏறத்தக்கதாக சிறிய முளைகளை இறுகத் தைத்து உருவாக்கிய ஒரு கால் ஏணி இது. மலைவாழ் மக்கள் இன்றைக்கும் இதுபோன்ற ஏணியைக் கொண்டு மிகவும் உயரமான மரங்களின் உச்சியில் தேனீக்கள் கட்டியிருக்கும் கூட்டிலிருந்து தேனை எடுப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர். இது சங்க இலக்

பழங்குடி மக்களின் வாழ்வியலில் மலை சார்ந்து வாழும் குறும்பர் இன மக்கள் மலைக்கு இவர்கள் வைத்துள்ள பெயர்களும்.....

‌ பழங்குடி மக்களின் வாழ்வியலில் மலை சார்ந்து வாழும் குறும்பர் இன மக்கள் மலைக்கு இவர்கள் வைத்துள்ள பெயர்களும் அதன் விளக்கமும் எத்துநோர(ஒற),மக்கிறி கொபே, குறி மந்தை பெட்ட,சுன்றேஒட்டு,தொட்டு பெட்ட,அல்லுகுஅசரபெட்ட, கிரி பெட்ட, சிக்குக்ஓர்தி, தொட்டு ஓர்தி,கறிஒட்டு, சாவரானை பெட்ட,மத்து பெட்ட,ஒளையன்பரை,கல்மாத்துர் காடு, கோணத்து மாரி இதற்கான விளக்கங்கள் காண்போம்... எத்துநோர(ஒற): ஏர்உழுதல்க்கு பயன்படும் காளை மாடுகள் ஏறு உழுத்த பின் காளை மாடு அருகில் பல மலைகள் உள்ளது இருந்தும் ஏத்துநோர(ஒற) மலையை சென்று அங்கு தன் உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கும் மீண்டும் மறுநாள் காலையில் காளை மாடுகள் வரும் காளை மாடுகள் மலையில் இரவு முழுவதும் அங்கு உறங்கும்  அந்த மலையை ஏத்துநோர(ஒற) என்று அழைக்கப்படும்..... ‌ மக்கிறி கொபே: முங்கில் நிறைந்த காடு முங்கிலாள் செய்யபடும் கூடை, மொரம், போன்ற பொருள்கள் இங்கு இருந்து தான் எடுத்து வரப்படுகிறது ‌ குறி மந்தை பெட்ட: குறிஆடு ,மாடு , மந்தை இடும் இடம் ‌ சுன்றேஒட்டு: (முள் நிறைந்த கரடு காடு), ‌ தொட்டு பெட்ட: ( பெரிய மலை), ‌ அல்லுகுஅசரபெட்ட: (பல்லத்துக்

தயிரை கடைந்து மோர்யில் இருந்து வெண்ணெய் பெறுவதற்காக பயன்படுத்தும் ஒரு கருவி தான் மத்து.....

Image
தயிரை கடைந்து மோர்யில் இருந்து வெண்ணெய் பெறுவதற்காக பயன்படுத்தும் ஒரு கருவி தான் மத்து..... மத்து என்பது பெரும்பாலும் தயிரைக்  கடைந்து வெண்ணெய்  பெறுவதற்காக பயன்படுத்தும் ஒரு கருவியாகும். தயிரைக் கடையும்போது, அதிலுள்ள கொழுப்பு  நிறைந்த பதார்த்தம் வெண்ணெயாக மாறிவர, மிகுதியாக இருக்கும் நீர்த்  தன்மையான பதார்த்தம் மோர்  எனப்படும். "சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள். அதில் ஒரு கயிறு கட்டி இருக்கும். மோர் கடைய "மத்து" இருக்கும். அந்த மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு இருக்கும்." குறும்பர் சமுதாயத்தின் (Palangudi Makkal Kurumba Gounder)  முக்கிய பங்கு மத்துக்கு உண்டு எங்கள் ஊரில் உள்ள கோயிலில் இருந்த சிற்பம் இன்றைக்கும் மோர் கடைவும் குறும்பர் (Palangudi Makkal Kurumba Gounder)  சமூகத்தின் பெண்.......

குறும்பர் இன மக்களின் வழிபாடும் வாழ்வியல் சார்ந்த சடங்கும்....

Image
குறும்பர் இன மக்களின் வழிபாடும் வாழ்வியல் சார்ந்த சடங்கும்.... நீல மலவாழ் பெருமக்களிலே குறும்பர்களும் (Palangudi Makkal Kurumbas) ஒரு பிரிவினர். இவர்கள் தமிழ்மொழி பேசுபவர்கள். ஆனல் அவர்கள் பேசும் தமிழை ஏனைய தமிழர்கள் புரிந்துகொள்ள இயலாது. இவர்கள் பெரும்பான்மையாக வாழுமிடங் கள், நீலமலையிலுள்ள அரக்கோடு, நீர்கண்டிக்குக் கீழே உள்ள கடைஞலா ஆகியவையாம். மற்றும், மைசூர் மலேயாளம், அட்டபாடி, அண்ணுமலே முதலிய இடங்களிலும் குறும்பர்கள் (Palangudi Makkal Kurumbas)  வாழ்கின்றனர். என்ருலும், அவர்களுக்கு அங்கு குறும்பர்கள் (Palangudi Makkal Kurumbas)  என்பதன்று பெயர். பெட்டாக் குறும்பர் (Palangudi Makkal Kurumbas)  என்ற ஒரு வகையினரும் உண்டு. ஆனால், இருவகைக் குறும் பருடைய பழக்க வழக்கங்களும் பிறவும் ஒரு தன்மையனவே. இந்தக் குறும்பர்களில் மலையாளத்தில் இருப்பவர்கள் மலையாளம் பேசுகிருர்கள் : ஆல்ை மலேயாளிகட்கு இது புரி யாது. மைசூரில் உள்ள குறும்பர்கள் (Kurumban)  பேசும் கன்னடம் கன்னடர்க்கு விளங்காது. அதுபோல அண்ணும8லயிலுள்ள குறும்பர்கள் (Kurumbas)  தமிழ்ப் பேசுகின்றனர். அது, தமிழர்க் குப் புரியாது. இதற்குக் க

முல்லை நிலத்தில் வாழ்ந்த குறும்பர் இன பழங்குடி மக்களின் இசை கருவிகொம்பு

Image
முல்லை நிலத்தில் வாழ்ந்த குறும்பர் இன பழங்குடி மக்களின் இசை கருவி கொம்பு ..... கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை தமிழர் இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில் இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது. கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப்  பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது. (Palangudi Makkal Kurumbas)

குறும்பர்களின் பட்டி_கோட்டை...

Image
குறும்பர்களின் பட்டி_கோட்டை... நமக்கு கோட்டை என்றாலே அரசர்கள் காலத்தில் பெருங்கற்களை கொண்டு பெரிதாக கட்டிய கட்டிடங்கள் மட்டுமே தெரியும். உண்மையில் கோட்டைகள் என்பது கட்டிடங்கள் மட்டுமல்ல பாதுகாப்புக்காக ஏற்படுத்தபடும் அனைத்தும் கோட்டைகளே. விதைகோட்டை, எறும்புகோட்டை, போன்றவை இன்றளவும் வழக்கில் உள்ள சொற்கள்.  மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுபவர்கள் கால்நடைகளை பாதுகாப்பாக அடைத்துவைக்க படல், தடுக்கு, வலை, வேலிகளால் பட்டிகளை கட்டுவார்கள் இது நிரந்தரமானது. மேய்க்க போகும்போது ஏற்படும் ஆபத்துகளிலிருந்தோ தற்காலிகமாகவோ கால்நடைகளை அடைத்து பாதுகாக்க பட்டிகோட்டைகளை கட்டுவார்கள் இது பெரும்பாலும் குறுகிய காலத்தில் தயார்செய்வதாகவே இருக்கும். புதர்களை வெட்டி வேலிமன்டைகளை சேர்த்து வளையமாக போட்டு அதற்குள் கால்நடைகளை அமர்த்தி பாதுகாப்பார்கள். மழைகாலங்களிலும் வீடு திரும்பமுடியாத இரவு நேரங்களிலும், வனவிலங்குகள் திடீரென தாக்குதல் நடத்த ஆயத்தமாகும் போதும் இந்த கோட்டைகளை கட்டி கால்நடைகளை பாதுகாப்பார்கள்... இது அந்த வகையில் பனை ஓலைகளால் அமைத்திருக்கும் கோட்டை இதில் இரவுமுழுதும் பதிமூன்று  ஆடுகளையும் நான்கு குட

குறும்பர்களின் பிரதான இசைக்கருவிமகுடம்...

Image
குறும்பர்களின் பிரதான இசைக்கருவி மகுடம்... பழங்குடி மக்களான குறும்பர்களின் (Palangudi Makkal Kurumbas)  வாழ்வியலில் இசை முதன்மையானது. அந்த இசையும், கொக்கரிப்பும் மட்டுமே அவர்களின் வழிபாடு மற்றபடி அவர்களுக்கென தனியாக கோவில்கூட இருப்பதில்லை. மேய்ச்சலை பிரதானமாக கொண்ட இவர்களுக்கு வீரபத்திரரும், ஷாமுண்டியும் முதன்மை தெய்வங்கள் மலையை விட்டு இறங்கி நாகரீக வாழ்வை கற்றவர்கள் கோவிலை கட்டி வழிபாடு செய்தாலும் பழைய முறைகளை கடைபிடிப்பதில் மாற்றமில்லை. இவர்கள் மேய்க்கும் குறும்பாட்டின் மயிரைக் கொண்டு தயார்செய்யும் கம்பளிமீதே இவர்களின் பெரும்பான்மை சுப நிகழ்வுகள் நடக்கும்... தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தங்கள் இனக்குழுவுக்கு உள்ளாகவே தயாரித்து உபயோகபடுத்தும் வழக்கம் இருந்திருந்தாலும் இப்போது நாகரீகம் அங்கும் புற்று வைத்திருக்கிறது. இவர்களின் வாத்திய கருவிகளும் இவர்களே வடிவமைத்து இவர்களால் மட்டுமே வாசிக்கப்படுகிறது. இவைகளுக்கு தனியான இசைக்குறிப்புகள் ஏதும் இல்லாத எழுதாக்கிழவிகளே. கொம்பு, புல்லாங்குழல் போன்ற ஊது கருவிகளும் மகுடம் என்ற வாத்தியகருவியும் குறும்பர்களின் பிரதான இச

புலி குத்திகல்குறும்பர் இன மக்களின் வீரன்

Image
புலி குத்திகல்குறும்பர் இன மக்களின் வீரன் வேட்டை நாய்களுடன் வேங்கையை வீழ்த்தி தானும் மாண்டிருக்கிறான் இவ்வீரன்! புலியின் வடிவமைதி தத்ரூபமாக இருந்து அதன் நிஜத்தோற்றத்தைக் கண் முன் நிறுத்துகிறது! வேங்கை அமைப்பே பிரமாண்டமாக தெரிகிறது! அதை வீழ்த்தி வீரன் ........தீரன் தான். Kurumban, Kurumbas, Kurumba Gounder, Kurumans, Kurumbar, Kuruba & Makkal Samuganthi Peravai.

குறும்பர் இன மக்கள் வணங்கும் பஞ்சம் நீங்க வேண்டி பலியிட்டுக் கொள்ளும் வீரனை காட்டும் நடுகல்

Image
குறும்பர் இன மக்கள் வணங்கும் பஞ்சம் நீங்க வேண்டி பலியிட்டுக் கொள்ளும் வீரனை காட்டும் நடுகல் சிடிக்கல் வகையைச் சேர்ந்த நடுகல் . காலம் 13 யில் இருந்து 15ஆம் நூற்றாண்டு இருக்கலாம்.. தமிழக எல்லை கர்நாடகப் பகுதிகளில் இவ்வகை நடுகற்களைக் காண முடியும்.போரில் அரசன் வெற்றி பெறவோ அல்லது நாடு பஞ்சம் நீங்க வேண்டி பலியிட்டுக் கொள்ளும் வீரனை காட்டும் நடுகல்.மேலேயுள்ள பெண்கள் பலியிடப்பட்ட வீரனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் தேவ மாதரைக் குறிக்கும் நவகண்டத்தில் அரிகண்டம் வகையைச் சார்ந்தது. தமிழகத்தில் தூக்குதலை பலி கொடுத்தல் என்றும் அழைப்பர்.மனைவியின் ஒப்புதலுடனே இந்த பலியிடுதல் நடைபெறும். Kurumban, Kurumbas, Kurumba Gounder, Kurumans, Kurumbar, Kuruba & Makkal Samuganthi Peravai.

குறும்பர் இன மக்களின் வீரம்

Image
குறும்பர்(Kurumbar) இன மக்களின் வீரம்