Posts

Showing posts from January, 2018

குறும்ப மொழி

குறும்ப மொழி :- ஒரு இனம் என்றால் அதற்க்கு மொழிதான் அடையாளம், அதே போல் குறும்ப இன மக்களுக்கு குறும்ப மொழிதான் இன அடையாளம், ஆனால் பல ஊர்களில் குறும்ப மொழி வழக்கொழிந்து விட்டது,  சில ஊர்களில் பேசி வருகிறார்கள், ஆனால் அது கன்னடம் என்று நினைத்து அறியாமையில் குறும்பர்களின் மொழி கன்னடம் என்றே கூறி வருகிறார்கள், இது மிக பெரிய அறியாமை,  தான் பேசுவது என்ன மொழி என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் மன நிலமை,  அதாவது குறும்ப மொழி ஒரு தனி மொழி, திராவிட மொழி குடும்பத்தில் கொடவா பிரிவில் குடுகு, குறும்ப மொழிகள் வகை படுத்தப்படும், இந்த இரண்டு மொழிகளுக்கும் சில சில ஒலி வேறுபாடுகள்தான், ஆனால் குறும்ப மொழி தெரிந்தாலுமே அதை கன்னடம் என்று கூறி வருகிறோம் அது அறியாமை, நமது குறும்ப மொழி உச்சரிப்பு சொல் பயன்பாட்டை கன்னட உச்சரிப்பு சொல்லாடலுக்கு மாற்றி விடுவதால் குறும்ப மொழி கன்னடத்திற்க்குள் அழிந்து விடும், அதாவது குறும்ப மொழி தமிழ் போல் பல வட்டார வழக்குகளை கொண்டது, தேனி வட்டார வழக்கு வேறு, திண்டுக்கள் வட்டார வழக்கு வேறு,புதுக்கோட்டை வட்டார வழக்கு வேறு, வேலூர்,திருவண்ணாமலை வட்டார வழக்கு வேறு, கோ

குறும்பர் இன மக்களின் மொழி குறும்ப மொழி

குறும்ப மொழி, நம்மை போல உள்ள தோடா இருளா படுகா சவுராஸ்ட்ரா போன்றவர்கள் அவர்கள் மொழி அழியாமல் அப்படியே தற்காத்து வருகிறார்கள், ஆனால் குறும்பர்களுக்கு அடையாளமாக விளங்குவது குறும்ப மொழி அதற்க்கு பிறகுதான் அவர்களின் கலாச்சாரம் பண்பாடு வகை படுத்தப்படும், குறும்பர்களிடம் குறும்ப மொழி அழிந்து கொண்டே வருகிறது, தேனி, சேலம், கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் குறும்பர்கள் குறும்ப மொழியை அழிய விட வில்லை அங்கு குறும்பர்களுக்கு அடையாளமாக அவர்கள் தமிழுக்கு நிகராக தங்களின் சுற்று பகுதியில் பேசி வருகிறார்கள், புதுக்கோட்டையில் ஒரு சில கிராமங்களில் பேசுகிறார்கள்,  ஒரு மொழி அழிந்தாலே போதும் அவர்களின் கலாச்சாரம் பண்பாடு அதோடே அழிக்கபடும் அதனாலேதான் மற்ற சாதிகளாக மாற்றமடைகிறார்கள், எனவே நமது வரலாற்றோடு நமது குறும்ப மொழியை மீட்டு அனைவரும் கற்று கொண்டு தம் சந்ததிகளும் அதை பின்பற்றுவார்கள், நாமும் மகா லச்சுமியை வணங்குகிறோம், வீர பத்திரரை வணங்குகிறோம், அதை மற்றவர்களும்தான் வணங்குகிறார்கள் அது  எப்போதும் ஒரு இனத்துக்கு அடையாளமாகது, ஒரு மொழிதான் இரு இனத்தின் அடையாளம், உடனே குறும்ப மொழி வந

குறும்பர் இனத்தின் சுதந்திர போராட்ட தியாகி

Image
குறும்பர்  இனத்தில் பிறந்து நம் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் கலந்து சிறை சென்ற தியாகி திரு.வீரபத்ரன் திருப்பத்தூர்.அவருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

குறும்பர்களின் பூர்விகம் சென்னிநல்லூர் தான் சென்னை!

குறும்பர்களின் பூர்விகம் சென்னிநல்லூர் தான் சென்னை! 'சென்னை' என்பது, சென்னப்பநாயக்கரிடம் இருந்து நிலம் வாங்கியதால் வைக்கப்பட்ட பெயர் என, ஒரு சில வரலாற்று ஆய்வாளர் கருத்து கூறுகின்றனர். ஆனால், 12ம் நுாற்றாண்டில் வடிக்கப்பட்ட,திருவொற்றியூர் கோவிலில், சென்னிநல்லுார் என்ற பெயர் வருகிறது. அது தான், சுருக்கமாக சென்ன பட்டணம் என பெயர் மாறியது என கூறும் வரலாற்று ஆய்வாளர்களும் உள்ளனர். அதற்கு ஆதாரமாக, சென்னை, பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள, 'சென்ன கேசவ பெருமாள்' கோவிலின் பெயரை குறிப்பிடுகின்றனர். பழமையான துறைமுகம்அதன் பழமைக்கு ஆதாரமாக, இன்றும், அக்கோவிலில் இருந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட திருக்குடைகள், திருப்பதிக்கு கொண்டு செல்லப்படுவதை கூறுகின்றனர்.இந்நிலையில், ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே, மதராச பட்டணம், குறும்பர்கள் புலியூர் கோட்டத்தின் கீழ் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததாக கூறுகிறார், '2000 பிளஸ்' அமைப்பின் நிறுவனர், ரெங்கராஜ்.அவர் கூறியதாவது: தற்போதைய, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதே புலியூர் கோட்டம். அதை, குறும்பர்

குறும்பர் இன மக்களின் குல தெய்வம் அருள்மிகு மகாலட்சுமி

Image
மேட்டு மகாதானபுரம் அருள்மிகு மகாலட்சுமி ஆலயம் குறும்பர்(kurumbar) இன மக்களின் குல தெய்வம் அருள்மிகு மகாலட்சுமி இத்திருக்கோவிலில் அருள்மிகு மகாலட்சுமி மூலவராக இரண்டு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். வைணவ சம்பிரதாயப்படி மகாலட்சுமி சிலை தாமரை மலர்மீது அமர்ந்து. நான்கு கரங்களில் கதை, தாமரை, சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருவது மரபு. ஆனால் திருக்கோவில் கருவறையில், தனி பீடத்தில் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் மகாலட்சுமியின் தொன்மை வாய்ந்த கருங்கல் திருவுருவ சிலை உள்ளது. இத்திருக்கோவில் கருவறையை சுற்றிலும் மூன்று பிரகாரங்கள் அமைந்துள்ளன. இந்தக் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் பல பரிவார தெய்வங்களை வழிபடுவதற்கான சன்னதிகள் அமைந்துள்ளன. குறும்ப நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர் . இவர் ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் குறும்பர் இனத்தில் பிறந்தார். குறும்பநாயனார் பெருமிழலை நகரை ஆண்ட மன்னர் . சுந்தரமூர்த்தி நாயனாரை குருவாக ஏற்றுக்கொண்டு வணங்கி வந்தார். குறும்பர் இனத்தவர்கள் ஆடு மேய்ப்பதை தம் தொழிலாக ஏற்றுக்கொண்டவர்கள். ஆட்டின் முடியில் தயாரித்த கம்பளி இ

கொங்கில் குறும்பில் குரக்குத்தளியாய்

Image
சுக்ரீஸ்வரர் திருக்கோவில், குரக்குத்தளி தகவல் பலகைசிவஸ்தலம் பெயர்குரக்குத்தளி (இன்றைய நாளில் சர்க்கார் பெரியபாளையம் என்று பெயர்)இறைவன் பெயர்சுக்ரீஸ்வரர்இறைவி பெயர்ஆவுடைநாயகி.பதிகம்சுந்தரர் (7-47-2)எப்படிப் போவதுதிருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் கூலிபாளையம் 4 ரோடைக் கடந்து சர்க்கார் பெரியபாளையம் உள்ளது. கூலிபாளையம் 4 ரோட்டில் இடதுபுறம் திரும்பி சற்று தொலைவு சென்று வலதுபுறம் செல்லும் சாலையில் சென்று இக்கோவிலை அடையலாம். சர்க்கார் பெரியபாளையம் அடைந்து, அங்கிருந்தும் இக்கோவிலுக்குச் செல்லலாம். திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் சர்க்கார் பெரிய பாளையம் உள்ளதுஆலய முகவரிஅருள்மிகு சுக்ரீஸ்வரர் திருக்கோவில் சர்க்கார் பெரியபாளையம் எஸ் பெரியபாளையம் அஞ்சல் பெருந்துறை வட்டம் ஈரோடு மாவட்டம் PIN - 641607. குரக்குத்தளி ஆலயம் புகைப்படங்கள் குரங்கு சிவனை பூஜை செய்யும் சிற்பம் காது அறுந்த நந்தி - முன்னால் உள்ளது குரக்குத்தளி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம் சுந்தரரின் 7-ம் திருமுறையில் 47-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத

புறநானூறு கூறும் குறும்பர்(kurumbar)

Image
புறநானூறு கூறும் குறும்பர்(kurumbar) தன் கணவன் போருக்குச் சென்றால் அவன் திரும்பி வரும்வரை மனைவி தன் தலையில் பூச்சூடாமல் இருப்பது மரபு என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறது. -புறம், 293‏‎ஆசிரியர் பக்கம்‎‏‏14 புறநானூறு , 293. (பூவிலைப் பெண்டு!) பாடியவர்: நொச்சிநியமங்கிழார். பாடப்பட்டோன்: யாருமில்லை. திணை: காஞ்சி. துறை: பூக்கோள் காஞ்சி. =========================================== நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் எம்மினும் பேர்எழில் இழந்து வினைஎனப் பிறர்மனை புகுவள் கொல்லோ? அளியள் தானே பூவிலைப் பெண்டே! அருஞ்சொற்பொருள்:- நிறப்படை = குத்துக்கோல் (அங்குசம்) ஒல்கா = தளராத குறும்பு = அரண் குறும்பர் = அரணுக்குப் புறத்தே நின்று போர் செய்பவர் ஏவல் = கட்டளை தண்ணுமை = ஒருவகைப் பறை இரங்கல் = ஒலித்தல் எழில் = தோற்றப் பொலிவு வினை = போர் அளியள் = இரங்கத் தக்கவள் இதன் பொருள்:- குத்துக்கோலுக்கும் அடங்காத யானையின் மேலே இருந்து தண்ணுமை என்னும் பறையை அறைவோன், அரணுக்கு வெளியே இருந்து போர் செய்யும் பகைவரை எதிர்த்துப்

திரு. பழந்தமிழர் சத்தியன், ரமேஷ், மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு நன்றி.

Image
குறும்பர் இன மக்களின் வாழ்வியல் சார்ந்த வரலாற்று தகவலுக்கு உதவிய என் தோழர்கள் திரு. பழந்தமிழர் சத்தியன், ரமேஷ் , மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு நன்றி.

வாணான்குறும்பனை தூக்கிப்பிடிப்பது சாதியவாதமா? மண்ணுக்கேற்ற மார்க்சியமா? 

வாணான்குறும்பனை தூக்கிப்பிடிப்பது சாதியவாதமா? மண்ணுக்கேற்ற மார்க்சியமா?  மக்கள் சமூகநீதி பேரவை அரசியல் கட்சி . ஆனால் வாணான்குறும்பன் , குறும்பஆதித்தன் போன்றவர்களின் புகழ்பாடுவதும், அவர்களுடைய திருவுருவப்படத்தை திறப்பதும் சாதியவாதம் ஆகாதா என்று அரசியல் நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள். பழந்தமிழினச்சொந்தங்களே! மக்கள் சமூகநீதி பேரவை கொள்கைகளில் ஒன்று பொதுவுடைமை சமூகம் படைப்பது. பொதுவுடைமைசிந்தாந்தமான மார்க்சியத்தை இந்த மண்ணுக்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்தினால்தான் வெற்றி காணமுடியும். தமிழகத்தில் ஆதி பொதுவுடைமைசமூகத்தில் நிலவிய பண்பாடும், உற்பத்திமுறையும் தனிஉடமையற்ற வாழ்வியலும் பழந்தமிழகத்தில் சிறப்பாக நடைமுறையில் இருந்துள்ளது. குறிஞ்சி, முல்லை நிலத்தின் பழந்தமிழின மன்னர்களான வாணான்குறும்பன், குறும்பஆதித்தன், குறும்பகோமான், கோட்டிலிங்குறும்பன் போன்றவர்கள் ஆதிபொதுவுடமைசமூகத்தை நடைமுறைப்படுத்திய இனக்குழுக்களின் தலைவர்கள் இவர்களின் ஆட்சிநிர்வாகம் அம்மக்களின் பண்பாடு, கலை, வாழ்வியல் இவற்றை கற்பதன்மூலமே அவற்றை மீட்டுருவாக்கம் செய்து நடைமுறைப்படுத்தியிருந்தால் தமிழகத்தில் பொதுவுடமை வெற்றி

அருவநாட்டு குறும்பர் கோட்டமும்,நாடும்

Image
அருவநாட்டு குறும்பர் கோட்டமும், நாடும் :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::                               அருவாநாட்டில் வாழ்ந்த குறும்பர் பழங்(தமிழ்)குடி மக்கள் ஆண்ட கோட்டமும், அதன் நாடுகளும். * புழல்கோட்டம்: நாயாரு,ஆகுடி,ஆ தூர்,எழுமூர்.   *புலியூர்கோட்டம்:குன்னத்தூர்(குன்னத்தூர்),போரூர், மாங்காடு,ஆ மேரூர்,கோட்டூர். *ஈக்காடு கோட்டம்: கச்சி, களத்தூர். *செங்காடு கோட்டம் : பொன்னாலூர்,ஆதிகாத்தூர் * மனவூர்கோட்டம் :பசலி,இலாத்தூர்,கோனூர், புரச்சி,பெருமானூர் *பாயூர் கோட்டம் :விருப்பாதி,சேவூர்,வென்ங்கல் *எய்யூர் கோட்டம் :தன்டாகம்,மகரல்,கோனேரி *தாமல் கோட்டம்: கருவீடு,வாக்கரைவல்லை *உட்டுக்காடு கோட்டம்: பாலையூர்,தாமலூர்,குன்னம்,நீவலூர் *களத்தூர் கோட்டம்: குறும்பூர்,வள்ளிபுரம்,பட்டூர்,நடுநாடு *செம்பூர் கோட்டம் : பேரையூர்,பட்டனம்,முக்கந்தூர் *ஆமூர்கோட்டம்: குமுலி,பலுவூர் *ஈத்தூர் கோட்டம்: உறங்காநாடு,அமர் *வென்குன்றம் கோட்டம் : பெருநகர்,ஆரசுர்,மருதாடு,நெல்லூர்,தெள்ளாறு * பல்குன்றம் கோட்டம் :பாசூர்,தச்சூர்,சிங்கபுரம்,வளநாடு

ஏறு தழுவுதல்(ஜல்லிக்கட்டு) என்பது பழந்தமிழர் குறும்பர் வீர விளையாட்டு

கலித்தொகை ஏறு தழுவுதல்(ஜல்லிக்கட்டு) என்பது பழந்தமிழர் குறும்பர் வீர விளையாட்டு * இது ஒரு அகநூல். கலிப்பா என்ற பாவகையால் ஆன நூல் கலித்தொகை. மொத்தம் 150 பாடல்கள் கொண்டது. * கலித்தொகை ஐந்திணை நூலாகும். இதனைத் தொகுத்தவர் நல்லந்துவனார். * கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று கலித்தொகை சிறப்பிக்கப்படுகிறது. * ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் கலித்தொகை. ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) என்பது ஒரு வீர விளையாட்டு. * பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் கலித்தொகை ஆகும். * நூபுரம் என்பதன் பொருள் சிலம்பு, ஆடு மேய்ப்பவர் புல்லினத்தார், குறும்பர் என்று குறிப்பிடப்பட்ட செய்தி, பசு மேய்ப்பவர் கோவினத்தார், நல்லினத்தார் என்று குறிப்பிடப்பட்ட செய்தி ஆகியவற்றை கலித்தொகை குறிப்பிடுகிறது.

பதிற்றுப்பத்து - பதிகம் தரும் குறும்பர் இன மக்களின் மன்னன் கழுவுள் செய்திகள்

பதிற்றுப்பத்து - பதிகம் தரும் குறும்பர் இன மக்களின் மன்னன் கழுவுள் செய்திகள் 1. குறுந்தாண் ஞாயில் புலவுவில் லிளைய ரங்கை விடுப்ப மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ ஆன்பயம் வாழ்நர் கழுவு டலைமடங்கப் பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென   20 அருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதல் பெருங்களிற் றியானையொ டருங்கலந் தராஆர் மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற் பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறைகொண்டு பெயர்தி வாழ்கநின்  னூழி 13 - 24 . ஏறொடு.................ஊழி. உரை :  ஆன்பயம்   வாழ்நர்  -  ஆன்பயன்  கொண்டு  வாழும் குறும்பர்கள்   ;  ஏறொடு  கன்றுடை  ஆயம்  தரீஇ  -  ஏறுகளுடன் கன்றுகளையுடைய ஆனிரைகளைக் கொணர்ந்து தருதலால் ; புலவுவில் இளையர்  -  புலால் நாறும் வில்லேந்திய வெட்சியாராகிய நின்வீரர் ; புகல்  சிறந்து  -  அவர்  பால் விருப்பம் மிக்கு ; அங்கை விடுப்ப - தாம்  கைப்பற்றிய  ஆனிரைகளையும்  விட்டொழிய  ; மத்துக் கயிறு ஆடா  வைகற்பொழுது  -  தயிர் கடையும் மத்தினிடத்தே கயிறாடாத விடியற்போதின்கண்  ;  நினையூஉ  நின்னைப்  புகலடைய நினைந்த

குறும்பர் இன மக்களுக்கு தேவை விழிப்புணர்ச்சி

உண்மைகள் உறங்குவதற்கும் அசத்தியமும் அட்டூழியமும் அதிகாரங்களில் வீற்றிருப்பதற்கும் அநியாயமாக குறும்பர் சமூகம் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் தங்களது உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் அதனை அடைவதற்கான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்தும் போதிய அறிவின்றியும் அதற்காக ஒன்றுபட்டு போராடும் போராட்ட குணமின்றியும் இருப்பதே குறும்பர் சமூகம் பின்தங்கிக் கிடப்பதற்கு முழு முதற்காரணமாகும். விழிப்புணர்ச்சி என்பதும் ஒன்றிணைந்து உரிமைக்காக உழைத்தல் என்பதும் ஒன்றோடொன்று கலந்ததாகும். இரண்டில் எந்த ஒன்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் உண்மை உறங்கும்; அக்கிரமம் கோலோச்சும்; உரிமைக்குரியவர் அநியாயமாக அடக்கி ஒடுக்கப்படுவர். இவ்விரண்டில் இரண்டுமே இல்லாதிருந்தால்.....? 80களிலிருந்து 2017 க்கு இடைப்பட்ட 37 ஆண்டுகால இடைவெளியில் குறும்பர் நிலையினை எடுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட மேற்கண்ட இரண்டுமே இல்லாமல்,  இதனைத் தெளிவாக படம் பிடித்துக் காண்பித்ததுதான் குறும்பர்கள் அரசியல், அதிகார, கல்வி, பொருளாதார நிலை குறித்த எந்த வகையான முன்னேற்றமும் ஏற்படவில்லை இந்திய அரசியல்-அதிகார அமைப்புக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும்

குறவை கூத்து முருகனாக  குறவரையும், போர் வீரனாக மறவரையும்,கிருஷ்னராக குறும்பரையும் கூறி உள்ளனர் புத்தகம் indian history

Image
குறவை கூத்து முருகனாக  குறவரையும், போர் வீரனாக மறவரையும்,கிருஷ்னராக குறும்பரையும் கூறி உள்ளனர் புத்தகம் indian history

கோமாண்ட குறும்ப பிரபு

Image
குறும்பர்கள் தொண்டை மண்டலத்தை 24 கோட்டாமாக பிரித்து ஆண்டு வந்தார்கள் இதன் தலைநகரமாக புழல்கோட்டை விளங்கியது 24கோட்டங்களும் தனி கோட்டைகள் இருந்தது  இந்த ஒருங்கினைந்த 24 கோட்டங்களுக்கும் தலைமையாக கோமாண்ட குறும்ப பிரபு , புழல் ராஜா வும் இருந்தார்கள். குறும்பர் கள் தங்களுக்கென தனித்துவம் மிக்க நாணயம்,கடம்பு மரத்தில் செய்த கப்பளையும் வைத்து கடல் வாணிகம் செய்து உள்ளார்கள் (கம்போஜம் கல்வெட்டு தரும் தகவல்) இவர்கள் நாணயத்தில் காளை ஒன்று நிற்பது போன்றும் சக்கரவியூகம் போன்ற அமைப்பை பெற்று இருந்ததாகவும் தெரியவருகிறது சோழர்கள் உடன் ஏற்ப்பட்ட போரில் முதல் பின்வாங்கிய(சோழர் )இடம் சோழ பேடு என்று அழைக்கபடுகிறது இதனால் குறும்பர்கள் வீரமிக்கவர்களாகவும்,விவேகமிக்கவர்களாகவும் இருந்தது தெரியவருகிறது

குறும்பர்கள் வணங்கும் புலிகுத்தி சீரங்கன்:

Image
குறும்பர்கள் வணங்கும் புலிகுத்தி சீரங்கன்: ================================== ஆநிரை காத்து வாழ்ந்த குறும்பர்கள் குறும்பு என்னும் அரண் அமைத்து ஆநிரைகளும் மக்களும் வாழ்ந்து வந்தார்கள் காடுகளில் ஆநிரைகளைக்கு பெரிதும் பாதித்த ஒன்று புலிகள் தமிழகத்தில் அதிகமாக இருந்த விலங்கு ஆடுகளை தாக்கவரும் புலிகளை தனது கூரிய ஈட்டியினால் குத்தி கொன்று தானும் மடிந்த வீரனுக்கு நினைவாக எடுக்கப்படும் கல் புலிகுத்திகல் இன்றளவும் புலிகுத்தி கல்லை வணங்கும் வீரம் செரிந்த குறும்பர் இனம் (வீச குலத்தவர் கோவிலில் உள்ள புலிகுத்தி சீரங்கன்) என்ற தெய்வம் புலியை குத்துவது போல் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் குடிமக்களை பெருமைப்படுத்தும் வகையில், புலியை குத்திக் கொன்ற வீரனுக்காக, மன்னர்கள் வெளியிட்ட அரிய நாணயம் கிடைத்துள்ளது. இது, வரலாற்றின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து, நாணயவியல் ஆய்வாளர், மன்னர் மன்னன் கூறியதாவது: நாணயங்கள், வரலாற்றின் முக்கிய சாட்சி களாக உள்ளன. தமிழகத்தில், கடவுள், ராசி, சின்னங்கள், விலங்குகளின் உருவங்களுடன் பல நாணயங்கள் கிடைத்துள்ளன. இவை, முற்கால அரசர்களின் மத நம்பிக்கை மற்றும் மக்கள

குறும்பர் கடல் கடந்த கல்வெட்டும் வீர வரலாறும் கம்போஜத்தில் கால் வைத்தவன்

குறும்பர் கடல் கடந்த கல்வெட்டும் வீர வரலாறும் கம்போஜத்தில் கால் வைத்தவன் கி. பி. 1860ஆம் ஆண்டு. ஹென்றி மகூத் என்ற தாவர இயல் நிபுணர் கம்போடியாவிற்கு வந்தார். ஆரவாரமற்று காலியாகிப் போன அற்புத நகரங்கள் சயாம் நாட்டில் இருக்கின்றன என்று மக்கள் கூறியதால் ஆசை மேலிட்டு மீகாங் நதியில் ஒரு தோணியில் பயணித்துக் கொண்டிருந்தார். ஒரு காலை வேளையில் சூரியோதய வர்ண ஜாலங்களுக்கிடையில் கரையில் மலைக்குன்றுகள் முளைத்தார்ப்போல் பிரம்மாண்டமான ஆலயங்கள் தலை தூக்கி நிற்பதை பார்த்து அதிசயித்தார். அதன்பின்தான் கம்போஜ் நாட்டின் புராதன நாகரிகம் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது. கிறிஸ்து பிறப்பதற்கு 6000ம் 7000ம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மக்கள் வாழ்த்திருந்ததற்கான ஆதாரங்கள் தொல்பொருள் ஆய்வில் கிடைத்திருக்கின்றன. இராமாயணத்தில் சீதையைத் தேடி வெற்றி கண்டா அனுமனும் அவரது இனமான வானரர்களும் தென்னிந்திய மக்களே என்று கூறுகிறார்கள். சுக்ரீவன் வானரங்களை அனுப்பும் இடங்களில் யவத்வீபம் , சுவர்ணத்வீபம் , ரூபாக்ய த்வீபம் என்ற இடங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. எனவே இராமாயணக் காலத்திலேயே தென்னிந்தியர்களுக்கு இந்தக் கீழ்த்திசை த

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு

Image
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு பழந்தமிழர் குறும்பர் வாழ்வியல் தமிழர் பண்பாடு காட்டில் கால்நடைகளின் ஒய்வுநிலை அளித்த அமைதி வாழ்க்கை, குழல் எனும் இசைக்கருவியைக் காண வழிவகுத்தது. நீளவாட்டில் ஒரு சில துளைகள் இடப்பட்ட சிறுமூங்கில் துண்டே குழல். கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்க, நீண்ட நெடுநேரம் க்ாத்திருப்பதால் ஏற்படும் ஆயரின் மனச்சோர்வைப் போக்கவல்ல இனிய இசை அதினின்றும் எழும். - • ' குறும்பர் ++++++++++++++++++++++++++++++++  ஆயர்களின் ஒரு பிரிவினராகிய குறும்பர் என்பார், ஆடுகளில் குறுகிய கால்களும் உடல் முழுவதும் அடர்ந்து நீண்ட மயிரும் உடைய இனமாம் குறும்பாடுகளை வளர்த்து வந்தனர். முல்லை நிலத்தில், இன்று நீராவி இயந்திரங்கள் கட்டுப்பாடின்றி நிறுவப்பட்டு, விசைத்தறிகள் மூலம் கம்பளி நெய்யப்படுதல், ஏனைய கைவினைஞர்களைப் போலவே, குறும்பர்களின் அன்றாட வாழ்க்கைக்காம் உணவினைப் பெறும் ஆண்டாண்டு கால வழிமுறையினை இழக்கச் செய்துவிட்டது. என்றாலும், குறும்பர் , தங்கள் ஆடுகள் அளிக்கும் மயிரிலிருந்து கம்பளி நெய்யக் கற்றிருந்தனர். சென்னை மாநிலத்தின் முல்லைப்பகுதிகளில் இன்றும

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் நீலகிரி குன்றுகளில் சோலூர் மலை அடிவாரத்தில் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் முல்லை நிலத்திற்கு உட்பட்ட குருப்படா என்னும் இடத்தில் முல்லை குறும்பர் இனத்தில் ஆதிபராசக்தி 7 பெண்களாய் பிறந்து மாரி, பண்ணாரி, பத்திரகாளி, பொக்கா, பகவதி, சாமுண்டி, மூகாம்பிகையாக பல்வேறு இடங்களில் எழுந்தருளியுள்ளதாக புராணம் கூறுகிறது. பாரியூர் அம்மன் கோபி செட்டிப்பாளையம், பத்திரகாளியம்மன் மேட்டுப்பாளையம், பண்ணாரியம்மன் சத்தியமங்கலம், பொக்கா பொக்காபுரத்திலும், சாமுண்டி மைசூரிலும், மூகாம்பிகை மங்களூரிலும், பகவதி காடாம்புழா அம்மனாக மலப்புரத்திலும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இதில், நீலகிரி மாவட்டத்தில் பொக்காபுரத்தில் உள்ள பொக்கா அம்மனை மசினகுடி, மாயார், சிறியூர், ஆணைகட்டி, சொக்கநல்லி, சோலூர் போன்ற கிராமங்களில் மக்கள் குலதெய்வமாகவும், லங்கூர் இனத்தை சேர்ந்த முல்லை குறும்பர் முதல் முதலாக அம்மனுக்கு கோவில் கட்டியும் வழிபட்டனர். இங்கு மாறுபட்

நீலகிரி குறும்பர்களின் (ஆதிவாசி தேன் குறும்பர் ) ஜீவநதி பாடல்

ஒரு காட்டுநதியின் கதை ( நீலகிரி குறும்பர்களின் (ஆதிவாசி தேன் குறும்பர் ) ஜீவநதி பாடல் .. இதோ அந்தக் கடவுளின் குழந்தைகள் மலைத்தேன் சேகரிக்க இரவைக் கிழித்துக் கொண்டு புறப்படுகிறார்கள் .) * கருக்கல் எனும் கார்குழலி கண்விழிக்கும் முன்னே காட்டுமலைக் குறும்பர்  கண்விழிப்பர்  எழுதாத இலக்கியங்களாய் மேலாடை கலைந்துறங்கும் குறும்பிகளின் கிளிபேச்சு கேட்குமுன்னே அவர்கள் வெளிநடப்பர்  கிளிபேச்சு கேட்டாலோ கிளிமுகம் பார்த்தாலோ போர்முனைக்கு அவர்கள் புறப்படுவதில்லை.. சகுனம் சரியில்லையாம் .. அது அவர்களின் வேதம்  அவர்கள் காட்டுநதிகள் என்றாலும் கரைகட்டி நடந்து செல்லும் அதிசய நதிகள் : ஏடுகளாலும் இலக்கியங்களாலும் எழுதத் தெரியாமல் போன தேவ கதைகள் : கோடுகளால் வரையமுடியாத குறிஞ்சி ஓவியங்கள் ..!  * அது மூங்கில்மலைக் காடு யானைகளின் வீடு "குறுமத்தி" மலை அடிவாரம் ஒரு தேவதையின் கால் சதங்கை கட்டிக்கொண்டு காட்டு நதியொன்று ஓடும்...  தாளங்களை நம்பாமல் தனித்துவரும் பாட்டு ஏழுநிற சுரங்களையும் அந்த ஜீவநதி எழுதிவந்து மீட்டும் !  நதிநீரைக் கொப்புளித்து நாத இறைவ

நம்பியாண்டார் நம்பிகள் - திருத்தொண்டர் திருவந்தாதி குறும்பர்

நம்பியாண்டார் நம்பிகள் - திருத்தொண்டர் திருவந்தாதி பாடல் எண் : 28 சிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக் கிறைநன் கழல்நாளை யெய்து மிவனருள் போற்றவின்றே பிறைநன் முடிய னடியடை வேனென் றுடல்பிரிந்தான் பிறைநன் மலர்த்தார் மிழலைக் குறும்ப னெனுநம்பியே. பொழிப்புரை : பொழிப்புரையை எழுதவில்லை குறிப்புரை : நாவலூராளி, சுந்தரமூர்த்தி நாயனார். `அவர் நாளைக் கயிலை செல்லப்போகிறார்` என்பதை இவர் தம் யோகக் காட்சியால் அறிந்து முன்னாளே யோகத்தால் உடலை விட்டுப் பிரிந்து கயிலை சேர்ந்தார். பெருமிழலை, ஊர். குறும்பர் - சிற்றரசர். `குறும்பர்` என்பது `சிற்றரசர்` எனப் பொருள் தரும். எனினும், `சிர்றசராய் இருப்போர் தனியொரு மரபினர் அல்லர் என்பதனாற்போலும் இந்நாயனாரும் மரபறியா அடியார்களுள் ஒருவராகச் சொல்லப் பட்டார்.

மருதநிலத்தின் மக்கள்

மருதநிலத்தின் மக்கள் வெள்ளாண்மை என அறியப்பட்ட உழவுத்தொழில் மருதநிலத்திலே வளர்ச்சி கண்டது. குறிப்பாக தாமிரபரணி ஆறு, காவிரி ஆற்றங்கரை பகுதியில் பழந்தமிழர் முழுமையான வெள்ளாண்மையில் ஈடுப்பட்டனர். இந்நிலங்களில் பெருநிலக்கிழார்கள் பாசணம் செய்தனர். தொல்காப்பியம் மருதநிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல்      “ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே” (தொல்.பொருள்-968) என்று அந்தந்த நிலத்திற்குரிய, நிலப்பெயர் அடிப்படையில் மக்கட்பெயர் பகுக்கப்பட்டிருக்கும் என்று தொல்காப்பியர் சொல்கின்றார். நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம்      ‘உழவர் உழத்தியர் கடையர் கடைசியர்’ (நம்பி. 23) என இருவகை மருதநில மக்களைப் பற்றி எழுதியிருக்கின்றார். புறப்பொருள் வெண்பாமாலையின் சான்றுப்பாடலும், “களமர் கதிர்மணி காலோகம் செம்பொன் வளமனை பாழாக வாரிக் – கொளன்மலிந்து கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன் நண்ணார் கிளையலற நாடு” (புறப்.15) இவ்வாறு இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர் போன்ற ஒரு சில பெ

சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் காலத்தாலும் பொருளமைப் பாலும் பழமையானவை. சங்க கால நாகரிகமும் பண்பாடும் மிகச் சிறந்தவை என்பதற்குச் சங்க இலக்கியமே சான்றாகும். படிப்படியாக வளர்ந்து வந்த தமிழர்களின் உயர்ந்த பண்பாட்டைச் சங்க இலக்கியங்களின் வழியாக அறியலாம். அக வாழ்விலும் புற வாழ்விலும் சங்கத் தமிழர் சிறந்து விளங்கினர் என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. “கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி.”1 சமுதாயம் என்பது பலரும் கூடி வாழும் ஓர் அமைப்பாகும். மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. பல்வேறு வண்ணங்களால் ஆன மலர்கள் ஒன்றிணைந்து மாலையாவது போல மதத்தால், இனத்தால், மொழியால் வேறுபட்டவர்கள் ஒன்றி ணைந்து வேற்றுமைகளுக்குள் ஒற்றுமை கண்டு வாழ்வதே சமுதாயம். “தனிமனித நிலையில் இருந்து படிப்படியாக மன அளவில் வளர்ச்சி பெற்று ஆண் பெண் இணைந்து சந்ததிகளை உருவாக்கிப் பின்னாளில் கூட்டுக் குடும்பமாக மாற்றமடைந்து மிகப்பெரிய சமூக அமைப்பிற்கு வித்திட்டது எனலாம்.”2 என்னும் கருத்து சமுதாய அமைப்பை விளக்குகிறது. சமூகம் என்பது செயல்பாடுள்ள ஒரு குழுவாகும். பல மனிதர்களை

தென் இந்தியா முழுவதும் ஒருமுறை சக்தி வாய்ந்த குரும்பாஸ் அல்லது பல்லவாஸ்

சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை [I8911 முதன்முதலாக இந்த கோட்பாட்டை முன்வைத்தது குரும்பஸ் அல்லது குருபாஸ் பண்டைய நவீன பிரதிநிதிகள். தென் இந்தியா முழுவதும் ஒருமுறை சக்தி வாய்ந்த குரும்பாஸ் அல்லது பல்லவாஸ் . ஆனால் அவர்களது மேன்மையின் மிக சிறிய சுவடு இப்போது எஞ்சியிருக்கிறது.கம்புஜாவில் (கம்போடியா) காணப்படும் ஒரு சில கல்வெட்டுகள் நம்மை இன்னும் தூக்கி எறிந்து விடுகின்றன Kurumbas அல்லது அதன் உறுப்பினர்கள் வினோதமான செயல்பாடு பற்றி தகவல் தமிழ்நாடு.காம் கம்போடியன் பக்கத்தில் இருந்து தகவல் எதுவும் இல்லை இந்த குழுக்களின் இயக்கங்கள் பற்றி. இவ்வாறு, நாம் ஒரு surmise வழிவகுக்கும் குரும்பாக்களின் சில சண்டைகள் 5-க்கு முன்னர் தென் கிழக்கு ஆசியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளன நூற்றாண்டு ஏ.டி. தெற்கில் டிராங் மாகாணத்தில் ஃபூ-நானில் இருந்து ஒரு கல்வெட்டு கம்போடியா பின்வருமாறு ஒரு வசனம் வாசித்துள்ளார்: விப்ரனம் பவானம் குரும்பனா நகர் கிரடி யம் பிரட்டிம் சமாமா ரட்சிதம் கரையம் வ்யரௌ மியம்பரமணசா போஜீ சத்யபதி நேவா போகா ரஹிட் 55. "குர்ன்ப்பா நகரத்தில் பிராமணர்களின் ஆயில் தங்குமிடமாக இருந்தத

இந்தியாவில் மனிதம்...

இந்தியாவில் மனிதம்... வரலாறு சொல்லும் பாடம் – 4 ஆதி இந்தியர் யார்? ஆப்பிரிக்கர் இந்தியாவுக்கு வருவதற்கு முன் இமயம் தொடங்கி தெற்கே இலங்கை வரை மிக மிகத் தொன்மையான கற்கால மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். (சான்று ஏற்கனவே தரப்பட்டு விட்டது.) வரலாற்றின் வகைப்படுத்தலின் படி அந்த மக்கள்தாம் ஆதித் தென்திசை வாழ் ஆசிய மக்களாக இருக்க வேண்டும். இம் மக்கள் இருண்ட கறுப்பராக இருந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் இமயமலையை அடுத்துள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கறுப்பராக இருக்க முழுமையாகவே வாய்ப்பு இல்லை. காரணம், ஆப்பிரிக்க காலநிலை வேறு, இந்திய அமைவிடம், மண்வளம், நீர்வளம் மற்றும் காலநிலை வேறு. படம்: ஹிமாச்சல் பிரதேச பூர்வக் குடி படம்: சதீஸ்கர் பூர்வக்குடி படம்: நேபாளப் பூர்வக் குடி 1, 2, 3, 4, 5, 6 (உடல் தோற்றத்தில் மண், நீர், காலநிலை செல்வாக்கு செலுத்தும் என்று புவியியல் கூறுகிறது) ஆதித் தென்திசை வாழ் ஆசிய மக்களோடு ஆப்பிரிக்கர் வந்து கலந்த விளைவே இந்தியாவில் இருக்கும் எல்லா பூர்வக் குடிகளின் மரபணுவும் தமிழகத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க வழித் தோன்றலான விருமாண்டியின் மரபணுக் கணக்கோடு ஒத்துப் போகவில்

சங்க தமிழ் மொழி எது ?

சங்க தமிழ் மொழி எது ? :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::                நாடு நகரம் தேன்றாத காலத்தில் மனிதன் வாழ்ந்த காடுகள் மனித நாகரீக வளர்ச்சி காரணமாக ஊர் ஆயிற்று, அந்த ஊரில் வாழும் மக்கள் தங்கள் கருத்தை பறிமாற்றம் செய்ய மொழி ஒன்று உருவானது.மக்கள் தங்கள் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை பிறரை சார்ந்தே  வாழ்ந்து வந்தனர்,தன் தேவையை அடைய மற்றவர்கள் உறையாடும் சூழல் ஏற்பட்டது ஆகையால் அந்த அந்த பகுதியில்  ஒரே மொழி தோன்றியது பிறகு நாளடைவில்  மொழி, மனிதன் முதிற்ச்சியே நாடாக மாறியது தமிழ் மொழி இன்று வரை பல பறிமாணங்கள் எடுத்துள்ளது இன்று நாம் பேசும் மொழி அண்டை மாநிலங்களில் உள்ள மொழிகளோடு ஒத்து போக காரணம் அதுவே,தமிழ் மொழி தமிழர்களுக்கு உறியது என்று பாக்கும் பச்சத்தில் தமிழை ஒத்த வார்த்தைகள்  அண்டை மாநிலங்களில் மட்டும் அல்ல வட மாநிலங்களிளும் காணப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் மொழியின் பல கல்வெட்டு ஒவ்வொரு நிலையை எட்டிவருகிறது (தமிழ் பிராமி,வட்டெளுத்து) மனிதனின்  படிநிலை வளர்ச்சியும் அப்படிதான் உள்ளது இதை எல்லாம் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள்  மொழியின

குறும்பர் இன மக்களின் வினா???

மதிப்பிற்க்குரிய வரலாற்று ஆய்வாளர்கள், மாசற்ற மனுநீதி சோழன் வாழ்ந்த தமிழகத்தில் வாழும் மானமுள்ள தமிழர்களே வினாவுக்கு விடை அளிப்பிரோ??? ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: பறந்து விரிந்த தழிழகம்,பார்போற்றும் தமிழகம் இரத்ததையும்,இரக்கத்தையும் கொன்ட தழிழகம் வரலாற்றில் ஏன் இப்படி பிழை செய்ய யார் காரணம். தமிழ்நாட்டில் சேர,சோழ,பாண்டியர்களை மட்டும் தமிழ் வேந்தர் என்று கொண்டாடப்படும் பொழுது பல்லவர்களை கொன்டாட மறுப்பது ஏன்? வடக்கில் இருந்து அகத்தியர் குடியமற்த்திய வேளிர் தமிழர்கள் என்று கொண்டாடும் நீங்கள் வடக்கில் இருந்து வந்த பல்லவர்களை தமிழர்  இல்லை என்று எப்படி கூற முடியும்? பல்லவர் தமிழர் இல்லை என்றால் நந்திவர்மனை பற்றி ஏன் நந்திகலம்பகம் பாட வேண்டும்? சங்கதமிழ் வளர்த்த பாண்டியர்கள் என்று கூறும் மாமேதைகளே,பல கல்வெட்டில் பாண்டியர்கள் யது வழிதோன்றல் என்று கூறுகின்றார்கள் அவர்கள் தமிழர் என்றால் அதே போல்  பல கல்வெட்டுகளில் விசயநகர அரசர்கள் தங்களை யது வழிதோன்றல் என்று கூறுகிறார்கள் இப்படி இருக்க யது வழிதோன்றிய பாண்டியன் மட்டும் எப்படி தமிழர் அரசு??  ஆந்