Posts

Showing posts from May, 2020

குறும்பர் இன பழங்குடி மக்களின் சேவையாட்டம்

Image
#குறும்பர் இன பழங்குடி மக்களின் சேவையாட்டம் ____________________________________ ____________________________________ குறும்பர் பழங்குடி மக்களின் முக்கியக் கலை சேவையாட்டம் ஆகும் . சேவையாட்டம் என்பது 6 பேர் / 8 பேர் / 10 பேர் கொண்ட குழுவாக இணைந்து ஆடும் ஆட்டமாகும் . தப்பட்டை (மகுடம்), புல்லாங்குழல் முதலிய வாத்தியங்களினால் இசைக்கப்பட்டு ஆடப்படும் ஆட்டமாகும் . கால்நடை வளர்ப்புச் சமுதாயமாகக் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்த ஓர் இன மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கலை வடிவம். கைகளில் உண்மையான 2 அடி வாளுடன் ஆடப்படும் பாரம்பரியமான கலையாகும் . பல கலைகளுக்கு அரசர்களின் ஆதரவும் அவர்களுக்குப் பின்னர் செல்வந்தர்களின் ஆதரவும் இருந்து வளர்த்து எடுத்திருக்கின்றனர் . ஆனால் ஒரு பழங்குடியின மக்களின் கலை காலங்காலமாகக் காப்பாற்றப்பட்டு இன்றும் அதைப் பாதுக்காத்து வருகின்றவர் சாதாரணக் கால்நடைகளை வளர்க்கும் பழங்குடியின மக்கள் தங்களின் கலை  பண்பாடு பழக்க வழக்கங்களைத் தங்களின் உயிரினும் மேலாகக் கருதிப் போற்றிப் பாதுக்காத்து வந்திருக்கின்றனர் . தங்களது தொல்பெரும் கலையைச் சிற்பங்கள் மூலம்

குறும்பர் பழங்குடியினரிடம் தங்கள் இனத்தின் தோற்றம் பற்றியும் மூதாதையர்கள் பற்றியும் பலவகையான கதைகள் கூறுகின்றனர் . இவற்றில் தர்ஸ்டன் அவர்கள் கூறும் குறும்பர் பற்றிய கதை..

Image
குறும்பர் பழங்குடியினரிடம் தங்கள் இனத்தின் தோற்றம் பற்றியும் மூதாதையர்கள் பற்றியும் பலவகையான கதைகள் கூறுகின்றனர் . இவற்றில் தர்ஸ்டன் அவர்கள் கூறும் குறும்பர் பற்றிய கதை..  உண்டல பத்மன்னா கதை: ------------------------------------------------  தொடக்க காலத்தில் காபுகளும் குறும்பர்களும் ஒன்றாக இருந்தனர் . இவர்களுடைய மூதாதையர்கள் மாசிரெட்டியும் நீலம்மாவும் கிழக்கு மலைப்பகுதியில் விறகு வெட்டி அவற்றை விற்று வாழ்ந்து வந்தனர் . இவர்களுக்கு ஆறுமகன்கள் பிறந்தனர் . இவர்களுடைய ஏழ்மையைக் கண்டு , சிவபெருமான் ஜங்கமனாக உருவெடுத்துப் பிச்சைக்காரனைப் போன்று வந்து நீலம்மாவிடம் விபூதியைக் கொடுத்தார் . உனக்குப் பிறக்கும் மற்றொரு குழந்தையால் செல்வாக்காய் இருப்பாய் என்று வரம் அளிக்கிறார் . அதன்படி  ஏழாவதாக ஆண் குழந்தை பிறக்கிறது . அக்குழத்தைக்கு உண்டல பத்மன்னா என்று பெயரிடுகின்றனர் . உண்டல் பத்மன்னா பிறந்த பிறகு விவசாயம் பெருகியது . வாழ்க்கை உண்டல செழிப்பாக மாறியது . யாதொரு வேலையும் செய்யாமல் இருந்ததைக் கண்டு அவன் சகோதரர்கள் அவன் மேல் வெறுப்பு உண்டாகி அவனைக் கொல்லவதற்குத் திட்டம் தீட்டினர் . புற்ற

குறும்பர் இன பழங்குடி மக்களின் வழிப்பாட்டிலுள்ள நடுகற்கள்..

Image
குறும்பர் இன பழங்குடி மக்களின்  வழிப்பாட்டிலுள்ள நடுகற்கள் .. இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சிம்பல்திராடி

நெறும்பூர் குறும்பர்களின் கோட்டையும்,குறும்பரைக் கொன்ற இடமும்...

Image
 நெறும்பூர் குறும்பர்களின் கோட்டையும்,குறும்பரைக் கொன்ற இடமும்... குறும்பர்களின் கோட்டை இருந்த இடமாகச் சுவடி குறிப்பிடும் ஊர்களில் நெறும்பூர் ஒன்றாகும் . அது செங்கற்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது . பாலாற்றின் கரை ஓரத்தில் உள்ளது .  ஐம்பது வயதுடைய திருமதி . மைதிலி இராசகோபாலாச்சாரியார் உதவியுடன் அங்கிருந்த கல்வெட்டுடன் கூடிய நீலமாணிக்கப் பெருமாள் கோவில் பற்றிய செய்திகள் அறிந்து கொள்ளப்பட்டன . கமலவல்லித் தாயாரும் நீலமாணிக்கப் பெருமாளும் எழுந்தருளியுள்ள அக்கோவில் குறும்பர்கள் வைணவத்திற்கு மாற்றப்பட்ட விவரத்தோடு தொடர்புடையதாகத் தோன்றுகிறது .  கிராம அலுவலர் அரங்கநாதனும் அவருடைய துணைவியாரும் அவ்வூரைப் பற்றிய மற்ற விவரங்களை அறிந்து கொள்ளவும் , காணவும் உதவினார்கள் . அவர்கள் வழிபெற்ற விவரங்கள் பின்வருமாறு...  நெறும்பூரில் இப்போது ஏறத்தாழ மூவாயிரம் பேர் உள்ளனர் . அவர்களுள் ஆதிதிராவிடர்கள் நூறு வீடுகளிலும் , பார்ப்பனர்கள் ஐந்து வீடுகளிலும் , ரெட்டியார்கள் இருபது வீடுகளிலும் , வன்னியர்கள் ஐம்பது வீடுகளிலும் , முதலியார்கள் ஐந்து வீடுகளிலும் , யாத

கொல்லிமலை குறும்பர் புலிக்குத்தி நடுகல் காளப்பர் என்ற குறும்பர் மன்னன் சிற்பம். இடம் சேலம் அருங்காட்சியகத்தில் முன் பகுதியில் உள்ளது.

Image
கொல்லிமலை குறும்பர் புலிக்குத்தி நடுகல் காளப்பர் என்ற குறும்பர் மன்னன் சிற்பம்.  இடம் சேலம் அருங்காட்சியகத்தில் முன் பகுதியில் உள்ளது.

குறும்பர் கல்வெட்டு ஆதாரம்...

Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா எறுமூர் உள்ள கடம்பவனேஸ்வர் கோயிலுக்கு விள்ளாங்காட்டுர் குறும்பன் சிறுகன் என்ற குறுநில மன்னன் நந்தா விளக்கு எரிக்க 90 ஆடுகள் தானம் கொடுத்த கல்வெட்டுகள்.

குறும்பர் இன பழங்குடி மக்களின் குனவே பினிசல் என்னும் பாலகிரி நோய் மந்திர மருத்துவம்-2

Image
குறும்பர் இன பழங்குடி மக்களின் குனவே பினிசல் என்னும் பாலகிரி நோய் மந்திர மருத்துவம்-2 குறும்பர் இன பழங்குடி மக்கள் பழங்காலத்தில் மந்திரம் என்பதனையே ஒரு தொழிலாகக் கொண்டிருந்தனர் என்றும் அக்கலையில் தேர்ச்சி பெற்றவர் என்றும் கருதப்படுகின்றனர் . தற்காலச் சூழலில் இக்கலையில் முழுமையாக ஈடுபாடற்று காணப்படுகின்றனர் .  இதற்கான காரணமென சமூகச் சூழலில் மாற்றத்தினையே சுட்டிக் காட்டலாம் . குறும்பர் பழங்குடி இனத்தைத் தவிர்த்து பிற பழங்குடிகளிடம் மந்திர மருத்துவம் என்பது மிக சொற்ப அளவில் காணப்படுகிறது.. குனவே பினிசல்   குறும்பர் இனத்தில் ' குனவே பினிசல் ' எனக் கூறுவது குழந்தை பினி எனப் பொருள் கொள்ளலாம் . இந்நோயை ' பாலகிரி ' எனவும் கூறுகின்றனர் . இந்நோய் மிகக் கடுமையான நோயாகக் கருதுகின்றனர் . இந்நோய்க்கு மருத்துவம் செய்யத் தகுந்த மருத்துவரையே நாடுகின்றனர் .   நோய் ஏற்பட காரணங்கள் பாலகிரி எனப்படும் குனவே பினிசல் நோய் ஏற்பட முக்கியமானதாக இரண்டு காரணங்கள் என கூறுகின்றனர் .  அவையாவன :  1 . பெண்கள் தகாத முறையில் கர்ப்பம் அடைந்துவிட்டு , பின்பு தவறான முறையை உணர்ந்து அக்கர்ப்பத்தைக

குறும்பர் இன பழங்குடி மக்களின் கண் திருஷ்டி நோய் மந்திர மருத்துவம்-1

Image
குறும்பர் இன பழங்குடி மக்களின்  கண் திருஷ்டி  நோய் மந்திர மருத்துவம்-1 குறும்பர்கள் மந்திர வைத்தியம் எறும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ற கருத்து உண்டு எனினும இன்றையச் சூழ்நிலையில் மந்திரத்துடன் கூடிய மருத்துவ முறைகள் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றன . சமுதாய சூழல் மாற்றமே இதன் காரணமாகும் . மேலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த மந்திர வைத்தியத்தை வெளியில் பரவ விடுதல் கூடாது எறும் சமுதாயக் கட்டுப்பாட்டிற்கு இணங்கும் தன்மையும் இம்மருத்துவ முறை குறைய ஒரு காரணமாகவும் அமைகின்றது . எனினும் ,  1 . கண் திருஷ்டி  நோய்   எனும் குறும்பர் இன பழங்குடி மக்களின் மந்திர வைத்திய முறைகள் செயல்முறையை இப்போது காண்போம். கண் திருஷ்டி   நோய் பொதுவாக அனைத்து இனப்பிலவுகளிலும் காணப்படும் நோயாகும் .  குறும்பர் இல்லத்தில் கண் திருஷ்டியால் ஏற்படுகின்ற நோய்களைப் போக்க குறிப்பட்ட ஒரு மருத்துவ மந்திரத்தில் கைதேர்த்தவரையே நாடுகின்றனர் . கண்திருஷ்டியானது இருவகையாக உள்ளது . அவை   1 . சாதாரண திருஷ்டி  2 . கடுமையான திருஷ்டி என்பவைகளாகும் .   சாதாரண திருஷ்டி நோயானது மிகக் குறைந்த அளவிலா பாதிப்பை ஏற்படுத்த

குறும்பர் இன பழங்குடி மக்களின் பழைய புகைப்படம் உங்கள் பார்வைக்கு.

Image
குறும்பர் இன பழங்குடி மக்களின் பழைய புகைப்படம் உங்கள் பார்வைக்கு. .

குறும்பர் இன மூதாட்டி மல்லாயம்மாள் சாபத்தால் அழிந்த நிலக்கோட்டை ஜமீன்...

Image
 குறும்பர் இன மூதாட்டி மல்லாயம்மாள்  சாபத்தால் அழிந்த நிலக்கோட்டை ஜமீன்... விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில் திண்டுக்கல் ஒரு முக்கிய அரசியல் எல்லையாக இருந்தது . திண்டுக்கல்லில் நாயக்கரின் ஆட்சி முகம்மதியர்களால் வீழ்த்தப்பட்டது . பின் இம்முகமதியர்கள் ஆட்சியை மைசூரில் ராஜாவிடம் சமாதானமாக ஒப்படைத்தனர் . மைசூரின் பிரதிநிதிகள் திண்டுக்கல்லில் கி . பி . 1742 ல் ஆட்சி நடத்தினர் . அவரது ஆட்சியில் திண்டுக்கல் சீமையானது 26 பாளையங்களாக இருந்தது . அவற்றுள் நிலக்கோட்டையும் ஒன்றாகும் .  ஒவ்வொரு பாளையத்திற்கும் அப்போது ஒரு ஜமீன் என்று சொல்லக்கூடிய சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்தனர் . இந்த நிலக்கோட்டை ஜமீனில் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த கூலப்ப நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வந்தார் . நிலக்கோட்டை ஜமீனில் நிலக்கோட்டையைச் சுற்றியுள்ள பதினெட்டுப்பட்டிகள் ஆட்சி எல்லைக்குட்பட்டதாகும் .  ஒவ்வொரு ஜமீனும் அவரவர்களின் ஆட்சி அதிகார எல்லைக்குட்பட்ட கிராமங்களின் வருவாய் நிலைக்கேற்ப தமக்குத் தேவையான அரண்மனையை ஏற்படுத்தி , தனக்கு உண்மையானவர்களை அரண்மனைப் பணிக்கும் , வெளிப்பணிக்கும் பணியாளர்களை அந்தந்த ஜமீன் நியம