Posts

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூர் அருகாமையில் இருக்கும் குறும்பனூர் குறுமன்ஸ் பழங்குடி மக்களின் வழிபாட்டில் இருக்கும் ஐம்பொன் சிலைகள்...

Image
அகநானுற்றுப் பாடல் “அருங்குறும்பு எறிந்த ஆற்றலோடு” (அகம் : 342) என்றும், மற்றொரு அகப்பாடலில் “ஓம்பினார் கவர்ந்து கூழ்கெழு குறும்பில்”(அகம் :113) என்றும், அகப்பாடல் 31 இல் “கல்லுடைக் குறும்பின் வயவர் விழ்இய” எனவும் குறும்பர் பற்றிய செய்திகள் பயின்றுவருகின்றன. சங்கஇலக்கிய நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை ”வில்லை உடைய வீடுகள் நிறைந்த குறும்பு” (பாடல் வரி; : 121-124) என்று குறிப்பிடுகின்றது. சீவக சிந்தாமணியில் “கொண்டேரு குறும்பர் வெம்போர்” என்று சுட்டுகின்றது. மேலும் பெருங்கதையில் “குறும்பருங் குழிஇய” என்று குறும்பர்களைப் குறிப்பிடுகின்றது.

படைவீட்டை ஆண்ட குறும்ப அரசை பற்றி

Image
படைவீட்டை ஆண்ட குறும்ப அரசை பற்றி  North Arcot Manual -1894 : ------------------------------------------------------------------------ "#படைவீடு : இந்த பாழடைந்த நகரம் மாவட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.  இது தற்போது 654 மக்களைக் கொண்டுள்ளது என்றாலும், இது ஒரு அரச வம்சத்தின் தலைநகரம் என்று பாரம்பரியம் கூறுகிறது, இது பல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தியது. இது #குறும்பர் அரசையே குறிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. நகரம் 16மைல் சுற்றளவில் இருந்தது, மேலும் கோவில்கள், மண்டபங்கள் மற்றும் சிறந்த பொதுமக்கள் குடியிருப்புகள் நிறைந்திருந்தது. சாந்தவாசலின் தற்போதைய கிராமங்கள் மற்றும் அங்கு கண்காட்சி அல்லது சந்தைகள் நடத்தப்பட்டிருப்பதன் மூலமும் பூக்கடை சந்தை நடைப்பெறும் இடமான புஷ்பகிரி 4 மைல் இடைவெளியில் இருப்பதையும் கொண்டு நகரத்தின் அளவை மதிப்பிடலாம்.  இந்த நகரம் தூசி மற்றும் கற்கள் மாரியாக பொழிந்து மூழ்கடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது, இது அதன் அற்புதமான கட்டிடங்கள

#அருவாளர் நாடு ( #குறும்பர் நாடு )

Image
#அருவாளர் நாடு ( #குறும்பர் நாடு )   சங்க காலத்திற்கு முன் தமிழ் கூறும் நல்லுலகத்தில் 12 நாடுகள் செந்தமிழ் நிலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . இதை தொல்காப்பியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது .  • செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் ... "  • தம் குறிப்பினவே ... "  ( -திசைச்சொல் - கிளவி (தொல்காப்பியம் , சொல்லதிகாரம் 400 ) .  தொல்காப்பியத்தில் செந்தமிழ்நிலம் என்று பாண்டிய நாட்டையோ சோழ நாட்டையோ தொண்டை நாட்டையோ தனித்தனியாகக் குறித்துக்காட்டவில்லை . தொல்காப்பியத்தில் தமிழ்நாடானது பலபகுதிகளை உள்ளடக்கியதாகக் கூறப்பட்டுள்ளது . அவைகள் அனைத்தும் தமிழ்நிலமாக இருந்துள்ளது .  அது பரந்து விரிந்த நிலையில் இருந்துள்ளது .   தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் செந்தமிழ்நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டாகும் நாடு. அந்நாட்டகத்து பொருள்விளங்குமாறு இவர் திசைச்சொற்களை வட்டார வழக்குச் சொற்கள் எனப்படும் என்கிறார் . வழங்கும்சொல் திசைச்சொல் மக்களுக்கு மட்டுமே எனப்படும் என்கிறார் .  இதன்படி #குறும்பா , #குறும்பர் , #குறும்பன் , #குறுமன் என்பவைகள் வட்டார வழக்கு சொற்களாகும் .  யாப்பருங்கலக்கா

#குறும்பர் பழங்குடி இன #வாழ்வியல் வழிபாடு 🙏🙏🙏 கவிமுனி 🙏🙏🙏 உண்மையான #மானுடவியல் அறிவோம்...

Image
#குறும்பர் #குருமனஸ் பழங்குடி இன #வாழ்வியல் வழிபாடு 🙏🙏🙏 கவிமுனி 🙏🙏🙏 உண்மையான #மானுடவியல் அறிவோம்... சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் குறும்பனூர் இன மக்கள் வணங்கும் நடுகல் இடம்:சுலகொப்பை

குறுமன்ஸ் பழங்குடி மக்களின் #வாழ்வியல் சடங்கு...#அம்புலி செட்டி ( சட்டி ) வைத்தல் :

Image
#குறுமன்ஸ் பழங்குடி மக்களின் #வாழ்வியல் சடங்கு... #அம்புலி செட்டி ( சட்டி ) வைத்தல் :  அம்புலி செட்டி என்பது புதிய பானை வாங்கி அதற்கு ஆட்டின் ரோமத்தில் செய்த கம்பளியாலான கறுப்பு வெள்ளை நூலில் இரும்பு துண்டு , மஞ்சள் கொம்பு , மா இலை சுற்றிப் பண்டாரம் ( மஞ்சள் ) வைத்துப் பொட்டுவைக்க வேண்டும் . அம்புலி செட்டி தயாரானவுடன் நடுவீட்டில் மணலைக் கொட்டி , பானையை அதில் வைத்து அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும் . பின்பு மாங்கொத்தை அதன் மீது வைத்து , திருமணப் புடவை , திருமண வேஷ்டி ஆகியவற்றை வைக்க வேண்டும் . மேலும் புது மொந்தை , புது தீபகலசம் , பண்டாரகலசம் மற்றும் சாந்துப்பொட்டு , சீப்பு வைத்து அலங்காரம் செய்து வைக்க வேண்டும் . ஒரு போனம் செய்து ஓணான் இலை மீது வைக்க வேண்டும் . 11 போனம் இனிப்புகள் , பணியாரம் , 11 வாழைப்பழம் வைக்க வேண்டும் . 11 ஜதை வெற்றிலைப்பாக்கு வைக்க வேண்டும்,       இக்கோலங்கள் அம்புலிசெட்டி வைக்கும் இடத்தில் சுவற்றில் " கெம்மண்ணு ” ( செம்மண்ணு )கொண்டு வரையப்படுவது . இதற்கு  பண்ணபராது என்று பெயர் . இது பழங்காலம் தொட்டே குருமன்ஸ்பழங்குடியினரிடம் தொடர்ந்து வருகிறது . இதில் ஆண் பண்ண , ப

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமம் குரும்பனூரில் வசிக்கும் குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் தாய் கிராமமும் ஒசோடப்பன் சுவாமி காட்டு கோவிலும்...

Image
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமம் குரும்பனூரில் வசிக்கும் குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் தாய் கிராமமும் ஒசோடப்பன் சுவாமி காட்டு கோவிலும்... இன்று குரும்பனூரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குருமன்ஸ் பழங்குடி மக்கள் தாய் கிராமமும் பெரியதண்டா இருந்து 7 கி.மீ., தூரமுள்ள வனப்பகுதியில் ஒசோடப்பன் கோயில் அமைந்துள்ளது இடம் ஆகும் குருமன்ஸ் இன பழங்குடி மக்கள் பல ஆண்டு காலம் அங்கு வாழ்ந்து வந்தது உள்ளனர் இதற்க்கு ஆதாரமாக இங்கு வாழ்ந்து வந்ததற்கான வீடு மற்றும் விவசாயம் செய்த காடுகள் இன்றளவும் காணப்படுகின்றன இங்கு பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கல் காணப்படுகின்றது அதனை குருமன்ஸ் இன மக்கள் குறும்பன் குரும்பாச்சி என்று அழைத்து வருகின்றனர் அதுமட்டுமின்றி காவல் வீரன் நடுகல்லும் அதில் வீரன் ஒருவன் ஈட்டியை ஏந்திய நிலையிலும் அருகில் நாய் நிற்பது போன்ற நடுக்கல்லும் அமையப்பெற்றுள்ளது அதனை சுற்றி உள்ள பகுதியில் சிதிலமடைந்த நிலையில் கோயில்களும் காணப்படுகின்றன அதுமட்டுமின்றி இங்கு பல நடுகற்கள் சிதிலமடைந்து காணப்படுக

சேர நாடாம் கேரளத்தின் புதுச்சேரி , குறும்ப பகவதி கோவில்

Image
சேர நாடாம் கேரளத்தின் புதுச்சேரி , குறும்ப பகவதி கோவில் . சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோவில் இது என்பது இங்குள்ளோர் கூறும் தகவல் . குறும்பர் இன வீரர் ஒருவரின் நடுகல் இங்குண்டு.கல் வெட்டு ஒன்றும் உள்ளது படிக்க இயலாத அளவுக்குப் பெயிண்ட் அடிக்கப்பட்டு உள்ளது . நடுகல் ஒன்றைப் பல வண்ணப் பெயிண்டால் அலங்கரித்து உள்ளனர் . கல்வெட்டு மற்றும் கற் சிற்ப வேலைப்பாடுகளுக்குப் பெயிண்ட் அடிக்கும் நல்ல உள்ளங்களுக்கு எப்படிப் புரிதலை ஏற்படுத்த முனைவது என்பது புரியவில்லை .