குறும்பர் பழங்குடியினரின் தொழில்கள்...

குறும்பர் பழங்குடியினரின் தொழில்கள்...

 கால்நடை வளர்ப்புச் சமுதாயமான இவர்களுக்கு ஆதித்தொழில் , குலத் தொழில் எல்லாம் கால்நடைகளை வளர்ப்பதே . அதிலும் குறும்ப ஆடு என்ற ஆட்டை வளர்ப்பதைத் தவிர வேறு தொழில் செய்வதில்லை . ஆட்டிலிருந்தே இவர்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடுவதால் குறும்பர் பழங்குடியினர் தங்கள் உயிரை விட அதிகமாகத் தங்கள் ஆட்டுமந்தைகளைப் பாதுகாக்கின்றனர் .

 1)ஆட்டுமந்தை

 தங்களது ஆடுகளுக்குத் தேவையான உணவுகிடைக்கும் இடத்தையே தங்களது தங்குமிடங்களாக மாற்றிக்கொண்டவர்கள் குறும்பர் பழங்குடியின மக்கள் . ஆட்டு மந்தைகளுக்காகப் புல்வெளிகளைத்தேடி அது கிடைக்குமிடத்தில் மந்தைகளோடு
வாழ்ந்து அப்புல்வெளிகள் தீர்ந்தவுடன் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் குறும்பர் பழங்குடியின மக்கள் . ஆட்டின் முடியிலிருந்து , தங்களுக்குத் தேவையான கம்பளியை நெய்துகொள்கின்றனர் . ஆட்டில் கிடைக்கின்ற பாலைக் காய்ச்சித் தயிர் , நெய் போன்றவற்றைத் தயாரித்து அருகிலுள்ள ஊர்களில் விற்றுத் தங்களுக்குத் தேவையான ஆடைகள் , உணவுப்பொருட்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளுகின்றனர் . ஆட்டின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் “ ஆல்மஜனை ” என்று பெயர் . இதனைத் தங்கள் தெய்வங்களுக்குப் படைக்கின்றனர் . குறும்ப ஆடுகள் தங்களுக்காக இறைவனால் படைக்கப்பட்டதாக நம்புகின்றனர் . இவர்களின் தோற்றம் பூர்வீகக் கதைகளில் இந்நிகழ்வுகள் இவற்றில் சொல்லப்பட்டிருப்பதை கண்டோம் . ஆடுகள் வளர்ப்பதையும் இரு ஆடுகள் பல ஆடுகளாகப் பெருகுவதையும் அதில் கிடைக்கின்ற நெய் போன்றவற்றை விற்று வருகின்ற தொகையில் தங்களது வாழ்விற்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர் . இம்முறைகளெல்லாம் தங்கள் தெய்வமே தங்களுக்குப் போதித்ததாக நம்புகின்றனர் . எனவே ஆட்டுமந்தையே இவர்களது சொத்தாக உள்ளது .


குறும்பர் பழங்குடியின மக்கள் வளர்க்கும் ஆடுகளின் வகைகள் .

 1. கரிகுறி கறுப்பு நிற ஆடு 

2. ஒட்டாடேரி வயிற்றில் சாரை இருக்கும்

 3. சாரளகிரி சாரை நிறஆடு

 4. கிள்ள வெள்ள நிற ஆடு 

5. ஏட பின்னால் குதத்தின் மீது வட்டமாக இருக்கும் 

6. மொல்லா காது சிறியதாக இருக்கும்

 7. பிட்டா முழு காதில் பாதி இருக்கும் 

8. கண்ட முதுகில் கறுப்பு ஆட்டின் வெள்ளைக் கோடு இருக்கும் 

9. உண்டா நெற்றிலியில் வெள்ளையாக இருக்கும் 

10. பொல்லிண்டிரி முகம் மட்டும் வெள்ளை மீதி கறுப்பு 

11. வர்ரகிள்ளா பாதி சிவப்பு பாதி வெள்ளை 

12. ஆலா முகம் சிவப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும்

 13. நாமுண்டி முகத்தில் நெற்றியின் நடுபாகத்தில் வெள்ளை மீதி கறுப்பு 

14. ஜென்கிளிறி உடல் முழுக்கக் கறுப்பு வெள்ளை கலந்து இருக்கும்...

அடைபோடுதல் ( பஃகி ) 

வேளாண்மை இரவில் அடைபோடுதல் என்பது குறும்ப ஆட்டுமந்தைகளை செய்யும் நிலத்தில் அடைத்து வைப்பதாகும் . இதனால் இரவில் ஆடுகள் கழிக்கும் கோமியம் , ஆட்டுப் புலுக்கை ( சாணம் ) இவற்றால் நிலம் பண்பட்டு நன்றாக விளையும் . இது இயற்கை உரம் இடும் முறையாகும் . 

குறும்பர் உள்ள பழங்குடியினரிடம் இருக்கும் ஆட்டுமந்தைகளைக் கொண்டு அவர்கள் வாழும் பகுதியில் வேளாண்மை செய்கின்ற மற்ற இனங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலத்தில் ஆட்டு மந்தையை அடைத்து வைத்து அடைபோடச் சொல்வார்கள் . இதற்காக நிலஉரிமையாளர்களிடம் குறும்பர் பழங்குடியினர் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுவார்கள் . எத்தனை அடைபோட வேண்டும் ?. அடைபோடுவதற்கு எவ்வளவு கூலி தருவீர்கள் ? என்று அவ்வொப்பந்தத்தில் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள் . இதற்குக் கூலியாகக் குறிப்பிட்ட அளவு தானியத்தை இப்பழங்குடியின மக்கள் பெற்றுக்கொள்கிறார்கள் . இவர்கள் இடம்பெயர்ந்து செல்லும் எல்லா ஊர்களிலும் இந்த அடைபோடும் தொழிலை மேற்கொள்ளுகின்றனர் . இதனால் இவர்களுக்கு உணவுக்குத் தேவையான தானியங்கள் குறிப்பிட்ட அளவு கிடைத்துவிடுகின்றன . 

ஆட்டு மந்தையை எப்பகுதியில் மேய்க்க வேண்டும் . எங்கு அடைபோட வேண்டும் . ஆட்டிலிருந்து கிடைக்கின்ற பொருட்களை எங்கு விற்க வேண்டும் , ஆடுகளை எங்கு விற்பனை செய்ய வேண்டும் அதற்கான விலை எவ்வளவு போன்ற முடிவுகளை இப்பழங்குடியினர் குலத்தலைவரான பெரியவீட்டுக்காரரே தீர்மானிப்பார் . ஆட்டிற்கு வருகின்ற நோய்களைத் தீர்ப்பதற்கும் சில சடங்குகள் செய்கின்றனர் . குறும்பர் பழங்குடியினர் ஆட்டிலிருந்தே அனைத்துச் தங்கள் வாழ்விற்கு செல்வங்களையும் பெறுவதால் மூலாதாரமான செல்வமாக கருதுகின்றனர் .

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!