#அருவாளர் நாடு ( #குறும்பர் நாடு )

#அருவாளர் நாடு ( #குறும்பர் நாடு ) 



 சங்க காலத்திற்கு முன் தமிழ் கூறும் நல்லுலகத்தில் 12 நாடுகள் செந்தமிழ் நிலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . இதை தொல்காப்பியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது . 

• செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் ... " 

• தம் குறிப்பினவே ... " 

( -திசைச்சொல் - கிளவி (தொல்காப்பியம் , சொல்லதிகாரம் 400 ) . 

தொல்காப்பியத்தில் செந்தமிழ்நிலம் என்று பாண்டிய நாட்டையோ சோழ நாட்டையோ தொண்டை நாட்டையோ தனித்தனியாகக் குறித்துக்காட்டவில்லை . தொல்காப்பியத்தில் தமிழ்நாடானது பலபகுதிகளை உள்ளடக்கியதாகக் கூறப்பட்டுள்ளது . அவைகள் அனைத்தும் தமிழ்நிலமாக இருந்துள்ளது . 

அது பரந்து விரிந்த நிலையில் இருந்துள்ளது .  

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் செந்தமிழ்நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டாகும் நாடு. அந்நாட்டகத்து பொருள்விளங்குமாறு இவர் திசைச்சொற்களை வட்டார வழக்குச் சொற்கள் எனப்படும் என்கிறார் . வழங்கும்சொல் திசைச்சொல் மக்களுக்கு மட்டுமே எனப்படும் என்கிறார் . 

இதன்படி #குறும்பா , #குறும்பர் , #குறும்பன் , #குறுமன் என்பவைகள் வட்டார வழக்கு சொற்களாகும் .


 யாப்பருங்கலக்காரிகை உரையில் கொடுந்தமிழ்நிலம் பன்னிரண்டு என்று காட்டப்படுகின்றது . 

இதனைப் பின்வரும் பாடலில் காணலாம் : 


" தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி யருவா வதன்வடக்கு - நன்றாய சீத மலாடு புன்னாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெ ண் ' ( யா.கா. உரை .57 ) .


 தொல்காப்பியர் குறிப்பிடுகின்ற பன்னிரண்டு நாடுகள் பொங்கர்நாடு , ஒளிநாடு . தென்பாண்டிநாடு . குட்டநாடு . குடநாடு , பன்றிநாடு , கற்காநாடு , சீதநாடு , பூழிநாடு . மலைநாடு , #அருவாநாடு , #அருவாவடதலைநாடு எனத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பால் ஈறாகும் என்கிறார் . 


செந்தமிழ்நிலம் அல்லாத பிற பன்னிரண்டு நிலங்களை , குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூவகமும் சிங்களமும் சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும் கிழக்குப்பட்ட கருநடகமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும் ( சிவலிங்கனார் , 1988 : 19-27 ) . 


இதனைப் பின்வரும் நூற்பாமூலம் அறியலாம் : 

' கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம் கொல்லங் கூபகம் சிங்களம் என்னும் எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம் கலிங்கம் தெலுங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம் . -அகத்தியர் ( இராவகவையங்கார் , 1941 : 1617 )


வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வட எல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு. 184 முதல் கி.பி. 260 வரை செறிப்புற்று இருந்தது . வடபெண்ணை முதல் தென்பெண்ணைவரை இருந்தநிலப்பரப்பே அக்காலத்தொண்டை மண்டலம் எனப்பட்டது . அஃது #அருவாநாடு , #அருவா வடதலை நாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது- முன்னதில் காஞ்சி நகரம் உட்பட்டது . பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும் . இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும் ; காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது . அவ்விடம் இன்றும் ' தொண்டைமான் மாகணி ( மாகாணம் ) எனப்படும் . இரண்டு வெள்ளாறுகட்கு இடையில் உள்ள நிலமே சோழநாடு . தென்வெள்ளாற்றுக்குத் தென்பால் உள்ள இடமே பாண்டியநாடு கொச்சி , திருவாங்கூர் நாடுகள் அடங்கிய இடமே பழைய சேர நாடாகும் . குடகு முதலிய மலை நாட்டு இடங்களும் அவற்றைச் சார்ந்த கடற்கரையும் கொங்காணம் எனப்படும் . அதனைச் சங்க காலத்தில் நன்னன் என்பவன் ஆண்டு வந்தான் . 


இவர்களைத் தவிர ' புல்லி ' என்பவன் வேங்கட மலைப்பகுதியை ஆண்டுவந்தான் . மேற்கூறிய இரு பகுதிகளும் சேர்ந்து பிற்காலத்தில் தொண்டை நாடு எனப்பட்டது . 



" ... மழ புலம் வணக்கிய மா வண் புல்லி விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும் ... " 

அகம் , 61 - மாமூலனார் பாடல் மற்றும் , .... 


கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும் ... " 

அகம் , 83 -கல்லாடனார் பாடலிலும் .... 


வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர் இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர் , ... " அகம் , 213- தாயங்கண்ணனார் பாடல்களின் வழியாக அறியப்படுகிறது . 


மேலும் , 

வேழம் உடைத்து மலைநாடு ; மேதக்க .

 சோழ வளநாடு சோறுடைத்து . பூழியர் கோன் 

• தென்னாடு முத்துஉடைத்து ; தெண்ணீர் வயற் 


தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து ” என்று ஔவையார் பாடிய பாடலில் தொண்டைநாடு குறிப்பிடப்பட்டுள்ளது . 


தொண்டை நாட்டின் எல்லை பற்றிய பின்வரும் பாடலில் : 

" மேற்குப் பவளமலை ; வேங்கடம் நேர்வடக்காம் ; ஆர்க்கும் இவரி அணி கிழக்கு : - பார்க்குள்உயர் தெற்குப் பினாகி திகழ் இருப தின்காதம் நல்தொண்டை நாடெனவே நாட்டு " 

( கம்பர் தனிப் பாடல்கள் .145 ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது . 

சங்க காலம் என்பது கி.மு. 400 லிருந்து கி.பி .300 வரை உள்ள காலம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது . கி.பி மூன்றாம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து வந்து களப்பிரர்கள் 
படையெடுப்புக்குப் பின்னர் சங்க காலம் முடிவுற்றது . 

சங்க கால தமிழகத்தில் பல்வேறு குடியினர் பரவலாக வாழ்ந்து வந்திருந்ததை சங்கப் பாக்கள் மூலம் அறிகிறோம் . இவர்களில் அருவர் . அண்டர் , இடையர் , பொதுவர்களும் குறும்பர் எனப்பட்டனர் . அண்டர்களும் பொதுவர்களும் #குறும்பர் எனப்பட்டனர் என்று துரை அரங்கசாமி குறிப்பிடுகிறார் . இதை பின்வரும் பாடல்கள் உறுதி செய்கிறது .

 " மாரி ஆம்ப லன்ன கொக்கின் பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர் கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன் .. " 
(குறுந்தொகை .117 : 3-4- குன்றியனார் ) 

. திண் தேர் நள்ளி கானத்து அண்டர் பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி ...

 குறுந்தொகை .210 : 1-2 - காக்கை பாடினியார் நச்செள்ளையார் . )

 பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்றுநாமமன்னர் துணிய நூறிக்கால்வல் புரவி அண்டர் ஓட்டி

 ( பதிற்றுப்பத்து .88 : 7-9 பெருங்குன்றூர்கிழார் . ) 

பல்ஒளியர் பணிபு ஒடுங்க தொல் அருவாளர் தொழில் கேட்ப வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் திறல்கெடச் சீறிமன்னர் மன்எயில் கதுவும் மதனுடை நோன்தாள் மாத்தானை மற மொய்ப்பின் செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப் புன்பொதுவர் வழி பொன்ற இருங்கோவேள் மருங்கு சாயக்

 ( பட்டினப்பாலை : 274-280 - கடியலூர் உருத்திரங்கண்ணனார் . ) , 

பொதுவர் ( இடை மகன் ) பொதுவர் என்பவர் . பாண்டிய நாட்டின் தென்பகுதியில் இருந்த பொதியமலைப் பகுதியில் ஆண்டுகொண்டிருந்த ஆய்குடி மக்கள் . ஆ < ஆய் < ஆயர் பொதுவர் ( காண்க முல்லைக் கலி ) என்று குறிப்பிடப்படுகிறது . ..


பல ஆன் பொதுவர் , கதழ் விடை கோள் காண்மார் " கலித்தொகை -103.5 , ...


 தொழுவினுள் , புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின , ஏறு ; .. கலித்தொகை -103.22-23 ,

 ..இகுளை ! இஃது ஒன்று கண்டை ; இஃது ஒத்தன் புல்லினத்து ஆயர் மகன் அன்றே புள்ளி .. " கலித்தொகை -103.46-47 , 

( ..மாறுமாறு உழக்கியாங்கு உழக்கி , பொதுவரும் ஏறு கொண்டு , ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டாங்கே .. " கலித்தொகை 

இந்தப்பாடல்கள் , ஆயர் என்பவர்கள் கோட்டினத்து ஆயர் ( எருமை ) #புல்லினத்து ஆயர் ( ஆடு ) , கோவினத்து ஆயர் ( மாடு ) என்று மூன்று பிரிவையும் பொதுவர் என்று குறிப்பிடுகிறது . 

பிற்காலக் கரிகாலன் பொதுவர் , அருளாளர் என்பவருடனும் பாண்டியன் முதலியவருடனும் போர் செய்து வென்றதாகத்தான் முடத்தாமக் கண்ணியார் , பொருநர் ஆற்றுப்படை கூறுகிறது

 . ..நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றுஞ் செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன..அகநானூறு , 141 : 21-23 . 

" தேம்கமழ் நெடுவரைப் பிறங்கிய வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே ... அகநானூறு , 141 : 28-29 ,நக்கீரர் . " 


..காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணிவாயில் ... " வது பரணர் பாடலிலும் அகநானூறு -246 குறிப்பிடப்பட்டுள்ளது

 . ... தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த புறப் புண் நாணி , மறத் தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன் ... " புறநானூறு .65 . 


வெண்ணி போர் இதை இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன் , தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தார் . கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக் குயத்தியார் என்னும் புறநானுற்றுப் புலவர் விளக்குகிறார் . நேரில்


 சங்ககாலத்தின் கடைசியில் வாழ்ந்த சோழர் தொண்டை நாட்டை இரு கூறாக்கினர் . 1. நடு நாடு 2. தொண்டை நாடு . இதற்கு பின்னரே தொண்டை நாடு 24 கோட்டங்களாகவும் , சிறு சிறு உள் நாடுகளாகவும் பிரிக்கப்பட்டுத் தொண்டை வேந்தர்களால் ஆளப்பட்டது . 


நடுநாடு என்பது வடக்கே தென்பெண்ணை ஆறும் மேற்கில் சேர்வராயன் , கல்வராயன் , பச்சைமலைத் தொடர்களும் தெற்கே வடவெள்ளாறும் கிழக்கே கடலும் இயற்கை எல்லைகளாக அமையப் பெற்ற நிலப்பகுதி நடுநாடு ஆகும் .

 தொண்டை நாடு , வடக்கே வேங்கடம் முதல் தெற்கே தென் பெண்ணையாறு வரை உள்ள நிலப் பரப்பு ஆகும் . இதனில் தென் ஆர்க்காடு , வட ஆர்க்காடு செங்கற்பட்டு மாவட்டங்களும் , தற்போது , ஆந்திரத்திலுள்ள நெல்லூர் , சித்துார் மாவட்டங்களின் பகுதிகளும் அடங்கும் . பண்டைகாலத்தில் தொண்டைநாடு #குறும்பர் நிலம் என்று பெயர் பெற்றிருந்தது . #குறும்பர் , தம் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு அங்கு காலம் கழித்தனர் . 

காண்டினத்து அவர்களே தங்கள் நாட்டை 24 கோட்டங்களாக வகுத்தனர் . காவிரிப் வணிகருடன் கடல் வாணிகம் நடத்தினர் . கரிகாலன் நாட்டில் " காடு கெடுத்து நாடாக்கினான் ” என்னும் நூல் வழக்கு இருப்பதால் , தொண்டை நாட்டின் பெரும்பகுதி காடாகவே இருந்தது என்று பெரிய புராணம் பேசுகிறது . 

கரிகாலன் தொண்டை நாட்டுக் காடுகளை அழித்து நாடாக்கினான் ; வேளாண்மையை வளர்ப்பதற்காக நாற்பத்து எண்ணாயிரம் வேளாளரைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து குடியேற்றினான் என்று சொல்லப்படுகிறது . 

கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர் . முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான் கரிகாலன் ஆட்சிக்காலத்தைப் பற்றி பல கருத்துக்கள் கொங்கு நாட்டை ஆட்சிக்காலம் கி.பி. 150-205 இடைப்பட்ட காலமாகும் . ஆண்ட பேரரசன் சேரன் செங்குட்டுவன் . இவனைச்சிலம்பில் இளங்கோவடிகள் கொல்லியாண்ட குடவர்கோ என்று கூறிக் காப்பியத்தை நிறைவு செய்கின்றார் . இந்தக் காலத்தில் தான் வல்வில் ஓரி என்ற குறுநில மன்னன் கொல்லி மலையை மீட்டுத் தனியாக ஆட்சி புரிந்தான் . அதியமானும் , தனியாட்சி செய்தான் . சேர நாட்டின் தலைநகர் வஞ்சி மாநகர் கரூரும் தலைநகராக ஆக்கப்பட்டது .

 - இவன் க ாலத்திய கயவாகுவும் ( கிபி 171 - 191 ) ஆந்திரத்தை ஆண்ட சாதவாகன மன்னன் யக்ஞஸ்ரீயும் ( கிபி 165 - 195 ) நூற்றுவர் கன்னர் எனச் சிலம்பு கூறுகின்றது . இதன்மூலம் கரிகாலன் செங்குட்டுவனுக்கு முற்பட்டவன் எனலாம் . ஆகவே , தொண்டைநாடு குறும்பர் நிலம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது .

 திருமாவளவனுக்கு பின் உறையூர் , புகார் ஆகிய தலைநகர்களில் இது வேறு மரபு சோழர்கள் ஆட்சி புரிந்தனர் . அவற்றில் உறையூரை ஆண்டவர்களில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் முக்கியமானவர் ஆவார் . திருக்கோவலூரை ஆண்ட மலையமான் , துளுவ நாட்டில் வாழ்ந்த கோசர் கூட்டத்தினரையும் , பாண்டியன் மாறன் ஆகியோரை எதிர்த்து வெற்றி பெற்றான் . அடுத்து சேரநாட்டின் தலைநகரான் கருவூரை முற்றுகையிட்டு அளித்து இமயம் வரை வெற்றிபெற்ற நெடுஞ்சேரலாதனையும் வெற்றி கொண்டான் . 

எனச்சொல்லப்பெறும் பகுதி மலைநாடு , ஓவியர் மலையமான திருமுடிக்காரியின் மலைநாடு ஆகும் . இது மருவி மலாடு என்று வழங்கப்பெற்றிருந்திருக்கிறது . நடுநாடு சங்ககாலத்தில் மாநாடு என்று இருநிலைப்பட்டதாக இருந்துள்ளது . மலாடுக்கு பெண்ணையம் படப்பை நாடு என்ற பெயரும் உண்டு . இம்மலைநாடு கள்ளக்குறிச்சி , திருக்கோயிலூர் , சங்கராபுரம் , விழுப்புரம் , .உளுந்தூர்ப்பேட்டை ஆகிய ஊர்களையம் , கல்வராயன் மலைகளையும் உள்ளடக்கியப் பகுதி என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர் . ( தமிழநம்பி வலைப்பூ ) இந்நாட்டினைச் கடைச் சங்க காலத்தில் ஆண்டவன் மலையமான் திருமுடிக்காரியாவான் .

 துஞ்சா முழவின் கோவற் கோமான் நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை , பெண்ணை அம் பேரியாற்..அகநானூறு , 35 . ( குடவாயிற் கீரத்தனார் பாடல் . ) 

கோவல் ( திருக்கோயிலூர் ) மன்னன் காரி . அவனது கோவலூருக்கு அருகில் ஓடுவது பெண்ணை ஆறு ( தென்பெண்ணை ) . காரி ஆண்ட மலை முள்ளூர் என்பதை பின்வரும் பாடல்கள் குறிப்பிடுகின்றன . ... "

 முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி ... அகநானூறு , 209 . 

... ஆரியர் துவன்றிய பேர்இசை முள்ளூர்ப்..வற்றிணை , 170 . ...

 பயன்கெழு முள்ளூர் மீமிசைப் ... புறநானூறு , 123 . ... 

பறை இசை அருவி முள்ளூர்ப் பொரு. .புறநானூறு , 

கி.பி. 1 முதல் கி.பி 150 வரை ஆண்ட சோழர்கள் : 1. நலங்கிள்ளி , நெடுங்கிள்ளி , மாவளத்தான் 2. கிள்ளிவளவன் 3.பெருநற்கிள்ளி 4. கோப் பெருஞ்சோழன் ஆகியோர் கள் ஆவார்கள் . ... 


கடற்படை அடல்கொண்டி மண்டுற்ற மறநோன்றாள் தண்சோழ நாட்டுப் பொருநன் அலங்குஉளை அணிஇவுளி நலங்கிள்ளி நசைப்பொருநரேம் . புறநானூறு , 382 - கோவூர் கிழார் .

 நி.டுதீ அல்லது சுடுதீ அறியாது ; இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன் , கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி ...

 உணவு சமைக்கும் தீயைத் தவிர பகைமன்னன் சுடும் தீயை அறியாத நாடு . உடலை வளர்க்கும் உணவு - மருந்து , பிணிபோக்கும் மருந்து என்னும் இரு மருந்தினையும் விளைவிக்கும் நாடு . இந்த நல்ல நாட்டின் அரசன் கிள்ளிவளவன் என்றும் . .

இன்னகை விறலியொடு மென்மெல இயலிச் 15 செல்வை ஆயின் , செல்வை ஆகுவை ; விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர் . புறம் .70 - கோவூர் கிழார் .


 பாதிரிப் பூவையும் சூடிக்கொண ்டிருக்கும் மகிழ்ச்சியில் திளைக்கும் உன் விறலியோடு சென்றால் விறகுவெட்டி பொன்முடிச்சு கிள்ளிவளவனிடம் பெற்றதனின் மேலான செல்வம் பெறலாம் என்றும் குறிப்பிடுகிறார் . 

பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக் கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே புறம் 373 - கோவூர் கிழார் . 


அரசன் பிட்டை கருவூரில் இருந்துகொண்டு கொங்கு நாட்டை ஆண்டுவந்தான் . அவனைத் துன்புறச் செய்து ஓட்டிவிட்டுக் கிள்ளிவளவன் கொங்கு நாட்டைத் தனதாக்கிக்கொண்டான் . இப்படி வெற்றி கண்ட வேந்தே ! என்று பாடுகிறார் . 

கி.பி. 150 சேரன் செங்குட்டுவன் கொங்கு நாட்டை ஆண்ட பேரரசன் . இவனது ஆட்சிக்காலம் -205.இவனைச்சிலம்பில் இளங்கோவடிகள் கொல்லியாண்ட குடவர்கோ என்று கூறிக் காப்பியத்தை நிறைவு செய்கின்றார் . தொல்காப்பிய உரையில் பொருளதிகாரம் 30 இல் பின்வருமாறு கூறுகின்றார் . " ...


 மண்டில மாக்களுள் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப்பிடவூரும் அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும் 


மன்னர் மலையமான் திருமுடிகாரி , சேர மன்னர் பெருஞ்சேரல் இரும்பொறையின் துணை கொண்டு மன்னர் வல்வில் ஓரி மீது படையெடுத்துச் சென்று போரில் வல்வில் ஓரியை கொன்று அந்த நாட்டை தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார் . 

மலையமானின் வளர்ச்சி கண்டு கிள்ளிவளவன் அவர் மீது போர் தொடுத்து சென்றார் . மன்னர் கிள்ளிவளவன் போரில் மலையமான் திருமுடிகாரியை கொன்று அவரது இரு மகன்களையும் சிறைப்பிடித்தார் . மலையமானின் மகன்களை யானை ஏற்றி கொல்ல உத்தரவும் இட்டார் . மன்னர் உத்தரவை அறிந்த புலவர் கோவூர் கிழார் மன்னர் கிள்ளிவளவனிடம் சென்று மலையமானின் மகன்களின் உயிருக்காக மன்றாடி அவர்களை விடுதலை செய்தார் என்று புறநானூறு .46 குறிப்பிடுகிறது .


 சங்ககால பாண்டிய மன்னருள் ஒருவர் பழையன் மாறன் . இவர் கூடல் எனப்பட்ட மதுரையில் இருந்துகொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்தார் . கிள்ளிவளவன் பாண்டிய நாட்டின் தலைநகர் கூடல் மீது படையேடுத்து சென்றார் . இந்த போரில் கிள்ளிவளவன் தோற்றார் . ...


 இழை அணி யானைப் பழையன் மாறன் , மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் , வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த கிள்ளி வளவன் நல் அமர் சாஅய் , கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி , ஏதில் மன்னர் ஊர் கொள , கோதை மார்பன் உவகையின் பெரிதே .. " . ( அகநானூறு 346 ) - நக்கீரர் . 

#அருவாள்நாடு ( அருவாநாடு ) , அருவா - வடதலை என்று இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தது என்றும் , அருவா - வடதலை நாட்டைப் ' பவத்திரி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ' திரையன் ' என்னும் மன்னனும் , தொண்டை நாட்டை காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ' இளந்திரையன் என்னும் மன்னனும் சங்ககாலத்தில் ஆண்டுவந்தனர் என்றும் பெரும்பாணாற்றுப்படை , கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவரால் குறிப்பிடப்பட்டுள்ளது

 . வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை , ... அகநானூறு , 85 . ( காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் பாடல் கி.மு. காலத்துப் பாடல் ) 


..கடிந்த அறம் புரி செங்கோல் பல்வேல் திரையன் பெரும்பாணாற்றுப்படை 37 , 



செல்லா நல்லிசை பொலம்பூண் திரையன் பவத்திரி அன்ன நலம் .. நக்கீரர் பாடல் அகம் 340-6 '

 இளந்திரையன் ' என்பவன் சோழன் கிள்ளிவளவன் என்பவருக்கும் மணிபல்லவத்து நாகர் குலத்து அரசன் வளைவணன் , வாசமயிலை மகள் பீலிவளை என்பவருக்கும் பிறந்தவர் என்று மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரம் காப்பியங்கள் குறிப்பிடுகின்றன . 


வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் தன் மகள் பீலிவளை தான் பயந்த புனிற்று இளங் குழவியைத் தீவகம் பொருந்தி 29-010 , மணிமேகலை . 


.நாக நல்நாடு ஆள்வோன் தன்மகள் பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள் 180 ..


. நாகம்நீள் நகரொடு நாகநா டதனொடு போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் - சிலப்பதிகாரம் 1-21 


நாகர் நாட்டு மன்னன் வளைவணன் மகளாகிய பீலிவளை என்னும் இளவரசி நாக கன்னிகையை மணம் புரிந்தான் .


 ' கிழக்குத் தொடர்ச்சி மலையின் தெற்கே பல்லவர்களின் தொண்டைநாடு அமைந்திருந்துள்ளது . தென்பெண்ணை ஆறு ' அல்லது அதற்குத் தெற்கே பாயும் கெடிலம் ஆறு ' அல்லது வட வெள்ளாறு ( கெடிலம் ஆற்றுக்குத் தெற்காக , சிதம்பரத்திற்கு வடக்கில் ஓடும் ஆறு ) , ஆகிய ஆறுகளில் ஒன்று ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்லவ நாட்டையும் சோழ நாட்டையும் பிரித்திருக்கிறது . அவ்வாறே சோழ நாட்டையும் பாண்டிய நாட்டையும் புதுக்கோட்டைக்குத் தெற்கில் பாயும் தென் வெள்ளாறு ' பிரித்துள்ளது 


. கி.மு .230 - கி.பி .225 - தமிழகத்தை மூவேந்தர்கள் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்த சங்க காலத்தில் , தமிழகத்திற்கு வடக்கே சாதவாகனப் பேரரசர்களின் ஆட்சி நடந்து வந்தது .


 கிபி . 300 -600 காலப்பகுதி சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது . கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாடு அயலார் ஆட்சிக்குட்பட்டது . சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது . நடு நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட்சிக்குட்பட்டன . களப்பிரர் பாளி மொழியையும் பல்லவர் பிராகிருத மொழியையும் ஆதரித்தனர் . இவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி , தமிழ்க் கலைகள் , தமிழ்ப் பண்பாடு என்பன வளர்ச்சி குன்றின . தமிழ் மொழியில் பெருமளவிலும் சிறப்பான முறையிலும் நூல்கள் தோன்றவில்லை . எனவே தமிழ் இலக்கிய வரலாற்றிலே இக்காலப் பகுதியினை " சங்கம் மருவிய காலம் " அல்லது குறிப்பிடுவர் .

 " இருண்ட காலம் " எனக் இருண்ட இக்காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றின . பதினெண்கீழக்கணக்கு நூல்கள் , சிலப்பதிகாரம் , மணிமேகலை ஆகியன இக்காலகட்டத்தில் எழுந்தனவெனக் கூறுவர் . 



கி.பி. 275 கி.பி. 897 காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இளந்திரையனுக்கு பின் தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் சோழர்களின் வழிவந்தவர்களாயினும் மணிபல்லவ நாகர்களாக தங்களை பல்லவர்கள் என்று குறிக்கப்பட்டு ஆண்டு வந்ததாகத் தெரிகிறது . 

" .... பாம்புடைப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகர மதுவே ... " ( 2 ஆம் பத்து 9 ஆம் திருமொழி .5 ) .

 காஞ்சிபுரத்து பரமேச்சுர விண்ணகரத்தை பாடும்போது திருமங்கையாழ்வார் பாம்புகொடி உடைய பல்லவர் என்று குறிப்பிட்டுள்ளதிலுருந்து அறிந்துகொள்ள முடியும் . 


களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள் . இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 250 -கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது . 


பெரிய புராணத்தில் மூர்த்திநாயனார் காலத்தில் மதுரையில் வடுகக் கருநாடக வேந்தன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி அரசாண்டான் என்பது காணப்படுகிறது . அவன் களப்பிர அரசனாக இருத்தல் வேண்டும் என்பது . கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் கி.பி. 250 எனக் கொள்ளினும் , கடுங்கோன் களப்பிரரை விரட்டிப்பாண்டியர் அரசை நிலைநாட்டிய காலம் கி.பி 575 எனக் கொள்ளினும் , களப்பிரர் பாண்டியநாட்டைஏறக்குறைய 300 ஆண்டுகள் ஆண்டு வந்தனர் என்பது உறுதியாகிறது . 


சீவல்லபன் பல்லவர்களுடன் நடத்திய போர்கள் பலவனவாகும் . அவற்றுள் மூன்றாம் நந்திவர்மனுடன் முதலாம் தெள்ளாற்றுப் போர் , குடமூக்குப் போர் . நிருபதுங்கவர்மனுடன் அரிசிற்கரைப் போர் என்பன சிறப்புடைய போர்களாகும் . கி.பி .836 ஆம் ஆண்டளவில் மூன்றாம் நந்திவர்மனுடன் சீவல்லபன் போரிட்டு தொண்டை மண்டலத்தின் தென்பகுதியினைக் கைப்பற்றினான் . மூன்றாம் நந்திவர்மன் மீண்டும் போரிட்டு சீவல்லபனை வென்றான் என " தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் " கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது .

 கி.பி. 846-880 விஜயாலய சோழனுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர் . இவர்களில் , முதலாம் இராஜராஜ சோழனும் , அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும் , இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர் . 


கி.பி.880-907 , ஆதித்தசோழன் தஞ்சையில் முடிசூடிக்கொண்டான் . கொங்கு நாட்டு ஆட்சியை மேற்கொண்டிருந்தான் . கொங்கு நாட்டைப் பாண்டியனிடமிருந்து மீட்டான் . திருப்புறம்பியம் போர் ( Battle of Sri Purambiyam ) , கொள்ளிடத்தின் கரையில் உள்ள திருப்புறம்பியம் என்ற இடத்தில் பல்லவன் அபராசிதவர்மனுக்கும் , பாண்டியன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி .885 இல் நடந்தது . இதில் ஆதித்த சோழன் , கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தனர் . பாண்டியன் தோற்றான் . கங்க மன்னன் பிருதிவிபதி இறந்தான் . அபராசிதவர்ம பல்லவன் வென்றான் . எனினும் ஆதித்த சோழனுக்கே பெரும்பயன் கிடைத்தது . சோழநாடு முழுவதையும் அவன் மீட்டுக் கொண்டான் . இவ்வாறு இளந்திரையன் என்னும் ஆதொண்டை சோழ -நாகர் வம்சம் தொடங்கி அபராசிதவர்மன் பல்லவன் வரையில் தமிழ்நாட்டில் பல்லவர்கள் ஆட்சி நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகிறது . 


சங்க காலத்து சோழர்களின் தலைச்சிறந்தவனாக போற்றப்படும் கரிகால் பெருவளத்தான் ஆண்டுள்ள காலமான கி.மு.முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே நூறு ஆண்டுகள் தொண்டை மண்டலம் என்று குறிப்பிடப்படும் அருவாளர் நாட்டின் பூர்வ குடிகள் குறும்பர் என்பது மேற்காணும் இலக்கிய சான்றுகளின் மூலம் தெரியவருகிறது .

 பல #குறும்பர்கள் தங்களின் பூர்வீகமான தொண்டை மண்டலத்திலிருந்து கிழக்கு மலைத்தொடர் பகுதிகளிலும் மேற்கு மலைத்தொடரான நீலகிரி , வயநாடு மற்றும் அருகாமையிலுள்ள மைசூர் ஆகிய பகுதிகளுக்கு சிதறியுள்ளனர் என்பது தெளிவாகிறது .

 இதற்குசான்றாக , நடுநாடு என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் , கல்வராயன்மலை வட்டம் , தெற்கு கல்வராயன் கல்வராயன்மலை முனையிலிருந்து மலைகளில் ஊராட்சி ஒன்றியத்தில் சவ்வாது 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜாகிர்தாரர்களாக நிலத்தை அனுபவிக்கும் உரிமை #குறும்பருக்கும் வழங்கப்பட்டுள்ளது . மலையின் ஆதாரம் : Thurston Castes and Tribes of Southern India , Vol.IX -page 401 . எனவே , மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் குறும்பர் என்ற தொல்குடியை ஆங்கிலத்தில் குறுமன்ஸ் ( KURUMANS ) என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்துள்ளது என்பதை புரிந்துக்கொண்டு இதனால் ஏற்பட்டுள்ள இடர்களை களைவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் .

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!