குறும்பர் பழங்குடி மக்கள் – மலைக்கும் அவர்கள் வைத்த பெயர்களும் அதன் அர்த்தங்களும்
தமிழகத்தின் மலை சார்ந்த பழங்குடி மக்களில் முக்கியமானவர் குறும்பர் இன மக்கள் இவர்கள் வாழ்வியலும், கலாச்சாரமும், நம்பிக்கைகளும், சுற்றியுள்ள மலைகளோடு ஆழமாக இணைந்திருக்கின்றன. ஒவ்வொரு மலையும், ஒவ்வொரு காடும், ஒவ்வொரு பாறையும் – இவர்கள் வாழ்வில் தனிப்பட்ட அர்த்தத்தையும், கதையையும், நினைவையும் தாங்கிக்கொண்டு நிற்கின்றன. இவர்கள் அந்த மலைகளுக்குக் கொடுத்த பெயர்களும், அதனுடன் சேர்ந்துள்ள விளக்கங்களும் பின்வருமாறு: ⛰️ மலைகளின் பெயர்களும் அர்த்தங்களும் 1. எத்துநோர(ஒற) ஏர்உழுதலுக்குப் பயன்படுத்தப்படும் காளை மாடுகள் உழவு முடித்து அந்த மலையில்தான் சென்று தங்கி உணவு உண்ணும். இரவு முழுவதும் காளைகள் அங்கேயே உறங்குவதால் அந்த மலை எத்துநோர(ஒற) என அழைக்கப்பட்டது. 2. மக்கிறி கொபே முங்கில் நிறைந்த காடு. இங்கிருந்து முங்கிலால் கூடை, மொரம் போன்ற பயன்பாட்டு பொருட்கள் எடுக்கப்பட்டன. 3. குறி மந்தை பெட்ட குறி ஆடு, மாடு மந்தை இடும் இடம். 4. சுன்றே ஒட்டு முள் நிறைந்த கரடு காடு. 5. தொட்டு பெட்ட பெரிய மலை. 6. அல்லுகு அசர பெட்ட பள்ளத்துக்கு அப்பால் அமைந்த மலை. 7....