சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமம் குரும்பனூரில் வசிக்கும் குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் தாய் கிராமமும் ஒசோடப்பன் சுவாமி காட்டு கோவிலும்...


சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமம் குரும்பனூரில் வசிக்கும் குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் தாய் கிராமமும் ஒசோடப்பன் சுவாமி காட்டு கோவிலும்...

இன்று குரும்பனூரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குருமன்ஸ் பழங்குடி மக்கள் தாய் கிராமமும் பெரியதண்டா இருந்து 7 கி.மீ., தூரமுள்ள வனப்பகுதியில் ஒசோடப்பன் கோயில் அமைந்துள்ளது இடம் ஆகும் குருமன்ஸ் இன பழங்குடி மக்கள் பல ஆண்டு காலம் அங்கு வாழ்ந்து வந்தது உள்ளனர் இதற்க்கு ஆதாரமாக இங்கு வாழ்ந்து வந்ததற்கான வீடு மற்றும் விவசாயம் செய்த காடுகள் இன்றளவும் காணப்படுகின்றன இங்கு பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கல் காணப்படுகின்றது அதனை குருமன்ஸ் இன மக்கள் குறும்பன் குரும்பாச்சி என்று அழைத்து வருகின்றனர் அதுமட்டுமின்றி காவல் வீரன் நடுகல்லும் அதில் வீரன் ஒருவன் ஈட்டியை ஏந்திய நிலையிலும் அருகில் நாய் நிற்பது போன்ற நடுக்கல்லும் அமையப்பெற்றுள்ளது அதனை சுற்றி உள்ள பகுதியில் சிதிலமடைந்த நிலையில் கோயில்களும் காணப்படுகின்றன அதுமட்டுமின்றி இங்கு பல நடுகற்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன இதனை தமிழகம் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ளும் பட்சத்தில் பல குருமன் பழங்குடி பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறும் என்று நம்புகிறோம்...


மேட்டூர் தாலுகா, கொளத்தூர் ஒன்றியத்தில் குரும்பனூர் கிராமம் உள்ளது. கிராமத்தில் குருமன்ஸ் பழங்குடி இனத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கொளத்தூர் அடுத்த பெரியதண்டா கிராமத்தில் இருந்து 7 கி.மீ., தூரமுள்ள வனப்பகுதியில் ஒசோடப்பன் கோயில் உள்ளது.


ஐந்து அல்லது ஆறு ஆண்டுக்கு ஒரு முறை குரும்பனூரை சேர்ந்த குருமன்ஸ் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் ஒசோடப்பன் கோயில் பண்டிகையை சிறப்பாக நடத்துவர். அன்றைய தினம் கிடா வெட்டுவதாக வேண்டி கொண்ட குடும்பத்தினர் ஆட்டு கிடாவை கோயில் விழா குழுவினர் வசம் ஒப்படைத்து விடுவார்கள்.நேர்த்தி கடனாக கொடுக்கப்பட்ட கிடாக்களை மொத்தமாக வெட்டி, சமையல் செய்து பண்டிகைக்கு வந்துள்ள அனைத்து பக்தர்களுக்கும் விழா குழுவினர் வழங்குவர். கோயிலுக்கு நேர்த்தி கடன் செலுத்தியவர்கள் ஆடுகளை தனியாக எடுத்து சென்று வெட்டி கறியை சமைத்து சாப்பிடக்கூடாது. மீதமான கறியை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்பது ஐதீகம்.

அடர்ந்த வனப்பகுதியில் ஒரே இரவில் 1000 ஆடுகளுக்கு மேல் வெட்டி கறி சமைத்து, காலையில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள், அதே பகுதியில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவர். அத்துடன் பண்டிகை நிறைவடைந்து விடும்...

குரும்பனூரை சேர்ந்த ஊர் கவுண்டர் காடப்பா கூறியதாவது:ஒசோடப்பன் கோயில் பண்டிகை நடத்துவதற்காக எங்கள் கிராமத்தில் உள்ள குலதெய்வத்திடம் வாக்கு கேட்போம். குலதெய்வம் வாக்கு கொடுத்த பின்பே ஒவ்வொரு முறையும் பண்டிகை நடத்துவோம் என்றார்...



Comments

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!