குறுமன்ஸ் பழங்குடி மக்களின் #வாழ்வியல் சடங்கு...#அம்புலி செட்டி ( சட்டி ) வைத்தல் :

#குறுமன்ஸ் பழங்குடி மக்களின் #வாழ்வியல் சடங்கு...

#அம்புலி செட்டி ( சட்டி ) வைத்தல் :

 அம்புலி செட்டி என்பது புதிய பானை வாங்கி அதற்கு ஆட்டின் ரோமத்தில் செய்த கம்பளியாலான கறுப்பு வெள்ளை நூலில் இரும்பு துண்டு , மஞ்சள் கொம்பு , மா இலை சுற்றிப் பண்டாரம் ( மஞ்சள் ) வைத்துப் பொட்டுவைக்க வேண்டும் . அம்புலி செட்டி தயாரானவுடன் நடுவீட்டில் மணலைக் கொட்டி , பானையை அதில் வைத்து அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும் . பின்பு மாங்கொத்தை அதன் மீது வைத்து , திருமணப் புடவை , திருமண வேஷ்டி ஆகியவற்றை வைக்க வேண்டும் . மேலும் புது மொந்தை , புது தீபகலசம் , பண்டாரகலசம் மற்றும் சாந்துப்பொட்டு , சீப்பு வைத்து அலங்காரம் செய்து வைக்க வேண்டும் . ஒரு போனம் செய்து ஓணான் இலை மீது வைக்க வேண்டும் . 11 போனம் இனிப்புகள் , பணியாரம் , 11 வாழைப்பழம் வைக்க வேண்டும் . 11 ஜதை வெற்றிலைப்பாக்கு வைக்க வேண்டும், 

     இக்கோலங்கள் அம்புலிசெட்டி வைக்கும் இடத்தில் சுவற்றில் " கெம்மண்ணு ” ( செம்மண்ணு )கொண்டு வரையப்படுவது . இதற்கு  பண்ணபராது என்று பெயர் . இது பழங்காலம் தொட்டே குருமன்ஸ்பழங்குடியினரிடம் தொடர்ந்து வருகிறது . இதில் ஆண் பண்ண , பெண் பண்ண என்று இருபிரிவுகள் உண்டு . மணமகன் நடுவீட்டில் அம்புலி செட்டி வைக்கும் இடத்தில் ஆண்பண்ணையும் மணமகளுக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் வாசலில் இருபுறமும் பெண் பண்ணையும் வரையப்படும் . மேலும் கம்பளி நூல் கறுப்பு மற்றும் வெள்ளை நூலில் 11 மாவிலைக் கொண்டு தோரணம் கட்டப்படும் . இதேப்போன்று மணமகள் வீட்டில் அம்புலி செட்டி வைக்கும் இடத்தில் பெண் பண்ணயும் மணமகனுக்கு வரவேற்புக் கொடுக்கும் வகையில் வாசலின் இருபுறமும் ஆண்பண்ணையும் வரையப்படும் . மாவிலை தோரணமும் மேற்கூறியது போல் கட்டப்படும் .

Comments

  1. இது உன்மை தான் சூப்பர்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!