Posts

கொங்கு மண்டலத்தை ஆண்ட குறும்பர் ராஜாக்கள்: மண்கோட்டைகளும் 24 நாடுகளின் மறையாத வரலாறும்!

Image
கொங்கு மண்டலத்தை ஆண்ட குறும்பர் ராஜாக்கள்: மண்கோட்டைகளும் 24 நாடுகளின் மறையாத வரலாறும்! தமிழக வரலாற்றில் கொங்கு மண்டலம் (கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி) தனித்துவமான வீர மரபைக் கொண்டது. சங்க காலத்திற்குப் பிறகு, சோழர்களின் ஆதிக்கம் நிலைபெறுவதற்கு முன்பாக, இப்பகுதியைத் தன்னாட்சி அதிகாரத்துடன் ஆண்டவர்கள் குறும்பர் ராஜாக்கள். இவர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் 'கொங்கு தேச ராஜாக்கள் சரித்திரம்', 'கொங்கு மண்டலச் சதகம்' மற்றும் வாய்மொழி நாட்டுப்புறப் பாடல்களில் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன. ​1. கொங்கு நாட்டின் எல்லைகளும் குறும்பர் மதிலும் கொங்கு மண்டலத்தின் எல்லைகளை வரையறுக்கும் பழம்பாடல் ஒன்று, அதன் கிழக்கு எல்லையாகக் குறும்பர்களின் கோட்டையையே குறிப்பிடுகிறது: > "வடக்குத் தலைமலை வைகாவூர் தெற்கு" > "குடக்குப் பொருப்புவெள்ளி குன்று - கிழக்குக்" > "குறும்பர் மதில்மதிற்கரை யென்பர் கொங்கு" > "விரும்புமண்ட லத்தின் விரிவு." >  பொருள்: வடக்கு எல்லையாகத் தலைமலையும், தெற்கே வைகாவூரும...

குறும்பர் ராஜாக்கள் – ஒருங்கிணைந்த வீரப் பாடல் தொகுப்பு (கொங்கு மண்டலம்)

குறும்பர் ராஜாக்கள் – ஒருங்கிணைந்த வீரப் பாடல் தொகுப்பு (கொங்கு மண்டலம்) மண்கோட்டை கட்டி மதிற்கரை யெல்லை மதிக்கரிய திண்கோட்டை கொண்ட குறும்பர் தமைவென்று தென்கொங்கு எலாம் தண்கோட்டு வேழக் கரிகால சோழன் தனிஅரசு விண்கோட்டு உயர்த்த புகழுடைத் தாகும் இவ்வான்மண்டலமே. முப்பத்து இரண்டு தருமமும் செய்தே இருபத்து நாலு நாடும் – எழில் குறும்பர் வசமே இருந்தது; ஊர்தோறும் மண்கோட்டை கட்டி மகிழ்ந்து ஆண்டார் – அங்கு கொற்றக்குடை நிழலில் வாழ்ந்திருந்தார். பந்தீசர் கோயிலைப் பழுதறப் புதுக்கியே நலம்பொங்கக் காணியுடைய நற்குறும்பர் – அன்புடனே செம்பொன் சிலம்பூர்ச் சிவனடியார் போற்றிட தருமம் தழைக்கச் செய்தார் மகிழ்ந்து. வெள்ளி மலைச் சாரலிலே – எங்க வில்லெடுத்தக் குறும்பரெல்லாம் மண்கோட்டை கட்டி ஆண்டார் – அந்த மண்ணுக்கே மகுடம் வைத்தார்! இருபத்து நாலு நாடும் – அந்த இருப்புக்கோட்டை குறும்பர் வசம்! யானைப் படை வந்து முட்ட – அந்த மண் சுவரு உடையவில்லை! மதயானை கொம்பு ஒடிய – எங்கள் மண்கோட்டை மதில் நின்றது! வில்லெடுத்து குறி வைத்தால் – எதிரி உயிர் தப்பிப் போவதில்லை! ஆடு மேய்க்கும் கோலெடுத்து – அவர்கள் அரசாண்ட பரம்பரையடா! தர்மம் தழ...

குறும்பர் பழங்குடி மக்கள் – மலைக்கும் அவர்கள் வைத்த பெயர்களும் அதன் அர்த்தங்களும்

தமிழகத்தின் மலை சார்ந்த பழங்குடி மக்களில் முக்கியமானவர்  குறும்பர் இன மக்கள் இவர்கள் வாழ்வியலும், கலாச்சாரமும், நம்பிக்கைகளும், சுற்றியுள்ள மலைகளோடு ஆழமாக இணைந்திருக்கின்றன. ஒவ்வொரு மலையும், ஒவ்வொரு காடும், ஒவ்வொரு பாறையும் – இவர்கள் வாழ்வில் தனிப்பட்ட அர்த்தத்தையும், கதையையும், நினைவையும் தாங்கிக்கொண்டு நிற்கின்றன. இவர்கள் அந்த மலைகளுக்குக் கொடுத்த பெயர்களும், அதனுடன் சேர்ந்துள்ள விளக்கங்களும் பின்வருமாறு: ⛰️ மலைகளின் பெயர்களும் அர்த்தங்களும் 1.  எத்துநோர(ஒற) ஏர்உழுதலுக்குப் பயன்படுத்தப்படும் காளை மாடுகள் உழவு முடித்து அந்த மலையில்தான் சென்று தங்கி உணவு உண்ணும். இரவு முழுவதும் காளைகள் அங்கேயே உறங்குவதால் அந்த மலை  எத்துநோர(ஒற)  என அழைக்கப்பட்டது. 2.  மக்கிறி கொபே முங்கில் நிறைந்த காடு. இங்கிருந்து முங்கிலால் கூடை, மொரம் போன்ற பயன்பாட்டு பொருட்கள் எடுக்கப்பட்டன. 3.  குறி மந்தை பெட்ட குறி ஆடு, மாடு மந்தை இடும் இடம். 4.  சுன்றே ஒட்டு முள் நிறைந்த கரடு காடு. 5.  தொட்டு பெட்ட பெரிய மலை. 6.  அல்லுகு அசர பெட்ட பள்ளத்துக்கு அப்பால் அமைந்த மலை. 7....

குறும்பர்களிடம் இருந்து தப்பி காட்டிற்குள் புகுந்த பண்டைகால காஞ்சியின் மன்னர் தொண்டைமான் இளந்திரையன், ரோமசர் என்ற சித்தரிடமிருந்து அண்டவியல் உபதேசம் பெற்றதாக ரோமசர் பற்றிய நூல்கள் கூறுகின்றன.

Image
குறும்பர்களிடம் இருந்து தப்பி காட்டிற்குள் புகுந்த பண்டைகால காஞ்சியின் மன்னர் தொண்டைமான் இளந்திரையன், ரோமசர் என்ற சித்தரிடமிருந்து அண்டவியல் உபதேசம் பெற்றதாக ரோமசர் பற்றிய நூல்கள் கூறுகின்றன. இந்த உபதேசத்தில் அவர் பூமியின் வயது, சூர்ய குடும்ப தோற்ற மறைவு, அண்டத்தின் வயது ஆயுள், அண்டவியல் அலகுகள் போன்றவற்றை குறிப்பிடுகிறார். மேலும் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போதும் தன் உடலில் இருந்து ஒரு முடி உதிர்வதாகவும், தற்போது அவர் 71 பிரம்மாக்களை பார்த்துள்ளதால் 71 முடிகள் உதிர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார். பூமியின் வயது பூமியின் வயதை கணக்கிட 432ஐ 10 லட்சத்தால் பெருக்க வேண்டும் என்கிறார். அதாவது பூமியின் வயது 432 கோடியே 10 லட்சம் ஆண்டுகள் என்கிறார். விஞ்ஞானம் இன்றைய விஞ்ஞானம் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என கணிக்கிறது. சூர்ய குடும்ப ஆயுள் பிரம்மாவின் ஒரு நாளே சூர்ய குடும்ப ஆயுள் என்கிறார். அதாவது சூர்ய குடும்ப ஆயுள் 864 கோடி ஆண்டுகள் என்கிறார். பிரம்மாவின் ஒரு நாள் முடியும் போது 14 லோகங்களில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டுமே அழியும் என்றும், மற்ற 11 லோகங்கள் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போது ...

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூர் அருகாமையில் இருக்கும் குறும்பனூர் குறுமன்ஸ் பழங்குடி மக்களின் வழிபாட்டில் இருக்கும் ஐம்பொன் சிலைகள்...

Image
அகநானுற்றுப் பாடல் “அருங்குறும்பு எறிந்த ஆற்றலோடு” (அகம் : 342) என்றும், மற்றொரு அகப்பாடலில் “ஓம்பினார் கவர்ந்து கூழ்கெழு குறும்பில்”(அகம் :113) என்றும், அகப்பாடல் 31 இல் “கல்லுடைக் குறும்பின் வயவர் விழ்இய” எனவும் குறும்பர் பற்றிய செய்திகள் பயின்றுவருகின்றன. சங்கஇலக்கிய நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை ”வில்லை உடைய வீடுகள் நிறைந்த குறும்பு” (பாடல் வரி; : 121-124) என்று குறிப்பிடுகின்றது. சீவக சிந்தாமணியில் “கொண்டேரு குறும்பர் வெம்போர்” என்று சுட்டுகின்றது. மேலும் பெருங்கதையில் “குறும்பருங் குழிஇய” என்று குறும்பர்களைப் குறிப்பிடுகின்றது.

படைவீட்டை ஆண்ட குறும்ப அரசை பற்றி

Image
படைவீட்டை ஆண்ட குறும்ப அரசை பற்றி  North Arcot Manual -1894 : ------------------------------------------------------------------------ "#படைவீடு : இந்த பாழடைந்த நகரம் மாவட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.  இது தற்போது 654 மக்களைக் கொண்டுள்ளது என்றாலும், இது ஒரு அரச வம்சத்தின் தலைநகரம் என்று பாரம்பரியம் கூறுகிறது, இது பல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தியது. இது #குறும்பர் அரசையே குறிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. நகரம் 16மைல் சுற்றளவில் இருந்தது, மேலும் கோவில்கள், மண்டபங்கள் மற்றும் சிறந்த பொதுமக்கள் குடியிருப்புகள் நிறைந்திருந்தது. சாந்தவாசலின் தற்போதைய கிராமங்கள் மற்றும் அங்கு கண்காட்சி அல்லது சந்தைகள் நடத்தப்பட்டிருப்பதன் மூலமும் பூக்கடை சந்தை நடைப்பெறும் இடமான புஷ்பகிரி 4 மைல் இடைவெளியில் இருப்பதையும் கொண்டு நகரத்தின் அளவை மதிப்பிடலாம்.  இந்த நகரம் தூசி மற்றும் கற்கள் மாரியாக பொழிந்து மூழ்கடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது, இது அதன் அற்புதமான க...

#அருவாளர் நாடு ( #குறும்பர் நாடு )

Image
#அருவாளர் நாடு ( #குறும்பர் நாடு )   சங்க காலத்திற்கு முன் தமிழ் கூறும் நல்லுலகத்தில் 12 நாடுகள் செந்தமிழ் நிலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . இதை தொல்காப்பியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது .  • செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் ... "  • தம் குறிப்பினவே ... "  ( -திசைச்சொல் - கிளவி (தொல்காப்பியம் , சொல்லதிகாரம் 400 ) .  தொல்காப்பியத்தில் செந்தமிழ்நிலம் என்று பாண்டிய நாட்டையோ சோழ நாட்டையோ தொண்டை நாட்டையோ தனித்தனியாகக் குறித்துக்காட்டவில்லை . தொல்காப்பியத்தில் தமிழ்நாடானது பலபகுதிகளை உள்ளடக்கியதாகக் கூறப்பட்டுள்ளது . அவைகள் அனைத்தும் தமிழ்நிலமாக இருந்துள்ளது .  அது பரந்து விரிந்த நிலையில் இருந்துள்ளது .   தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் செந்தமிழ்நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டாகும் நாடு. அந்நாட்டகத்து பொருள்விளங்குமாறு இவர் திசைச்சொற்களை வட்டார வழக்குச் சொற்கள் எனப்படும் என்கிறார் . வழங்கும்சொல் திசைச்சொல் மக்களுக்கு மட்டுமே எனப்படும் என்கிறார் .  இதன்படி #குறும்பா , #குறும்பர் , #குறும்பன் , #குறுமன் என்பவைகள் வட்டா...