குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை


குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை
நாம் யார்?
நம் குறும்பர் சமுதாயம்(Palangudi Makkal Kurumban) எத்தனை வரலாற்று சிறப்பு மிக்கது?
நம் முன்னோர்கள் எத்தகைய சிறப்புமிக்கவர்கள்?
இவ்வாறு பல கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியாமல், நமது சமுதாயத்தின் முகவரியை தொலைத்து, நம் மதிப்பும், மரியாதையும், கௌரவமும் மறைக்கப்பட்டு, நமக்கே நம்மை தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால், நம் சந்ததியினரும் நம் குலபெருமையும், நம் நீண்டகால வரலாற்று சிறப்புமிக்க நம் குறும்பர்(Palangudi Makkal Kurumbar) சமுதாயத்தை அடையாளம் காண முடியாமல், ஒதுக்கப்பட்டு, சிதைந்துபோகும்  காலம் தூரம் இல்லை.
 "குரு" என்றால் அறிவு வழிகாட்டி அல்லது அறிவு வெளிச்சம் என்றும், "பா" என்றால் உலகம் என்றும், ஆக குருபா என்றால் உலகத்திற்கு அறிவு வெளிச்சத்தை கொடுப்பவர்கள், ராஜ தந்திரங்களை கையாள்பவர்கள், மந்திரி பதவிகளை வகிப்பவர்கள் என்று பொருள்படும்.
நம் சமுதாயம் ஆடு, மாடு (பண்டங்கள்) மேய்க்கும் பணியை மட்டுமே செய்து வந்திருக்கிறோம், வேறு எந்த தொழிலுக்கும் உகந்தவர்கள் அல்ல என்று தவறாக புனையப்பட்டிருப்பதை அறிந்து நாம் நம் மனதோடு நொந்து  போயிருந்தாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை. 
உண்மையை உணர்ந்துக்கொள்ள சற்றே வரலாற்றை புரட்டி பார்ப்போம். குறும்பர்(Palangudi Makkal Kurumans) சமுதாயம் ஒரு தொன்மை வாய்ந்த, வீரம் செறிந்த, ஆன்மிகம் செழித்த ஒரு பழமை வாய்ந்த பெருமைமிகு இனமாகும்.
மகாபாரதம் காலம் தொட்டு இன்று வரை, கலாசாரம், பண்பாடு, கலை, இலக்கியம், அன்பு, குடும்ப அமைப்பு போன்ற அனைத்து துறைகளிலும் குலப்பெருமையை எந்த ஒரு தெளிவான அடிப்படையும் இன்றி, இன்றுவரை பின்பற்றி வருகிறோம் என்றால், நம் ரத்தத்தில் கூட நம் வீரமும் பண்பாடும் கலந்திருப்பதை உணர முடிகிறது.
புழல் கோட்டை மன்னர்-
கோமான்ட குறும்பாபிரபு,
மலபார்நாடு அரசர்-
ராஜாவீரவர்மா,
கல்வராயன்மலை அரசர்
குறும்பாகவுண்டன், 
வயநாடு பூதாடி கோட்டை
அரசர் - வேடராஜா,
சத்திய வேடு
கோட்டைமன்னர் காடுப்பட்டி-போரையன் (என்ற)
குறும்பராதித்தியன்,
இளவரசி
போற்றிநங்கை, 
கோட்டை கட்டி ஆண்டவர்கள் குறும்பர்கள்:
தொண்டைமண்டலத்தை 24 பிரிவாக பிரித்து கோட்டை கட்டி ஆண்டு ஆதொண்ட சோழனை ஐ புறமுதுகுயிட்டு ஓட செய்த குறும்பர் மாமன்னர் வணான், ஒணான், காந்தன், வீர தாய் கெப்பி ஆகியவர்கள்,
செஞ்சி கோட்டையை ஆண்ட அரசன்:
செஞ்சி கோட்டையை அரண் அமைத்து ஆண்ட கோமன் கோட்டைலிங்காகுறும்பன்,
குறும்பர் இளவரசன்:
மனதைக் கவர்ந்த இளவரசியை மணம் முடிப்பதற்காக ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமியைப் போன்று சிலை வடித்து திருமாலுக்கு கோயில் கட்டிய இடம்தான் திருவதிகை. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது திருவதிகை. ஆக்கோவிலை கட்டியது குறும்பர்களின் அரசன்  குறும்பர்களின் கோட்டை இன்று மண்மேடாக உள்ளது.
குறும்பர்(Kurumans) இன மாவீரன்:
பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தின் பழமையான பெயர் ஆமையூர் என்கிற ஆமூர் ஆகும். வடமொழியில் கூர்மபுரி என்றழைக்கப்பட்டது.  இவ்வூரில் குறும்பர் என்னும் பண்டைக்கால வீரமிக்க குலம் வாழ்ந்து வந்தது. ஆம்பூரில் இவர்கள் கட்டிய கோட்டை பகைவர்கள் நெருங்க அஞ்சும் அளவிற்கு  வலிமையானது. இன்று கோட்டையின் எஞ்சிய சிறுபகுதிகளை மட்டுமே காண முடிகிறது. குறும்பர் இன வீரன் ஒருவனின் நடுகல் காணப்படுகின்றது. இவன் மீது அம்புகள்  சரமாரியாக வீசப்பட்டு அவன் மார்பினைத் துளைத்தபொழுதும், சிறிதும் அயராமல் அவற்றைத் தாங்கிக் கொண்டு எதிரிகள் சிலரைத் தாக்கிய வண்ணமே வீர  சொர்க்கம் அடைந்துள்ளதால் ‘‘ஆண்மையூர்’’ என்றும் அழைக்கப்பட்டு ஆம்பூர் என்றானதாகவும் கூறுவர். 
குறும்பர்களின் சூரியன்:
குறும்பர்(Kurumban)இன மக்களுக்கு எல்லார்க்கும் சூரியனை போன்றவன் மாமன்னன் குறும்பராதித்தன்,
பெருமிழலைக் குறும்பர்:
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர் பெருமிழலைக் குறும்பர்,
குறும்பர்(Kurumbar)குடியில் தோன்றிய, சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்பர், பெருமிழலைக் குறும்பர். அவர் பிறந்து வாழ்ந்த ஊர் ‘மிழலை நாட்டு மிழலை’. பெருமிழலை பற்றிய பல தொல்பொருள் சான்றுகள் வெளிவந்துகொண்டுள்ளன.
தேவமலையின் அடிவாரத்தில் ஓர் குகை கோயில் உள்ளது; இங்கு குறும்ப நாயனார் உருவம் சிற்பமாக (குடைந்து) செதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஓர் சமாதியுமுள்ளது, இது குறும்ப நாயனாரின் சமாதி என வழிபாட்டு வருகிறார்கள் இன்றும் குறும்பர் இன பழங்குடி மக்கள்.
குறும்பர் இன மாவீரன் மொக்கையா:
"மொக்கையா என்ற வீரனின் நடுகல் "
நடுகல்லானது குல தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கின. அத்தகைய நினைவுக்கல் தான் மொக்கையா என்ற வீரனுக்கு ஏற்படுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் 1.5 km தொலை‌வி‌ல் உள்ள குறும்பர் கோட்டை என்ற இடத்தில் கி. பி 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மொக்கையா என்ற வீரன், தான் வளர்த்து வந்த ஆநிரை மந்தைகளை கவர்ந்து செல்ல வந்த கொள்ளையர்களிடம் இருந்து ஆநிரைகளை காப்பாற்ற தன் உயிரையும் பொறுட்படுத்தாமல் போராடி வீரமரணம் அடைந்த இடத்தில், வீரனின் நினைவாக ஏற்படுத்தப்பட்ட கல் பதுக்கையின் மேல் தற்போது கோயில் கட்டப்பட்டு வழிபட்டு வருகின்றனர் . கொள்ளையர்களால் கவர்ந்து சென்ற ஆடுகளின் நினைவாக 20 ற்கு மேற்பட்ட நடு கற்கள் வைக்கப்பட்டுள்ளது. நம் இன மக்களின் நடுகல் கோயில்களில் ஆடுகளுக்கு இங்கு மட்டுமே நடுகல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக பெல்காம் சித்தூர் சென்னம்மாவின் வீர தளபதியும் சுதந்திர போரட்ட வீரருமான  சங்கொலி ராயனா,  குரு ஸ்ரீ வித்யரண்யரின்   சீடர்களும்,  தென்னிந்தியாவின் எழுச்சிமிகு விஜயநகரப் பேரரசை தோற்றுவித்தவர்களுமான ஹரிஹரர் மற்றும் புக்கரர், ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சத்ரபதி சிவாஜியின் தாய் ஸ்ரீமதி ஜீஜாபாய், உலகப்புகழ் பெற்ற சாகுந்தலம் இயற்றிய காளிதாசர், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண பகவானை தரிசிக்க, கடவுளையே தன்பக்கம் திருப்பிய, ஆன்மீக கீர்த்தனைகளாலும், பாஜனைகளாலும் நாராயணின் அனுக்கிரகம் பெற்ற ஸ்ரீ கனகதாசர்: இவ்வாறு வீரத்திற்கும், விவேகத்திற்கும், ஆன்மீகத்திற்கும் எத்தனையோ உதாரண புருஷர்களை கொண்ட நம் சமுதாயம் மிக்க பெருமைக்குரியது என்பதில் வியப்பேதும் இல்லை.  எந்த ஒரு சமுதாயத்திற்கும் இல்லாத பல சிறப்புகள் நமக்கே உரியது என்பதில் கர்வம் கொள்வோம். மாறாக, நம்மை நாம் தாழ்த்தி, நம் மதிப்பை வீழ்த்தி உலகத்தில் அடையாளம் இல்லாமல் மறைந்து கிடக்கும் நம் சமுதாயத்தை தட்டி எழுப்பவம், நம்மினதவரை ஒன்று சேர்க்கவும், தொழில், வணிகம், கல்வி, அரசியலில் நாம் முக்கிய பங்காற்றவும்,
"நம் இளைய தலைமுறைக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்....."
நன்றி,
மு.மீனாட்சிசுந்தரம்

Comments

  1. சகோதரர் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு எனது அன்பான வணக்கம், நன்றியும்.
    தனது நேரங்களில் தன் இனத்திற்கான வரலாறுகளை தேடி அறிந்து அவற்றை வடிவமைத்து எழுதி உறவுகளுக்கு வெளிப்படுத்தி இருக்கக்கூடிய நற்பண்புகளை நான் வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.
    அருமை !
    உங்களது பணி மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சகோதரர் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு எனது மற்றொரு கருத்து.
    நாம் பல்லவ பேரரசின் வீழ்ச்சிக்கு காரணம் இந்த ஆரியர்களின் கூட்டமே என்பதை நாம் அறியப் படவேண்டும்.
    எப்படி என்றால் நாம் சமண மதத்தை பரப்பியது மட்டுமல்லாமல், அதை வழிபட்டும் வந்தோம்.
    இந்த ஆரியர்கள் வந்தபிறகுதான் சைவ வைணவர் என்று சொல்லி நான் வணங்கிய சமண மதத்தை அழித்தார்கள்.
    அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு மாதங்களுக்கு இடையில் சண்டைகளையும் மூடிவிட்டார்கள்.
    இதன் அடிப்படையில்தான் பல்லவப் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணம்இருந்து.
    இந்த சமயத்தில்தான் நம் வரலாற்று களை ஆரியர்கள் திருடி புராணக் கதைகளாக வடிவமைத்துக் கொண்டார்கள்.
    அந்த புராண கதைகள் எதுவென்றால் விஷ்ணுகிருஷ்ண அவதாரத்தில் பத்து அவதாரங்களும் பல்லவப் பேரரசர்களின் ஒரு வரலாறு .
    அந்த வரலாற்றில் பொறாமை, வஞ்சகம் , நயவஞ்சகம், துரோகம் இவற்றையெல்லாம் இணைத்து எழுதி வடிவமைக்கப்பட்டது தான் இந்த மகாபாரதம் மற்றும் ராமாயணம் .
    இந்த இரண்டு காவியங்களும் இல்லையென்றால் இந்தியாவில் குள்ள மனிதர்கள் அனைவரும் புனிதமானவர்கள் இருந்து இருப்பார்கள்
    உலகத்திலேயே தலைசிறந்த மனிதர்கள் இந்தியாவில் மட்டும்தான் இருந்திருப்பார்கள்.
    இதுதான் உண்மையான வரலாறு என நான் கருதுகிறேன.
    நம் வரலாறுகள் திருடப்பட்டு விட்டன.
    அழிக்கப்பட்டுவிட்டன.
    அந்த வரலாற்றை திருத்தி எழுதப்பட்டது.

    ReplyDelete
  3. குறும்பர் இன மக்களுக்கு இனம் மதம் என்ற சொல்லுக்கு

    ReplyDelete
  4. தென்மாவட்ட இடையர்களுடன் நீங்கள் கை கோர்க்க வேண்டும்....

    ReplyDelete
    Replies
    1. நாம் குரும்ப கவுண்டர் குருமனஸ் கிடையாது.

      Delete
  5. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரும்பா கவுண்டர் மக்கள் இங்கு வாழ்கின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எந்த இடத்தில் உள்ளனர்

      Delete
  6. government salukaikka kottai
    katti anda kurugounder gal
    kevalam kumpasaga matri kondargal

    ReplyDelete
    Replies
    1. kalaiselvi othakkalmamdapam

      Delete
    2. நண்பா குரும்பர் வேறு குரும்ப கவுண்டர் வேறு......குறும்பர் பலங்குடியினர்.... குரும்ப கவுண்டர் கவுண்டர் உட்பிரிவை சேர்ந்தவர்கள்..... சிலர் அரசியல் செய்ய நம்மை குழப்பி குறும்பர், குரும்ப கவுண்டர் ஒன்று என சொல்வார்கள்... அதனை நம்பாதிர்கள்........9750383469

      Delete
    3. Brother, Coimbatore, sulur, kalangal valubavargal kumba Gounder gala?

      Delete
  7. நண்பா குறும்பர் வேறு (பழங்குடியினர் ).... குரும்ப கவுண்டர் வேறு (கொங்கு வெள்ளாளர் உட்பிரிவு )....
    9750383469....

    ReplyDelete
    Replies
    1. Sulur kalangal village, irupavaragal kumba gounger ?

      Delete
    2. Naan Kurumba goundar thaan kongu vellalar utpirivu illai...... In proof my community certificate.....

      Delete
  8. அருமை அருமை அருமையான தகல் நன்றி வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அருமை அருமை அருமையான தகல் நன்றி வாழ்த்துகள்
    சூரியஜெயவேல்

    ReplyDelete
  10. பழங்குடி மக்களை இழிவு படுத்திய தமிழ் திரைப்படம்

    "A Home Away from Home" என்கிற திரைப்படம் "Amazon Prime" இல் வெளியாகி உள்ள நிலையில் அத்திரைப்படத்தில் குறும்பர் இன மக்களை மிகவும் இழிவு படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைக்கபட்டுள்ளன.... "குறும்பர்" இனத்தை சேர்ந்த ஒரு வாலிபன் வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு பெண்ணை கற்பழிக்கும் விதத்தில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன... மேலும் அப்பெண் அந்த வாலிபனை 'பழங்குடி மக்களே கோழைகள் தான்' என்று சொல்லும் வசனமும் இடம்பெற்று உள்ளன...

    இக்கதை எழுதிய உமா பாலு என்கிற ஐயர் பெண்மணி மேல் பழங்குடி உரிமை போராட்ட கழகம் உயர்நீதி மன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது...இதை கண்டித்து அப்பெண் எழுத்தாளர் மேல் தக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு ஒன்றையும் காவல்துறையிடம் சமர்ப்பித்து உள்ளது பழங்குடி உரிமை போராட்ட கழகம்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!