குறும்பர்களிடம் இருந்து தப்பி காட்டிற்குள் புகுந்த பண்டைகால காஞ்சியின் மன்னர் தொண்டைமான் இளந்திரையன், ரோமசர் என்ற சித்தரிடமிருந்து அண்டவியல் உபதேசம் பெற்றதாக ரோமசர் பற்றிய நூல்கள் கூறுகின்றன.

குறும்பர்களிடம் இருந்து தப்பி காட்டிற்குள் புகுந்த பண்டைகால காஞ்சியின் மன்னர் தொண்டைமான் இளந்திரையன், ரோமசர் என்ற சித்தரிடமிருந்து அண்டவியல் உபதேசம் பெற்றதாக ரோமசர் பற்றிய நூல்கள் கூறுகின்றன. இந்த உபதேசத்தில் அவர் பூமியின் வயது, சூர்ய குடும்ப தோற்ற மறைவு, அண்டத்தின் வயது ஆயுள், அண்டவியல் அலகுகள் போன்றவற்றை குறிப்பிடுகிறார். மேலும் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போதும் தன் உடலில் இருந்து ஒரு முடி உதிர்வதாகவும், தற்போது அவர் 71 பிரம்மாக்களை பார்த்துள்ளதால் 71 முடிகள் உதிர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

பூமியின் வயது பூமியின் வயதை கணக்கிட 432ஐ 10 லட்சத்தால் பெருக்க வேண்டும் என்கிறார். அதாவது பூமியின் வயது 432 கோடியே 10 லட்சம் ஆண்டுகள் என்கிறார். விஞ்ஞானம் இன்றைய விஞ்ஞானம் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என கணிக்கிறது.
சூர்ய குடும்ப ஆயுள் பிரம்மாவின் ஒரு நாளே சூர்ய குடும்ப ஆயுள் என்கிறார். அதாவது சூர்ய குடும்ப ஆயுள் 864 கோடி ஆண்டுகள் என்கிறார். பிரம்மாவின்
ஒரு நாள் முடியும் போது 14 லோகங்களில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டுமே அழியும் என்றும், மற்ற 11 லோகங்கள் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போது அழியும் என்கிறார்.
விஞ்ஞானம் இன்றைய விஞ்ஞானம் சூர்ய குடும்ப ஆயுள் 900 கோடி ஆண்டுகள் என கணிக்கிறது.

அண்டம் இந்த அண்டத்தின் வயது 155 லட்சத்தி 52 ஆயிரம் கோடி ஆண்டுகள் (பிரம்மாவின் 51ஆம் ஆண்டு துவக்கம்) என்கிறார். அதைப்போல் அண்டத்தின் ஆயுள் 311 லட்சத்தி 4 ஆயிரம் கோடி ஆண்டுகள் (பிரம்மாவின் ஆயுள்) என்கிறார். விஞ்ஞானம் இன்றைய விஞ்ஞானம் அண்டத்தின் வயது 1300 கோடி ஆண்டுகளுக்கு மேல் என கணிக்கிறது.

அகிலாண்டம் சூரபதுமன் (கந்த புராணம்) என்ற அவுன தேச அரக்கன், 1008 அண்டங்களை ஆளும் வரத்தை சிவனிடமிருந்து பெற்றதாக கூறுகிறார்.
விஞ்ஞானம் இன்றைய விஞ்ஞானம் இதை போன்ற பல்லண்டங்களை மல்டிவெர்சு (multiverse) என கூறுகிறது.

            

Comments

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

மருதநிலத்தின் மக்கள்