#அத்தியாயம் ஆரம்பம் 1 #தொல்குடி #குறும்பு #குறும்பர்

#அத்தியாயம் ஆரம்பம் 1

#தொல்குடி
#குறும்பு
#குறும்பர்

தொன்றுதொட்டு நீண்ட காலமாக ஒரே நிலப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருபவர்கள் பழங்குடிகள் எனப்படுகின்றனர். இவர்கள் தங்களுக்கென தனி மொழியும் குடும்ப, மற்றும் சமூக பழக்கவழக்கங்களும் கொண்டுள்ளனர், மேலும் அப்பகுதியில் உள்ள செடி, கொடி மரம், விலங்குகளை சார்ந்து தன்னிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இன்று ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஜப்பான், பசிபிக் தீவுகள், இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் பழங்குடி மக்கள் உள்ளனர். உலகிலேயே பழங்குடி மக்களின் எண்ணிக்கையில் ஆபிரிக்கா கண்டம் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 8% மேல் பழங்குடிகள் உள்ளனர்.

பழங்குடி பற்றி ஆய்வு நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. பொதுவாக இந்திய வரலாற்றிலும் குறிப்பாக தமிழ்நாடு வரலாற்றிலும் பழங்குடி பண்பாடு பெரும் செல்வாக்குப் பெற்று வந்துள்ளது.
1955 ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் ஆயிரம் பேருக்கு 54 பேர் பழங்குடிகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்று நாகரீக குடிகள் என்று கூறப்படுபவர்கள் கூட பழங்குடி பண்பாடு செல்வாக்கை பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

பழங்குடி மக்களிடையே இரத்த உறவுள்ள கூட்டத்தை குலக்குறி பெயரால் அழைக்கப்படுவது வழக்கம்.
சான்றுக்கு "பண்டைய சோழர்கள் கோழியர்"
என்று அழைக்கப்பெற்றனர்.
அவர்கள் தலைநகரமாக உறையூர் கோழி என்று அழைக்கப் பெற்றது என்பதை,

"சோழ நல் நாட்டுப் படினே, கோழி உயர்நிலை மாடத்து குறும்பறை"

என்று புறநானூற்றுப் பாடலில் அறியலாம்..

#குடி

குடி என்ற சொல் எல்லா திராவிட மொழிகளிலும் உள்ள சொல் "திராவிட மொழிகளில் அனைத்திலும் குடி என்பது ரத்த  உறவுள்ள மக்களின் கூட்டத்தை குறித்து வருகிறது". பிற்காலத்தில் குடி என்பது பல்வேறு  பொருட்களைத் தரத தொடங்கியது. சங்க இலக்கியத்தில் தொல்குடி என்ற சொல் பல இடங்களில் பயின்று வருகிறது. தொல்குடி என்பது ஆங்கிலத்தில் LINEAGE என்று பெயர்க்கப் பெறுகிறது. தற்காலத்தில் வம்சாவழி என்று கூறப்படுகிறது.
ஆனால் தொல்குடி, வம்சாவழி, LINEAGE,
ஆகிய சொற்கள் ஆட்சிசெய்த
குடிகளையே குறித்தது. தொல்குடி என்பதற்கு தற்காலத்தில் தொல்இனம், இனக்குழு, ஆதிவாசிகள், கிரிஜனங்கள் கிரி என்றால் மலை சாதியினர் என்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப் பெறுவதையும் பார்க்கிறோம். பழங்குடி என்பதற்கு   எத்தனையோ பொருள் மாற்றங்கள் ஏற்பட்டாலும் இவ்வியலில் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பெறும் தொல்குடி என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.

குடி என்பது கொதவ மொழியில் "க்விஸ்" என்று வழங்கப் பெறுகிறது அந்த மொழியில் அச்சொல்லுக்கு

"இரத்த உறவுள்ள கூட்டம்" என்று பொருள்
"எருமைப்பட்டி கன்றுகள், குடிவழியினர் என்ற பொருள்கள் கூறப்பெறுகிறது,"
வேதத்தில் கோத்ரா என்ற சொல் இரத்த உறவுள்ள குழு, மாட்டுக் கொட்டில் என்ற  பொருள்கள் உள்ளன"  "
தோதவ மொழி சொல்லும் வேதத்தில் பயின்று வரும் கோத்ரா என்ற சொல்லும் ஒரு பொருள் கருதியே பல சொற்கள் என்று கருதி, அவர்கள் குடி என்ற சொல்லும் கோத்ரா என்ற சொல்லும் கால்நடை வளர்ப்பு சமுதாயத்தில் உருவான சொல் என்று செனவே இரத்னே கூறுவர்.

#அகநானூற்றில்
#தொல்குடி
# குறும்பு
#குறும்பர்

#அண்டர்
#குறும்பர்

அண்டர் மகளிர் தண் தழை உடி இயர் (அகம் 59:5)

                   #மறைக்கப்பட்டஅத்தியாயம்தொடரும்......

ஓவியம் நன்றி ம.செ

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!