குறும்பர் கூனே (கக்க)வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் குறும்பர் இன பழங்குடி மக்களின் சேவை ஆட்டத்தின் மத்தியில் ஓய்வு பெறுவதற்காக எடுத்துக் கொள்ளும் பொழுது இறைவனை நோக்கி கூறும் மந்திரங்கள்


குறும்பர்(Kurumbar) கூனே (கக்க) என்று கூறப்படும் சேவை ஆட்டத்தின் மத்தியில் ஓய்வு பெறுவதற்காக எடுத்துக் கொள்ளும் பொழுது இறைவனை நோக்கி கூறும் மந்திரங்கள் இவைகளை கக்க என்று கூறுவார்கள்
ஆல்மைரே வீரா
ஓம் கமலமான் ருத்திரன்
காணுதர் கரிதோ
விமலநார் புலவன்
வேல்வியிர் பிறந்த
புங்கர வளர்ந்த
புருஸ்டி அழகன்
துங்கணன் காலா
செவித்த முன் சோதி
முக்கண்ணன் மகளை
மூக்கருத்தவனே
விக்கினேஸ்வரனை
விடையாய் உதைத்து
மிக்க வேலவரை
வென்னும் துரைத்து
தேவேந்திரனை சிரகரம் வெட்டி
கோபமாய் எழுந்து
திருஷ்டாருத்திரன் தலையை
அனலாய் நெருக்கி
கார் வண்ணரோட
கருங்கடல் மரியாய் போற்றி
பார்வதிக் கொம்பை
பக்தியாய் பிடித்து
அங்கணமுறித்து, ஆசானமாக்கி
பங்கணன்கொம்மை சிம்மாசனமாக்கி
என்றும் செய்யும்
இடி இடித்தது போல்
தடு நடு பேரிசா
தானது சுழற்றி
அப்புற்த்துக்கால் ஆட்டியே மெரித்து
சிறு புறந்தொடையை
சிறுநகப் பெறுவாய்
முக்கண்ணான் நெற்றியில்
வெற்றியாய் வந்த வீரபத்திரா
நான் உன் அடைக்கலம் அல்லவா??
2)
ஆல்ன மரே வீரா
தகிடு தகிடு தத்தா எனுதா
அவல் கோன்
கோன் தாதகி பேட்டா
பானி சூபன் காயா
தோன் பாயா
குருபீரிக்கே பீரா
பீரா பீர்
பிக்கு சோபீர்
தண்டாம் பீர்
அல்லாக்குத்தோ
மார் பாஷ்
ஜங்கம்
தந்து காடே
கல்கிர பாவாடே
கசரதக் கத்தி நட்டு
பிசுரல்லி பின்னிக் கொண்டு
கருணுசா கருணுசா
கருணுப்புப் பாலா
சாங்கித பத்தரியே
பிராணத லிங்கா
துரிதமத பங்கா
ராசோட்டி சனி வீரபத்ரா
நான் உன் அடைக்கலம் அல்லவா??
3)
ஓம் பலரே வீரா
ஸ்ரீ முத்து சங்கையினா
வரத குமாரா
காலாக்கின ருத்ரா
கதம பிரசண்டா
மதன கோலா காலா
கிரண உத்தாரகா
இலட்சகா முனி
பக்தவச் சலா
பவுரோக வைத்தியா
நம்ம
வீரபத்ர தேவுரிய
ஏன் ஏன் ஆயுதம் தந்திட
சிடிலம்பு
சிங் காணி
கைக்கத்தி
அதுருகத்தி
புதுருகத்தி
பிதுரு சாணகத்தி
பல்விக்கோ பாணா
பரங்கி சாணா
பாஸ் பதா
விட்டலா
ஜமத்தண்டே
கல்லு சோலே
பிலிச் சோள
கெனிக் குதிரே
உக்கலத்து கொண்டே
ஓகே பாணா
இந்து ப்பா
மூவத்தி இருடு ஆயுதங்களும்
பிடுவிக் கொண்டு
கிடு கிடு எணுதா
மருளு தாண்டுதா
சப்தளதா
செளரி வாக்கியா
ராசோட்டி சனி வீரப்த்ரா
நான் உன் அடைக்கலம் அல்லவா??
சுபம்
நன்றி :
திரு .
மாடப்பள்ளி கவிஞர் k.ஜெயசீலன்
திரு. மீனாட்சிசுந்தரம் குரும்பனுர் சேலம் மாவட்டம்

Comments

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!