பழங்குடி மக்களின் வாழ்வியலில் மலை சார்ந்து வாழும் குறும்பர் இன மக்கள் மலைக்கு இவர்கள் வைத்துள்ள பெயர்களும்.....


பழங்குடி மக்களின் வாழ்வியலில் மலை சார்ந்து வாழும் குறும்பர் இன மக்கள் மலைக்கு இவர்கள் வைத்துள்ள பெயர்களும் அதன் விளக்கமும்
எத்துநோர(ஒற),மக்கிறி கொபே, குறி மந்தை பெட்ட,சுன்றேஒட்டு,தொட்டு பெட்ட,அல்லுகுஅசரபெட்ட, கிரி பெட்ட,
சிக்குக்ஓர்தி, தொட்டு ஓர்தி,கறிஒட்டு,
சாவரானை பெட்ட,மத்து பெட்ட,ஒளையன்பரை,கல்மாத்துர் காடு,
கோணத்து மாரி இதற்கான விளக்கங்கள் காண்போம்...
எத்துநோர(ஒற):
ஏர்உழுதல்க்கு பயன்படும் காளை மாடுகள் ஏறு உழுத்த பின் காளை மாடு அருகில் பல மலைகள் உள்ளது இருந்தும் ஏத்துநோர(ஒற) மலையை சென்று அங்கு தன் உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கும் மீண்டும் மறுநாள் காலையில் காளை மாடுகள் வரும்
காளை மாடுகள் மலையில் இரவு முழுவதும் அங்கு உறங்கும்  அந்த மலையை ஏத்துநோர(ஒற) என்று அழைக்கப்படும்.....
மக்கிறி கொபே:
முங்கில் நிறைந்த காடு முங்கிலாள் செய்யபடும் கூடை, மொரம், போன்ற பொருள்கள் இங்கு இருந்து தான் எடுத்து வரப்படுகிறது
குறி மந்தை பெட்ட:
குறிஆடு ,மாடு , மந்தை இடும் இடம்
சுன்றேஒட்டு:
(முள் நிறைந்த கரடு காடு),
தொட்டு பெட்ட:
( பெரிய மலை),
அல்லுகுஅசரபெட்ட:
(பல்லத்துக்கு அந்த பக்கம் உள்ள மலை),
கிரி பெட்ட:
(கடவுள் இருக்கும் மலை)
சிக்கு ஓர்தி, தொட்டு ஓர்தி :
(குறி ஆடு, மாடு, எருது, தாகம் தீர்க்கும் மலை நீர் இருக்கும் இடம்)
கறிஒட்டு :
(கரும் கற்கள் அதிகம் இருக்கும் கரடு),
சவரானை பெட்ட:
(ஆயிரம் யானை உள்ள மலை),
மத்து பெட்ட :
(மூலிகை மரங்கள் செடிகள் இருக்கும் மலை (மத்து )என்றால் மருந்து என்று பொருள் )
ஒளையன்பரை,
கல்மாத்துர் காடு:
பல ஆண்டுகளாக குறும்பர்கள்(Palangudi Makkal Kurumba Gounder) கால்நடை மேய்த்தல் செய்து வந்தனர்   அதற்கான தடையாம் இன்றும் உள்ளது அங்கு இன்று மூன்று கிணறு உள்ளது கிணற்றில் இருந்து நீர் இறைத்து விவசாயம் செய்து உள்ளனர் அங்கு வீடு இருந்ததற்கான சான்றுகள் அதிகம் உள்ளது இன்றும் கால்நடை மேயத்தல் சமூகம் காடு அறுமாசம் வீடு அறுமாசம் என்று கல்மாத்துர் காடுயில் ஆடு மாடு பட்டி போட்டு வளர்த்து வருகின்றனர்
காட்டு விலங்குகள் இடத்தில் இருந்து தங்களை பாது காத்து கொள்ள பறன் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்...
ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் அங்கு ஒரு மண்ணால் கட்டப்பட்ட கோட்டை அமைந்துள்ளது இன்று அது சேதம் அடைந்தது உள்ளது..
இவர்களில் சிலர் மாத்துர் சாமி என்றும் வழிபாட்டு வருகிறார்கள்...
கோணத்து மாரி:
குறும்பர்(Palangudi Makkal Kurumba Gounder) இன பழங்குடி(Palangudi Makkal Kurumba Gounder) மக்களின் பலி சடங்கு கடவுளான கொற்றவை காளி..


கோண என்றால் ஆண் என்றும் எத்து என்றால் எருமை கூறுவர் கோணத்து என்றால் ஆண்எருமை ஆகும்
இங்கு கொற்றவை காளிக்கு ஆண் எருமை பலி கொடுத்து வழிபாட்டு வருவதால் இவ்வாறு கொற்றவை காளியை கோணத்து மாரி என்று அழைக்கிறார்கள்..
இன்னும் பல மலைகளின் பெயர்களும் இந்த பழங்குடி(Palangudi Makkal Kurumba Gounder) மக்களின் கலாசாரம் பண்பாடு மற்றும் இவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் பற்றி விரிவாக இனி வரும் காலங்களில் பார்ப்போம்...

Comments

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!