குறும்பர்களின் பட்டி_கோட்டை...

குறும்பர்களின் பட்டி_கோட்டை...
நமக்கு கோட்டை என்றாலே அரசர்கள் காலத்தில் பெருங்கற்களை கொண்டு பெரிதாக கட்டிய கட்டிடங்கள் மட்டுமே தெரியும். உண்மையில் கோட்டைகள் என்பது கட்டிடங்கள் மட்டுமல்ல பாதுகாப்புக்காக ஏற்படுத்தபடும் அனைத்தும் கோட்டைகளே. விதைகோட்டை, எறும்புகோட்டை, போன்றவை இன்றளவும் வழக்கில் உள்ள சொற்கள். 
மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுபவர்கள் கால்நடைகளை பாதுகாப்பாக அடைத்துவைக்க படல், தடுக்கு, வலை, வேலிகளால் பட்டிகளை கட்டுவார்கள் இது நிரந்தரமானது. மேய்க்க போகும்போது ஏற்படும் ஆபத்துகளிலிருந்தோ தற்காலிகமாகவோ கால்நடைகளை அடைத்து பாதுகாக்க பட்டிகோட்டைகளை கட்டுவார்கள் இது பெரும்பாலும் குறுகிய காலத்தில் தயார்செய்வதாகவே இருக்கும்.
புதர்களை வெட்டி வேலிமன்டைகளை சேர்த்து வளையமாக போட்டு அதற்குள் கால்நடைகளை அமர்த்தி பாதுகாப்பார்கள். மழைகாலங்களிலும் வீடு திரும்பமுடியாத இரவு நேரங்களிலும், வனவிலங்குகள் திடீரென தாக்குதல் நடத்த ஆயத்தமாகும் போதும் இந்த கோட்டைகளை கட்டி கால்நடைகளை பாதுகாப்பார்கள்...
இது அந்த வகையில் பனை ஓலைகளால் அமைத்திருக்கும் கோட்டை இதில் இரவுமுழுதும் பதிமூன்று  ஆடுகளையும் நான்கு குட்டிகளையும் அமர்த்தி பாதுகதர்களாம்...(Palangudi Makkal Kurumbas)

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!