குறும்பர் இன மக்களின் வழிபாடும் வாழ்வியல் சார்ந்த சடங்கும்....

குறும்பர் இன மக்களின் வழிபாடும் வாழ்வியல் சார்ந்த சடங்கும்....
நீல
மலவாழ் பெருமக்களிலே குறும்பர்களும்(Palangudi Makkal Kurumbas)ஒரு பிரிவினர். இவர்கள் தமிழ்மொழி பேசுபவர்கள். ஆனல் அவர்கள் பேசும் தமிழை ஏனைய தமிழர்கள் புரிந்துகொள்ள இயலாது. இவர்கள் பெரும்பான்மையாக வாழுமிடங் கள், நீலமலையிலுள்ள அரக்கோடு, நீர்கண்டிக்குக் கீழே உள்ள கடைஞலா ஆகியவையாம். மற்றும், மைசூர் மலேயாளம், அட்டபாடி, அண்ணுமலே முதலிய இடங்களிலும் குறும்பர்கள்(Palangudi Makkal Kurumbas) வாழ்கின்றனர். என்ருலும், அவர்களுக்கு அங்கு குறும்பர்கள்(Palangudi Makkal Kurumbas) என்பதன்று பெயர். பெட்டாக் குறும்பர்(Palangudi Makkal Kurumbas) என்ற ஒரு வகையினரும் உண்டு. ஆனால், இருவகைக் குறும் பருடைய பழக்க வழக்கங்களும் பிறவும் ஒரு தன்மையனவே. இந்தக் குறும்பர்களில் மலையாளத்தில் இருப்பவர்கள் மலையாளம் பேசுகிருர்கள் : ஆல்ை மலேயாளிகட்கு இது புரி யாது. மைசூரில் உள்ள குறும்பர்கள்(Kurumban) பேசும் கன்னடம் கன்னடர்க்கு விளங்காது. அதுபோல அண்ணும8லயிலுள்ள குறும்பர்கள்(Kurumbas) தமிழ்ப் பேசுகின்றனர். அது, தமிழர்க் குப் புரியாது. இதற்குக் காரணம் இவர்கள் பேசும் மொழி யிலே திரிசொற்கள் மிக அதிகம். குடில்கள் * குறும்பர்கள்(Kurumbar), மாடி வீடோ, மச்சு வீடோ கட்டி வாழ வில்லை. அவர்கள் வாழுமிடங்கள், குடிசைகளும் பாறைக் குகைகளும், சரிவுகளுமே, குடிசைகட்கு முன்னும் பின்னும் வாழைக் கன்றுகள் வளர்ந்து கிற்கும். குடிசைகள் மூங்கில். கம்புகள் ஆகியன கொண்டும், காட்டுக் கரும்புல் கொண்டும் வேயப்பட்டிருக்கும். குடிசைகள் தனித்தனியாக இடைவெளி மிகவிட்டு அமைக்கப்பட்டிருக்கும். எல்லாக் குடிசைகளுக்கும் மத்தியில், பெரிய பந்தல்போல ஒரு குடிசை கட்டியிருக்கிருர்கள். அதன் நான்கு பக்கங்களிலும் திறந்த வெளி இருக் கிறது. அதிலே முப்பது முதல் நாற்பது பேர் வரையில் உறங்கலாம். அதைச் சுற்றி இரவும் பகலும் தீ எரிந்து கொண்டிருக்கும். இவர்களில் இருவர் மட்டும் இரவில் காவல் காப்பர். பலவித விலங்குகளின் கூக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். சில குறும்பர்கள்(Kurumbas) தங்கள் வீடுகளின் கூரையினை ஒடுகள் கொண்டும் வேய்ந்திருப்பார்கள். வீட்டுப் பொருட்கள் பானைகள், மூங்கில் போணிகள், மண்வெட்டி, கடப் பாரை, அரிவாள், கிழிந்த ஆடைகள், தோணிகள், மூங்கிலால் செய்யப்பட்ட பாய்வகைகள் இவர்கள் பயன்படுத்தும் பொருள்களாம். தொடக்கத்தில் பால் கறக்க மூங்கில் குவளேயும், தேன் ஊற்றி வைக்கவும், தண்ணிர் கொண்டுவரவும், கள் ஊற்றி வைக்கவும் சுரைக்குடுவைகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனல் இன்று இரும்பாலான பலவகை ஆயுதங்களேயும் கல் சாமான் களையும் குறும்பர்கள்(Kurumbar)பயன்படுத்துகின்றனர். பூப்பு நீராட்டு : பெண் பூப்பு எய்தியதும் எட்டு நாட்கள் அப்பெண் தனிக் குடிசை ஒன்றில் வாழ வேண்டும். எட்டாவது நாள் அவள் நீராடுவாள் : தலையில் மலர் சூடிக்கொள்வாள். பூப்பு நீராட்டுச் சடங்கு பெரும்பாலும் நாம் நடத்தும் சடங்கு போன்றதே. பூப்பெய்திய பெண்ணே முதலிலே ஒரு மணே, அல்லது சதுரக்கல் என்பதின் மீது இருத்துவர். அவளுக் கருகில் ஒரு சிறு பையனை மாப்பிள்ளேயாக ஒப்பனை செய்து அமர்த்துவர். பின்னர் கிண்ணத்திலாவது, சிரட்டையிலா வது நல்ல எண்ணெய் ஊற்றி அவர்கட்கு முன் வைப்பர். முதியவரும் உற்ருர்-உறவினரும் இருவர் தலைகளேயும் தொட்டு வாழ்த்துவர். விருந்து நடைபெறும். இத்தகைய சடங்குக்குப் பின்னரே பெண், வீட்டுக்கு அழைத்துச் செல்லப் படுவாள். பின்னர் மாதவிலக்கு ஆகும்போது மூன்றுநாள் அப் பெண் தனிக்குடிசையில் இருக்கவேண்டும்.






திருமணம் : குறும்பர்களுக்குள்ளே பால்ய மணம் கிடையாது. பருவம் வந்த பின்னரே திருமணம் நடத்தப்படுகிறது. பெண் எடுப்பதிலும், கொடுப்பதிலும் சாதி வேற்றுமை பாராட்டுவ தில்லை. வண்ணன் மகளைச் செருமான் மணக்கலாம் : செரு மான் மகளைக் கூலி மணக்கலாம். கட்டாயத் திருமணம் அவர்களிடையே இல்லை. காதல் திருமணமே நடக்கிறது. காதலால் கட்டுண்ட காதலர்கள் இருவரும் தம் காட்டைவிட் டுச் சென்று விடுவராம். முன் காலத்திலே, பெண்ணின் தந்தைக்கு மாப்பிள்ளை ஒரு புது வேட்டியும், ஒன்றே கால் ரூபாயும் கொடுத்தால் போதும். ஆல்ை, இன்ருே அறுபது ரூபாய் தாம்பூலத்துடன் கொடுக்க வேண்டுமாம். குறும்பர்(Kurumbar) திருமணத்திலே தாலிகட்டும் வழக்கம் இல்லே. திருமணத்திற்கெனக் காதலர்கள் தனியுடை யுடுத்துவதும் இல்லையாம். நம்போலத் திருமணப் பந்தலோ மண்டபமோ (மணமேடை :) அமைத்தல் அவர்களிடையேயும் உண்டு. திருமண நாளன்று காலையில் பெண்ணே மணமகன் விட் டுக்கு அழைத்து வந்து திருமணத் தாம்பூலம் மாற்றி அங்கு விருந்துண்டால் திருமணம் நடந்துவிட்டது என்பது பொருள். தாலி கட்டாமையால் ஒரு பெண் திருமணமானவனா? ஆகா தவளா ? என்றறிதல் கடினம். ஒரு பெண்ணையே பலர் மணக்கும் வழக்கம் குறும்பரி டம் கிடையாது. திருமணமானதும் மணமக்கள் தனியாக வாழ்க்கை நடத்தத் தொடங்கிவிடுவர். குறும்பர்களிடையே கைம்பெண் மணம் உண்டு. கைம் பெண்மினத்துக்கும் கன்னியின் மணத்துக்கும் வேறுபாடு இல்லை. மணமக்களிடையே தகராறு ஏற்பட்டால் பஞ்சாயத் தார் கூடித் தீர்த்து வைப்பார்கள். மணமுறிவு ஏற்படின் பஞ் சாயத்தார் முடிவுப்படி குழந்தைகள் யாராவது ஒருவரிடத்தில் வளரும். இவ்வாறு மணமுறிவு செய்த பெண்ணே மணப்ப வன் முதல் கணவனுக்கும், அவள் தந்தைக்கும் ஆளுக்கு அறுபது ரூபாய் கொடுத்தே திருமணம் செய்தல்_வேண்டும்
ஆனல் கைம்பெண்ணே மணப்பவனுக்கு இத்தகைய விதி ஒன்றும் இல்லை. - தொழில்கள் * குறும்பர்களிற் சிலர் கூலிவேலை செய்வார்கள், சிலர் வயலில் வேலே செய்வார்கள் : சிலர் வேட்டையாடுவார்கள், சிலர் கைத்தொழில் செய்வார்கள். * * o குறும்பர்கள்(Kurumba) தேன் எடுப்பது மிகவும் புதுமையாகக் காணப்படுகிறது. இவர்கள் தேன் எடுப்பது பெரும்பாலும் நீலமலையிலேதான். நம்மைப்போல் உடனே சென்று தேன் எடுத்துவிட மாட்டார்கள். தேன் எடுக்கும் முன்னுல் தேன் கூட்டில் இரண்டு குச்சிகளைக் கொண்டு பெருக்கல் குறிகளைப் போல அடையாளம் வைத்துவிடுவார்கள். அவற்றைப் பார்த்த ஏனைய குறும்பர்கள்(Kurumba) அந்தத் தேன் கூட்டைச் சிதைத் துத் தேன் எடுக்க முன் வரமாட்டார்கள். இதற்குக் காரணம் அடையாளம் வைத்த குறும்பன் மந்திரங்கொண்டு கொன்று விடுவான் என்ற அச்சமே. இரண்டு மூன்று நாள் சென்ற பின் குறும்பன் தக்க ஆயத்தங்களுடன் தேன் எடுப்பான். தேன் எடுக்கும் முறைகள் பல இருக்கின்றன. குறும்பர்களிலே எருமை நாடாகிய மைசூர்ப் பகுதியில் வாழ்பவன் யானே கூடப் பிடிப்பதுண்டாம். இரவிலே யானேக்கு முன்னல் கின்று கொண்டு குறும்பன் ஒரு தீப்பந் தத்தைத் தன் தலைக்கு மேலே சுற்றி, ஒரு குழியை நோக்கி யானேயை விரட்டுவானம். இதற்கு முன்பே அந்தக் குழியை நன்கு தோண்டி வைத்திருப்பான், இவ்வாறு சுழற்றி ஒட்டு வதிலே கொஞ்சம் தவறினளோ, மறந்து வேறுபக்கம் கவ னத்தைச் செலுத்தியிருந்தாலோ குறும்பன் இவ்வுலகைத் துறக்க வேண்டியதுதான் : யானே அவனே நொறுக்கிவிடும். குறும்பர்கள்(Kurumba) மீன் பிடிப்பதும் உண்டு: ஆனல் நம் போல் அல்ல. முதலில் ஒடையில் ஒரு குறிப்பிட்ட இடத் தில் கூடை ஒன்றைப் பதித்து வைத்திருப்பார்கள். இக் கூடையை நாம் இரம்பு என்போம். அக் கூடைக்கு முன் புறம் கொஞ்சம் தொலைவு சென்று ஒரு வகையான நச்சு )வேர்களைக் கொண்டுவந்து, நீரில் (மீன்கள் நன்கு அலேந்து கொண்டிருக்கும் நீர்) கரைத்து விடுவார்கள். உடனே மீன்கள் யாவும் மயங்கிவிடும்; பிறகு மிதக்கும்; கொஞ்சதூரம் மிதந்து சென்று குறும்பர்(Kurumba)வைத்த கூடையில் விழுந்துவிடும். குறும்பர்கள்(Palangudi Makkal Kurumba) செய்யும் தொழில்களிலே ஆண்கள் மட் டும் செய்யும் தொழில்கள், பெண்கள் மட்டும் செய்யும் தொழில்கள் என உண்டு; இருவரும் கலந்து செய்யும் தொழில்களும் உண்டு. تقسی தேன் எடுத்தலும், வேட்டையாடலும், கிழங்கு பயிர் - செய்தலும், கூலி வேலை செய்தலும், விறகு வெட்டலும், காட்டுப் பச்சிலேகளைச் சேர்ப்பதும் ஆடவர் தொழில்கள். வீட்டுத் தோட்டத்தைப் பார்ப்பதும், ஆடு, மாடு, கோழி வளர்ப்பதும் பெண்டிர் தொழில்கள். ஆடவரும் பெண்டிரும் சேர்ந்து செல்வர் கிலங்களிலே கூலி வேலை செய்வர்; பரண்மேலிருந்து தகரப்போணியைத் தட்டிப் பயிர்களேத் தின்னவரும் விலக்குகளே விரட்டுவர். பல பிரிவுகள்: குறும்பர்க்குள்ளே, பால் குறும்பர், காட்டுக் குறும்பர் முள்குறும்பர், பெட்டாக் குறும்பர் என்ற பல பிரிவுகள் உண்டாம். குறும்பர் கரிய நிறமும் குள்ள உருவமும் உடையவர்கள். தலையின் முன் பக்கம் மொட்டையடித்துக் கொண்டு பின் பக் கம் குடுமி வைத்திருப்பர். முன்ளிைல், தலையைச் சிரைக்க ஒடிந்த கண்ணுடித் துண்டுகளேப் பயன்படுத்தினர். இப் பொழுது கத்திகளைப் பயன் படுத்துகின்றனர்; நன்கு ஒடக் கூடியவர்கள். கூரிய பார்வையும் உடையவர்கள். முன் காலத், தில் மேலே ஒரு துண்டும் கீழே ஒரு துண்டும் கட்டியிருந்த வர்கள் இன்று நம் போல உடை உடுத்துகிருர்கள். சிலர் மட்டும் கையில் பித்தளேக் காப்பணிந்து, காதுகுத்திக் கொண்பெண்டிர்கள் : பெண்கள் கரிய நிறமும், சற்று உயரமும், அச்ச உணர் வும் உடையவர்கள். சில பெண்கள் உடம்பில் பச்சையும், இலர் காதில் வளையமும், சிலர் காதோலையும் அணிந்திருக் கிருர்கள். கழுத்தில் கருப்பு மணிச்சரமும், வெள்ளி நகை களும் பெண்டிர் அணிகின்றனர். பெண்கள் எட்டுமுழம் அல்லது பத்து முழ வேட்டியை மார்புக்கு மேலிருந்து சுற்றி வேட்டிபோல் கட்டி மார்பில் ஒன்றும் இடுப்பில் ஒன்று மாக இரு கட்டுக்களைக் கட்டுகிருர்கள். கொஞ்ச நாளேக்கு முன்னர் இடுப்பில் மட்டும் வேட்டி கட்டி வந்தனராம். பெண்கள் தங்கள் குழந்தைகளே நம்மைப் போலத் தூக்குவதில்லை. பால் கொடுக்கும்போது நம் பெண்டிர் எந்த முறையிலே குழந்தையைத் தாங்குகின்றனரோ, அது போலவே தாங்கி, வயிற்ருேடு அணேத்தே குறும்பப் பெண் டிர் செல்லுகின்றனர். குழந்தை பிறந்ததும் பெரிய வடக் கயிற்றைக் கோழி முட்டை வடிவமாகச் சுற்றிச் சுற்றி நடுவில் ஒரு துணி விரித்துக்கிடத்துவர். குழந்தையை உறங்க வைக் கத் தொட்டில் இவர்களுக்கு இல்லை: காலிலும், மடியிலும், கையிலும், தோளிலும், தரையிலும் உறங்கப் போடுவர். குழந்தைபிறந்த ஆரும் திங்களில், குலதெய்வத்தை வழிபட்டு, குழந்தையைக் குளிப்பாட்டித் தங்களுக்கு விருப்பமான பெயரை இடுகிருர்கள். பெண்கள் மூங்கிலால் ஆன சீப்பால் நேர் உச்சி எடுத் துச் சிவிக்கொள்ளுவார்களே தவிரப் பூ வைப்பதில்லை. கடவுள் வழிபாடு அல்லது ஆண்டு வழிபாடு : பெட்டா குறும்பருக்கு பொம்மன்', 'மாரி முதலியன குலதெய்வங்கள். பிற குறும்பருக்கு 'ஈர ஒடியா குலதெய் வம். பெட்டாக் குறும்பிகள் (பெண்கள்) கோயிலுக்குள் "தாராளமாகப் போகலாம்: வணங்கலாம். ஆனல் நீலமலைக் குறும்பிகளுக்கு இந்த உரிமை கிடையாது. நீலமலைக் குறும்பர் திருநாள் சித்திரைத் திங்களில் நடக்கும். சித்திரைத் திங்கள் முதல் செவ்வாய்க் கிழமையில்பூசாரியும் மூன்று குறும்பர்களும் எட்டுநாள், காட்டிலே பெண்டிர் தொடர்பின்றிக் கழிக்க வேண்டும். ஒன்பதாம் நாட் காலையில் கதிரவன் தோன்றியதும், வழிபாட்டுக்குரிய பாறைக்குச் செல்வார்கள். பாறை வெளியில் புலியும் பாம் பும் படுத்திருக்கும். இவர்கள் வருகை கண்டதும், அவை ஒடி விடும். பின்னர் பூசாரியும் பிறரும் பாறைக்குட் புகுந்து அங்கே தண்ணிர் உள்ள கலேயத்தைக் காண்பார்கள். அதன் அருகில் நாலணுவைக் காணிக்கை செலுத்தித் தம் தாய் மொழியில் வழிபாடு செய்து வெளி வருவர். இதற்கு "ஆண்டு வழிபாடு' என்பது பெயர். - * திருவிழா நாட்களிலே ஆடவரும் பெண்டிரும் நடனம் ஆடல் உண்டு. அன்று காட்டெருமை இறைச்சி தின்று, கள்ளேக் குடித்துக் களிப்பார்களாம். 'குழல், பறை முதலிய இசைக்கருவிகளே இவர்கள் பயன்படுத்துகின்றனர். ஊராட்சி : குறும்பர் ஊர்களில் வழக்குகளைத் தீர்ப்பவன் 'முதலி' என்று அழைக்கப்படுகிருன். இவனுக்கு உதவியாக வழக்கு முதலியன தீர்ப்பதில் பூசாரி இருக்கிருன். இந்த 'முதலி', பரம்பரையாக வருகிருன் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. தொடக்கத்தில் குற்றம் செய்தோர் நாலணுவை எட்டுநாள். தவணையில் தந்தனர்; இன்ருே, தண்டனை ஒன்றேகால்ரூபாய், இத் தண்டனைப் பணம் எல்லோராலும் தேனிர் அருந்தப் பயன் படுமாம். ஒரு காட்டுக் குறும்பன் மற்ருெரு காட்டுக் குறும்பியை மணக்க வேண்டுமானல் முதலில் இரு காட்டு முதலிகளும் கூடிப் பேசவேண்டுமாம். இழவு : இழவிலே ஆணும் பெண்ணும் சமமே: ஒரு வேற்றுமை யும் இல்லை. காட்டில் கிடைக்கும் வரிச்சுகளையும், மூங்கிலே யும் கொண்டு பாடை கட்டப்படும். கணவன் இறப்பின் மனைவி தன் காது நகையை, தன் வலப்பகுதித் தலைமயிரை எடுத்து அதில் முடிந்து தன் கணவன் நெஞ்சில் வைக்க வேண்டும். மனைவி இறப்பின், கணவன்.தன் காது நகையைஎடுத்து மனைவி நெஞ்சில் வைத்து, மொட்டை அடித்துக் கொள்வான். இவர்களிடம் பிணத்தைச் சுடுதலும், புதைத்த இம் ஆகிய இரு வழக்கங்களும் உண்டு. ஆனால், இவர்கள் பிணத்தை உடனே புதைப்பதும் இல்லை; சுடுவதும் இல்லை: இறந்த மூன்ரும் நாள்தான் பிணத்தை எடுப்பார்கள். பிணத்தைப் படுத்த மாதிரியே புதைப்பார்கள். நீலமலை இருளன் ஒருவன் இறந்தால் குறும்பன் மொட்டையடிக்க வேண்டுமாம். நல்லவர்கள் இறப்பின் அவர்கள் நூலேணி வழியே துறக்க உலகம் புகுவராம்-பாவிகள் இறப்பின் பேய்களாக மாறுவராம்.




Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!