குறும்பர்களின் பிரதான இசைக்கருவிமகுடம்...

குறும்பர்களின் பிரதான இசைக்கருவி
மகுடம்...
பழங்குடி மக்களான குறும்பர்களின்(Palangudi Makkal Kurumbas) வாழ்வியலில் இசை முதன்மையானது. அந்த இசையும், கொக்கரிப்பும் மட்டுமே அவர்களின் வழிபாடு மற்றபடி அவர்களுக்கென தனியாக கோவில்கூட இருப்பதில்லை.
மேய்ச்சலை பிரதானமாக கொண்ட இவர்களுக்கு வீரபத்திரரும், ஷாமுண்டியும் முதன்மை தெய்வங்கள் மலையை விட்டு இறங்கி நாகரீக வாழ்வை கற்றவர்கள் கோவிலை கட்டி வழிபாடு செய்தாலும் பழைய முறைகளை கடைபிடிப்பதில் மாற்றமில்லை.
இவர்கள் மேய்க்கும் குறும்பாட்டின் மயிரைக் கொண்டு தயார்செய்யும் கம்பளிமீதே இவர்களின் பெரும்பான்மை சுப நிகழ்வுகள் நடக்கும்...
தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தங்கள் இனக்குழுவுக்கு உள்ளாகவே தயாரித்து உபயோகபடுத்தும் வழக்கம் இருந்திருந்தாலும் இப்போது நாகரீகம் அங்கும் புற்று வைத்திருக்கிறது.
இவர்களின் வாத்திய கருவிகளும் இவர்களே வடிவமைத்து இவர்களால் மட்டுமே வாசிக்கப்படுகிறது. இவைகளுக்கு தனியான இசைக்குறிப்புகள் ஏதும் இல்லாத எழுதாக்கிழவிகளே.
கொம்பு, புல்லாங்குழல் போன்ற ஊது கருவிகளும் மகுடம் என்ற வாத்தியகருவியும் குறும்பர்களின் பிரதான இசைக்கருவிகள். இப்போது மகுடத்தை பலர் #தப்பு என்ற பெயரில் அடையாள படுத்தினாலும் தப்பு என்பது இரண்டு கைகளாலும் இரண்டு குச்சிகளை வைத்து அரைந்து ஒலியெழுப்புவது. மகுடத்தை நெஞ்சோடு அணைத்து கைகலால் தட்டி ஒலி எழுப்புவது...

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

மருதநிலத்தின் மக்கள்