குறும்பர் இன பழங்குடி மக்களின் குல தொழில் அழிவின் விளிம்பில் கலங்கல் கம்பளி...

குறும்பர்(Kurumbar) இன பழங்குடி மக்களின் குல தொழில் அழிவின் விளிம்பில் கலங்கல் கம்பளி... கோவை மாவட்டம், சூலூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய கிராமம் கலங்கல். இந்த கிராமமும், இதைச் சுற்றியுள்ள அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, நடுப்பாளையம், கண்ணம்பாளையம், பீடம்பள்ளி, குரும்பபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் குரும்பை ஆடுகளில் (Kurumba) இருந்து ரோமங்களை எடுத்துத் தயாரிக்கப்படும் கம்பளிகள் கோவை மட்டுமன்றி, தமிழகம் முழுவதிலும் வெகு பிரபலம். இதேபோல, கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் முன்பணம் செலுத்தி கம்பளிக்கு ஆர்டர் கொடுத்து இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து வாங்கிச் செல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்தத் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். இதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித் தனியாக தேவைக்கு ஏற்ப ஆடுகளை வாங்கி அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல மாதங்கள் வரை மேய்ப்பார்கள். பின்னர், ஆண்டுக்கு ஒரு முறை ஆடுகளைக் ...