குறும்பர் இன மக்களின் வாழ்வியல் சார்ந்த இலக்கிய சான்று


குறும்பர் இன மக்களின் வாழ்வியல் சார்ந்த இலக்கிய சான்று
       
       
  காதல் வாழ்க்கை – தலையில்              விழுந்த பூந்­தொடை
இலக்கியக் காட்சிகள்:
ஆயர்­பா­டியில் ஒரு பெரிய மாட்டுப் பட்டி. அங்கே ஏறு தழுவல் நிகழ்ச்சி (காளை­ய­டக்கும் விளை­யாட்டு) நடை­பெ­ற­வி­ருந்­தது.
அதனைக் காண அக் கிராமம் முழு­வ­துமே திரண்டு எழுந்­தது. ஏறு தழுவும் ஆர்­வத்­துடன் கட்­டிளம் காளையர் பலர் பல­வி­த­மான மலர் மாலை­களை அணிந்­த­வாறு ஒன்று திரண்­டனர்.
அவர்­களின் வீரத்தைக் கண்டு களிக்க வந்த ஆயர்  குலத்து அழ­கிய நங்­கையர் (ஆய்ச்­சியர்) பரண்­களின் மீது அமர்ந்­தி­ருந்­தனர்.
விளை­யாட்டு வேளையும் நெருங்­கிற்று. அரங்­கத்­துக்கு அடங்காக் காளைகள் ஏவப்­பட்­டன. அவை கொழுத்துப் பருத்துக் காணப்­பட்­டன.
வெள்ளை, சிவப்பு, கறுப்பு எனப் பல­வகை  நிறங்­களைக் கொண்ட அவ் வெரு­து­களின் கொம்­புகள் கொந்­தா­லியைப் போலக் கூரி­ய­தாகச் சீவப்­பட்­டி­ருந்­தன. ஊழித் தீ போல அவை சுழன்று ஓடித்­திரிந்­தன.
அஞ்­சாத வீரர் அச்­சந்­தரும் மாடுகள் மீது பாய்ந்து அடக்க முயன்­றனர். ஒன்று ஒரு­வனைக் கொம்பால் குத்தி விழுத்­தி­யது. ஒன்று ஒரு­வனின் குடலைக் கிழித்­தது. இன்­னொன்று ஏற முயன்­ற­வர்­களை இடறி விழுத்­தி­ய­வாறு ஓடித் திரிந்­தது. எரு­து­களின் கொம்­புகள் இரத்­தத்தால் சிவப்­பே­றின.
காளையர் பலர் காய­முற்­றனர். காயத்­தையோ பாயும் குரு­தி­யையோ பொருட்­ப­டுத்­தாது சில வீரர் தொடர்ந்தும் ஏறு தழு­வலில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.
அந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடந்­த­தாக தோழிக்குச் சொல்­கின்றாள் தலைவி.
தலைவி: ஏடி ஆட்­டி­டை­ய­ருக்கும் மாட்­டி­டை­ய­ருக்கும் கொல்லும் இயல்­பு­டைய ஏறு­களைத் தழு­வு­தலே காரி­ய­மென எங்கள் சுற்­றத்தார் தொழு­வத்­திலே காளை­களைச் செலுத்தி விட்டார்.
அத் தொழு­வி­டத்தே முரட்டுக் குணம் மிகுந்த செவி மறை­யாக இருந்த ஏற்றை அடக்கித் தழு­வினான் ஒரு வீரன். அவனின் தலை­யிலே கிடந்த முல்­லைப்பூ மாலையைக் கொம்­பிலே எடுத்துக் கொண்டு அந்த ஏறு துள்ளிக் குதிக்­கையில் அதன் ஒரு பகுதி என் தலையில் வந்து விழுந்­தது. இழந்த பொருளை மீண்டும் பெற்­றாரைப் போல் நான் (மிகவும் மகிழ்ந்து) அப்­பூந்­தொ­டையை எடுத்துத் தலை­யிலே சூடிக்­கொண்டேன்.
அது­பற்றி என் தாய் கேட்டால் என்ன பதிலைச் சொல்ல ?
தோழி: அந்தப் பூ திரு­மணம் செய்ய விரும்­பாத ஒரு­வனின் பூவன்றே ? தாய் கேட்டால் அதற்கு நான் செய்­யத்­தக்க தீர்வு என்ன ?
பேசாமல் சும்மா இரு.
தலைவி: சூடிய பூ மயிரில் மணத்தை ஏற்­ப­டுத்தும் என்­பதை அறி­யாது சூடி விட்டேன். அயலான் பூவை மயலால் முடித்தாள் எனத் தாய் கேட்கின்  நான் அவள் கோபத்­துக்கு ஆளா­காமல் தப்ப முடி­யுமோ ?
தோழி: சரி சரி விடு கவ­லையை. நீ செய்த தவ­றெல்லாம் இனி அற்றுப் போகும்.
தலைவி: ஓ.ஓ. எவ்­வாறு அவை நீங்கும் சொல்லு சொல்லு ?
தோழி: அவன் ஆயர் மக­னாயின் நீ ஆயர் குலத்துப் பெண்­ணாயின் அவன் உன்னை விரும்­பி­யி­ருப்­பா­னாயின் நீ அவனை விரும்பி இருப்­பா­யாகில் தாய் மிகவும் வருந்­து­வ­தற்குக் காரணம் எதுவும் இல்லை என்­பதை அறி­வா­யாக.
தலைவி: அன்னை கருத்து இது­வென உனது மனம் சொல்­லு­மாயின் அவள் என்னை நோகாள்.
தோழி: இன்­னுமா உனக்கு விளங்­க­வில்லை ? ஆயர் மக­னையும் காத­லிக்­கிறாய். தாய் கோபிப்பாள் என்றும் அஞ்­சு­கிறாய்.  அப்­ப­டி­யாயின் நீ கொண்ட காதல் நோய்க்கு மருந்­தொன்றும் இல்லை என்­பதை விளங்கிக் கொள்.
தலைவி: மருந்து இல்­லையேல் நான் வருந்­தாமல் இருப்­பேனோ ?
தோழி: இனி   நீ வருந்த வேண்­டி­ய­தில்லை. உன் தாய்க்கு உண்மை தெரிந்து விட்­டது. கழுவி அழுக்­கில்­லா­தி­ருந்த உனது கூந்­தலில் வைக்க அவ­ன்தான் பூவைத் தந்தான் என்று பிறர் மூலம் தாய் அறிந்து விட்டாள்.
அதன் பின் உன் தந்­தை­யோடும் தம­யன்மார் எல்­லோ­ரோடும் கலந்து ஆலோ­சித்­தி­ருக்­கின்றாள். அவர்கள் அனை­வரும் தெய்­வ­மா­கிய திரு­மாலே இவ­ளுக்கு இவனைத் திண்­ணி­ய­தாகக் காட்­டி­யுள்­ள­தென மகிழ்ந்து பேசி­யுள்­ளனர்.
அதனால் கள­வொ­ழுக்­கத்தைப் பிறர் அறி­யாமல் ஒழு­க­வல்ல அந்தத் தலை­வ­னுக்கே உன்னைக் கொடுக்க முடிவு செய்­துள்­ளனர்.
இந்த உரை­யா­டலைத் தரும் கலித்­தொகைப் பாடல் இது
எல்லா இஃதொன்று கூறு குறும்­பிவர்
புல்­லி­னத்­தார்க்கும் குடஞ்­சுட்­ட­வர்க்கும் - எம்
கொல்­வேறு கோடல் குறை­யெனக்
கோவி­னத்தார்
பல்­வேறு பெய்தார் தொழூஉ
தொழு­வத்து
சில்லைச் செவி­மறைக் கொண்ட அவன் சென்னிக் குவி முல்லைக்
கோட்­டங்காழ் கோட்டின் எடுத்துக் கொண்டு ஆட்­டிய
ஏழை யிரும்­புகர் பொங்க அப்பூ வந்து - என்
கூழையுள் வீழ்ந்­தன்று மன்
அதனை கெடுத்­தது பெற்றார் போல்
கொண்டு யான் முடித்­தது
கேட்­டனள் என்­ப­வோயாய்
இஃதொன்று கூறு
கேட்டால் எவன் செய்ய வேண்­டுமோ
மற்­றிகா
அவன்­கண்ணி யன்றோ அது
பெய்­போது அறி­யாத்தன் கூழையுள்
ஏதிலான்
கைபுனை கண்ணி முடித்தாள் என்று
யாய் கேட்பின்
செய்­வதில் ஆகுமோ மற்று
எல்லாத் தவறும் அறும்
ஓஓ அஃதது மாறும்
ஆயர் மக­னாயின் ஆய­மகள் நீயாயின்
நின்­வெய்யன் ஆயின் அவன்­வெய்யை
நீயாயின்
நின்­னைநோ தக்­கதோ இல்லை மன்நின்
நெஞ்சம்
அன்­னை­நெஞ்சு ஆகப் பெறின்
அன்­னையோ
ஆயர் மக­னையும் காதலை கைம்­மிக்க
ஞாயையும் அஞ்­சுதி யாயின் அரி­தரோ
நீ உற்ற நோய்க்கு மருந்து
மருந்து இன்றி யான் உற்ற துய­ராயின்
எல்லா
வருந்­துவேன் அல்­ல­னோ யான்
வருந்­தாதி
மண்­ணிமா சற்­றநின் கூழை­யுள்­ ஏ­றவன்
கண்­ணி­தந்­திட்ட தெனக் கேட்டுத்
திண்­ணிதாத்
தெய்­வமால் காட்­டிற்று இவட்கென்
நின்னை அப்
பொய்யில் பொது­வற்கு அடை சூழ்ந்தார் தந்­தை­யோடு ஐயன்மார் எல்லாம்  ஒருங்கு
                           (கலித்­தொகை முல்­லைக்­கலி 07)
(குறும்பு இவர் - –முல்லை நிலத்து ஊரில் உள்ள; புல்­லி­னத்தார் - –குறும்பர் ஆட்டு இடையர்; குறை­யென -–  காரி­ய­மென; சில்லை - – முரண்­பாடும்; கோட்டு  அம் காழ் - – வளை­வினை யுடைய அழ­கிய பூமாலை; கோடு - – கொம்பு; ஏழை இரும்­புகர் பொங்க - – ஏழை­யா­கிய பெரிய மறை ஏறு தள்ள; கூழை - – கூந்தல்; இகா - – தாழாத  விரும்­பாத; ஏதிலான்  – - அயலான்; கண்ணி பூ வெய்தல் - – விரும்­புதல்; அன்­னையோ - – அன்­ன­தன்­மையோ, இன்னும் விளங்­க­வில்­லையோ; மண்ணி - – கழுவி‘ மாசு அற்ற, அழுக்கு இல்­லாத; திண்­ணிதா - – உறு­தி­யான; மால் - – திருமால், முல்லை நிலத்து தெய்வம்; பொதுவன் -– குறும்பர்(Palangudi Makkal Kurumban) இடையன்; அடை சூழ்ந்தார் - – கொடுக்கத் தீர்­மா­னித்தார்)
இப்­பாடல் கூறும் காதல் நிகழ்வு முல்லை நிலத்­துக்­கு­ரி­யது. முல்லை நிலம் காடும் காடு சார்ந்த நிலப் பரப்பும் கொண்­டது. பண்ணை வளர்ப்பும் வேட்டை ஆடலும் இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில்களாக இருந்தன.
பண்ணை வளர்ப்பினைச் செய்யும் குறும்பர்(Palangudi Makkal Kurumbar) ஆயர் குலத்தவரின் விளையாட்டுகளில் ஏறு தழுவுதலும் ஒன்று.
இன்றும் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் மாட்டுச் சவாரியும் காளையடக்கும் விளையாட்டும் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடு களிலும் இவ் வகை விளையாட்டுகள் போட்டி முறையில் நடத்தப்பட்டு வருகின்றன.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!