#குறும்பர் பழங்குடி மக்கள் கடந்து வந்த பாதை...

#குறும்பர் பழங்குடி மக்கள் கடந்து வந்த பாதை...

#ஆலு குறும்பர்கள்...

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுக்காவில் உள்ள #நெல்லூர், #கூடலூர் ,#ஹோக்யம், #ஏரம்படி, #நெக்குந்தி, #மீண்ணியம், #கஜனூர், #கொப்பம் பகுதிகளில் குறும்பர்கள் சோளகர் இனமக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் குறும்பர்களை தமிழகத்திலிருந்து #ஆலு குறும்பர்கள் இங்கு குடி அமர்த்துகிறார்கள் அவர்களே முதலியாக உள்ளனர்...
 ஆலு குறும்பர் இனத்தில் கோட்டை குலத்தை சேர்த்தவர் மீண்ணியம் என்னும் ஊரில் உள்ள கோணயத்து மாரி அம்மன் (கோணயத்து என்றால் ஆண் எருமை என்று பொருள்) கோவில் பூசாரியாக வம்சா வழியாக தொடர்து வருகிறார்கள், 
இந்த கோவில் விழா மிக கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த விழாவின் போது ஆண் எருமை பலி கொடுக்கப்படும் அந்த ஆண் எருமையை பலிகொடுத்த பிறகு அதன் மாமிசத்தை குறும்பர் இனத்தில் உள்ள கோட்டை குலம் மக்களுக்கு முதல் பங்கு தருவார்கள் அதனால் கோட்டை குலத்து மக்களை எம்மபாடு (எருமை கறி ) என்று அழைப்பார்கள் மீதம் உள்ளதை ஒளையர்கள் எடுத்துச் செல்வார்கள்...

குறும்பர் இனத்தில் உள்ள கோட்டை குலத்து மக்கள் தமிழ்நாடு மாநிலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்காவில் உள்ள #கடம்பூர்,#கோட்டைமாளம் பகுதியில் இருந்தது வந்தது குடி அமர்ந்தவர்கள் அவர்,
 கோட்டை குலத்து குறும்பர்கள் அதிகம் இருந்ததால் அந்த ஊருக்கு கோட்டைமாளம் என்று பெயர் வந்தது என்று எங்கள் இனதின் முதியவர் ஒருவர் கூறினார்..மற்றும் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குரும்பூர் மலை கிராமத்தில் இருந்து வந்தும் இங்கு குடி அமர்ந்தவர்கள்...

 கர்நாடக மாநிலம் கஜனூரில் இருந்தது கோட்டைமாளம் ஏலு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஏலு கிலோமீட்டர் தொலைவும் காட்டு விலங்குகள் அதிகம் நடமாடும் அடர்ந்த வனப்பகுதி ஆகும்...

இன்று...

தமிழ்நாடு மாநிலம் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் குரும்பனூரில் உள்ள குறும்பர் இன பழங்குடி மக்களில் கோட்டை குலத்தை சேர்த்தவர்கள் இன்றும் கோணயத்து மாரி, கீச்சுகுத்தி மாரி, சோமேஸ்வரி அம்மான் வழிபட்டு வருகின்றனர் அதே போல் கோட்டைமாளம் சென்றும் வழிபட்டு வருகிறார்கள்...

குறும்பர் இன பழங்குடி கோட்டை குலத்தை சேர்த்தவர்கள் பெயர்கள்...

ஆண் பெயர்கள்,

1)சோமாஜ்ஜன்
2) தொட்ட சோமன்
3) கரிசோமன்
4)கோட்டை
5) சின்னு சோமன்
6) சோமு
7)முனியன்
8) சோமேஷ்வரன்

பெண் பெயர்கள்

1) சோமாஜ்ஜி
2)சோமேஷ்வரி
3)குள்ளி
4) கரிசாமி
5) சின்னுசாமி
6) சோமு
7) முனியம்மா

குறும்பர்கள் இன பழங்குடி மக்கள் கடந்து வந்த பயணம் தொடரும்...



Comments

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!