பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளிக்கு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவில்,பாராட்டையும், விருதையும் பெறுபவர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள்

பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளிக்கு  பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவில்,
பாராட்டையும், விருதையும் பெறுபவர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள்:-
============================================================================
                   21/08/2021 சனிக்கிழமை 2 மணிக்கு திருச்சி மாநகரில் கலைஞர் அறிவாலயத்தில் மக்கள் சமூகநீதி பேரவை நடத்திய பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளிகளுக்கு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா,
பாராட்டு விழா பெறுபவர் பாராளுமன்ற உறுப்பினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு வெற்றி கம்பளம் குறும்பர் இன மக்களின் குல வழக்கப்படி திருமாவளவன் அவர்களுக்கு தோளில் சாத்தப்பட்டு, வீர செங்கோல் கையில் கொடுக்கப்பட்டது,
குறும்பர் இன மக்களின் வாழ்வியலோடு ஒன்றகலந்த குறியாடு தொல் திருமாவளவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது,
பிறகு குறும்பர் இன மக்களின் முறைப்படி தாய்மார்கள் நவ தாணியங்கல் திருமாவிற்க்கு வழங்கப்பட்டது,

பிறகு

தொல் திருமாவை தொடர்ந்து ,
திமுக கட்சியின் அமைச்சர் மாண்புமிகு
கே.என். நேரு அவர்களுக்கு மற்றும் இரண்டு கம்மியூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு கம்பளி மப்ளரால் தலைபாகை கட்டி. கம்பளி தோலில்  போர்த்தப்பட்டது,

மேலே குறிப்பிட்ட இந்த நிகழ்வு நடக்கும்
 முன்பு:

பத்து பேர் கொண்ட குழு
கம்பளி துண்டால் தலைபாகை கட்டி கொண்டு,
கம்பளி தோலில் சார்த்திக் கொண்டு,
கையில் தடி வைத்துக் கொண்டு,
வருவார்கள்,

அதில் ஒருவர் மட்டும்,
தலைபாகை கட்டா கம்பளி துண்டு,
கம்பளி, கம்பளியால் செய்யப்பட்ட கைகாப்பு, கம்பளி நெசவு செய்யப்பட்ட கம்பளி மாலை, பண்டாராம் ( மஞ்சள்) அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து கொண்டு , கையில் கம்போடு வருகிறார்கள்,

ஊர் கவுடரு யை பார்க்க வருகிறார்கள்,

கம்பளி பொருட்களை தன் சிறசில் வைத்து எடுத்து வருபவர் சேலம் மாவட்டம் குறுமனூரை சேர்ந்த திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள்,

ஊர் கவுடரிடம் வீரகம்பளி சாத்த அனுமதி கேட்பவர் தேனி சத்தியன்,
அவர்களோடு இணைந்து வருபவர்கள்
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள்,

இதில் ஊர் கவுடராக நான் இருந்தேன் மேடையில் நடந்த கலாச்சார நிகழ்வு!

தேனி சத்தியன் குழு: 
கவுடரிடம் வந்து வணங்கி கும்முடுற, என்றார்,

ஊர் கவுடர் அதாவது நான் :
பதிலுக்கு ஆ கும்முற என்று சொல்ல,
பிறகு ஊர்கவுர் அதாவது நான்,
வந்த விவரம் சொல்லப்பா 

தேனி சத்தியன் குழு:
வெற்றி கம்பளம் சாத்தனும்,

ஊர்கவுடர் அதாவது நான்:
விவரம் சொல்லப்பா என்று கேட்கிறேன்,

தேனி சத்தியன்:
நம்ம குல சாமி வாணான் குறுமன், கெம்பி சனாதனத்துக்கெதிரா கொன்றவர்களை எதிர்த்து வெற்றிபெற்ற தொல் திருமாவளவன் அவர்களுக்கு வெற்றி கம்பளம் சாத்தனும் என்னிடம் ( ஊர் கவுடரு) ரிடம் அனுமதி கேட்க்கிறார்கள்,

ஊர் கவுடரு: 
சந்தோஷமப்பா, சேர்ந்தே செய்வோமப்பா என்று ஊர் கவுடரு அனுமதி வழங்குகிறார்,

ஊர் கவுடரு தவைமையில்
சாதனத்தை எதிர்த்து வெற்றிபெற்ற தொல் திருமாவளவன் அவர்களிடம்,
ஊர் கவுடரு தலைவணங்காமல் கும்முறமுங்க சொல்லி,
திருமாவிடம் ஊர் கவுடரு சொல்ல ஆரம்பிக்கிறார்,
எங்க குல சாமி வாணான் குறுமன் கெம்பி சனாதனத்துக்கெதிரா போராடிய வாணான் கெம்பி ( கெப்பி)யை கொன்றவர்களை எதிர்த்து வெற்றிபெற்ற தொல் திருமாவளவன் ஆகிய உங்களுக்கு வெற்றி கம்பளம் சாத்த வந்திருக்கோம் என்று நான் அதாவது ஊர் கவுடரு சொல்ல,

திருமாவளவன் :
எங்க கோரிக்கையை ஏற்க்கிறார்,

ஊர் கவுடரு:
பண்டாரத்தை (மஞ்சள்தூள்) திருமா நெற்றியில் பூசி,
பிறகு
கம்பளி துண்டால் தலைபாகை கட்டி,
வீர கம்பளி ( கம்பளத்தை ) தோலில் சார்த்தி ,
பிறகு
கம்பளி காப்பை திருமாவளவன் அவர்களின் கையில் போட்ட பிறகு,
வீர செங்கொலை கையில் கொடுத்து,
குறி ஆட்டை கொடுத்து , தாய்மார்கள் குழவையிட்டு
குல வழக்கப்படி திருமாவளவன் அவர்களுக்கு நவ தாணியங்கல் திருமாவிற்க்கு வழங்கப்பட்டது,

நம் இனத்தின் குல வழக்கப்படி ஆதி காலத்தில் எப்படி நடந்ததோ அதே போல கொடுக்கப்பட்டது,

பிறகு
தொல் திருமாவளவன் மற்றும்
அமைச்சர் நேரு அவர்களிடம் குறும்பர் இன மக்களின் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது,

கோரிக்கைகள்:-
1) ஆட்டு நல வாரியம் அமைக்க வேண்டும்,
ஆட்டையே தன் வாழ்வியலாக ஆதிகாலம் முதல் மேய்த்து வரும் குறும்பர் இன மக்களை தலைவராக மற்றும் கீழ் மட்டம் வரை குறும்பர் இன மக்களே இருக்க வேண்டும்,

2) தமிழகத்தில் வீடு வீடாக சென்று முறையாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அனைத்து சமூக மக்களின் மக்கள் தொகைக்கேற்ப்ப இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்,

3) புழல் கோட்டைடையை கட்டி ஆண்ட வாணான் குறும்பருக்கு சிலை அமைத்து மணிமண்டபம் அமைக்க வேண்டும்,

4) சிவனின் பக்தர்களாக விழங்கிய
63 நாயன்மார்களில் ஒருவர் பெருமிழழை குறும்ப நாயனாருக்கு,
அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்,

மக்கள் சமூகநீதி பேரவையின் பல கோரிக்கைகளில் நான்கு கோரிக்கைகள் முக்கிய அம்ச கோரிக்கைகளாக முன்னெடுத்து தொல் திருமாவளவன் மக்கள் மேடையில் பாராட்டு விழாவில் அறிவித்தார்கள்,
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்கு இந்த 
சமூகநீதிக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வருக்கு விருது வழங்கும் விழாவில் தொல் திருமாவளவன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கோரிக்கை வைக்க வில்லை, முதல்வர் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று உறுதியளித்தார், திருமா அவர்கள்,
தமிழக வரலாற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடத்தியது மக்கள் சமூகநீதி பேரவை என்பதை வரலாறு சொல்லும்!

மக்கள் சமூகநீதி பேரவை வைத்துள்ள கோரிக்கைகளை விரைவில் முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது,

நன்றி,
அண்ணன் திருமா பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு,

மக்கள் சமூகநீதி பேரவை,
தமிழ் நாடு,

இந்த விழாவிற்கு உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், உணர்வாளர்களுக்கும், மகளிர் அணியினர். இளைஞர் அணியினர்,
நிதியுதவி செய்த உறவுகளுக்கும்,

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விழாவிற்கு வந்திருந்த குறும்பர் இன மக்களுக்கு கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,

அடுத்த அரசியல் மாற்றத்தை உருவாக்கும் கூட்டம்!இது


Comments

  1. Simply waste... !
    தனியா நிக்க பாருங்க.... அப்பறம் இந்த ஈ.வெ.ரா -வை தூக்கி புடிச்சி நம்ம சமூகத்தின் மானத்தை வாங்காதீங்க...!!! இதோடு நிறுத்தி கொள்ளுங்கள், இல்லையென்றால் மக்கள் சமூக நீதி பேரவை அமைப்பு னு மட்டும் so called write-up எழுதுங்க.... ஒட்டுமொத்த சமுதாய பெயரை குறிப்பிடாதீர்கள்...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!