பழங்கால தமிழும் குறுபா மொழியும்:-

பழங்கால தமிழும் குறுபா மொழியும்:- ஒரு மொழி சிதைவதால் மாற்றத்தால் மற்ற மொழிகள் உருவாகும், இது உலக நியதி உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுமே அப்படி தோன்றும், அது போல குறுபா மொழியும் (Kuruba) பழங்கால தமிழ் வார்த்தைகள் சிதைய வழக்கொழிய வேறு மொழியாக மாற்றமடைந்து இருக்க வேண்டும், இல்லை தமிழ் போல் அதே வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம், ஏன்னா இப்படியோ அப்படியோன்னு மொழி விசயத்துலே ஒற்றை ஊகம் பலன் தராது, எனவே மற்றொரு ஊகத்தையும் கூறினேன், ஆனால் என்னை பொறுத்த வரை பழங்கால கொடுந்தமிழ் பல்லவர்கள் (Pallavarkal Kurubar) பேசி வந்த பிராக்கிருத மொழியுடன் கலந்து உருவானதே குறுபா (Kuruba) மொழின்னு கணிக்கிரேன், சரி தமிழில் ஒரு தன்மை இருக்கிறது, பழயன கழிந்து புது வார்த்தைகள் தோன்றி கொண்டே, இருக்கும். அவ்வாறு பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த வார்த்தைகள் குறுபா மொழியிலேயும் (Kuruba) 50% பழங்கால தமிழ் வார்த்தைகளுக்கு மேல வருதுன்னு சொல்லலாம் கூட சதவீதமே தரலாம், குறைந்த பட்சம் 50% பழங்கால தமிழ் வார்த்தைகள் னு சொல்ரேன், குறுபா(Kuruba) மொழியில மட்டும் இல்லே, தோடா,இருளா,படுகா,குடகு இந்த மொழிகளுல...