குறும்பர் உருவாகிய விஜயநகரப் பேரரசு

குறும்பர் உருவாகிய விஜயநகரப் பேரரசு
விஜயநகரப் பேரரசு(Vijayanagara Perarasu)
விஜயநகரப் பேரரசு(Vijayanagara Perarasu - Kurumbar) இந்தியாவின் தக்காணப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இது 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் ஆகியோரால் துங்கபத்திரை ஆற்றங்கரையில் நிறுவப்பட்டது. இவர்களின் தலைநகரம் ஹம்பி ஆகும். இப் பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 1565 ஆம் ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது.
சங்கம மரபு
சாளுவ மரபு
துளுவ மரபு
அரவிடு மரபு
சங்கம மரபு
முதலாம் ஹரிஹரர் (கி.பி. 1336-1356) விஜயநகரப் பேரரசை (Vijayanagara Perarasu - Kurumbar) நிறுவியவர் ஆவார். ஹக்கா, வீர ஹரிஹரர் போன்ற பெயர்களாலும் அறியப்படும் இவர் குறும்பர் (kurumbar) இனக்குழுவைச் சேர்த்த வலிமை மிக்க வீரர்கள், சங்கம மரபைத் தொடங்கியவருமான பாவன சங்கமரின் மூத்த மகனாவார். சங்கம மரபு, விஜயநகரப் பேரரசை(Vijayanagara Perarasu - Kurumbar) ஆண்ட நான்கு மரபுகளுள் முதலாவதாகும். ஆட்சிக்கு வந்த உடனேயே தற்காலக் கர்நாடகத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள பர்கூரு என்னுமிடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டினார். இவர் 1339 இல் அனந்த்பூர் மாவட்டத்திலுள்ள குட்டி (Gutti) என்னும் தனது தலைமையிடத்திலிருந்து இன்றைய கர்நாடகத்தின் வடக்குப் பகுதிகளை நிர்வகித்து வந்தது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவர் தொடக்கத்தில், ஹொய்சால அரசின் வடக்குப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகத் தெரிகிறது. பின்னர் 1343 இல் ஹொய்சால அரசன் மூன்றாவது வீர பல்லாலனின் மறைவைத் தொடர்ந்து ஹொய்சாலம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
விஜயநகரப் பேரரசை(Vijayanagara Perarasu - Kurumbar) நிறுவிய முதலாம் ஹரிஹரர்  இவர்கள்
சங்கம மரபு என்பார்கள்
பல்லவ தேசத்தில்(Pallavavarkal - Kurumbar) குறுநில குடிகள் குறும்பர்(Kurumbar) இனத்தை சேர்தவர்கள்
சோழர்களால் பல்லவ தேசத்தில் இருந்து விரட்ட பட்ட குறும்பர்கள்(Kurumbar) மரபு தான்
விஜய நகரத்தில்(Vijayanagara Perarasu - Kurumbar) முதல் ஆட்சி செய்த சங்கம மரபு  குறும்பர்கள்(Kurumbar) தான்
குறும்பர்கள்(Kurumbar) யார் அருவாளர் குடிகள்
கண்ணபிரானிடத்தில் அகத்தியர் சென்று அவர் இனத்தவராகிய பதினெண்குடி
வேளிரையும் அருவாளரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து குடியேற்றினார்
என்று தொல்காப்பிய உரையிலே நச்சினார்க்கினியர் கூறுகிறார்:
அகத்தியர் தென்னாடு போதுகின்றவர் '' துவராபதிப் போந்து நிலங்கடந்த
நெடுமுடியண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டு
போந்து '' காடுகெடுத்து நாடாக்கிக் குடியேற்றினார் என்று கூறுகிறார்;
(தொல்: எழுத்து, பாயிரம் உரை)
அருவாளர் குடிகள் தான் குறும்பர்{Kurumbar} என்று என்று அறியப்படுகிறது
குறும்பர் மொழி குறும்பா மொழி(Kuruba - Kurumbar) இருக்கலாம் இவர்கள் வேளிர் நாகரிகத்தின் வழி வந்தவர்கள்
இவர்கள் பூர்வீகம் தொண்டைமண்டலம்
பல்லவ தேசத்தில் புழல் கோட்டத்தில் வாழ்ந்த குறுநில குடிகள் சோழர்களால்
விரட்ட பட்ட இந்த குடிகள் எங்கே
சோழர்கள் பல்லவ நாட்டை கைப்பற்றியா பின் சோழனுக்கு கட்டுப்பட்ட
பல்லவர்கள்(Pallavarkal - Kurumbarkal) பாணர்கள் குறுநில மன்னராக சோழனுக்கு கட்டு பட்டனர்
சோழனுக்கு கட்டுப்படத பல்லவர்கள்(Pallavarkal - Kurumbarkal) பாணர்கள் குறும்பர்கள்(Pallavarkal - Kurumbarkal)

கர்நாடகாவிற்க்கு சென்று இருக்கவேண்டும்

Comments

  1. சகோதரர் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு எனது அன்பான வணக்கம், நன்றியும்.
    தனது நேரங்களில் தன் இனத்திற்கான வரலாறுகளை தேடி அறிந்து அவற்றை வடிவமைத்து எழுதி உறவுகளுக்கு வெளிப்படுத்தி இருக்கக்கூடிய நற்பண்புகளை நான் வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.
    அருமை !
    உங்களது பணி மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆதாரமாக ஏதவது சமர்பித்தால் இருக்கும் நன்றாக

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!