குறும்பர் இன மக்களின் ஒப்பற்ற சரித்திர நாயகன் நஞ்சப்ப கவுண்டர்!!!

ஒப்பற்ற சரித்திர நாயகன் நஞ்சப்ப கவுண்டர்!!!
############################
இன்று குறும்பர் சமூக தந்தை அமரர் திரு.நஞ்சப்பகவுண்டர் (04-02)அவர்களின் 122வது பிறந்த நாள்..இன்று அவர் பிறந்த நாளில் ந.நஞ்சப்ப கவுண்டர் அறக்கட்டளை சார்பில் நம் சமூக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.. இவ்விழாவில் பங்கு கொண்டபோது தான், அமரர். நஞ்சப்பகவுண்டர் குறும்பர் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகளைப் பற்றி தெரிந்து கொண்டு மனம் நெகிழ்ந்தது..ஆகையால் அவர் பிறந்த தினத்தில் இன்று அவரைப்பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்... கோவையில் 1897ஆம் ஆண்டில் பிறந்து 1962ல் தனது 65 வயதில் இன்னுயிர் நீத்த தர்ம பூசணம், சமூக தந்தை நஞ்சப்பகவுண்டரை நம்மில் பலருக்கும் பார்த்திருக்க வாய்ப்பில்லை...அவரால் பயனடைந்த பலரும் பல விசயங்களை தெரிவித்தனர்...இளமையிலேயே பொது நோக்குடன்,பரந்த மனப்பான்மையுடன் குறும்பர் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட ஆரம்பித்திருக்கிறார்..1938 லேயே,80 ஆண்டுகளுக்கு முன்பே கோவை குறும்பர் சங்கத்தை துவக்கி சமூதாய பணிக்கு வித்திட்டிருக்கிறார்..
குறும்பர் சமூக அன்பர்களிடம் வீடுதொறும் பிடி அரிசி வாங்கி சேர்த்து பின்பு அதை விற்றுபணமாக்கி சங்க இடம்- குறும்பர் சந்தில் வாங்கி,சமூக மக்களின் கல்வி அபிவிருத்திக்கு இரவு நேர பாடசாலை நடத்தி பலரையும் முன்னுக்கு கொண்டுவந்துள்ளார்.அங்கு இரவு நேர டியூசன் கற்ற பலரும் பெருமையுடன் தங்களின் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்..பலருக்கும் பள்ளி முதல் கல்லூரி கல்வி வரை முழுஉதவித்தொகை அளித்து படிக்க உதவியுள்ளார்.தன்னுடன் சேவை செய்த அறநெறி செம்மல். திரு.வை.க.பழனியப்பகவுண்டர்ருடன் பல கிராமங்களுக்கு பல நாட்கள் கால்நடையாகவே பயணம் செய்து கல்வியின் அவசியத்தை எடுத்து கூறி பிற்போக்கு எண்ணங்களை மாற்ற அரும்பாடு பட்டுள்ளார்கள்..
3 முறை போட்டியின்றி வார்டு கவுன்சிலராக பணியாற்றி, தன்பெரும் முயற்சியால் குட்டையை "காந்தி பார்க்" ஆக மாற்றிய காந்தியவாதி.வார்டு மக்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு,மாநகராட்சி மருத்துவ மனைகள், முத்தண்ணன் குள ஏரி சாலை என பல...
1950லேயே கோவை மாவட்ட குறும்பர் மாநாட்டை மைசூர் சமஸ்தான அமைச்சர் திரு.டி.மரியப்பா B.A, L.L.B., தலைமையில் நடத்தி அண்டை மாநில உறவை பலப்படுத்தியுள்ளார்.பின்னாளில் 1952ல் திரு.மரியப்பாவை சந்தித்து, கோவையில் பெரும்பாலும் விவசாய கூலியாக இருந்த நம் மக்களுக்கு கர்நாடக மாநிலம் உன்சூர் தாலுக்காவில் நிலம் பகிர்ந்தளி்க்க ஏற்பாடு செய்து, சுமார் 300 குடும்பங்களை குடியமர்த்தி கூட்டுறவு முறையில் விவசாயம் செய்ய தன் மருமகன் திரு.ராமசாமிB.Com ஐ அனுப்பி ஆயத்த பணிகளை தொடங்க செய்து "கோயமுத்தூர் காலனி"யை உருவாக்கியுள்ளார்..
இன்னும் அவர் ஆற்றிய பணிகள் நாம் அறியாதது எத்தனையோ!! இந்நாளில் அவர் நினைவு போற்றி அவர் வழியில் இயன்றளவு நம் சமுதாயத்தின் கல்வியையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த தோள் கொடுப்போம்..🙏
ந.நஞ்சப்ப கவுண்டர் நினைவு கல்வி அறக்கட்டளை,
குறும்பர் சந்து,கோவை..

Comments

  1. மகானுக்கு என் முதல் வணக்கம். நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சிப்பூ பூக்கிறது ஐயா. சிதரிக்கிடக்கும் நம் சொந்தங்களை ஒன்று சேர்க்கச் சங்கக் கூட்டத்தின் போது என முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். நன்றி, இவண் முனைவர் சு. செந்தாமரை, தமிழ் உதவிப்பேராசிரியா், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூா். செல்பேசி - 9894368729.

    ReplyDelete
  2. நன்றி குறும்பர் சந்தில் உள்ள குறும்பர் சங்கம் நடத்திய மாலைநேர பாடசாலையில் பாடம் பயின்ற மாணவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி. கைப்பிடி அரிசி கொடுத்ததிலும்.தானம் பெற்ற அரிசியை ஏலத்தில் வாங்கியதிலும்.என் தந்தையின் பங்கு உள்ளது என்பதில் மகிழ்கிறேன்.நன்றி சமுதாயம் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்!வாழ்கவளமுடன்! வாழ்கவளமுடன்!

    ReplyDelete
  3. Na Nanjappa Gowder wrong Information in news
    contact Cell No 9942088808

    ReplyDelete
  4. இப்போதும் சங்கம் அதே இடத்தில் உள்ளதா என அறிய விரும்புகிறேன்.
    தொடர்புக்கு. 9443201144

    ReplyDelete
  5. இப்போதும் சங்கம் அதே இடத்தில் உள்ளதா என அறிய விரும்புகிறேன்.
    தொடர்புக்கு. 9443201144

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!