போர் முறையை அறிமுகப்படுத்தியது குறும்பர்கள்:


போர் முறையை அறிமுகப்படுத்தியது குறும்பர்கள்:
நிலத்தினை ஐந்து வகைகளாக பண்டைய தமிழ் சமூகம் பகுத்துள்ளது. இவற்றில் குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடம் எனவும்; மருதம் என்பது வயலும் வயல்கள் சார்ந்த இடத்தினையும்; முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடங்களும் குறிக்கும். குறும்பு என்றால்
காடு என்று பொருள் காடும்
காடு சார்ந்த பகுதில்  வாழ்பவர்களை குறும்பர்(Kurumbar) என்று அழைக்கும் பழக்கம் உருவானது
.
ஆடு, மாடு மேய்த்தலில், விலங்குகளோ விலங்கு குணம் கொண்ட கள்வர்களோ வந்து தங்களது கால்நடைச் செல்வங்களை அபகரிக்க வந்தால், அவர்கள் உயிருடன் திரும்பாத அளவிற்கு தங்களது உயிரையும் பொருட்படுத்தாது போர் புரிவார்கள் குறும்பர்கள்(Kurumbar) கோவலர்கள்(கோ காவலர்கள்) செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்! கோத்தொழில் என்றால் 'அரச வினை' என்கிறார் நாட்டார். அதாவது அரசனின் ஏவல்களைச் செய்பவன். செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்! ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!
போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத்தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! பசுக்களைக் காக்கும் முல்லை நில மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலர் என்ற பெயர் முல்லை நிலத்தில்  தோன்றியது தான்!
ஆநிரை-கவர்தளை தொழிலாக கொண்டவர்கள் குறும்பர்கள்(Kurumbar) என்று பல வரலாற்று ஆசான்கள் ஒப்புக்கொள்கிறார்கள் .

மேலும்  கொற்றவை வழிபடும் குறும்பர்(Kurumbar)  குல மக்களின் வழிபாட்டு முறை என்றும்  கூறுகிறார்கள்..
காங்கேய நாட்டு பட்டாலியில் காவலன் குறும்பில்லரில்(Kurumbar)  போடன் மனைகிழத்தி கோவி ..நாயனார் ..'
(1920:271,கிபி 1285,பட்டாலி ஊர் காங்கேயம் )
குறும்பில் -குறும்பிலர்-குறும்பில்லர்(Kurumbar)
'கொடு வில் எயினக் குறும்பில் செப்பின் '(பெரும் பாண் -129)
'வில்லோர் குறும்பில் ததும்பும் 'அகம் -261:14
குறும்பில்லர் குறும்பர்(Kurumbar) கூட்டத்தை பட்டாலி குறும்பர்(Kurumban) கூட்டம் என்று அழைக்க பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது .

குறும்பர்களின்(Kurumban)போர் தெய்வம் கொற்றவை:
கொற்றம் என்பது வெற்றி. வெற்றி தந்தவரைப் போற்றுதல் கொற்றவை நிலை,
வெற்றித் தெய்வமாகக் கொற்றவையை வழிபடுதலும் குறிஞ்சித்திணையின் புறம் என்று தொல்காப்பியம் கூறுகிறது

வெட்சி திணை:
ஒரு நாட்டின் வீரர் தன் அரசன் ஆணைப்படி சென்று பகை நாட்டினரின் பசுக்கூட்டங்களை (ஆ நிரைகளை) கவர்ந்து வந்து காத்தல் இத்திணையாகும்.
வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
தொல்காப்பியப் பார்வையில் புறத்திணைகளில் ஒன்றான வெட்சித்திணையானது அகத்திணையில் ஒன்றான குறிஞ்சித் திணையின் புறம் எனக் குறிப்பிடப்படுகிறது.
அக்கால மக்கள் வாழ்வில் ஆடு, மாடு தொழில் மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருளாதாரம் பெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆதலின் ஒரு நாட்டின் ஆ நிரைகளை கவருவது அந்நாட்டை பொருளாதார வகையில் தாக்குவதாகும், எனவே, ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகையில் அந்நாடின் ஆ நிரைகளைக் கவருவது போரின் முதல் நடவடிக்கை.குறும்பர்(Kurumban)ஆநிரை கவர்வதில் வல்லவர்
மேலும், ஆரம்ப காலங்களில் மக்கள் சிறு கூட்டங்களாய் வாழத்துவங்குகையில் தங்களோடு ஆ நிரைகளையும் பேணி வந்தனர், இரண்டு சிறு குடிமக்களுக்கிடையே போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளைக் கவருவதே இயல்பு, இதுவே பிற்காலப் பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது. மேலும், தீங்கில்லா உயிர்களைத் தங்கள் போர்த்தொழிலால் வருத்தாமல் தவிர்க்கவும்  ஆநிரைகளைக் கவர்ந்து அவற்றை பாதுகாத்தனர் எனவும் உரைக்கலாம்.பகைவரின் ஆ நிரைகளை கவருவதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் வெட்சிப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. வெட்சி ஒருவகை மரமாகும், அது சிவந்த நிறமுடைய பூக்களைக் கொண்டது.

கரந்தை திணை:
கவர்ந்துசென்ற ஆ நிரைகளை மீட்பதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் கரந்தைப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. கரந்தை என்பது கொட்டைக் கரந்தை என்னும் ஒரு பூண்டு வகையாகும்.

உண்டாட்டு:
உண்டாட்டு என்பது பகைவரை வென்று ஆ நிரைகளை கவர்ந்துவந்த வீரர்கள் வெற்றிக் களிப்பில் மது உண்டு ஆடுவதாகும்.
குறும்பர்கள் முல்லை நிலத்தின் பூர்வீககுடிகள்(Mullai Nilathin Poorvakudumakkal Kurumbar)  காடு அழித்து நாடாக்கி மன்னர்களாக ஆட்சிபுரிந்தனர்.கடையெழு வள்ளல்களும் இமக்களே குறும்பர்(Kurumban) வேளிர்கள் கால்நடை வளர்ப்பினராகவும் போர் மறவராகவும் இருந்துள்ளனர். சங்க இலக்கியத்தில் வேளிர்க்கும் கால்நடை வளர்ப்பிற்குமிடையில் உள்ள தொடர்பு பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன. ஆனால் வேளிர் பற்றிப் பின்னாளில் கூறப்படும் மரபுத் தோற்றக் கதை அவர்களின் தொழிலைச் சுட்டுகின்றது. வேளிர்கள் அனைவரும் தங்களை குறும்பர்கள்(Kurumban) என்று கூறிக்கொள்வது கால்நடை வளர்ப்புக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பினை காட்டுகிறது..

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!