பழனி ஆயக்குடியில் குறும்பர் ஆய்வேளிர்மன்னர்களின் சங்ககாலக் கோட்டை

பழனி ஆயக்குடியில் குறும்பர் ஆய்வேளிர்மன்னர்களின் சங்ககாலக் கோட்டை
திண்டுக்கல்,
பழனி ஆயக்குடியில் குறும்பர் ஆய்வேளிர்மன்னர்களின் சங்ககாலக் கோட்டையாகும்
ஆயக்குடி ஊரின் தென்மேற்கு பகுதி வயல்வெளியில் ஒரு மண் மேடுஉள்ளது. இந்த மண் மேட்டில்  கி.பி.3ஆம் நூற்றாண்டில் அதாவது சங்ககாலத்தின் இறுதி பகுதியில் அழிந்துப்போன கோட்டை இது என அறியப்படுகிறது.
மண்ணாலும், பாறாங்கற்களாலும், செங்கற்களாலும் இந்த கோட்டை கட்டமைக்கப்பட் டுள்ளது. வட்ட வடிவில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கோட்டை அமைந்துள்ளது. கோட்டையைச் சுற்றியுள்ள அகழிகளில் மண்மேவிக் கிடக்கிறது.
கோட்டைக்குள் சங்க கால மக்கள்குடியிருந்ததற்கான தடயங்கள் ஏராளமாக கிடைத் துள்ளன. உடைந்த மண் பானைகள், கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், நகக்குறி ஓடுகள், சங்கிலி ஓடுகள் கிடைத்துள்ளன. சில செங்கற்களில் கூட குறி யீடுகள் கிடைத்துள்ளன. சுட்ட செங்கற்கள் மிக உறுதியாக உள்ளன. சிறுவர், சிறுமியர் விளையாடும் காடான் விளை யாட்டுக்கு (தற்போது விளை யாடும் பாண்டி ஆட்டம்) வட்ட வடிவிலான ஓடுகள் நிறைய கிடைத்துள் ளன. களிமண்ணால் செய்யப்பட்ட மண் மூடிகள், உடைந்த அகல் விளக்குகள், கூரை வேயப்பட்ட வேலைப் பாடுகள் நிறைந்த ஓடுகள்கிடைத் துள்ளன.
இந்த கோட்டைக்குள் இருந்த அரண்மனை, கூரை ஓடுகளால் வேய்ந்த அரண்மனையாக இருக்க வாய்ப்பு உள்ளது என தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். கோட்டைக்குள் வளவளப்பான தேய்ப்புகற்கள் நிறைய கிடக்கின்றன. சங்ககால மக்களின் உணவு மற்றும் மருந்திற்காக இலை, தழை மற்றும் வேர்களை அரைக்க இந்த தேய்ப்புகற்கள் பயன்பட்டுள்ளன. ஒரு தேய்ப்பு கல்லில் கூ என்று பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்லின் உடைமையாளர் பெயராக இருக்கலாம்.
கூத்தன்,கூற்றுவன், கூனன் என்ற பெயர் களில் தொடங்கும் முதல் எழுத்தாகஇருக்கலாம். இந்த கூ என்ற தமிழ்பிராமி வரிவடிவத்தில் இருந்து வட்டெழுத்தாக மாறிய காலக்கட்டத்தில் அதாவது கி.பி.3ஆம் நூற்றாண் டளவில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆயக்குடியில் சங்க கால குறும்பர் ஆய் வேளிர் மன்னர்கள் ஆண்டதற்கான சான்றுகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே இந்த குறும்பர் ஊர் ஆயக்குடி என்றபெயர் பெற்றது. பழனி, குறும்பர் ஆய்வேளிர் மன்னர்கள் ஆண்ட பகுதி. ஆகவே தான் பழனி ஆவினன்குடி என்று அழைக்கப்படுகிறது. இரண்டு வேளிர் (குறும்பர்) மன்னர்களுக்கு இடையே நடந்த போரில் இந்த கோட்டை அழிந்திருக்கலாம். அல்லது இப்பகுதியில் களப்பிரர்கள் படையெடுப்பால் கி.பி. 3ஆம் நூற்றாண்டளவில் இந்த கோட்டை அழிந்து போயிருக்கலாம் என்று  தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மேலும் இந்த கோட்டைக்குள் ஒரு கொற்றவை சிலையும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!