மக்கள் சமூகநீதி பேரவை

ஏன் குறும்பரின மக்கள் அனைவரும் மக்கள் சமூகநீதி பேரவையில் சேரவேண்டும்?
தமிழகத்தில் 30லட்சத்திற்குமேல் உள்ள குறும்பரினம் பாதுகாப்பற்று, அடையாளம் இழந்து, முன்னேற்றமின்றி இருப்பதை மாற்றிட, குறும்பரினம் சமூக, அரசியல், அதிகாரம் பெறுவது மட்டுமே தீர்வு என முழங்கி அதற்கான செயல் திட்டம் வகுத்து செயல்படுவதால் 
குறும்பரினம் போன்ற பழந்தமிழின குழுக்களை வந்தேரிகள் அதனால் குறும்பர்களுக்கு இட ஒதுக்கீடு, அரசியல் பிரதிநித்துவம் வழங்கக்கூடாது எனக்கூறும் சமூக பாசிஸ்ட் சீமான் போன்றவர்களின் தவறான குறுங்குழு வாதத்தை முறியடித்து, குறும்பர்கள் குறிஞ்சி, முல்லை நிலத்து பழந்தமிழர்களே, குறும்பர்கள் என்றும், குறும்பர்மொழி ஆதித்தமிழின் வட்டாரமொழி என்றும், தமிழகத்தின் பண்பாட்டினை, வரலாற்றினை காக்க தன்னையை அர்ப்பணித்த இனம் வீரஞ்செறிந்தகுறும்பரினம் என வரலாற்று ஆதாரத்துடன் பேரவை நிரூபிப்பதால்
பேரவை தனிநபர் துதிபாடுவதை நிறுத்தி கூட்டுதலைமையினை போற்றுவதால் 
ஊழல் ஒழித்து. விவசாயம் காத்து, சமூகநீதிவென்று தமிழகம் காப்போம் என உயர்ந்த அரசியல் நெறியை உரக்கச்சொல்வதால் 
பழந்தமிழினமான குறும்பரினத்தின் வரலாற்று நாயகர்களான வாணான்குறும்பன், குறும்பஆதித்தன், குறும்பகோமான், கோட்டிலிங்குறும்பன் போன்றோர்களின் வரலாறும், வாழ்வியலுமே தமிழ்நிலமான முல்லை நிலத்தின்வீர உண்மைவரலாறு என உலகறிய சொல்வதால்
குறும்பரினத்தை தமிழ்பொதுச்சமூகத்தோடு இணைப்பதால் 
குறும்பரின மக்களை தன்னலமற்றஇளைஞர்களின் தலைமையில் சரியான அரசியல் பாதையினை நோக்கி வழிநடத்துவதால் 
பழந்தமிழர் நெறியான “ஆசீவகம்” காக்க வீரமரணம் அடைந்த கெப்பியை பழந்தமிழினத்தாயாக போற்றுவதால்
குறும்பரினமக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், உடனே அந்த மக்களின் துயர்துடைக்க, உரிமைக்கு குரல்கொடுக்க போர்வாளாக பேரவை மட்டுமே செயல்படுவதால்
பேரவையின் வளர்ச்சியே, குறும்பரினமக்களின் வலிமையாக இருக்கும் என்பதால்

மக்கள் சமூகநீதி பேரவை
தமிழ்நாடு

Comments

  1. அருமையான பதிவு 👍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!