அரசியல்அதிகாரம் என்றால் புரிகிறது. சமூகஅதிகாரம் என்றால் என்ன? அதற்கு மக்கள் சமூக நீதி பேரவை என்ன செயல்திட்டத்தை வைத்துள்ளது?

அரசியல்அதிகாரம் என்றால் புரிகிறது. சமூகஅதிகாரம் என்றால் என்ன? அதற்கு மக்கள் சமூக நீதி பேரவை என்ன செயல்திட்டத்தை வைத்துள்ளது?           
குழுமம் சொல்லின் திரிபே சமூகம் ஆகும். பல இனக்குழுக்கள் அல்லது சாதிகள் ஒன்றிணைந்ததே குழுமம் ஆகும். பல இனக்குழுக்கள் அவர்களுக்கான கூட்டுப்பங்களிப்பினை செலுத்துவதும், அதிலிருந்து பெற்றுக்கொள்வதுமே குழுமத்தினுடைய தார்மீக நெறி. இதனுடைய நிர்வாக பரிணாமம்தான் நாடும், அரசும், அரசாங்கமும். 
ஒரு இனக்குழுவின் மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் அதிகார பிரதிநித்துவம் வழங்கப்படவேண்டும். அதை பெறுவதே அந்த இனக்குழுவின் அரசியல் அதிகாரம். 
சமூகஅதிகாரம் என்பது அரசியல் அதிகாரத்தோடு மறைமுக தொடர்பு கொண்டது. ஒரு இனக்குழு தன்னுடைய மக்கள் எண்ணிக்கையின் வலிமையினையும், தன்னுடைய தனித்த வரலாறு, பண்பாட்டு பெருமிதங்களை பொதுச்சமூகத்திற்கும், தேசத்திற்கும் உணர்த்துவதும், அதன் வாயிலாக அந்த இனக்குழுவின்மீதான பொதுசமூகத்தின் மதிப்பீடும், அதன் விளைவாய் உருவாகும் கௌரவமும், பாதுகாப்புமே ஒரு இனக்குழுவின் சமூகஅதிகாரமாகும்.
 குறும்பரின மக்களின் சமூகஅதிகாரத்தை பொதுச்சமூகத்திடையே வெளிப்படுத்துவதற்காகத்தான் பேரவை வீரத்திருமகள் கெப்பி ஒலிப்பேழை வெளியீடு, கோட்டிலிங்ககுறும்பன் உருவப்படம் வெளியிட்டது. வாணான்குறும்பன், குறும்பஆதித்தான், குறும்பகோமானுடைய வரலாறுகளையும், அவர்களின் திருவுருவப்படங்களையும் வெளியிடுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருவதற்கான காரணம்.
அதைவிட முக்கியம் தமிழகத்தில் ஒட்டுமொத்த குறும்பரின மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு திருவிழாவை ஒரேநாளில் நடத்துவதன்மூலம் இந்த தேசம் மற்றும்  பொதுசமூகத்தின் மத்தியில் நம்மக்களின் வலிமையினையும், பிரமாண்டத்தையும் வெளிப்படுத்தி நம்மக்களை வீறுகொண்டு எழவும் எழுச்சிக்கொள்ளவும் செய்யமுடியும். இந்த நிகழ்வே சமூக அதிகாரமாக உறுமாறும். தொழிலாளர்களின் உணர்வுகளை எழுச்சிகொள்வதற்கு மேதினம் உதவியதுபோல், வௌ;ளையர்களுக்கு எதிராக இந்துக்களை எழுச்சிக்கொள்வதற்கு பாலகங்காதரதிலகரால் விநாயகர்சதுர்த்தி திருவிழா உருவாக்கப்பட்டதுபோல தமிழக ஒட்டுமொத்த குறும்பர்களை ஒருங்கிணைப்பதற்கு தமிழகம் முழுக்க ஒரு திருவிழாவினை குறும்பர் மக்கள் கொண்டாடுவதற்காக பேரவை செயல்திட்டம் வகுத்துக்கொண்டிருக்கிறது. விரைவில் நடைமுறைக்கு வரும்.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!