ஆதிதமிழர் தொல்குடி இனமான குறும்பர் பெயர் காரணம்.

ஆதிதமிழர் தொல்குடி இனமான குறும்பர்(Kurumbar) பெயர் காரணம்.
கூர்மையான அம்பு வைத்திருப்பவன்.
கூர்+அம்பு+அவன் மேற்கண்ட சொற்கள் புணர்ந்ததும், திரிந்தும்
குறி+அம்பன்=குறும்பன்(Kurumban)எனப் பெயர் மாற்றம் கண்டது.
குறிஞ்சி, முல்லை, இனத்து மக்களான குறும்பர்களுக்கு(Kurumbar)கூர்மையான அம்பே பாதுகாப்பு கருவி . அம்பே தன் தொழிலுக்கான கருவி.
அம்பே தன் வாழ்வியல் துணை.
காட்டிலே வேட்டையாடிய அம்பு.
களத்தில் பகையாளியை வென்றிட வேலாகியது.
தன் அறிவுச்செழுமையை ஏட்டில்க்காட்ட அம்பே எழுதுகோலாகிறது.
மாந்தையிலே ஆடுகளை பராமரிக்க கம்பாகி, நாடாளுவதற்கு செங்கோலாகியது என்பது அம்பின் பரிணாமம்.
அந்த கூரிய அம்பினை தன்னகத்தே கொண்ட நம் முன்னோர் களுக்கான காரணப்பெயரே குறும்பன்(Kurumban)என்பது நம் இனப்பெயரின் வரலாறு.
ஆதாரம்:
ஹெய்மண்டார்ப் (1952),
காப் & ஹாக்கிங்ஸ் (1989);
சுவலபில் (1998)
ஹாக்கிங்ஸ் (1989):2333, செல்லப்பெருமாள் 2005:68
தமிழக பழங்குடிகள்- பக்தவச்சலபாரதி பக்கம் 82,83.

Comments

  1. Ana tamil pesama Namma kannada thana persom.. en???

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

மருதநிலத்தின் மக்கள்