குறும்பர் இன பழங்குடி மக்களின் சேவையாட்டம்

#குறும்பர் இன பழங்குடி மக்களின் சேவையாட்டம் ____________________________________ ____________________________________ குறும்பர் பழங்குடி மக்களின் முக்கியக் கலை சேவையாட்டம் ஆகும் . சேவையாட்டம் என்பது 6 பேர் / 8 பேர் / 10 பேர் கொண்ட குழுவாக இணைந்து ஆடும் ஆட்டமாகும் . தப்பட்டை (மகுடம்), புல்லாங்குழல் முதலிய வாத்தியங்களினால் இசைக்கப்பட்டு ஆடப்படும் ஆட்டமாகும் . கால்நடை வளர்ப்புச் சமுதாயமாகக் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்த ஓர் இன மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கலை வடிவம். கைகளில் உண்மையான 2 அடி வாளுடன் ஆடப்படும் பாரம்பரியமான கலையாகும் . பல கலைகளுக்கு அரசர்களின் ஆதரவும் அவர்களுக்குப் பின்னர் செல்வந்தர்களின் ஆதரவும் இருந்து வளர்த்து எடுத்திருக்கின்றனர் . ஆனால் ஒரு பழங்குடியின மக்களின் கலை காலங்காலமாகக் காப்பாற்றப்பட்டு இன்றும் அதைப் பாதுக்காத்து வருகின்றவர் சாதாரணக் கால்நடைகளை வளர்க்கும் பழங்குடியின மக்கள் தங்களின் கலை பண்பாடு பழக்க வழக்கங்களைத் தங்களின் உயிரினும் மேலாகக் கருதிப் போற்றிப் பாதுக்காத்து வந்திருக்கின்றனர் . தங்களது தொல்பெரும் கலையைச் சிற்பங்கள் ம...