குறும்பர் இன பழங்குடி மக்களின் குனவே பினிசல் என்னும் பாலகிரி நோய் மந்திர மருத்துவம்-2

குறும்பர் இன பழங்குடி மக்களின் குனவே பினிசல் என்னும் பாலகிரி நோய் மந்திர மருத்துவம்-2

குறும்பர் இன பழங்குடி மக்கள் பழங்காலத்தில் மந்திரம் என்பதனையே ஒரு தொழிலாகக் கொண்டிருந்தனர் என்றும் அக்கலையில் தேர்ச்சி பெற்றவர் என்றும் கருதப்படுகின்றனர் . தற்காலச் சூழலில் இக்கலையில் முழுமையாக ஈடுபாடற்று காணப்படுகின்றனர் .

 இதற்கான காரணமென சமூகச் சூழலில் மாற்றத்தினையே சுட்டிக் காட்டலாம் .

குறும்பர் பழங்குடி இனத்தைத் தவிர்த்து பிற பழங்குடிகளிடம் மந்திர மருத்துவம் என்பது மிக சொற்ப அளவில் காணப்படுகிறது..

குனவே பினிசல்


 குறும்பர் இனத்தில் ' குனவே பினிசல் ' எனக் கூறுவது குழந்தை பினி எனப் பொருள் கொள்ளலாம் . இந்நோயை ' பாலகிரி ' எனவும் கூறுகின்றனர் . இந்நோய் மிகக் கடுமையான நோயாகக் கருதுகின்றனர் . இந்நோய்க்கு மருத்துவம் செய்யத் தகுந்த மருத்துவரையே நாடுகின்றனர் .

 நோய் ஏற்பட காரணங்கள்

பாலகிரி எனப்படும் குனவே பினிசல் நோய் ஏற்பட முக்கியமானதாக இரண்டு காரணங்கள் என கூறுகின்றனர் . 

அவையாவன : 

1 . பெண்கள் தகாத முறையில் கர்ப்பம் அடைந்துவிட்டு , பின்பு தவறான முறையை உணர்ந்து அக்கர்ப்பத்தைக் கலைத்துவிட்டு வரும் சூழ்நிலையில் குழந்தைகள் உள்ள வீட்டிற்குள் வந்தால் , அக்குழந்தையை பாலகிரி நோய் தாக்கும் . 

2 . ஆண்கள் விலைமாதர்களிடம் உறவு கொண்டுவிட்டு வந்தவுடன் தம்மை தூய்மையாக்காது , அதாவது குளிக்காமல் எதாவது குழந்தையைத் தொட்டுத்  தூக்கினாலோ அல்லது அருகில் சென்றாலோ அக்குழந்தைக்குப் பாலகிரி நோய் ஏற்படும் எனக் கூறுகின்றனர் .


நோய் தாக்கும் இலக்குகள் 

குனவே பினிசல் எனப்படும் ' பாலகிரி ' நோய் குழந்தைகளை மட்டும் தாக்கக்கூடிய நோய் எனக் கருதுகின்றனர் . பெரும்பாலும் ஐந்து மாதம் நிரம்பிய குழந்தையிலிருந்து இரண்டு வயதுடைய குழந்தைகள் வரை இந்நோய்க்கு ஆளாகின்றனர் எனக் குறிப்பிடுகின்றனர் . 

நோயின் தன்மைகள்

 இந்நோயின் அறிகுறிகள் தெளிவாகத் தெரியும் தன்மையையுடையன . நோய் தாக்கிய குழந்தைகளுக்கு கிழக்கண்ட வகையில் பாதிப்பு காணப்படும் . 

 அவையாவன,

 1 . தீராத தாகம் ஏற்படும்.

 2 . வாயிலிருந்து நுரை தள்ளியவாறு இருத்தல்.

 3 . கை , கால்கள் உதறிக்கொண்டேயிருத்தல் 

4.கண்கள் இரண்டும் மேல் நோக்கிச் சொருகுதல் 

5 . உடல் முழுவதும் அடிக்கடி இழுத்துக் கொள்ளுதல் 

6 . திடப் பொருள் உணவை சாப்பிட மறுத்தல்

7 . பேச்சோ முனகலோ வராதிருத்தல் 
என்பவைகளாகப் பல அறிகுறிகதுடன் குனவே பினிசல் நோய் ஏற்படுகின்றது .

 மருந்தாகும் பொருட்கள்

 உலர் பொருட்கள் மற்றும் பச்சைப் பொருட்கள் என இருவகைப் பொருட்கள் மந்திர மருத்துவத்தில் பயன்படுகின்றன . 

' குனவே பினிசல் ' எனப்படும் பாலகிரி நோய்க்கு பச்சை மருந்தாக செடிகளில் வேர்கள், பட்டைகள் ஆகியவை பயன் படுகின்றது எனக் கூறுகின்றனர் . 

பதனக்காய்  எனப்படும் கத்தரிக்காய் செடியின் வேர் . 

கும்புஞ கிடா எனப்படும் ரத்தசூரி செடியின் இலை ,

 மின்னல் கிடா எனப்படும் செடியின் இலை ,

 வேங்கை மரத்தின் பட்டை , 

வாழை மரத்தில் வேர் , 

மொந்த வாழை ஒரு துண்டு .

 உல்லமஜ்ஜிகே எனப்படும் புளிச்சங்கரை ..

என இவ்ணைத்துப் பச்சை பொருட்களுடன் உலர் பொருளான யானைத் தந்தம் சிறிதளவு தேய்த்துக் கலந்து மருந்துப் பொருளாக்கப்படும் எனக் கூறுகின்றனர் .


மந்திரச் சொற்கள்

குனவே பினிசல் நோய்க்கு ஓதப்படும் மந்திரமானது பிற மந்திரத் தினைப் போல் அடுக்கடுக்காகக் கூறப்படும் தன்மையுடையது . 

இம் மந்திரப் பாடலானது சக்தியையும் , சிவனையும் வணங்கித் தொடங்குவதாக அமைகின்றது . 

சிவனையும் , பார்வதியையும் தங்களது குலதெய்வம் எனும் எண்ணப் போக்கும் அக்கடவுள்களின் துணையோடு மந்திரம் நடத்தப்படுவதனையும் தெரியப்படுத்துகின்றனர் . 

நோய்க்கு மருந்தாகும் பொருட்களின் இருப்பிடமான மலையாள நாட்டில் வளத்தைக் குறிக்க பச்சை நாடு பச்சை மலையாளம் எனக் கூறுகின்றனர். 

மலையாள நாடு மாந்திரீகத்தில் சிறப்புடையது என்பது குறிப்பிடத்தக்கதாகும் . 

ஒன்று முதல் பத்து முறை நோயை தர்ப்பதாக் மந்திரச் சொற்கள் அமைகின்றன .

 ஓம் சக்தி சிவன்

 ஒந்து புடே புடிசிதே

 ஓர் கட்டின கட்டினே

 இது இந்தோட தீர்மானம் 

சிவன் அருளிய இம்மந்திரத்தால் ஒன்று முதல் இருபத்தி ஐந்து முறை நோயைத் தடுப்பதாக பொருள் கொள்ளும் "கட்டினே" எனும் சொற்கள் காணப்படுகின்றன .

மருத்துவர் படித்த மந்திரமானது தெய்வத்தின் வரமே எனும் நன்றியும் இப்பாடலில் வெளிப்படுகின்றது . 

மருத்துவச் செயல்முறை 

மருந்தாகும் பொருட்களை நன்கு அரைத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் உடல் முழுவதும் நன்கு புசிவிடவேண்டும் . சிறிதளவு மருந்தை சுடுநீரில் கலந்து குடிக்கக்கொடுக்க வேண்டும் . இம்மருத்துவத்தைத் தொடர்ந்து மூன்று முதல் ஆறு நாள் செய்தும் , அக்கால கட்டத்தில் வீட்டில் புளி , மாமிசம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றன . இத்தகைய முறையில் குனவே பினிசல் எனும் பாலகிரி நோயை குறும்பர் இன பழங்குடி  மக்கள் குணப்படுத்துகின்றனர் .

Comments

  1. நம் இனம் சார்ந்த தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் திரு.மீனாட்சிசுந்தரம் அவர்களை வாழ்த்தி வணங்குகின்றேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!