குறும்பர் இன பழங்குடி மக்களின் கண் திருஷ்டி நோய் மந்திர மருத்துவம்-1

குறும்பர் இன பழங்குடி மக்களின் 
கண் திருஷ்டி  நோய் மந்திர மருத்துவம்-1

குறும்பர்கள் மந்திர வைத்தியம் எறும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ற கருத்து உண்டு எனினும இன்றையச் சூழ்நிலையில் மந்திரத்துடன் கூடிய மருத்துவ முறைகள் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றன . சமுதாய சூழல் மாற்றமே இதன் காரணமாகும் . மேலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த மந்திர வைத்தியத்தை வெளியில் பரவ விடுதல் கூடாது எறும் சமுதாயக் கட்டுப்பாட்டிற்கு இணங்கும் தன்மையும் இம்மருத்துவ முறை குறைய ஒரு காரணமாகவும் அமைகின்றது . எனினும் , 

1 . கண் திருஷ்டி  நோய் 

 எனும் குறும்பர் இன பழங்குடி மக்களின் மந்திர வைத்திய முறைகள் செயல்முறையை இப்போது காண்போம்.

கண் திருஷ்டி  நோய் பொதுவாக அனைத்து இனப்பிலவுகளிலும் காணப்படும் நோயாகும் . 

குறும்பர் இல்லத்தில் கண் திருஷ்டியால் ஏற்படுகின்ற நோய்களைப் போக்க குறிப்பட்ட ஒரு மருத்துவ மந்திரத்தில் கைதேர்த்தவரையே நாடுகின்றனர் . கண்திருஷ்டியானது இருவகையாக உள்ளது . அவை 

 1 . சாதாரண திருஷ்டி 
2 . கடுமையான திருஷ்டி என்பவைகளாகும் .

  சாதாரண திருஷ்டி நோயானது மிகக் குறைந்த அளவிலா பாதிப்பை ஏற்படுத்துகின்றது . இதற்கான வைத்திய முறைகளும் எளிமையாகவே காணப்படுகின்றார் . 

நோய் ஏற்படக் காரணங்கள் 

குறும்பர் இலத்தில் பொதுவாக வீட்டிலோ அல்லது ஊரிலோ யாராவது ஒருவர் அல்லது ஒரு குடும்பத்தினர் , ஏதாவது ஒரு செயல் மூலம் அனைவரது கவனத்திற்கு உட்படும்போது திருஷ்டிக்கு ஆளாகின்றனர் எனக் கூறுகின்றனர் . அனைவரது பார்வையும் ஒருவர் அல்லது ஒரு குடும்பத்தில் மீது சொத்தப்படும்போது திருஷ்டி ஏற்படுகிறது என்று கருதுகின்றனர் . 

நோய் தாக்கும் இலக்குகள் 

திருஷ்டியானது பொதுவாக சிறு குழந்தைகள் , பெரியவர்கள் என வீட்டார் அனைவரையும் பாதிக்கும் ஒரு நோயாகும் . எனினும் பொதுவாக சிறு குழந்தைகள் , திருமண தம்பதிகள் , அழகான தோற்றமுடையவர்கள் . விழாக்களில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் எனப் பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப இந்நோயால் பாதிப்பு அடைகின்றனர் எனக் கூறுகின்றனர் .

நோயின் தன்மைகள்

 திருஷ்டியால் பாதிக்கப்படும் சிறு குழந்தைகள் தீராத அழுகையால் பாதிக்கப்படும் . பெரியவர்களுக்குப் பசியில்மை , மனஉளைச்சல் , உடல்மெலிவு என பாதிப்புகள் ஏற்படுகின்றன . இதுபோலவே சிறு குழந்தைகளுக்கும் பசியின்மை , உடல் மெலிந்து போதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன . 

மருந்தாகும் பொருட்கள்

 திருஉடி நோய்க்குப் பரிகாரம் கால பயன்படுத்தப்படும் பொருட்களை உலர் பொருட்கள் மற்றும் பச்சை பொருட்கள் என இருவகையாகக் கொள்ளலாம் . உலர் பொட்களாக கொட்டை முத்து எனப்படும் ஆமணக்கு மாசுகாய் எனப்படும் மிளகாய் ஆகியவைகளும் , பச்சைப் பொருட்களாகத் துளசி , சிவக்காய் , ஒகடே பட்டே , சிறிதளது சாவி , எழுமிச்சை பழம் , ஒரு வெற்றிலை ஆகியவை பயன் படுத்தப்படுகின்றது எனக் குறிப்பிடுகின்றனர் . 

மந்திரச் சொற்கள்

 திருஷ்டியால் பாதிக்கப்பட்டவருக்கு வைத்தியம் மேற்கொள்ளும்போது கீழ்க்கண்ட வகையில் மருத்துவம் பார்ப்பவரால் மந்திர சொற்கள் கூறப்படுகின்றன . 

அவையாவன : 

ஒரு கட் ஒடஞ்சி மேல் ஒடஞ்சி போ 

ரெண்டு கட் ஒடஞ்சி மேல் ஒடஞ்சி போ

முணு கட் ஒடஞ்சி மேல் ஒடஞ்சி போ

நாலு கட் ஒடஞ்சிமேல் ஒடஞ்சி போ

அஞ்சி கட் ஒடஞ்சிமேல் ஒடஞ்சி போ

 அறு கட் ஒடஞ்சி மேல் ஒடஞ்சி போ 

எழு கட் ஒடஞ்சிமேல் ஒடஞ்சி போ

 எட்டு ஒடஞ்சி மேல் ஒடஞ்சி போ . . 

------ ------ ------ ------------ ------------ -----------
------ ------ ------ ------------ ------------ -----------
------ ------ ------ ------------ ------------ -----------
------ ------ ------ ------------ ------------ -----------
------ ------ ------ ------------ ------------ -----------
------ ------ ------ ------------ ------------ -----------
என 14 முறை கூறப்படுகின்றது..


மருத்துவச் செயல்முறை


 திருஷ்டியால் நோய்வாய்ப்பட்டவருக்கு வைத்தியம் செய்யும்போது அவரது வீட்டை சாணியால் மெழுகித் தூய்மையாக்கி , கன்று ஈனாத மாட்டின் சிறுநீர் சிறிதளவு தெளித்து சுத்தம் செய்யவேண்டும் . பிறகு ஒரு சிறு செம்பில் சிறிதளவு தண்ணீர் எடுத்து அதில் , துளசி இலை , சிவக்காய் மற்றும் ஒகடே எனும் மரத்தின்பட்டை ஆகியவைகளைச் சேர்க்கவேண்டும் . இது புனித நீராகும் . 

பாதிக்கப்பட்டவரை அல்லது அவரது குடும்பத்தாரை வீட்டின் நடுவில் அமர வைத்து ஆமணக்குக் கொட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து அவர்களது தலையைச் சுற்றி உடைக்க வேண்டும் . ஒரு கொட்டைக்கு ஒரு மந்திரம் என பதினான்கு மந்திரத்திற்குப் பதினான்கு  கொட்டைகளை உடைத்துவிட வேண்டும் . பிறகு கடவுளை வணங்கி புனித நீரை வீட்டில் தெளிக்க வேண்டும் . எலுமிச்சை பழத்துடன் மூன்று மிளகாயைக் கட்டி வீட்டின் உத்தரத்தில் கட்டிவிடவேண்டும் . 

 வெத்திலையை ஏழு பாகமாகச் செய்து வீட்டிற்கு வெளியில் வீசி விடவேண்டும் எனக் கூறுகின்றனர். இம்மருத்துவ முறையினால் திருஷ்டியால் ஏற்படும் நோய்கள் குணமடைந்து விடுகின்றன என நம்புகின்றனர் . 


கடுமையான திருஷ்டி

 கடுமையான திருஷ்டி நோயானது மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது . இதற்கான வைத்தியமுறையும் , மந்திரச் சொற்களும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்படுகின்றது... 

சாதாரக திருஷ்டி ஏற்பட காரணங்களகா உள்ளவையே கடுமையான திருஷ்டி ஏற்படவும் காரணமாகவுள்ளது . மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த செயல்களால் ஒருவர் மீது அதிக அளவில் கவனத்தை செலுத்துவதால் கடுமையான திருஷ்டி ஏற்படுகிறது எனலாம் . இந்நோயும் குழந்தைகள் , பெரியவர்கள் என அனைவரையும் சூழ்நிலைக்கேற்ப தாக்குகின்றது எனலாம் .

நோயின் தன்மைகள்

 கடுமையான திருஷ்டியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகத் தீவிரமாக அழுகையில் காணப்படும் . கண்கள் சொருகியவாறும் , நாளுக்கு நாள் உடல் மெலிந்துக் கொண்டு வரும் எனக் கூறுகின்றனர் . இந்நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் , முகம் வாடுதல் , வாந்தி எடுப்பது போன்ற உணர்வுக்கு ஆளாதல் , சமூகத்தில் மதிப்பின்மை போன்ற செயல்களுக்கு ஆளாகின்றனர் எனக் குறிப்பிடுகின்றனர் . 

மருந்தாகும் பொருட்கள்
 - - - - - - - - - - - - - - - 

கடுமையான திருஷ்டிக்கு மருந்தாகும் பொருட்கள் பெரும்பாலும் உலர் பொருட்களாகவேக் காணப்படுகின்றன . மாசுகாய் எனப்படும் உலர்ந்த மிளகாய் ஏழு , குறுமிளகு ஏழு உப்பு ஏழு கல் என எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் . அத்துடன் மூன்று வழிகள் சந்திக்கும் சந்திப்பிலிருந்து மூன்று பிடி மண் எடுத்துப் பயன்படுத்த வேண்டும் . இம்மன் உலர்ந்ததாகவோ அல்லது பச்சையாகவோ இருக்கலாம் எனக் கறுகின்றனர் . 

மந்திரச் சொற்கள் 
- - - - - - - - - - - - 

கடுமையான திருஷ்டிக்குப் பயன்படுத்தப்படும் மந்திரச் சொற்களானது பத்து முறை கூறப்படுவதாக அமைந்துள்ளன . ஒன்று முதல் பத்துவரையிலும் திருஷ்டியை போ என விரட்டும் முறையில்காணப்படுகின்றது . 

 ஒந்து திருஷ்டி ஓகு   

இம் மந்திரத்தை கூறுபவர் தான் படித்த இம் மந்திரப் படிப்பு சிவக் கடவுள் படித்துள் படிப்பு எனவும் , அக்கடவுளின் ஆணை . எனவும் , தனது குருவின் ஆணை எனவும் ,

தங்களது மூதாதையர்களது ஆணை எனவும் , இவர்களது ஆசியுடன் தான் மருத்துவம் பார்ப்பதால் நோய்களை ஏற்படுத்தும் திருஷ்டியே போய்விடு என கட்டளையிடுகின்றனர் .

மருத்துவச் செயல்முறை
 
எண்ணிக்கையில் ஏழு ஏழாக எடுக்கப்பட்ட உலர்ந்த மிளகாய் , குறுமிளகு , உப்புகல் , மற்றும் மூன்றுவழி சந்திப்பு மண் என நான்கினையும் ஒரு படியில் போட்டு கடுமையான திருஷ்டியால் பாதிக்கப்பட்டுள்ளவரின் தலையை மூன்று முறை சுற்றவேண்டும் . பிறகு படியில் உள்ள பொருட்களை அடுப்பில் போடுதல் வேண்டும் . பிறகு அவ்வடுப்புச் சாம்பலை சிறிதளவு எடுத்து பாதிக்கப்பட்டவரின் முகத்திற்கு நேராக உதுதல் வேண்டும் . 

அடுப்பில் போடப்பட்டுள்ள மிளகாய் முதலான பொருட்களில் கருகிய சாம்பலை மூன்று வழி சந்திப்பில் உள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கொட்டி விடவேன்டும் . இவ்வாறு கொட்டிய சாம்பலை வேறயாராவது பார்த்தால் . அவர்களை நோய் தொற்றிவிடும் எனக் கூறுகின்றனர் . இம்முறையில் கடுமையான திருஷ்டி நோய் குணடையும் என நம்புகின்றனர்..




Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!