குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை நாம் யார்? நம் குறும்பர் சமுதாயம் (Palangudi Makkal Kurumban) எத்தனை வரலாற்று சிறப்பு மிக்கது? நம் முன்னோர்கள் எத்தகைய சிறப்புமிக்கவர்கள்? இவ்வாறு பல கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியாமல், நமது சமுதாயத்தின் முகவரியை தொலைத்து, நம் மதிப்பும், மரியாதையும், கௌரவமும் மறைக்கப்பட்டு, நமக்கே நம்மை தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால், நம் சந்ததியினரும் நம் குலபெருமையும், நம் நீண்டகால வரலாற்று சிறப்புமிக்க நம் குறும்பர் (Palangudi Makkal Kurumbar) சமுதாயத்தை அடையாளம் காண முடியாமல், ஒதுக்கப்பட்டு, சிதைந்துபோகும் காலம் தூரம் இல்லை. "குரு" என்றால் அறிவு வழிகாட்டி அல்லது அறிவு வெளிச்சம் என்றும், "பா" என்றால் உலகம் என்றும், ஆக குருபா என்றால் உலகத்திற்கு அறிவு வெளிச்சத்தை கொடுப்பவர்கள், ராஜ தந்திரங்களை கையாள்பவர்கள், மந்திரி பதவிகளை வகிப்பவர்கள் என்று பொருள்படும். நம் சமுதாயம் ஆடு, மாடு (...
தமிழ்நாட்டில் குறும்பர் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் ஒன்றா தருமபுரி மாவட்ட த்தில் உள்ள சித்தப்ப சாமி குறும்பர் பழங்குடியினர் குலதெய்வமாக வணங்கும் நடுகல். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், அத்திமுட்லுவை அடுத்த பெலமாதனஹள்ளி என்ற இடத்தில் சித்தப்பசாமி அமர்ந்திருக்கிறார். குறும்பர் பழங்குடி இன மக்கள், தங்கள் குலதெய்வத்தை சிறிய தகப்பன் என்ற பொருளிலோ, சித்தி பெற்றவர் என்ற பொருளிலோ பயன்படுத்தவில்லை. வீரன் என்ற பொருளே அதில் பொதிந்துள்ளது. சித்தப்ப சாமி என்று வணங்கப்படும் நடுகல்,புலிகுத்திப்பட்டான் வகையைச் சார்ந்தது. இந்த நடுகல்லில், புலி ஒன்று ஆட்டை கொல்வது போன்ற காட்சிச் சித்தரிப்புடன்,அருகில் வீரன் ஒருவன் அந்தப் புலியைக் குத்துவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ‘சித்திரகம்’ என்ற சொல் ‘சிறுத்தைப் புலி’ விலங்கைக் குறிப்பது. இது ‘சித்திரகாரம்’ என்றும் குறிக்கப்பட்டதைக்காணமுடிகிறது. (தமிழ்ப் பேரகராதி,சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, (தொ - 3, ப. 1413). இச் சொல்லே தெலுங்கு, கன்னடத்தில் ‘சிறு(த்)தா’ என்று வழக்குப்பட்டுள்ளது. சிறு(த்)தா என்பது சிறுத்தைப் புலியை...
மருதநிலத்தின் மக்கள் வெள்ளாண்மை என அறியப்பட்ட உழவுத்தொழில் மருதநிலத்திலே வளர்ச்சி கண்டது. குறிப்பாக தாமிரபரணி ஆறு, காவிரி ஆற்றங்கரை பகுதியில் பழந்தமிழர் முழுமையான வெள்ளாண்மையில் ஈடுப்பட்டனர். இந்நிலங்களில் பெருநிலக்கிழார்கள் பாசணம் செய்தனர். தொல்காப்பியம் மருதநிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல் “ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே” (தொல்.பொருள்-968) என்று அந்தந்த நிலத்திற்குரிய, நிலப்பெயர் அடிப்படையில் மக்கட்பெயர் பகுக்கப்பட்டிருக்கும் என்று தொல்காப்பியர் சொல்கின்றார். நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம் ‘உழவர் உழத்தியர் கடையர் கடைசியர்’ (நம்பி. 23) என இருவகை மருதநில மக்களைப் பற்றி எழுதியிருக்கின்றார். புறப்பொருள் வெண்பாமாலையின் சான்றுப்பாடலும், “களமர் கதிர்மணி காலோகம் செம்பொன் வளமனை பாழாக வாரிக் – கொளன்மலிந்து கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன் நண்ணார் கிளையலற நாடு” (புறப்.15) இவ்வாறு இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உழவர், உழத்தியர், கடையர...
Comments
Post a Comment