குறும்பர் இன மூதாட்டி மல்லாயம்மாள் சாபத்தால் அழிந்த நிலக்கோட்டை ஜமீன்...

 குறும்பர் இன மூதாட்டி மல்லாயம்மாள்  சாபத்தால் அழிந்த நிலக்கோட்டை ஜமீன்...

விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில் திண்டுக்கல் ஒரு முக்கிய அரசியல் எல்லையாக இருந்தது . திண்டுக்கல்லில் நாயக்கரின் ஆட்சி முகம்மதியர்களால் வீழ்த்தப்பட்டது . பின் இம்முகமதியர்கள் ஆட்சியை மைசூரில் ராஜாவிடம் சமாதானமாக ஒப்படைத்தனர் . மைசூரின் பிரதிநிதிகள் திண்டுக்கல்லில் கி . பி . 1742 ல் ஆட்சி நடத்தினர் . அவரது ஆட்சியில் திண்டுக்கல் சீமையானது 26 பாளையங்களாக இருந்தது . அவற்றுள் நிலக்கோட்டையும் ஒன்றாகும் . 


ஒவ்வொரு பாளையத்திற்கும் அப்போது ஒரு ஜமீன் என்று சொல்லக்கூடிய சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்தனர் . இந்த நிலக்கோட்டை ஜமீனில் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த கூலப்ப நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வந்தார் . நிலக்கோட்டை ஜமீனில் நிலக்கோட்டையைச் சுற்றியுள்ள பதினெட்டுப்பட்டிகள் ஆட்சி எல்லைக்குட்பட்டதாகும் . 


ஒவ்வொரு ஜமீனும் அவரவர்களின் ஆட்சி அதிகார எல்லைக்குட்பட்ட கிராமங்களின் வருவாய் நிலைக்கேற்ப தமக்குத் தேவையான அரண்மனையை ஏற்படுத்தி , தனக்கு உண்மையானவர்களை அரண்மனைப் பணிக்கும் , வெளிப்பணிக்கும் பணியாளர்களை அந்தந்த ஜமீன் நியமித்துக் கொண்டனர் . அம்முறையாகவே நிலக்கோட்டை ஜமீனும் பணியாட்களை நியமித்துக் கொண்டு தனக்குட்பட்ட கிராமங்களைப் பராமரித்து வந்தார் . அவ்வாறு நிலக்கோட்டை ஜமினானவர் அவருக்கு உண்மையானவர்களும் நம்பிக்கையானவர்களுமான அருகாமையிலுள்ள குறும்பபட்டி என்ற ஊரிலுள்ள குறும்பர் இனத்தைச் சேர்ந்தவர்களையும் , தன் இனமான நாயக்கர் இனத்தைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் , பணியாளர்களாக நியமித்திருந்தார் . எப்போதும் போல் பணி செய்து கொண்டிருந்தனர் . ஒரு கால கட்டத்தில் நிலக்கோட்டை ஜமீனில் நீதிக்குப் புறம்பான சம்பவம் தவறுதலாக தெரிந்தோ , தெரியாமலோ நடந்து விட்டது . அப்போது நடைபெற்றதை அறிந்த ஜமீன் , தன் ஜமீன் அரண்மனை சம்மந்தப்பட்ட அனைத்து பணியாட்களையும் அழைத்தார் . நடந்த சம்பவம் நீதிக்கு புறம்பானது என்பதை அறிந்திருந்தும் அங்குள்ள அனைத்துப் பணியாள்களையும் விசாரிக்காமல் , குறும்பர் இனத்தைச் சேர்ந்த பணியாட்களை மட்டும் அழைத்து அடித்தும் , விரட்டியும் கொன்று வந்தார் . 


அரண்மனையில் ஜமீன் குதிரை வளர்த்து வந்தார் . அக்குதிரையின் பெயரைச் சொல்லி ஜமீன் அழைக்கும் போது அக்குதிரையானது ஜமீனைப் பார்க்கும் . அப்போது ஜமீனானவர் அவரது தலையை அசைப்பார் . அச்சைகையைப் பார்த்த குதிரை யாரைப் பார்த்து சைகை செய்கிறார் என்பதை உணர்ந்து ஓடி அவரின் தலையைக் கவ்வி நெற்கதிரை அடிப்பதைப்போல் அடித்துக் கொன்று விடும் , அதேபோல்தான் அரண்மனையிலிருந்த குறும்பப் பணியாட்களை ஜமீன் சைகை மூலம் குதிரையை வைத்துக் கொன்று விட்டார் . இதையறிந்த குறும்பர் இனத்தைச் சேர்ந்த பணியாட்களின் உறவினர்கள் ஒன்று கூடி திரண்டு வந்து ஜமீன்தாரரிடம் நடந்த சம்பவம் நாடறிந்ததே , தகுந்த விசாரணை செய்து குற்றம் செய்தவரை தண்டிப்பதை விட்டு விட்டு , குறும்பர் இனத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் தண்டிப்பதும் அடிப்பதும் எவ்வழியில் நியாயம் என்று பேசி விட்டு சென்று விட்டனர் . அதன்பின்னர் ஜமீனானவர் குறும்பர்கள் வாழ்ந்த குறும்பபட்டி என்ற ஊருக்கு தனது படை வீரர்களை இரவில் அனுப்பி , அங்கு ஊர் முழுதும் எரிந்து சாம்பலாகும்படியாக ஊருக்கு தீ வைத்து விட்டனர் . அக்காலத்தில் எங்கும் குடிசை வீடுகளும் , ஓலை வீடுகளும் தான் இருந்துள்ளது என்பதால் குறும்பபட்டியானது விரைவாக எரிந்து சாம்பலாகும் நிலைக்கு வந்து விட்டது . அப்போது இந்த தீ விபத்தில் தப்பி ஓடியவர்கள் இப்போது கொடைரோடுக்கு அருகிலுள்ள மாலையகவுண்டன்பட்டி , உச்சனம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள தனது உறவினர்களிடம் வந்து உதவியடைந்து கொண்டனர் . அத் தீ விபத்தில் தப்பி ஓடியவர்களில் தம் கண்ணுக்கு தெரிந்தவர்களையெல்லாம் ஜமீனின் சொந்த ஆட்கள் அடித்தே கொன்று புதைத்தனர் . அவ்வாறு நடந்த நிகழ்ச்சியில் வயது முதிர்ந்த நிமிர்ந்து நடக்க முடியாத நிலையில் தள்ளாடிக் கொண்டு தடியை ஊன்றிக் கொண்டு குனிந்து நடந்த கொண்டு சென்ற மல்லாயம்மாள் என்ற மூதாட்டி ஊருக்கு வெளியே அருகே உள்ள ஒரு குளத்துக்கரையில் சென்று கொண்டிருந்தாள் . 


 அப்போது ஜமீனின் ஆட்கள் சிறிதும் இறக்கமில்லாமலும் , வயதானவர் என்றும் பாராமல் பின்னே ஓடி வந்து தடியால் ஒரே அடியில் அடித்து கொன்று விட்டு , குளத்துக்கரையிலே குழியைப் பரிக்காமலேயே மணலைப்போட்டு மல்லாயம்மாள் என்ற அம்மூதாட்டியை மூடி விட்டனர் . அடித்து உயிர் பிரியக்கூடிய நிலையிலிருந்த அம்மூதாட்டியானவள் ,

 ஏ , ஜமீன்தார்களின் கூட்டமே , எதார்த்தமாயும் , உண்மையாயும் , சொல்வதை செவ்வனே செய்து வரக்கூடிய ஒரு பாவமும் செய்யாத எங்கள் குறும்பர் இனத்தைச் சேர்ந்தவர்களை இவ்வளவு கொடுமைப்படுத்தி கேவலமான முறையில் கொடூரமாக அடித்தே கொன்று விட்டீர்களே பாவிகளா . எங்களது பாவம் உங்களை சும்மா விடாது . உங்கள் குடும்பம் சந்ததி இல்லாமம் இத்தோடு நாசமாகிவிடும் , அப்படி ஏதேனும் உங்கள் குடும்ப வாரிசுகளுக்கு மகவு பிறப்பு ஏற்பட்டால் ஆண் தன்மையும் , பெண் தன்மையும் இல்லாத அலி என்று சொல்லக் கூடியதான நிலையில்தான் குழந்தை பிறக்கும் என்றும் ஜமீன் கோட்டை இடி விழுந்து அழிந்து விடும் என்றும் அம்மூதாட்டி சாபமிட்டபடியாக அவர் உயிர் பிரிந்தது . அதன் பின்தான் ஜமீன் கூட்டத்தினர் மணலைப் போட்டு மூதாட்டியை அநியாயமாக மூடி விட்டனர் . 

அம்மூதாட்டி இறந்து சுமார் 48 நாட்களுக்குப் பிறகு அவரது உறவினர் ஒருவரின் கனவில் தோன்றிய மல்லாயம்மாள் என்ற மூதாட்டி அவரிடம் " என்னை ஜமீன்தாரரின் ஆட்கள் அடித்துக் கொன்று குளத்துக்கரையில் எனது உடலை மணலைப் போட்டு மூடிவைத்துள்ளனர் . 

நீங்கள் வந்து இதைக் கண்டு பிடித்து என் உடல் இருக்குமிடத்தில் குளத்துக்கரையில் எனது பெயரில் கோவிலை அமைத்து என்னை நீங்களும் உங்கள் சந்ததியினரும் வணங்கி வழிபட்டு வாருங்கள் , உங்கள் குடும்பம் விருத்தியாகும் , நமது சந்ததியினர் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் " என்று கூறி விட்டு அம்மூதாட்டி மறைந்து விட்டார் .

 மறுதினம் இரவில் அவர் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு அம்மூதாட்டியை புதைத்த மாதிரி மணலில் மூடி வைத்த குறும்பபட்டி அருகிலுள்ள அந்த குளத்துக்கரைக்குச் சென்று அங்குள்ள அந்த மணலை கிண்டி தோண்டினர் . தோண்டியதில் உடல் பகுதியின் எலும்புகள் கிடைத்தது . அதே இடத்தில் ஒரு சிறியை கோவிலை கட்டி அம்மூதாட்டியின் பெயரான " மல்லாயம்மாள் " என்ற பெயரையே இட்டு குறும்பர் சமுதாயத்தில் குறிப்பிட்ட வம்சாவழியினர் அக்கோவிலை வழிபட்டு வருகின்றனர் . இன்றும் நடைமுறையில் இருந்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும் . 

மல்லாயம்மாள் என்ற அம்மூதாட்டியின் சாபத்தின்படி நிலக்கோட்டை ஜமீன் வம்சத்தில் சந்ததியினர் இல்லாத நிலையில் அவ்வம்சம் அழிந்து விட்டது . இரு ஆண்கள் இருந்தனர் . அவர்களும் ஆண் தன்மையும் பெண் தன்மையும் இல்லாத நிலையில் பைத்தியம் பிடித்து இறந்து விட்டனர் . 

இவ்வாறாக குறும்பர் இன மூதாட்டியின் மல்லாயம்மாள் என்பவரின் சாபத்தால் நிலக்கோட்டை ஜமீனின் அரண்மனைக்கோட்டை 1995 - ல் இடி விழுந்து அழிந்து விட்டது . இது ஒரு சாபத்தின் விளைவாகும் . 


Comments

  1. நமது இன வரலாறுகளை
    தெரிந்து கொள்ள நன்றி ஐயா..

    ReplyDelete
  2. பொய்யான கற்பனை கதைக்கு வரலாற்றில் இடம் இல்லை.

    மோடிக்கு ஏன் பிள்ளை இல்லை ..ஒரு வேளை இந்த சாபமா இருக்குமோ!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!