பழனிமலை குறும்பர் செப்பேட்டில் உள்ள செய்தி

 பழனிமலை குறும்பர் செப்பேட்டில் உள்ள செய்தி....


-----------------------------------------------------------
வையம் நீடுழி மாமழை மன்னுக பெய் விரும்பிய அளபர் விளங்குக வசவ நாளெறிதான தழைத்தோங்குக தெய்வவொர் திருநீறு சிறக்கவே . 
------------------------------------------------------------

இச்செப்பேட்டில் சைவ சமயத்தியர் பெருமைப்ளை சிறப்பாக முதன் முதலில் இக்காப்பு பாடல் தெரிவிக்கிறது . அதைத் தொடர்ந்து உலகம் நீடு வாழ்க வென்றும் , நல்ல மழை பெய்து பயிர்வளம் செழித்து சிறப்படைய வோர் டுமென்றும் உலகமக்கள் வளமான பொழ்வு பெறவேண்டுமென்றும் வாழ்த்திச் சொல்லப்படுகிறது . அதனைத் தொடர்ந்து எல்லாம் வல்ல முருகப் பெருமானின் பெருமையையும் முருகப்பெருமான் திருக்கோவில் கொண்டுள்ள ஆறுபடை வீடுகளினர் பெருமையையும் , வடமொழியும் , தமிழும் கலந்த மணிப்பிரவான நடையென்று பேசப்படுகின்ற மொழியமைப்பில் சுமார் நாற்பது வரிகள் கவிதை நடையில் புகழ் மாலை சூட்டி அம் முருகப் பெருமாள் பழனி மலையில் திருக்கோவில் கொண்ட பெருமையினை சிறப்பித்து , அப்பெருமானுக்கு தொண்டு புரிகின்ற தொனர்டர்களாகவும் , மன்னர்களாகவும் வாழ்ந்த குறும்பா ராயர் வம்ச அரசர்களில் பிரபு மகாதேவராயர் முதல் தொப முதாராயர் வரை ஆண்டராயர் வம்சத்தினருக்கு புகழ்மாலை சூட்டப்பட்டுள்ளது .

 அதன்பின் ஆண்ட நாயக்க வம்சத்தினர் நாகப்ப நாயக்கர் முதல் திருமலைநாயக்கர் வரையும் , ஆண்ட மன்னர்களின் பெருமையும் பேசப்படுகிறது . மதுரையில் திருமலை நாயக்கர் காலத்தில் சிறப்பாக நீதி அரசாட்சிய காலமாகிய கலியுக சகாப்தம் 4765 - க்கு சரியான போபகிருது வருடம் தை மாதம் 25 ஆம் தேதி ஆங்கிலம் கி . பி . 1663 ஆகிய வியாழக்கிழமை
பௌர்ணமி திதியும் , பூச நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினமாகிய நல்லதிருவிழா நாளில் இந்த தாமிர சாசனப் பட்டயத்தை உருவாக்கியிருக்கிறார்கள் . 

உருவாக்கிய காலத்தில் இம்முடிப்பட்டத்து விசயகிரி சின்னம நாயக்கர் சரவணகுருக்கள் , பழநி நம்பியார் , பானபத்திர உடையார் , பச்சைகனட தேவர் ஆகியோர்களை சாட்சியாக வைத்து எழுதியிருக்கிறார்கள் , 

இப்பட்டயத்தின் முக்கிய நோக்கம்

 பழநி மாநகரில் கைலாசநாதர் , பெரியநாயகி அம்மன் , சின்ன பாலமுத்து குமாரசாமி , கிழக்கே திருவிழாபுறமாக மலைக்கு எழுந்தருளி வரும் வீதியில் - திருவாவிளை குடிக்கு - தெற்கு , மீனாட்சி அம்மன் கோவிலுக்கு - வடக்கு , கிழக்கு ஆகிய வீதிகளில் உள்ள - மலையம்மாள படத்துக்கு வடக்கு , பானபத்ர அய்யர் சுத்தாலைக்கு கிழக்கு , திருவாவடுதுறை மடத்துக்கு தெற்கு , கிழக்கு , பாதைக்கு மேற்கு - இந்த எல்லைக்குட்பட்டுள்ள இடத்தில் தென்வடல் முழம் 70 , கிழமேல் முழம் 110 , இவ்வாறாக நான்கு திசைக்கு உட்பட்ட இடத்தில் மடப்பள்ளி ( தர்மசாலை - சமையலறை ) உண்டுபண்ணி , இதில் தர்ம காரியம் செய்ய வேண்டுமென தீர்மாளித்திருக்கிறார்கள் . 

இந்த மடத்தில் அறநேசி , பரதேசி யாராக இருந்தாலும் பசியென்று வந்தவர்களுக்கு அன்னதானமும் , உப்பு , ஊறுகாய் , நீர் மோரும் கொடுக்க வோண்டும் . சோமவார கட்டளை தினத்தில் பனிரெண்டுபேர்களுக்கு சங்கவாத்தியம் செய்ய வேண்டும் . அதேபோல் கக்ரவாரத்திற்கும் பனிரெண்டு பேருக்கு சங்கவாத்தியம் செய்து கொண்டு விநாயகருக்கும் , சுப்பிரமணியருக்கும் மாலை , சந்தனம் , திருமஞ்சனம் இவைகளோடு அபிசேகம் செய்ய வேண்டும் . அத்தோடு மாதப்பிறப்பு , அமாவாசை , சண்டி , உத்திரம் , கார்த்திகை இவ்வாறான  விசேஷ தினங்களில் சுவாமி எழுந்தருளி ஊர்வலம் வரும்போது சிறப்பான பூசைகாரியங்கள் செய்து வரவேண்டும் . 

காசிக்கு தெற்கேயும் , கன்னியாகுமரிக்கு வடக்கேயும் , நாகப்பட்டிணத்திற்கு மேற்கேயும் , உடும்பு சுப்ரமணியத்திற்கு கிழக்கேயும் - நான்கு திசைக்கு உட்பட்டுள்ள 56 தேசத்து குறும்ப கவுண்டன் மார்களும் ( தர்மசெயலுக்கு ) இதற்கு பாத்தியப்பட்டவர்கள் , இத்தர்மம் ஆகாயம்புல் , பூமி , சந்திரன் , சூரியன் உள்ளவரைநடைபெறவேண்டுமென்று இவர்கள் விரு ம்பியதைஇத்தாமிரசாசனப் பட்டயம் தெரிவிக்கிறது . 

செப்பேட்டில் உள்ளபடி ராயர் குல குறும்ப அரசர்கள்

1.மகாராய மானியராயர்

2 . பிறபடைதேவர் மகாராயர்

 3 . பக்கராயர் 

4.அரியராயர் 

5.கபிலேசராயர் 

6 . டில்லி பாளையர்
 
7.நரசிங்கராயர் 

8 . வீரவகந்த ராயர்

9. பூருவ அட்சராயர் 

10 . மல்லிகார் ஜீனராயர்

 11.ஸ்ரீரெங்க தேவராயர் 

12 ஆனைகுந்திவேங்கிட பதிராயர் 

13 . ஸ்ரீராமராயர்

 14 . மகாதேவராயர்

 15 . சிக்கராயர் 

16 . கண்டப் பிரதாபராயர்

 17 . அச்சுததேவமகாராயர் 

18 . புசபெல மகாதேவராயர் 

19.கிருஷ்டணராயர் 

20 . கிருஷ்ணதேவராயர் 

21 . நரசிம்மராயர் 

22.வேங்கடபதிராயர்

 23.வீரநரசிங்கராயர் 

24 . சீரங்கராயர் 

25 . வீரபத்திரநாயர் 

26 . வீரமல்லகா அர்ச்சுனராயர்

27. முக்குந்த ராயர் 

28 . பிரதாப ருத்திர ராயர்

 இவ்வாறு குறும்பர் ராயர் குல  அரசர்களின் பெயர்கள் செப்பேட்டி குறிக்கப்பட்டிருக்கிறது 



பழனிமலை குறும்பர் செப்பேடு


பக்கம் - 1 

1.வைய்ய நீடுக மாமழை மன்னுக மெயிவிரும்பிய அன்பற் விழங்கு .

 2 .  க சையிவ நன்னரி தான்றளைத் தோங்கு தெயிவ வேண்ண

 3.ந் திருனிந சிரக்கவே கருணை பொளி திருமுகங்களுரும் வா

4. ழி கற்கமலம் பன்னிரெண்டு கைய்யும் வேலுவாழி யிருசற 

5.ணற மென்னாலை மேல் நாளு மோங்கு யிற்திர விக்கப்பா


 6 . லும் யினிதும் வாழி அருள்புறவி அவற்சிறை மீட்டு ஆண்ட ஆரு

7 . தாண்டு திரு நயனத் தழகும் வாழி மருவணியும் பங்கடப்பு 

8 . ந்தார் மார்பும் வாழி வரிமையில்ச் சேவல்க் கொடியும் வா 

9 .  ழி அடைந்தவர் துணைவா வாழி அடையலாக கறியா வாழி ம

 10 . டைந்த தன்மைந்தா வாழி மாதவன் மருகா வாழி திடன் புனை

 11 வலா வாழி தேவராருயிரே வாழ படர்ந்த போரசுரர் கூற்றான பரம

 12 ளே வாழி வாழி நன்னெறி முகமு வாழி நாதமு முடியும் வாழி 

13 .  ன்னிரு கரமு வாழி பாதபங்கயமு வாழி கன்னிமா ரெளுவழி க்கிரதிரு பழனி வாழி யென்னிருனையை நீக்கு மிளைய

 14 , ழிக்கிரதிரு பழனி வாழி யென்னிருனையை நீக்கு மிளைய

 15 . வர் வாழி வாழி உ ஸ்ரீ பரிபுவனத் தனதிஷ்ட்டி சமமார் கர்த்தா வா

 16 . க்கிய பரமேஷ்பர குமாரன் அமர சிரை மீட்டதேவர்கள் தேவ

 17 . ன்தெய்வலோகனாயகன் அகிலாண்ட கோடி பிரமாண்ட 

18 . னாயகன் கோகன் தனைச் சரிசமமாடிக் குட்டிக் குடிமி நெட்டி 

19 . போக்கி கெல பிறம் பதங் கொடுத்த குமார கெம்பிரனவள்  ெ காக்கிறவரை யாளி கோட்டறாவுத்தன் வக்கிற மிகு அசுரே

 21 சன் வட்டனி ரொப்ப உக்கிர மயிலேரிவரும் உத்தண்ட

 22 . தீரனப்பக் கரைக் பகட்டாக காட்டிடப் படைக் களத்தில்

 23.காக் கரித்துடல்க் கிழிக்க குக்குடக் கொடிக் கொமாரன் கோ

 24 . ழிகொட்ட கூகை பிசாசுகள் தொக்கதிர்த் தத்தளமொத்த தான

 25 . மாளு தாக்கு வடைவையலை போலெழுந்து வடிவேலெடுத்

 26 . த சேவக தீரன் அசுரகுலகாரன் அமறாபதி காவலன் தொடுசருகா 

 27 . தின்ன தோகை மயில் வாகனன் சீதரன் திருமருகன் சிவசுப்பி 

28 , ற மனியன் சண்டப் பிற சண்டன் லண்டர்த் தொரு முண்டன்

29 ஆறாருனூருரு அஷ்ட்ட மங்களம் ஆவினாங்குடி யீரா ரெனும் 


30.பளனியிலங்கு வை . . . . . ட்டு சுத்திபன் பத்திப் பிரிய 

31.ன் பாதபச்சலன் பாத . . . பன்றிமலை பூம் பரைப் 

32 . ழனி மலை காவலன் . . . யன் மலையெலங்கு 

33.ஸ்ரீ வீரபளனி . . . . மி திருவிளப்படிக்கிவி 

34 . ரவாகு தேவ . . . . . திருப்பரங் குண்டம்சீ 

35 . ரிலைவாய் . . . வின . . . டித்திருவேரகம் குன்று தோ 

36 , ராடல் . . . சாவ - - கப்ப . . . . . யாகி ஆருதலத்திலு 

37 . ம் ம் பிரப்ப . . . . பதில் வ . . . ண்ணா மலை திருவேங்கட 

38 . ம் திருக்கா ( ளா ) ஷ்த்திரிதி ( நிவா ) ங்காடு திருங்காஞ்சிபுரம்

 39 . யிப்படிப் பனிரெண்டு தலத்திலு ( ம்யெர் முந்திருளி மகாபூசை கெ 

40.பாண்டரளா நின்ற ஸ்ரீ வீர பளனிமலை வேலாயுத சுவாமியா

41. ருக்கு பத்திப் பிறியனாகிக சுவை ஸ்ரீமன் மகா மண்டலேசுபர் 


42 . ன் அரியறாயர் தளவிபாடன் பாசைக்குத் தப்பு வாறாத கண்டன் மூ 

43.வராய கண்டன் கண்டனாடு கொண்டு கொண்ட னாடு குடாதா

44. - ன் துலக்க தளவிப்ப . . . ன் துலுக்க மோ சந்த விளத்தா 

45.ளனடியதளவிபாடன் - - டிய மோகந்தவிள்த்தான்


46. சோள மண்டலத் மாறியன் பாண்டி மண்டல 

47 . ப்பிறதிஷ்ட்டா சாரிய ( ன் . . . . ) ண்டலப் பறி தாபனாசிரிய 

48 . ன் தொண்டமண்டலப் பிற ( திஷ்டாச ) மரியன் பிளமுயர்ப் பான்

49 , முயென் மண்டல முந்தி . . . ண்டருளிய றாசாதிராசன்ரா 

50 . சபரமேஷ்பரன் ராசபமாத்தாண்டன் ராச கெம்பீரன் ராசபு

 51 . ங்கவன் ராசகேசரீ வடமன்ன மகுடாலையர் ராசதேவவேந்தி 

52 . ரன் தாளி விளங்கு விருது கட்டாரிச் சாளுவன் மறைபுக்ககா

 53 . வலன் அசுபதி கெசபதி நற ( பதி ) நவபதி நவகொடி நாறாயணன்

 54 , வங்களர் சிங்களர் சேரன் க . . . ன் காப்பல்லா ரொட்டியர் தங்காம 

55 .  ாளுவர் மறவர் மலையாளர் செட் காக லிங்கர் காண்டர் கூற்கர் மறா

 56 . ட்டிய ரென்னப் பட்ட பதினென் பூமியும் யேழுதீவுமுடித் தாகிய நாகலோக

 57 . ம் பெருந்தீவு நறுபதியாகிய பூலோக புறந்தரன் பூர்வ தெட்சன பட்ச உத்தி 

58 . ரசத்திர சமுத்திர றாதிபதி யெழுபத் தேளு பாளையக் காறரையுந்திரை 

59 . கொண்டு துலக்கரணியுங்சிரை கொண்டு துலையாத கம்பம் போட்டு துஷ்

60. ட்ட நிக்கிரக சிஷ்ட்ட பரி பாலினஞ் சேது ஸ்ரீ விசையமான காத்தில்ப் பிறதாப் 

61 . ஷ் பரனாகிக வீரசிம்மாசனத்தி லெழுந்தருளிய மகாறாய மானியராயரும் 

62 . காறாயாறாகிய பிறபடை தேவர் மகாறாயர் புக்கராயர் அரியராயர் கபிலேசரா 

63 . யர் டில்லி பாளயாளம் பாளையர் நரசிங்கராயர் வீரவசுந்தராயர் பூ 

64 ருவ அட்சயராயர் மல்லிகார்ச்சினராயர் மகா தேவராயர் சீர் ரெங்க தே

 65 . வராயர் ஆனைகுந்தி வேங்கிட பதிராயர் ஸ்ரீ ராமராயர் சிக்கராயர்க் கண்டப் 

66 . பிறதாப ராயர் அச்சுததேவ மகாராயர் புசபெல மகாதேவராயர் கிஷ்டனரா 

67 . யர் கிஷ்ட்டன தேவ மகாராயர் நறசிம்ம ராயர் வேங்கிடபதிராயர் கிஷ்டனரா

 68 . ராயர் சீரங்கநாயர் வீரபத்திர ராயர் வீரமல்லகா அர்சினராயர் முக்குந்த ராயர் . 

69 . பிறதாபருத்திர ராயர் யிவகள் ஊராதியுணர்ந்து உலக முழுது ஒருகுடைக் குள்ளாண்டு


 70 . தவயொளியும் விளாபரை விதியும் அந்தளர் கூட்டமும் ஆகம சாலையும் சைவ நெ 

71 . றியு மதபோதன விசாலமுசந்ததம் நடக்கத் தனி மாரிகட்டி பதிநெட்டாயுத தொழிநொர

 72 பேத்திதி அவல் வே தடிந்து நல்லதை நாடி ஆரிலொன்று கடமை வாங்கி துஷ்ட்ட நிர்த்தி

 73 ரகம் சிண்ட்ட பரிபாலினக் செய்து செங்கோல் செலுத்தயனாளில் ராயராயகா

 74 . ரியாகாரிய தூரந்தரிக் கற்த்தராகிய மகுட மன்மத சகுட சுத்தரனான்விர துஷ்டா

75. நட்டூர் கோயகல விகட மோடு மருவலா கள மகுட போடு திருகும் வீர பத்தானமும்ம 

76.சீரையும் முத்தமிள் வீரரொடு தன்பத நெறியுள்ளவன் சத்திய வாசகன் சிவநெறி தி

77. ளைக்க திரு நீரிட்டவன் உச்சித போசன கச்சியிலதிபன் ளாகப்ப நாயக்கர் விசுவப் பனா


78.க்கர் குமார கிஷ்ணப்ப னாயக்கர் கஷ்த்தூரி ரெங்கப்ப னாயக்கெர் ரெங்க கிஷ்ட்ட மூத்தி

 79 . வீரப்ப னாயக்கர் விசுவனாத னாயக்கர் கிஷ்ட்டனப்ப னாயக்கர் வீரப்ப னாயக்கர் திருமலைனாய 

80 . க்கர் பாண்டிமா நகறம் மதிரையம் பதியில் ஓதி யுணர்ந்து உலக முழுதும் ஆளுவதர்க்கு 

81.நிதிசரமும் நெறுயதுத் தொன்முத்தமின் வினோதன் அரிவுத்த வித்தியன் அளகுக்கனங்

 82 . நன் அறத்துக்கு தருமன் சொல்லுக் கரிச்சந்திரன் வில்லுக்கு விசைய 

83 . யன் பிலத்துக்கு பீமன் பரிக்கு நகுலன் யிப்படி ளென்படா நின்ற புகள் புண்டு முன்னாள் மெ

 84 .  ாளியும் படிக்கு அல்லவ கடிந்து நல்லதை நாடி கொல தலமலிய குடியெங்குத் தடை

 85 . ந்த ஆரிலொன்று கடமை கொண்டு ஆண்டு வருங்காலம் கலியுக சகார்த்தம் ஆயிர 

86 . த்தி அருவாத்தி முப்பதெட்டுக்கு மேல் சாலி வாகன சகார்த்தம் னாலாயிரத்தெழுவாத்

 87 . தி அருவத்தஞ்சுக்கு மேல் செல்ல நின்ற சோபகிருது வருஷம் தைய மீ உயரு குருவாரமு


88 . பவர்ணமையும் பூச நட்சத்திரமும் வாலவ கிரணமும் அமூர்த யோகமும் கடின கபைதின்


 89 . த்தில் ஸ்ரீ பழனிமலை வேலாயுத சுவாமியாருக்கு செல்லும் தானம் பரிகலம் வாலமதரிவு 

90. ன்த்திரம் யிம் முடிப்பட்டத்து விசையகிரி சின்னோவ னாயக்கர் சறவனைக் குருக்கள் பழனிய


 91 . நம்பியார் பானிபத்திர உடையார் பச்சைகந்த தேவர் மத்துமுண்டாகிய

92. தானம் பரிகலம் மத்து முண்டான தலைத்தாரை சாட்சி வைத்து பெளுதிய தாம்பிர சாதினபட் |

93. டயம் பட்டையமாவது பழனி மாநகரில் கயிலாச நாதர் பெரியனாகியம்மான் சின்ன

94. பாலமுத்துக்கும் ருசுவாமி கிளக்கே திருவிளாப் பிரமாக கிரிக்கி யெழுந்தருளி வருது வீதியதி 

95.ருவாவனங்குடிக்கு தெக்கு மீனாட்சையம்மன் கோயிலுக்கு வடக்கு கிளக்கு வீதியிலு

 96 . யம்மாள் மடத்துக்கு வடக்கு பானபத்திரய்யர் சுத்தாலைகே கிளக்கு திருவாவடுதுறை மடத்து 

97 . க்கு தெக்கு கிளக்குப் பாதைக்கு மேர்க்குகு உள்ப்பட்ட தென்மடல் முளம் ( யைர் 70 கீள்மே 

98 . ல் முளம் ( யைர் 110 யிப்படிக்கி னான்கு திசைக்குள்ளாகி யிடம் பழனியப்ப உடையாரிடத்தில்

 99 . மடலயாலிதரம் உண்டுபண்ணி வைத்துயிந்த மடத்தில் நடக்கு விபரம் அரதெசி பரதெசி யத 

100 ,  ாபொருவர் பசிச்சு வந்த பேர்களுக்கு அன்னதானம் உப்பு வாருகாய் நீர்மோர் குடுத்துக் 

101.காண்டு சோமவார கட்டளை பனிரெண்டு பேருக்கு சங்கமார்தின செயிது கொண்டு கக்கிர 

102 . வாரத்துக்கு பனிரெண்டு பேருக்கு சங்கமார்த்தி னையும் செய்துகொண்டு விக்கினேசுபருக்கு


103.ம் சுப்பிரமணியருக்கு மாலையும் சந்தனமும் திருமஞ்சனமும் அபிஷேக நடப்பிலி கொம் | 

104 டுபாசப் பிரப்பு அம்மாவாசி சஷ்டி உத்திரம் காற்த்திகை யிப்படி விஷேஷ தினங்களில் 

105.சாமி வீதி சுத்தி பெளுந்தருளி வருகிர போது திருக்கண் சாத்திவரும் படிக்கி திருவினாவை

 106 , த்துக் கொண்டு பளனியயர் காரியம் பிரதானமா நடப்பிவித்துக் கொண்டுயிருப்பா 

107 . ராகவும் இவர்கள் பிரப்பு ஆதி திருமாலூர் ஆளை கொந்தி விசைய நகறம்ந் தேவனாசி நள் 

108 , தயற் அல்லமாப் பிரவு சருகுர மல்லிகார்ச் கன அய்யாராய் சிம்மாசனத்துக்குருரறெ பையற் 

109 . மதகையறராய் கோத்திரத்துக் குறும்பக் கவுண்டமார் கோத்திரமன்னிய குறும்பன் கேட்கு

 110 . நருமவன் சூலக் குறும்பன் யிப்படிக் கோத்திரத்துக் குள்ளாகி கவுண்டகள் காசிக்குத் தெற்க்குக்க

 111 . ள்னிய கொமரிக்கி வடக்கு நாகப் பட்டணத்துக்கு மேருக்கு உடும்பு சுப்பிரமணித்துக்குத் தெற்

 112 . க்கு நாங்கு தேஷத்துக்கு உள்ப்பட்ட வைய்காபுரி நாடு அம்பாபுரிநாடு அண்ட நாடுக் கன்னி |

 113 . வாடி கொங்க நாடு தின திண்ட 

114 . வர்ஷ திண்டுக்கல் மாதனாபுரம் அஞ்சதினாம்பட்டி நாடு மூலைய கவுண்டன் நாடு பறப்பிய 

115 . ) கவுண்டன் நாடு குடும்பிய கவுண்டன் நாடு மொண்டி பட்டி நாடு சேந்துறை நாடு யிலுப்புரு

 116 . | நாடு திருச்சினா புள்ளி தஞ்ச நகரம் தொண்டமனூர் புதுக்கோட்டை செல்லிகுடி நாடு 

117 . | நாச்சி குரிச்சி கத்தலூரு நாடு திருவோனக்காவல் சீரங்கம் மன்னச்சநல்லூல் அ 

118 , ரியலூர் ஓடையா பாழயம் ரெட்டியார் சீமைதுரையூர் தாதங்கார்பேட்டை கொ 

119 . ல்லிக்காபுறமார மங்கல ராசிபுர மஞ்சேல முந்தருமாபுரி பொன்னகறம் திருபத் 

120 . தூற் காவேரிப் பட்டனழங்கிஷ்ட்டாங்கிரி வாணி நகறம்ங் கந்தி ஆற்க்காடு ஆறு

 121 . ணி செஞ்சி சென்ன பட்டளம்த் துருப்பு காஞ்சிபுறம்ந் திருப்பதி வெங்குளூர் வல்லா 

122 கொடுகு சிரங்கப் பட்டணம் ரூ நஞ்சுண்டன் கூடல் தலமலை தனக்கங்கோட்டை னடுவங்க 

123 . I னாடு காரமடை குறுப்ப நாடு ஆருநாடு வராகநாடும் காயம்புத்தூரு வெள்ளலூரு தொண்ட |

 124 . ம்புத்தூரு மதுகறைகப்ப முரங்கரை சோமந்துரை யிப்படி அம்பத்தாரு தோஷத்திலுள் 

125.ள றாய கோத்திரத்துக்கு ராம பக்த கவுண்டற்கள் பழனி மேற்படி  ெதலத்தில் மகாலச்சும்மி அம் 

126 . மன் உத்தாரத்து மேரைக்கிசித்து றாம சென்னப்ப உடையாற் உத்தாரத்து மோரைக் 

127 . கி அகோர வீரபத்திர சுவாமி உத்தாரத்து மேரைக் கியிந்தக் கோத்திரமுங் கோலவ 

128 . பூந்தேரும் படியாக அம்பத்தாரு தேஷத்து குருக்கள்மார் கவுண்டர்கள் அறுவோருங்

 129 , கூடி பழனிமலை அடிவாரத்தில் தரும் உண்டு செயிது பழனியப்ப உடையற் கொ

 130 , மாரன் சுப்பிரமணிய உடையருக்குங் கல்லுங் காவேரியும் புல்லு பூமியுச

 131 ந்திராள் சூரியாள் ஆகாசம் பூமி உள்ளனாள் வரைக்கும் தம்புரசாதன பட்டையர் செ 

132 . யிது கொடுத்தபடிரெண்டு பணமும் கட்டின வீடு ஒன்றுக்கு படகமும் ஒரு வள்ள நெல்லு 

133 , ம் கலியாணத்துக்கு ரெண்டு பணமும் பகடு வெத்தலையும் ரெட்டைப் பாக்கு ரெட்ட வெத்திலையுள் 

134 . படி படியும் கூடிய வளக்கு அவதாரங்களிலேயும் தங்களோடொத்த பிள்ளையப் பாவித்துக் கொண்டு யி

 | 135 . ந்த மறைக்கியா கோத்திரத்தர் மடவாலிபடிய் ராம வளந் தெற்க்கே தாக யெளுதி குடுத்தோம்பி 

136 , ந்த தற்மத்துக்கு யாதொமொருதர் பில்லை போக பன்றவன் குடியை யொளித்தவன் மரைத்தவன்

 137 . யின்ள நாலை . . . . யன்றவள் அகம் யிடும்பு பேசினவன் யிவர்கள் கொண்ட பலன் உ 




Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!