குறும்பர் ஆய்வு நூல்கள்
குறும்பரின் விடுகதைகள் நூலாசிரியர்: முனைவர் வே. சிதம்பரநாதப் பிள்ளை வெளியீட்டு எண்: 294, 2005, ISBN:81-7090-355-6 டெம்மி1/8, பக்கம் 128, உரூ. 65.00, முதற்பதிப்பு சாதாக்கட்டு பொதுப்பார்வையில் குறும்பர் விடுகதைகள், குறும்பர் விடுகதைகளின் பாகுபாடுகள், குறும்பர் விடுகதைகளின் அமைப்பாய்வு, குறும்பர் விடுகதைகளின் யாப்பு நிலையும் அணி நிலையும், குறும்பரின் சமுதாயப் பழக்க வழக்கங்கள் ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் விரிவான ஆய்வினை நிறைவு செய்து அளித்துள்ளார். பின்னிணைப்பில், நீலகிரி மாவட்டத்தில் குறும்பர்கள் வாழுமிடங்கள், ஆய்வு முன்னோடிகள் – குறிப்புகள், குறும்பர் விடுகதைகள், விடுகதைகள் குறித்த அறிஞர்களின் பாகுபாடுகள், இயற்கையாகவே அமைந்த விடுகதைகள், உடல் உறுப்புகள் குறித்த விடுகதைகள், வீட்டுப் பொருட்கள் குறித்த விடுகதைகள், உணவுப்பொருட்கள் குறித்த விடுகதைகள் மற்றும் தகவலாளிகள் குறித்த குறிப்புகள் போன்றவை எழுதிச் சேர்க்கபெற்றுள்ளன. இவை மிகவும் பயனுடையன. குறும்பர்களின் உறவுமுறை நூலாசிரியர்: முனைவர். தா. இராபர்ட் சத்திய சோசப் வெளியீட்டு எண்: 221, 2001, ISBN:81-7090-281-9 டெம்மி1/8, பக்கம் 160, உ...